Page 21 of 401 FirstFirst ... 1119202122233171121 ... LastLast
Results 201 to 210 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #201
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Yahoo Waiting for RAJA Superb thriller, action, adventure where NT will be lean Charismatic.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #202
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ராஜா'ன்னா ராஜாதான்...

    அனைவரும் எதிர்பார்க்கும் 'ராஜா' வருகிறார்.




    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 21st June 2012 at 03:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #203
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பாசமலர்' காவியத்தின் காலத்தை வென்ற நடிகர் திலகத்தின் நடிப்புக் காட்சி.

    "நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் நண்பர்களாகக் கருதி என் குடும்ப கௌரவத்தை இழப்பதை விட கூட்டத்தை இழப்பது மேல்" (ஆத்திரத்தையும் கோபத்தையும் கண்கள் அனலாய் கக்க, குரலின் வேகம் படிப்படியாக உயர, கொந்தளிக்கும் உணர்ச்சியை சற்றே அடக்கிக் கொண்டு, புருவங்களை உயர்த்தி, வெறிகலந்த பார்வையை ஓரக்கண்களால் ஆனந்தன் (ஜெமினி) மேல் படரவிட்டு, கோபத்தின் உச்சத்தை பென்சிலைக் கத்தியால் சீவிக்கொண்டே காட்டி, வெறியை வெளிப்படுத்தும் வேங்கைத்தனம்).

    "பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா"...(மற்ற விரல்கள் மூடியிருக்க இடது கை கட்டை விரல் மட்டும் முற்றிலும் இடப்பக்கம் நோக்கி சுட்டிக் காட்டும்)

    "புற்றுக்கருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா"... (அதே கட்டை விரல் பாம்பு படமெடுத்தாடுவதை நர்த்தன அசைவுகளில் நயமாக, நரித்தனமாக உணர்த்தும்)

    "காட்டுக்குள்ளே குழி பறிப்பது யானை ஒய்வு பெறுவதற்காகவா"...

    "கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா"... (ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல்களின் இடையே சற்றே மடக்கிய சீரான இடைவெளியில் மூன்று விரல்களும் அரைவட்ட எதிரும் புதிருமான சுழற்சியில் அல்லோலகல்லோலப் படுத்தும் )

    "இல்லை... இதெல்லாம் பிறர் துன்பத்திலே இன்பம் காண வேண்டும் என்ற பேய்வெறி (கடுமை கலந்த சிரிப்புடன் 'ம்'..என்று சொல்லாமலேயே உதடுகளைக் குவித்து மேலும் கீழுமாக ஒரு தலை அசைவு) அந்த வெறிதான் உனக்கு...பெயர் பொதுநலம்".(கேலியும், கிண்டலும் கலந்த நக்கல் சிரிப்பு)

    "இப்படியெல்லாம் பேதங்கள் பேசி பிளவு உண்டாக்குவதற்காகத்தான் (சுழலும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது வலது காலை ஷூவுடன் தூக்கி முன் இருக்கும் மேஜை மீது ஆணவத்துடன், முதலாளி என்ற கர்வத்துடன் 'டக்'கென வைத்தல்) அன்று என்னிடம் பிடிவாதமாக வேலை கேட்டாய்"

    ஜெமினியின் வார்த்தைகளில் கோபம் தலைக்கேறி, எரிமலையாய் நாற்காலியை விட்டு 'மிஸ்டர் ஆனந்த்' என்று சுழல் நாற்காலியை வேகமாகச் சுழற்றி விட்டு எழுந்து "I am the whole proprietor of the concern...I can do what for I like" என ஆங்கிலத்தில் கர்ஜித்து முழங்கி....

    எழுத ஆரம்பித்தால் திரியின் பக்கங்கள் போதாது...


    அந்த நடிப்பு ராட்சஷரின் மேற்கூறிய அட்டகாசங்கள் முதன் முறையாக இணையத்தில் வீடியோவாக உங்கள் பார்வைக்கு.




    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 21st June 2012 at 03:53 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #204
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    facebook இணையதளத்தில் (Thamizhthirai.com) தரவேற்றப்பட்டுள்ள 'பாசமலர்' திரைக்காவியத்தின் வெள்ளிவிழாக் காட்சிகளின் மிக மிக அரிதான வண்ணப் புகைப்படங்களின் அணிவகுப்பு.(சாம்பிளுக்கு சில)











    அனைத்து புகைப்படங்களையும் காண இணைப்பு கீழே

    http://www.facebook.com/media/set/?s...1129531&type=3

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 21st June 2012 at 08:59 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #205
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்
    பாசமலர் வெள்ளி விழா நிகழ்ச்சிகளின் நிழற்படங்கள்.... ஆஹா...அன்று காணக் கிடைக்காதவை இன்று நம் கண்முன்னே .. இதை தரவேற்றியவருக்கும் நன்றி, இங்கே பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

    மிக மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தாய் திரைப்படம் தற்போது நெடுந்தகடாக...




  7. #206
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கோபால் பாசமலரே!

    தங்கள் உன்னதப் பாராட்டிற்கு நன்றி! என்ன இது?... குட்டுக்கள் வாங்க நான் என்ன சத்ருவா?... பாசப் பாராட்டுக் குட்டுகளுக்கும், சத்ருவுக்கும் அவ்வளவு வித்தியாசம் தெரியாதவனா நான்? ஓடமாட்டேன்.... இங்கேயேதான் இருப்பேன். (தலைவர் என் உயிர்க் காவியமான 'ஞான ஒளி'யில் சொல்வது போல) போதுமா?... குட்டுக்கள் வாங்க என்னை விட திறமைசாலி நீங்கள்தான்...ஹா ஹா ஹா...சோஜ்ஜா ராஜகுமாரி சோஜ்ஜா.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #207
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post

    கிங்டா ..ஸ்டைல் கிங்டா
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #208
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    மிக மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த தாய் திரைப்படம் தற்போது நெடுந்தகடாக...

    டியர் ராகவேந்தர் சார்,

    நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த "தாய்" படம் பற்றிய தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி!
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  10. #209
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    'பாசமலர்' திரைக்காவியத்தின் வெள்ளிவிழாக் காட்சிகளின் போது எடுக்கப்பட்ட தலைவரின் வண்ணப் புகைப்படங்கள் மிக அரிதான ஒன்று! பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!!!
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  11. #210
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    டியர் ராகவேந்திரன் சார்,

    கர்ணன் 100 -வது நாள் விளம்பரம், காணும்போதே மனம் இறக்கை கட்டி பறப்பதுபோல் உள்ளது. பதிவிற்கு நன்றி.
    Dear Mr.Chandra Shekar,

    Are you coming to 10.00 am show on sunday at sathyam?

    Shivaji Mohan

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •