Page 190 of 401 FirstFirst ... 90140180188189190191192200240290 ... LastLast
Results 1,891 to 1,900 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1891
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Thillaana Mohanambal


    Sivaji was at his prime during that time, yet he was confident enough to act in films that were heroine oriented like Vani Rani and TM. Even the title of the film is named after the heroine. Sivaji does not sing even one song in Thillaana Mohanambal! This might have prompted Thalaivar Rajini to do the same in case of Chandramukhi incidentally produced by Sivaji Films.

    It was written by Kotthamangalam Subbu , in name as Kalaimani published in Viktan as 2 parts which was widely read by people in all walks of life. The readers even visualized NT as Sikkalar, Mohana as Padmini.

    A great movie from APN, with KVM´s music. People who have read the original story would find lot of differences from the story and the Film. Still the film was a smashing success due to the acting abilities of NT, Manoramaa, Nagesh, Baalaiyaa, Padmini and others.

    We all might know the story. Two artists a dancer and a Nadaswaram Vidwaan are competing against each other since they are so sure about their abilities. Even though they fall in love from their first meeting they need time and opportunity to express their love and how they succeed to get united after lot of problems is the story

    TM is the first film for Padmini after giving birth to her first child. She worked in this film 6 months after her delivery. NT promptly called Padmini and informed about the proposal which she readily agreed. Infact NT would remind that she is not a women but Mohana constantly to make her get under the skin of character.

    As for Padmini, in that song when the line navarasamum mugaththil navarasamum, one cannot but be amazed at her depiction of the 9 attributes within such a short time, each one metamorphising to another!

    NT as Sikkalaar, no need to say something new. He lived in this role. Even though he just acted as a Nadaswara Vidwan his facial and body language shows how hard he must have trained to imitate the real Vidwan. The shy love he feels for mohana from the beginning. The short tempered attitude his dedication for his music are lessons for actors who wants to act. The scenes with Manorama in Nagapattinam are really worth mentioning. The mixture of feelings which were shown by NT is again great. Real brother sister attitude even in real life.

    During their first Kutchery when people begin to leave to see the cracker display, NT will get angry and stop playing the Nagaswaram. Now AVM Rajan will say, "Azhagana inda kalaya kodutha Aandavan konjam kobathayum serthu koduthuttan", to which NT will reply, "Aamampa, kasukke adimai ayidatheda pavi, konjam un kalaikkum mariyadi kodu". This dialogue reflects his real life dedication to the art.




    Talking about Thillaana Mohanambal, one cannot forget the great acting by Balaiah! His sense of comedy timing was so excellent when she smells Jil Jil Ramamani, thalams on a girl mistakenly especially when he hangs his head in shame when caught.
    nalam thaanaa song was another gem. kannadhasan genius was amply showcased in this situational song.!

    The nadhaswaram has found a permanent place in most traditional functions. It was wonderfully played by Ponnusamy and Sethuraman brothers.


    NT as Sikkal Shanmugasundaram brings a typical Tanjore Nadaswara Vidwaan before our eyes, supported by AVM Rajan as Thangarathinam The whole team of SS ( Sikkal Shanm.) Balaiyaa as Kaliyuga nandhi Muthurakku, Saarangapaani as Kodai idi Sakthivel brought two Thavil vidwaans before our eyes.

    I enjoyed the movie very much. From the beginning there was something in this film which I found very interesting.



    Manorama as Karuppaayi aka Jill Jill Ramaamani aka Rosaaraani was the real heroine of the film. Her way of talking in Madurai slang is really unforgettable. Even though her role was shorter than others she really stole the show. Especially in scenes where she plays Nadaswaram is a real treat, pain for stomach due to laughter

    Nagesh as Vaithy. Nagesh is another pillar of strength of this film. To play a role like this needs a huge self confidence only Nagesh can do.

    Sample of Nagesh’s acting prowness

    மதன்பூர் மாளிகையில் தங்கியிருக்கும்போது சிக்கலாருக்கும் வைத்திக்கும் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்:

    "சண்முகசுந்தரம், எல்லாரும் அவா அவா வாத்தியங்கள எடுத்த்க்கிட்டு புறப்படுங்கோ"

    "யோவ் வைத்தி, எங்கேயா கிளம்ப சொல்றே?"

    "மகாராஜா உறங்கப்போறார். எல்லாரும் அவரை சுத்தி நின்னு வாசிங்கோ. அதைக்கேட்டுண்டு மகாராஜா ஆனந்தமா உறங்கனும்"

    "உம்... இன்னும் எது எதுக்கெல்லாம் வாசிக்கணும்?"

    "ராத்திரி அவர் உறங்கறச்சே வாசிக்கணும். காலைல அவர் கண்முழிக்கும்போது திருப்பள்ளியெழுச்சி வாசிக்கணும்"

    "யோவ் திருப்பள்ளியெழுச்சியெல்லாம் கோயில்லேதான்யா வாசிப்பாங்க".

    "உனக்காக மகாராஜா கோயில்லே போய் படுப்பாரா?"

    Madhanpur Maharani (who is that lady ? ) will say in one of the scenes, " I don't like that man..he is a Jackal " . That's a perfect word to describe his character.



    The team of Mohana conisting of Thangavelu as Nattuvanaar, T.R.Ramachandran as Varadan (Mirudhangam) did their job also very good. Esp. C.K. Saraswathy with her sidekick Vetthalai potti were very good, as a cunning mother

    We all know its a classic in its own way and commercially also it was a smashing hit and had number of re-releases. All this record without a single duet in the film

    At at a time where almost all the movies will have a duet song for their lead pair and this one film comes without a duet song and becomes a great hit!!

    Though the screenplay had a scope for a song (during Train scene) and even NT could have demanded one - but still NT didnt do it.




    On the whole, TM is a thorough family entertainer with excellent performances & lovely
    music . Not to be missed by NT fans and a true lover of good cinema. Its one of the master piece and top 10 movies of NT and Tamil Cinema, liked by MGR and frequently watched by Kalaingar Karunanithi

    A crown in jewel for NT & APN Combo

    Sad that all other actors except AVM Rajan& Manorama have expired

    Hoping for its re release again

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1892
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Mr.Gopal / Mr.Ganpat

    Your posts about Mudhal Mariyaathai - Very nice one.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #1893
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra Sir,

    Nice info on NT's multifaceted talent.

  5. #1894
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Mr. Raghulram,

    Your writing about Thillana Mohanambal is good, but it seems as a reproduction of somebody's writing in the same thread in a previous part.

    This essay is very familier as word by word it has already read, especially the tamil font.

    The previous one might be posted by any other hubber, or might be same you have posted before.

  6. #1895
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    முதற்கண் நண்பர்கள் வனஜா மற்றும் சந்திரசேகருக்கு என் இதயபூர்வமான நன்றி.

    எங்கோ வியத்னாமில் இருந்து கொண்டு என்னை எழுதத்தூண்டும் விதத்தில் பதிவிடும் நண்பர் கோபாலிற்கு, அடுத்த நன்றி.

    கணேசனை நினைத்துகொண்டால் யாரால் தான் எழுத முடியாது என என்னை உணரச்செய்த, அம்மகா கலைஞனுக்கு நமஸ்காரம்.

    ================================================== ====================================

    கணவனை சித்திரவதை செய்வதில் மனைவிமார்கள் பல முறைகளை கையாள்வார்கள்..
    பொதுவாக இதற்கான காரணம் என்னவோ, அவனிடம் இருக்கும் ஒரு குறை அல்லது இயலாமை ஆக இருக்கும்.

    திருமணம் ஆகாத இளைஞர்கள் பார்க்கவே கூடாத திரைப்படம் ஒன்று உள்ளது என்றால் அது "Who is afraid of the Virginia wolf " எனும் 1968 இல் வந்த ஹாலிவுட் திரைப்படம் ஆகும்.அதில் மனைவியிடம்(எலிசபத் டெய்லர்) கணவன் (ரிச்சர்ட் பட்டன்) படும் அவஸ்தையை பார்த்தால் ,எவனுக்கும்,ஜன்மத்திற்கும் திருமண ஆசையே போய் விடும்.

    இதற்கு அருகாமையில் வரும் படம் நம் "படித்தால் மட்டும் போதுமா".படிக்காதவர் எனும் ஒரு குற்றதிற்காக ராஜ சுலோச்சனா ,தலைவரை படுத்தும் காட்சிகள்.(ஆனால் என்ன இருந்தாலும் நம் இந்திய/தமிழர் பண்பாடு என்று ஒன்று இருக்க்கிறதல்லவா!.மனைவி எப்படி கணவனை அவமதிக்கலாம்? அதை நிரூபிக்கும் வகையில்,பின்னால் தலைவர் சுருதி ஏற்றிக்கொண்டு, அவளை சாட்டையால் பின்னி எடுத்து விடுவது வேறு விஷயம்) அதே போல கணவன்(நாசர்) அப்பாவி என்பதற்காக ராதிகா நாசரை படுத்தும் பாடு (ஜீன்ஸ்)இன்னொரு உதாரணம்.

    அதற்கு மாறாக சாத்வீக சித்திரவதை எனும் பிரிவும் உண்டு.இதைப்பொதுவாக நம் விஜயகுமாரி போன்ற கதா நாயகிகள் செய்வது வழக்கம்..நடு இரவில் திடு திப்பென்று படுக்கை அறையிலிருந்து கிணற்றடிக்கு ஓடி வாளி வாளியாக இழுத்து ஸ்நானம் செய்தால், எந்த மானமுள்ள கணவன்தான் அவளுக்கு மறுமணம் செய்ய நினைக்க மாட்டான்?(சாரதா),

    ஆனால் முதல் மரியாதையில் (அப்பாடா! ஒரு வழியா விஷயத்திற்கு வந்தான்டா) பாரதிராஜா எடுத்துக்கொள்வது முற்றிலும் வேறு பிரச்சினை.உளவியலில் தன செய்த குற்றத்தை தானே மறக்க இன்னொரு அப்பாவி ஜீவனை வதைப்பது ஒரு வகை நோயாக கருதப்படும்.இதை project செய்வதில்
    " பாரதி ராஜா" மன்னன்.

    தான் என்னதான் சிறுவயதில் ஒருவனை நம்பி ஏமாந்தவளாக இருந்தாலும் ,தன்னை திருமணமும் செய்து கொண்டு ,வாழ் நாள் முழுதும் விளக்கெண்ணை குடித்தால் போல கணவன் வாழ்வதை எதிர்கொள்ளும் ஒரு தைரியசாலியான மனைவி வடிவுக்கரசி.அவள் ராஜசுலோச்சனா போல கணவனை முழு உதாசீனம் செய்யாமல்,எங்கே, எப்பொழுது, அடித்தால் வலிக்குமோ அதை செவ்வனே செய்து வருபவள்.இது, ஒரு உண்மையை எப்பொழுதும் மறக்காமல் இருக்கும் தன் கணவனுக்கு, அவள் கொடுக்கும் தண்டனை.இதன் இன்னொரு உளவியல் வடிவம் "கிழக்கு சீமையிலே" நெப்போலியன் தன் மச்சான் விஜயகுமாரின் மேல் பாராட்டும் விரோதம்.இது ஒரு உண்மையை(தன சகோதரி தற்கொலைக்கு தான் தான் காரணம் ) தான் மறந்து விடுவதற்காக, இன்னொருவனுக்கு கொடுக்கும் தண்டனை. அதே போல பெற்ற மகளை பணயமாக வைத்து தோற்ற குற்றத்தை தன காளையின் மீது ஏற்றி, அதை குரூரமாக குத்திக்கொல்லும் ஒரு தந்தையும் இவ்வகையை சேர்ந்தவனே(மண் வாசனை)

    அதற்கு மாறாக ராதாவிற்கு தலைவர் மேல் ஏற்படும் ஈர்ப்பு,அவருடைய ஆண்மை நிறைந்த கம்பீரம் மற்றும்,ஆணவமற்ற நட்புணர்ச்சி பால் ஏற்படுவது.அவர் மனைவி ஒரு கொடுமைக்காரி என அறியும்போது அது அன்பா காதலா எனும் நிலை அறியா உணர்வாக பரிமளித்து,அந்த கேள்விக்கான பதிலை,அவள், அவர் மனைவியின் "விளக்குமாறு" மூலம் தெரிந்து கொள்கிறாள்! இதே சங்கட நிலையை அனுபவிக்கும் தலைவருக்கும், ஊர்பஞ்சாயத்து விடை காண உதவுகிறது..(ஆமா நான் அவள வச்சுண்டுதான் இருக்கேன்)

    சரி பாயசம் ரெடி. முந்திரி,திராக்ஷை,குங்குமப்பூ போடவேண்டியதுதான்.

    வருகிறார் வைரமுத்து..

    ஏ குருவி
    சிட்டுக்குருவி

    ஒஞ் சோடி எங்க
    அத கூட்டிக்கிட்டு

    எங்க விட்டத்துல
    வந்து கூடு கட்டு

    பொல்லாத வீடு
    கட்டு பொன்னான கூடு
    இப்போ பொண்டாட்டி இல்ல
    வந்து என்கூட பாடு


    என்று அவர் பாட,

    ஏ குருவி
    சிட்டுக்குருவி

    ஏ குருவி
    ஐயா உள்ளத்துல
    நல்ல அன்பிருக்கு
    ஆனா வீட்டுக்குள்ள
    கொஞ்சம் வம்பிருக்கு
    பொண்டாட்டிக்காரி
    வந்து என்னான்னு பாப்பா
    இங்கு உன் கூட்ட பாத்தா
    கொடக்கூலி கேப்பா


    என்று அவள் இழுக்க,

    கண்டேன் ஸீதையை என்பது போல அவர்
    செல்ல கோபத்துடன்..

    ஏ எவடி
    அடியே எவடி
    ஏ எவடி அது…


    எனும் மூன்று சரணங்கள் மூன்று ரீலுக்கான திரைக்கதையை சொல்லி விடும்.

    சரி அவருக்குத்தான் என்ன குறை?

    சொல்கிறார் வைரமுத்து:

    பூங்காற்று திரும்புமா என்பாட்டை விரும்புமா
    பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட
    எனக்கொரு தாய் மடி கிடைக்குமா

    ராசாவே வருத்தமா
    ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
    ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா சூரியன் கருக்குமா

    என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கலை
    மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை

    இந்த வேதனை யாருக்குதான் இல்லை
    உன்னை மீறவே ஊருக்குள் ஆளில்லை

    எதோ என்பாட்டுக்கு நான் பாட்டு பாடி
    சொல்லாத சோகத்தை சொன்னேனடி

    சுக ராகம் சோகம் தானே..

    யாரது போறது

    குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா



    உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன்
    நல்ல வேசம்தான் வெளுத்து வாங்குறேன்

    உங்க வேசந்தான் கொஞ்சம் மாறணும்
    எங்க சாமிக்கு மகுடம் ஏறணும்

    மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே
    முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே

    இச பாட்டு படிச்சேன் நானே…

    பூங்குயில் யாரது

    கொஞ்சம் பாருங்க பெண்குயில் நானுங்க

    அடி நீதானா அந்த குயில்
    யார் வீட்டு சொந்த குயில்
    ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
    பறந்ததே ஒலகமே மறந்ததே

    நான் தானே அந்த குயில்
    தானாக வந்த குயில்
    ஆத்தாடி மனசுகுள்ளே காத்தாடி
    பறந்ததா ஒலகம் தான் மறந்ததா


    அடுத்த ஆறு ரீல் over..

    சரி பாயசம் தூள் ..சேர்பனவை எல்லாம் சேர்த்தாகி விட்டது..இனி அதை பரிமாற நல்ல பாத்திரம் வேண்டுமே..

    இளையராஜா எனும் மேதை தங்க கிண்ணம் கொண்டு வருகிறார்..

    அதகளம் செய்கிறார்..

    தூளியில் இருந்த என் ஒரு வயது மகன் தன்நேயர் விருப்பமாக தன தாயிடம் மழலையில் சொன்ன பாடல்.."ஆஜா"

    உடனே அவள் பாடுவாள் .."ராஜாவே வருத்தமா !"

    என்னதான் அதன் quality, சூப்பர் சிங்கரின் முதல் ரவுண்டில் மஹதியை ஒரே வரிக்குப்பிறகு சிகப்பு விளக்கு சுவிச்சை போடவைக்கும் அளவுதான் என்றாலும்,அவன் ஆனந்தமாக உறங்க ஆரம்பிப்பான்.

    சோகத்தை பொழியும் வரிகள்,அதை உச்சிக்கு கொண்டு செல்லும் இசை,அதை தன முகபாவத்தில் காண்பிக்கும் மகா கலைஞன்,நம்மை மெய்மறக்க செய்து இதுவா சோகம்? இதுவல்லவோ சுகம் என எண்ண வைக்கும்.

    முத்தாய்ப்பாக அந்த climax ?

    சுமார் முப்பது வருடங்களுக்கு முன்,பத்து கி.மீ. தொலைவில் ராதா வந்து இறங்க, இங்கே படுத்து கிடக்கும் நம் தலைவரின் கை நரம்புகளை அசைத்த. அந்த காட்சி,,

    இன்று சுமார் 3000 கி.மீ தூரத்திலிருந்து என் நண்பர் இந்த காட்சியை தனது விரல்களால் மீண்டும் விவரிக்க,இங்கு சென்னையில் என் விரல்களை தன்னிச்சையாக கீ போர்டின் மேல் அசைக்கவும் வைத்தது எனில்,

    அதன் வீரியத்தை, அற்புதத்தை என்னவென்று சொல்வது?

    Ganpat இன் "முதல் மரியாதை" இங்கு முடியும்..

    பாரதிராஜாவினுடய "முதல் மரியாதை" க்கோ முடிவே இல்லை.

    தமிழ் உள்ள வரை அந்தக் காவியம் இருக்கும்..
    Last edited by Ganpat; 26th February 2013 at 05:33 PM.

  7. #1896
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Ganpat,

    Nice posting on MM.

  8. #1897
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=RAGHAVENDRA;1021515]

    இதற்கு நான் கேட்டேன். அவருடைய நடிப்பை மிகை நடிப்பு என விமர்சிக்கிறார்களே என்று. அதற்கு அவர் கூறிய பதில் என்னை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தது.....


    இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவர் சொன்னது நம் அத்தனை பேர் நெஞ்சிலும் பால் வார்த்தது.

    மிகை நடிப்பு என்பதெல்லாம் கலையைப் பற்றித் தெரியாதவர்கள் சொல்லும் வாதம். அவருடைய ஒவ்வொரு பாத்திரத்திலும் அவர் உள்ளே சென்று ஆராய்ந்து எது தேவை என்று அறிந்து செய்கிறார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தன்னை இழக்க வில்லை. அதாவது அந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார் என்பதைக் காட்டிலும் அந்தப் பாத்திரத்திற்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து தேவையானவற்றைத் தருகிறார். இவர் நிச்சயம் சரஸ்வதி தேவியின் அம்சம் என்றார்.

    இன்று முழுக்க மனம் இதையே நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

    இதைப் படிக்கும் உங்களுக்கும் அப்படித் தானே..
    .[/QUOTE

    நண்பர் ராகவேந்திரா சொலவது முற்றிலும் உண்மை..

    இது தொடர்பாக நீங்கள் அனைவரும் அறிந்திருக்கும் ஒரு அற்புத நிகழ்வை மீண்டும் நினைவு கூர்வது என் இனிய கடமை ஆகிறது.

    பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி..

    அன்றைய காட்சியான "தன் மனைவியின் உடல் முன் குமுறி அழுது துடித்து விட்டு",செட்டில் உள்ள அனைவரையும் அழ வைத்து,அவர்கள் பாராட்டையும் பெற்று கொண்டு,தன அறையில் கம்பீரமாக நுழைகிறார் அவர்..

    உள்ளே நடிகர் சோவும் எதோ விஷயமாக பேச வருகிறார்.சம்பாஷனை தொடர்கிறது..

    "என்னடா? ஷாட்டை பார்த்தாயா?"

    "ஓ.பார்த்தேன் சார் நல்ல இருந்தது!"

    "என்னடா இழுக்கறே?ஒனக்கு அவ்வளவா ரசிக்கல இல்ல?"

    பொய் சொல்லி பழக்கம் இல்லாத சோ வும் சொல்கிறார்,

    "உண்மை சார்.நீங்க என்னமோ ரொம்ப அழுது புரண்டால் போல எனக்கு தோணிச்சு.இத சொன்னதுக்கு மன்னிச்சுடுங்க!"

    அவர் எழுகிறார். ஒரு மேஜையை காட்டி "இங்கு அவள் உடல் இருக்குன்னு வச்சுக்கோ.இப்படி நடிச்சிருக்கனும்னு சொல்றே இல்லையா?"

    உடனே சோ வியப்படைய, ஒரு தளர்வான நடை நடந்து,அந்த ஷாட்டை முற்றிலும் வேறு விதத்தில் நடித்து முடிக்கிறார்.

    "சார் சார் அற்புதம் சார் பிச்சுட்டீங்க! என்ன ஒரு reaction!! என்ன ஒரு expression! இத தான் சார் நீங்க செஞ்சிருக்கணும்"

    "போடா முட்டாள்..இந்த மாதிரி நடிச்சா நீ மட்டும் தான் ரசிப்பே! நான் நடிச்சது எல்லாரும் ரசிக்க,"
    Last edited by Ganpat; 26th February 2013 at 06:19 PM.

  9. #1898
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ganpat View Post
    முதற்கண் நண்பர்கள் வனஜா மற்றும் சந்திரசேகருக்கு என் இதயபூர்வமான நன்றி.

    எங்கோ வியத்னாமில் இருந்து கொண்டு என்னை எழுதத்தூண்டும் விதத்தில் பதிவிடும் நண்பர் கோபாலிற்கு, அடுத்த நன்றி.

    கணேசனை நினைத்துகொண்டால் யாரால் தான் எழுத முடியாது என என்னை உணரச்செய்த, அம்மகா கலைஞனுக்கு நமஸ்காரம்.

    ================================================== ====================================


    பாரதிராஜாவினுடய "முதல் மரியாதை" க்கோ முடிவே இல்லை.

    தமிழ் உள்ள வரை அந்தக் காவியம் இருக்கும்..
    திரு ganpat

    முதல் மரியாதையை ஒரு குறிஞ்சி மலர்
    தங்களது விவரணம் அருமை

    அந்த மஹா கலைஞனுக்கு ரொம்ப நாள் கழித்து, பாரதி ராஜா, இளைய ராஜா, வைர முத்து
    சேர்ந்து செய்த கெளரவம்

    இதை எழுதும்போது , 75 நாட்களையும் தாண்டி, வெற்றிகரமாக நெல்லை சிவசக்தி யில், ஓடியபோது, முதல் மரியாதையை, செகண்ட் ஷோ. பார்த்த நியாபகம் வருகிறது.

    நன்றி
    Vazga Sivaji pugaz

  10. #1899
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Mr Ganpat,

    Nice posting on MM.
    Thanks Mr.Vasudevan..

  11. #1900
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நமது ரசிகர்களுக்கு, இந்த ஆஸ்கார் தேனாக இனிக்க வேண்டும்.
    1)நமது நடிகர்திலகத்தின் வசந்த மாளிகை சுவரொட்டி இடம் பெற்ற life of Pi ,நிறைய oscar களை அள்ளி வந்துள்ளது. ஆங் லீ க்கு பாராட்டுகள்.
    2)நமது நடிகர்திலகத்தை அச்சு எடுத்தது போல் நடிக்கும் டேனியல் டே லெவிஸ் க்கு மூன்றாம் முறையாய் சிறந்த நடிகர் பரிசு. இந்த ஏகலைவனை, அந்த துரோணர் சொர்கத்தில் இருந்து வாழ்த்துவார்.

    பிறந்த நாள் காணும் தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். மணிமண்டபத்தை கவனியுங்கள் அம்மா.
    நீங்கள் என்னதான் சொன்னாலும்,ஆஸ்கருக்கு சிவாஜி கடைசி வரை கிடைக்காததில் எனக்கு ஆழ்ந்த வருத்தம்தான்,கோபால். என்ன செய்வது,ஆஸ்கர் கொடுத்து வைத்து அவ்வளவுதான்!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •