Page 228 of 401 FirstFirst ... 128178218226227228229230238278328 ... LastLast
Results 2,271 to 2,280 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2271
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திலகப் புதிருக்கான விடை

    சிலர் சிவந்த மண் படத்தை யோசித்திருப்பீர்கள். ஆனால் சரியான விடை அடுத்து நம் திரைப்பட்டியல் பகுதியில் இடம் பெற இருக்கும் வணங்காமுடி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2272
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by abkhlabhi View Post
    திரு. ராகவேந்திர சார்,

    அவருடைய பதிவுக்கு யாரும் object செய்யவில்லை என்றால், அவர் எழுதியது சரி என்றும், நீங்கள் எழுதுவது தவறு என்றும் அர்த்தம் இல்லை. நீங்கள் எழுதியதை குறை சொல்லவில்லை , அந்த நண்பரை தவிர. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்களில் அவரும் ஒருவர்.


    சுட்டும் விரலால் குற்றம் கூறுகையில், மற்ற முன்று விரல்கள் தன் மார்பினை காட்டுதடா ........... என்பதை நண்பர் மறந்துவிட்டார் போல.


    அடுத்தவர் செய்யும் நல்ல செய்வைகளை பாரட்ட மணம் இல்லை என்றாலும், குறை சொல்ல வேண்டாமே நண்பரே.


    Note :
    R.r.c. எங்கள் t.v. Malai யில் மீனாக்ஷி திரை அரங்கில் 50 நாட்கள் ஓடிய படம். எங்கள் ஊரில் 50 நாட்கள் ஓடியது என்றால் , அந்த படம் ஒரு வெற்றி படமே.
    abhklabi சார்,
    குற்றம் கண்டு பிடித்து பேர் வாங்கும் புலவர். சுட்டும் விரலால் காட்டுகையில் மற்றும் மூன்று விரல்கள்- ராகவேந்தர் சாரை attack பண்ணுவது போன்ற இந்த பதிவை நான் ஆட்சேபிக்கிறேன். சொக்கலிங்கம் மீது, சோ மீது, என் மீது குற்றம் சொன்னவர் அவர்தான்.
    தனக்கு நேரும் போது கூக்குரலிடுகிறார்.கொஞ்சம் பழைய பதிவுகளை பாருங்கள் தலைகளே.

  4. #2273
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதிராம் சார்,



    நாளை கலக்கலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2274
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தனக்கு நேரும் போது கூக்குரலிடுகிறார்.கொஞ்சம் பழைய பதிவுகளை பாருங்கள் தலைகளே.
    எனக்கு எதுவும் நேரவில்லை. யாரையும் நான் குற்றம் கண்டு பிடிக்கும் நோக்கத்தோடு பதிவிட்டதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அந்தந்த விவாதங்களில் அவரவர் கருத்தை சொல்வது போன்று தான் என்னுடைய கருத்தாக அமைந்திருக்குமே தவிர யாருடைய பதிவினையும் ஒரு முறை கூட நான் தங்களைப் போல black mark என்பது போல மனம் புண்படும் படி விமர்சித்ததில்லை. தாங்கள் தான் என்னை தனிப்பட்ட முறையில் பல முறை கிண்டல் செய்தும் தாக்கியும் என் வயதையும் உடல் நலத்தையும் குறிப்பிட்டு எழுதியிருக்கிறீர்கள். என்னுடைய பதிவில் தனிப்பட்ட முறையில் நான் எழுதவும் மாட்டேன், நினைக்கவும் மாட்டேன். தாங்கள் black mark என்று எழுதியது எந்த அளவிற்கு மனதைப் பாதிக்கும் என்பதை உணர்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அது தவறு என்று தாங்கள் சொல்லாமல் சொல்லி விட்டீர்கள்.

    நடிகர் திலகத்தின் மேன்மையைப் பற்றியும் அவரது புகழைப் பற்றியும் எழுத 100 பாகங்கள் கூட போதாது. எனவே வம்பிழுத்து பக்கங்களை நிரப்பி இந்தத் திரியை வளர்க்கிறார்கள் என்கிற வாதத்திற்கு இடம் தரவேண்டாம். அப்படி செய்து தான் இந்தத் திரியின் பக்கங்களின் எண்ணிக்கையை நிரப்ப வேண்டும் என்பது நமக்கு தேவையில்லை.

    தங்களைத் தவிர இங்கு வேறு யாரும் அறிவாளி இல்லை என்ற மனப்போக்கில் தான் தங்களுடைய பதிவுகள் ஒவ்வொரு முறையும் அமைகின்றன. எழுதும் போது மற்றவர்களின் மனது புண்படுமே என்று சிறிதும் சிந்திக்காமல் தாங்கள் எழுதுவீர்கள். நாங்கள் அமைதி காக்க வேண்டும் இதைத் தான் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இதைச் சொன்னால் கூக்குரலிடுவது என்று சித்தரிக்கிறீர்கள்.

    என்ன சொல்ல... இதையெல்லாம் தாங்கும் மனப்பக்குவத்தை நடிகர் திலகம் தான் தர வேண்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2275
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாரத விலாஸ் - பொம்மையில் வெளி வந்த கட்டுரையின் நிழற்படம்



    பக்கங்கள் தனித்தனியாக



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #2276
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாரத விலாஸ் 55வது நாள் விளம்பரத்தின் நிழற்படம்



    பாரத விலாஸ் 100வது நாள் விளம்பரத்தின் நிழற்படம் - உபயம் கொரட்டூர் கிரிஜா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2277
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஒரு மினி ஆய்வு.





    ஆதிராம் சார் அழகாகச் சொன்னது போல தேச ஒற்றுமையை வித்தியாசக் கோணத்தில் நகைச்சுவையோடு பறைசாற்றிய படம் இல்லை இல்லை பாடம்.

    "சக்கை போடு போடு ராஜா"... தலைவரைப் பற்றி குறிப்பிட இதைவிட சிறந்த வரிகள் உண்டோ?.... சும்மா சக்கை போடு போட்டிருப்பார் இந்தப் படத்தில். காமெடி நடிப்பில் காந்தமாய் நம்மைக் கவருவார். அடிக்கடி உணர்ச்சிவசப்படும் சாதாரண இளைஞன் கோபாலின் அத்துணை பக்கங்களையும் அழகாய் மெருகேற்றி அற்புதமாய் பிரதிபலிக்க இந்த நடிப்பு ஆண்டவரை விட்டு விட்டு வேறு எவரை நினைத்துப் பார்க்க முடியும்?



    வியாபாரப் போட்டி பெண் விற்பனையாளர் விஜயாவிடம் இவர் பண்ணும் வீம்பு களேபரங்கள் குபீர் சிரிப்பு வெடிகள். வயிற்றுக்கு மேல் தூக்கி விடப்பட்ட தொள தொள பேண்ட்டும், Inn பண்ணின லூஸ் ஷர்ட்டுமாய் sales rep ஆக நீலுவிடம் அச்சு அசல் விற்பனைப் பிரதிநிதியாய் பிரமாதப் படுத்துவாரே. அது ஒண்ணு போதுமே ராஜா....



    கல்யாண நாள் முதலிரவன்று படபடக்கும் இதயத்துடன் தன்னையொத்த மனசாட்சி உருவத்துடன் மல்லுக்கட்டி அல்லாடுவது நடிப்பின் வேறொரு பரிமாணங்களின் உச்சங்களைத் தொட்ட விஷயம். அதே போல பாடகர் திலகம் நடிகர் திலகத்திற்கான வசனங்களுக்கு அப்படியே உயிர் கொடுத்து அவர் பின்னணிக் குரலில் பல உச்சங்களை அநாயாசமாகத் தொட்டு விட்டு வருவார்.( டேய்! என்னை நீ ரேக்காதே!) போ..ரா..ட்டம் என்று விட்டு விட்டு வார்த்தைகளை அவர் அடுக்கும் அழகை அள்ளி அள்ளிப் பருகிக்கொண்டே இருக்கலாமே! ஆக ஒரே உறையில் இரண்டு கத்திகள் வெற்றிகரமாக சாத்தியம்.

    கணவன் மனைவி இருவரும் ஒருவருக்குத் தெரியாமல் வேலையை விட்டு விட்டு நான் முந்தி நீ முந்தி என்று தங்கள் வேலை நிறுத்தக் கதையை சொல்லி அதுவும் இவர் 'உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்' பாட்டு பாடுவது (வேலை போனதற்கு தூணில் சாய்ந்து கொண்டு ஒரு ஒய்யாரப் போஸ் கொடுப்பார் பாருங்கள்! அடா... அடா... அடா ) கலக்கல் காமெடி.

    சிங் மேஜரை வீட்டைவிட்டுத் துரத்த வாசுவுடன் சேர்ந்து தெரியாத்தனமாய் பாத்ரூமில் மாட்டிக் கொண்டு திரு திருவென முழிக்கும் கட்டங்கள் கல கல...

    வில்லன் ராஜபாண்டியன் விரித்த வலையில் (சி.ஐ.டி சகுந்தலா) விவரம் தெரியாது சிக்கி அதிலிருந்து மீள வழி தெரியாமல் இறுதியில் விலாஸின் விசுவாச நண்பர்கள் துணை கொண்டு அதை முறியடிப்பது ஆக்ஷன் கில்லி.

    வாடகை இருந்த வீடு விலைக்கு விற்கப்படும் நிலையில் எதிர்பாராவிதமாக வாடகைக்கு இருந்த நண்பர்களே வீட்டைத் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனமான சடுதி நேர்த்தி...

    தமிழ்நாட்டு கோபால், பஞ்சாப் பல்தேவ் சிங், கேரளா முஸ்லீம் இப்ராகிம், ஆந்திர நரசிம்ம நாயுடு என்று கூட்டுக் குடும்பமாய் குட்டி இந்தியாவை பாரத விலாஸுக்குள் காண வைக்கும் நான்கு திசை நாயகர்கள்.



    வீடு தங்கள் வசமானதும் எடுக்கும் அட்டகாசமான அந்தத் தேசத் திருவிழா பாடல் அன்று முதல் இன்றுவரை ஏன் என்றும் 'இந்திய நாடு என் வீடு' என்று தேசமெங்கும் இடைவிடாது ஒலிக்கக் காரணமாகி விட்டதே! பார்ப்பவர், கேட்பவர் அனைவரையும் 'வந்தே மாதரம் என உச்சரிக்கச் செய்த வல்லமை பெற்ற பாடல் இடம் கொண்ட படமன்றோ! வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும், குடியரசுதின மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது எத்தனை முறை ஒ(ளி)லிபரப்பப்பட்டிருக்கும் என்று சொல்ல எவருக்கேனும் 'தில்' உண்டா!

    இப்பாடல் நம் காதுகளில் ரீங்காரமிட்டு நுழையும் போது நம்மையறியாமல் நம் தேச இன உணர்வு நம் அங்கங்களினூடே ஊடுருவிப் பாய்வதை உணராதவர் எவரேனும் இருக்க முடியுமா?

    'சுனோ சுனோ... பாய் சுனோ சுனோ' என்று ஆட்டமே தெரியாத மேஜரை ஜம்மென்று ஆட வைத்த துணிச்சல்...

    அதே போல VKR யும் விட்டு வைக்காமல் கைலியின் இருபக்கங்களைப் பிடித்தவாறே 'படைச்சோன்...படைச்சோன்' என்று அவரையும் ஆட வைத்த பாங்கு...

    ஜன கண மன நாட்டுப்பண்ணுக்கு இணையாக அனைவராலும் வரி விடாமல் மனனம் செய்யப்பட்ட இன்னொரு தேசிய கீதமன்றோ இந்த தேச பக்திப் பாடல்!

    ஆந்திர ANR உடன்



    மலையாள 'மது'வுடன்.



    வடநாட்டு சஞ்சீவ் குமாருடன்



    வெறும் படம்தானே என்று எண்ணிவிட முடியுமா? மலையாளத்திலிருந்து மதுவையும், ஆந்திராவிலிருந்து ANR யும், வடக்கிலிருந்து சஞ்சீவ் குமாரையும் தருவித்து இன, மொழி, கலாச்சார ஒற்றுமையை கண்டவர் அனைவரையும் செயல்பட வைத்து களிப்புற செய்த காவிய விலாஸ் அல்லவா!

    வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல அடிக்கடி விலாஸ் நண்பர்களுக்கிடையே நடக்கும் சின்ன சின்ன சுவையான சச்சரவுகள், சண்டைகள் ரசிக்கும் படியாக...அதுவும் அருமையான தீர்வுகளுடன்.

    நடுத்தர வயதில் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு பிடிப்பின்மை, விரக்தியை அப்படியே வெளிப்படுத்தி பின் மனையாளின் மதியூகத்திற்குக் கட்டுப்பட்டு கோபால் அடங்கும் அழகு.
    (இந்த கோபாலாவது அடங்குகிறாரே!)

    பின் புதிய தலைமுறையோடு நம் பழைய தலைமுறை....பிள்ளைகளுக்கு பொறுப்பான பெற்றோர்கள் ஸ்தானம்... படிக்க வைத்தல், பெரியவர்களுக்கே உரித்தான சந்தேகப் பார்வைகள், அதனால் நட்பிழப்பு, (ஒரு உயிரிழப்பும் கூட) கல்யாணப் பொறுப்பு, சீர் செனத்தி பேச்சு வார்த்தைகள், அதில் தோல்வி, அதனால் அடையும் அவமானங்கள், அவமானங்களைத் துடைத்தெறிந்து மானம் காக்கும் பாரத விலாஸின் நண்பர்களே இறுதியில் சொந்தபந்தங்களாகிவிடும் சொக்கத்தங்கக் காட்சிகள்...

    பொதுவாக பிள்ளைகள் தவறு செய்து பெற்றோர் கண்டிப்பதைப் பார்த்திருப்ப்போம். இந்தப் படத்தில் பிள்ளைகள் தவறு செய்யவே மாட்டார்கள். பெற்றோர்கள்தான் அவசரப்பட்டு தவறிழைப்பார்கள். பிள்ளைகள் சொக்கத் தங்கங்களாகவே வடிவமைக்கப் பட்டிருப்பார்கள். இதுவும் பாராட்டுக்குரிய ஒரு புதுமையே!



    நட்சத்திரப் பட்டாளம்...ஒவ்வொருவரும் தத்தம் முத்திரையைப் பதித்திருக்கும் பாங்கு...தலைவர், விஜயா, மேஜர், தேவிகா, வாசு, ஆச்சி, VKR, சமீபத்தில் காலமான ராஜசுலோச்சனா, சகுந்தலா, ராமதாஸ், சிவாஜி நாடக மன்ற நடிகர் ராஜபாண்டியன், நீலு, சந்திரபாபு மற்றும் இளைய முகங்கள் ஜெயசித்ரா, சசிகுமார், ஜெயச்சந்திரன், ஜெயசுதா, சிவகுமார், குட்டிப் பாப்பா ஸ்ரீதேவி என்று மூச்சு வாங்கச் செய்யும் பெயர்ப்பட்டியல். ஆனால் அத்தனை பேரும் நிகழ்த்திக் காட்டியது 'அற்புதம்' என்ற அந்த ஒரு வார்த்தையை.



    இன்னொரு சாதனையைக் குறிப்பிட்டே தீர வேண்டும். M.R.R.வாசு. வீட்டை வாங்க பொருள் வசதியில்லாமல் விலகிக் கொள்ள முற்படும்போது நாதழுதழுக்க அவர் மற்றவர்களிடம் இருந்து அழுதபடியே வீடு வாங்கலிலிருந்து விலகிக் கொள்வதாக கூறுமிடம். மனிதர் தன் ஆழ்ந்த குணச்சித்திர நடிப்பால் பார்ப்பவர் கண்களில் அருவியைக் கொட்ட வைத்து விடுவார்! அப்படி ஓர் உன்னத நடிப்பைக் கொட்டியிருப்பார் அந்த மகா நடிகர்! (வாசுவா கொக்கா!... நான் என்னை சொல்லவில்லை)

    M.விஸ்வநாதராயின் குளுமையான ஒளிப்பதிவு அருமையான ஒளிவிருந்து. பாரத விலாஸின் பிரம்மாண்டத்தை அற்புதமாக படம் பிடித்துக் காட்டியிருக்கும் கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தூண்டும் அசத்தல் தொழில் திறமை.

    சீரான தெளிவான குழப்பாத திரைக்கதை, இயக்கம்.... ஒற்றுமையுணர்வை, தேசபக்தி உணர்வை அல்வாவில் கலந்து கொடுப்பது போல அவ்வளவு சுவையாக கொடுத்திருக்கும் நம் ACT. எவ்வளவு சிக்கலான முள்மேல் நடப்பது போன்ற கதையை வெகு இலகுவாகக் கையாளுவார்! அதனால்தான் தெய்வமகனின் மனம் கவர்ந்த இயக்குனர் ஆனாரோ! ஒரு காட்சி கூட சோடை போகாதே! அத்தனைக் காட்சிகளும் அடிமனதில் இன்றுவரை நங்கூரம் பாய்ச்சி நச்சென்று பதிந்து விட்டதே!

    நாடு மறக்கவே முடியாத பலமொழிப் பாடல் கலவையை ஒரே குடுவையில் கொடுத்த விஸ்வநாதன் சார்...'இந்திய நாடு என் வீடு' என்று ஒருமித்தக் குரலில் அனைவரையும் கூவ வைத்த வாலி அவர்கள் இருவரும் இந்த உயிர்க்காவியத்தின் இரு நுரையீரல்கள் அல்லவா!

    மின்மினிப் பூச்சிகளை ராட்சஷப் பாடகியின் குரலில் கேட்டு சொக்காத பேரும் உண்டோ! அது என்னவோ தெரியவில்லை.... ஈஸ்வரி, சி.ஐ.டி.சகுந்தலா, எம்.எஸ்.வி கூட்டணி சேர்ந்தாலே 'நானொரு காதல் சந்நியாசி' (தவப்புதல்வன்) அரிதிற்பெரும்பான்மை வெற்றிதான்.

    மதுரை திருமாறனின் மண்மணக்கும் வசனங்கள். ("வியட்நாமில் இருக்கிற மக்கள் கஷ்டப் படுறாங்களேன்னு விருதுநகர்ல இருக்கிற ஜனங்க ஏன் வேதனைப்படணும்?) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பத வசனம்.

    இப்படி ஒரு தேச ஒற்றுமையை வலியுறுத்தும் படம் இனி வரும் காலங்களில் வருமா?!வரத்தான் முடியுமா?

    படத்தின் வெற்றி... சொல்லித் தெரிய வேண்டுமா... பாடல் வரிகளைப் போல சக்கை போடு போட்ட படம். ஆதாரங்களை அள்ளி வழங்கியுள்ளார் ரசிக வேந்தர்.

    படத்தின் வெற்றிக்கு இன்னொரு சிறு உதாரணம். இக்காவியத்தை எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் அன்று என் மனைவி என்ன சொல்வார்கள் தெரியுமா?

    "இன்றைக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து விடுங்கள்"
    Last edited by vasudevan31355; 24th March 2013 at 11:19 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2278
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இந்த பிரத்தியோக ஸ்டில் எனக்காக. என் மனம் கொள்ளை கொண்ட 'மொரட்டுப் பயல்' ஆண்டனியின் ஆண்டவர் கோகுல்நாத் அதே பாதிரியாராக இங்கு கோபாலுடன்.

    Last edited by vasudevan31355; 24th March 2013 at 10:02 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2279
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு சார்
    பாரத விலாஸுக்கே நம்மை அழைத்துச் சென்று விட்டீர்கள். அது என்னமோ தெரியவில்லை, வாசு என்றாலே சூப்பர் தான். தங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

    இந்தப் படத்திற்கு வாசு என இரு சிறப்புகள் உண்டு.

    மெல்லிசை மன்னரின் இசையில் மலேசியா வாசுதேவன் பாடிய முதல் படம், பாடல் இந்திய நாடு என் வீடு.

    அதே போல் மின்மினிப் பூச்சிகள் பாடலும் சூப்பர் [நீராட நேரம் நல்ல நேரம் பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம் அவர்கள்]

    இந்தியர்களுக்கு ஜன கன மன அதி நாயக ஒரு தேசிய கீதம் என்றால் சிவாஜி ரசிகர்களுக்கு இரண்டு ... இந்திய நாடு என் வீடும் சேர்த்து.

    பாடகர் திலகம் சௌந்தர்ராஜன் பிறந்த நாள் இன்று. அவர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து நம் தமிழுக்கு ஒரு அடையாளமாய் திகழ இறைவன் அருள வேண்டும்.



    இந்நாளில் அவருக்காக நமது தேசிய கீதத்தைப் பார்ப்போமா ...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2280
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாராட்டிற்கும் திருத்ததிற்கும் மிக்க நன்றி ராகவேந்திரன் சார்! திருத்தி விட்டேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •