Page 189 of 401 FirstFirst ... 89139179187188189190191199239289 ... LastLast
Results 1,881 to 1,890 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1881
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Watch Santhippu today in Murasu TV at 7.30 PM.
    Immediately remember the posting of Mr Vasu about his
    Santhippu at Cuddalore. Unforgettable posting on
    Santhippu.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1882
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    One of my favourite song from Mohana Punnagai. Kalyanamam Katcheriyam. This song
    so popular even before the movie got released. Watched the movie on first day at
    Chrompet Vetri during college days. I request Mr Vasu Sir to upload the song for
    the benefit of our fans.

  4. #1883
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நமது ரசிகர்களுக்கு, இந்த ஆஸ்கார் தேனாக இனிக்க வேண்டும்.
    1)நமது நடிகர்திலகத்தின் வசந்த மாளிகை சுவரொட்டி இடம் பெற்ற life of Pi ,நிறைய oscar களை அள்ளி வந்துள்ளது. ஆங் லீ க்கு பாராட்டுகள்.
    2)நமது நடிகர்திலகத்தை அச்சு எடுத்தது போல் நடிக்கும் டேனியல் டே லெவிஸ் க்கு மூன்றாம் முறையாய் சிறந்த நடிகர் பரிசு. இந்த ஏகலைவனை, அந்த துரோணர் சொர்கத்தில் இருந்து வாழ்த்துவார்.

    பிறந்த நாள் காணும் தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். மணிமண்டபத்தை கவனியுங்கள் அம்மா.

  5. #1884
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    AMBIGAPATHY

    The movie starts with voice over about ancient Tamil Nadu, rivers, tamil culture and dance forms and comical fight between KA Thangavelu and Sivaji

    Ambigapathy, the son of the great Poet Kamban , the poet laurete of the Chola king Kulothungan
    possessing extraordinary talents .Any person with extaordinary talent and capabilities tend to be proud and arrogant so is Ambigapathy . Nadigar Thilagam exhibits a youthful exuberance and with a stamp of arrogance and pride looks of a young poet who was willing to take on the challenges of the world through his tongue and flair for poetry.
    OTTAKOOTHAR(MN Nambiyar) is also a senior poet who is jealous and running short in fame compared with Kamban was always trying ways and means to defame Kambar in any manner possible.
    M.K.Radha of Chandralekha fame plays the role of Kambar with perfection.

    Nambiar was his ever usual self , very aggressive , cunning and like a fox waiting for opportunity and strikes with an old man make up.


    Ambigapthy’s extempore style of expressing things , his bold mannered approach and above all loving an emperor’s daughter is not taken in best spirits by his peers and also by the king.
    Amaravathy role is played by Bhanumathi seems to be elder to NT but still the pair was good.

    Despite advise by his Father MK.Radha ( Kambar ) , Ambigapathy could not give up his love and the same was the feeling of Amaravathy also despite being warned by the king severely.

    So when Ottakoothar sees the love affair between Amgipathy and Amaravathy , Ottakoothar also sees this opportunity to take revenge at Kambar He poisons the King’s mind in a such a way that the king hates both Kambar and Amgibathy.

    The King as advised by Ottakoothar orders that if Amgibapathy manages to sing 100 songs without any touch on kamarasam, the King promised that both can marry.


    Before the D-day, Kambar pleads his son to give up his love life and be a good son
    But Ambigapthy , highly self confident does not heed to his words and takes up the challenge to prove his capabilities

    the stage is set for a perfect setting now for a climax andfor treat for ears

    Now the whole group of poets headed by Nambiar watch the proceedings

    As Ambigapathy starts with a song on Lord Vinayaka(First God), a flower is dropped by Amaravathy who watches the event from a balcony from a hideout but not visible to Ambigapathy.

    Ottakoothar insists that this being a Kadavul Vaazthu padal, this should not be considered as part of the 100 and hence the king and others discard this. However,neither poor AMARAVATHY nor AMBIGAPATHY were aware of this.

    Ambigapathy proves now that he is a worthy son of his illustrious father Kambar by singing all songs without Kamarasam.

    As he starts the 99th song ( which both the lovers think that this the 100th song ), he falters one of the evergreen hits of the great composer G.Ramanathan and one of the very best of Nadigar Thilagam’s portrayals come out.

    SINDHANAI SEI MANAME

    A minute observation of Nadigar thilagam will reveal that he actually casually plays the character with consummate ease – the portrayal of a young and proud Poet , unmindful of the harsh realities of life



    Many actors have given lip movements and body reactions to carnatic songs but see the way in which Nadigar thilagam presents this song . OUTSTANDING !
    Whenever the song is in low pitch, NT gives a soft look and when it goes in high tone, NT’s throat movements, the hands , the eyes are sync together and gives a typical impression which an established singer will give normally !
    Well such is the power of NT’s observation which he presents with precision.

    When he sings Sindhanai sei maname ( the starting part ) , he face shows SATVEEGAM . As the song touches the words, ANDAGAN VARUMBODHU AVANIYIL YAAR THUNAI, the whole body of NT reacts instantly.

    Another feature of NT in this song is he shows DEVOTION up the point he completes the 100 numbers. As soon as the count down is over, a cheerful Banumathy comes out of the balcony where she was watching , hidden thinking that NT had successfully completed his challenge.

    But as soon as NT Sees Banumathy, His Facial Expression Changes Dramatically And From Now He Becomes A Typical Lover !

    Amazing change in the facial expressions ( muga bhavam ) and words incessantly come out now on lust etc like – SATE SARINDHA KUZAL ASAIYA and from now his mood changes instantly and he starts singing with lust and describes the personality of Amaravathy unmindful of the consequences.

    As Nambiar’s count is less by one, the decision goes against NT and he gets death sentence.


    The movie ends in tragic note.
    This movie also featured Kalaivanar NSK who incidentally passed away mid way . So NT gives a short but nice description to a NSK statue praising him aptly.


    This movie is a JEWEL ON HIS CROWN for the great G.Ramanathan who virtually sprayed the movie with some classical songs
    The movie is Directed by P. Neelakantan , who directed many MGR movies, I guess this was only movie in which he directed NT. Songs were written by VS Ragavan also is he the same person who acts even now.
    Also the titles mentions about colour print . Is it only a part of movies or for songs.( I too read about it but don’t remember it). Why such a movie is not widely appreciated or telecasted is a deep mystery.
    What about the BO status?
    The movie is available in Moser Bear 3 in 1. Print is also crystal clear

  6. #1885
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் கோபால்,

    வணக்கம்..நாம் சந்தித்து உரையாடி நாட்கள் பல ஆகின்றன (கடைசியாக நல்லி கடையில் சந்திதததுதான்.) நலமா?

    நிற்க..உங்கள் முதல் மரியாதையை,பாதி பழுதாகியுள்ள என் கணினியில் படித்து பரவசமாகி,பதில் எழுத விழைகிறேன்.உங்களை நான் புகழ்வது, என்னையே நான் புகழ்வதற்கு நேர் என நான் கருதுவதால், விஷயத்திற்கு வருகிறேன்.

    உங்களுடைய விரிந்து பரந்த அறிவாற்றல் உங்களை..Stalinovsky,Meisner ,Straberg,Stella Adler,Chekhov,Oscar wilde,Spolin &Suzuki போன்றவர்களை துணைக்கு அழைக்க முடிகிறது.நானோ தற்குறி.கலாட்டா கலயாணம் ,வி கே ராமசாமி .."இவர், டாக்டர் குரு எம் பி பி எஸ்,,F ஆர் சி எஸ்".. என்று சொல்லக் கேட்டவுடன்,"அதனால் என்ன, பரவாயில்லை" என சொல்வதுபோல சொல்லி இவர்களை கடக்கிறேன்.

    ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ ஏற்படும் இரண்டாவது மிகப்பெரிய சோகம் அவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை,அவர்களுக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல் (குண நலன்களில்,ரசனையில்,உருவ அமைப்பில்)அமைதல்.

    நல்ல வேளையாக உடல் ரீதியாக இந்த சோகம் எந்த ஒரு பிரச்சினையும் கொடுப்பதில்லை.
    நினைத்துப் பாருங்கள்..மனம் இணைந்தால்தான் குரோமோசோம் இணையும் என்று இயற்கை வைத்திருந்தால் இன்று இந்தியாவின் ஜனத்தொகை வாடிகன் நகர ஜனத்தொகையை விட குறைவாக அல்லவா இருந்திருக்கும்!

    சரி! அப்போ முதல் பெரிய சோகம்?? இப்படி ஒரு கல்யாணம் ஆகி, பத்து இருபது வருடங்கள் ஓடி,இரண்டொரு குட்டிகளும் போட்ட பிறகு, தனக்கு சரியான ஜோடி இவர்தான் என்று நினைக்க வைக்கும் ஒருவரை சந்திக்க நேர்வது!

    இதில் பெண்கள் அதிருஷ்டசாலிகள்.இந்த பிரச்சினையை வெகு எளிதாக கடந்து விடுவார்கள்..பல தலைமுறைகளாக அவர்கள் குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தைப்பற்றி ,அதில் அவர்கள் நிலை பற்றி போதிக்கப்பட்டு வந்துள்ளனர்.எனவே அவர்கள் சரியான ஆணை சந்திக்க நேர்ந்தாலும் மனக்கிலேசம் அடையாமல் அலட்சியப்படுத்தி தங்கள் வாழ்க்கையை தொடர்வர்..இதை english viglish கதாநாயகி ஸ்ரீதேவி மிக அற்புதமாக காண்பித்திருப்பார். "X அது Y" என்ற விசுவின் படத்தில் மனோரமா தன்னை வருடக்கணக்கில் டீஸ் செய்யும் கணவனை ஒரு க்ஷண நேரத்தில் எதிர்த்து (என்னையும் ஒருத்தன் சைட் அடிச்சான்!) அதை விட பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்வாள்..

    ஆனால் படுவது எல்லாம் ஆண்களே.அதுவும் அவர்கள் நேர்மையாளர்களாக ,தர்மத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்து விட்டால்?? கேட்கவே வேண்டாம்! அதுவே சிவகுமாருக்கு அமைவது போல அமைந்தால் சிரமம் இல்லை..("இதோ பார்..உன் அழகிற்கு கால தூசிக்கு வருவாளா அவள்.எதோ நமக்கு குழந்தை இல்லையே என்ற ஒரு ஏக்கத்தில் ஒரு சிறிய தவறு செய்துவிட்டேன்." என்று சுலக்ஷ்ணாவிடம் சொல்லி விட்டு, சமாளித்து விடலாம்) ஆனால் நமக்கு வருவது ஒரு ராதாவோ,சிநேகாவோ, சிம்ரனோ என்றால்? போதா குறைக்கு நம்ம சைடு சமாளிக்க வேண்டியது வடிவுக்கரசியாகவோ, ,ராதிகா வாகவோ இருந்தால்???

    இங்கதான்யா தலைவர் பிச்சு பிச்சு எடுப்பார்..

    ஒரு இடத்தில் வரம்பு தாண்டுவாரா? ஒரு இடத்தில் வழிவாரா? (அப்படி வழியும் ஒரே இடத்திலும் அது எப்பேர்பட்ட கம்பீர வழிசல்!).காக்கையுடன் இருக்கும் போது குயில் என்று ஒன்று இருப்பதே தோன்றாமல்,அதே போல குயிலுடன் இருக்கும் போது காக்கை என்று ஒன்று இருப்பதே தெரியாமல் என்ன ஒரு brilliant performance! Mind you , சற்று தடம் புரண்டால் கபடம் வரும் அபாய சந்திப்பு அது..என்ன ஒரு லாகவத்துடன் கையாள்வார்!.The large canvas ஐ ஏக்கத்தால் பெயின்ட் செய்து கொண்டு அதில் காதல்,நேர்மை,கோபம்,தலைமை,எனும் ஆளுமைகளை என்ன அழகாக மிக்ஸ் செய்வார்!
    ஒவ்வொரு brush stroke உம ஒரு delight அல்லவா? 50 + களில் காதல் வசப்படும் ஒரு இன்பமான துன்பத்தை என்ன ஒரு subtle ஆக காண்பிப்பார்..
    ================================================== ================
    ஒரு சிறிய விளம்பர இடைவேளை கொடுக்கலாமா?

    மீண்டும் கணினி இசைந்தால்..

    தொடர்வேன்.

    பி.கு: ஷில்பா போன்ற அல்பாக்களுக்கெல்லாம் நீர் பதிலளிக்கத்தான் வேண்டுமா?

  7. #1886
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    கண் பத்து அவர்களே! மிகவும் அனுபவித்து, ரசித்து எழுதியிருக்கிறீர்கள். பேசாமல் நீங்கள் முதல் மரியாதை part 2 -இல்லை, 'இரண்டாவது மரியாதை' எடுக்கலாம். நிச்சயமாக நடிகர் திலகம் வழிந்தாலும் கம்பீரமாகத்தான் இருக்கும். இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த சிவாஜி படங்களில் இது நிச்சயமாக இருக்கும்.
    Last edited by Vankv; 25th February 2013 at 08:04 PM.

  8. #1887
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    கோபால், நல்ல இடுகைத் தொடர்
    விரிவாக பதிலெழுத முடியாதமைக்கு அலுவல் ஒரு காரணம். மற்றொரு காரணம் நீங்கள் முதல் பகுதியில் குறிப்பிட்ட பெயர்களை கூகுள் செய்து கொண்டிருக்கிறேன்

    முதலில் குறை. I'll get it out of the way and then நிறைந்துள்ள நிறைகள்.
    இது முதல்மரியாதை திரைப்படத்தில் எழுத்துவன்மையை நிறுவும் இடுகைத் தொடராகக் கொள்கிறேன். அதில் உள்ள அடிநாதங்கள் சரிவர பொதுவில் அலசப்படவில்லை என்ற குறையை தீர்க்கும் விதமாக அமைந்தது உங்கள் இடுகை. அந்த வகையில் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். ஆனால் நீங்கள் முதல் பகுதியின் கடைசி பத்தியில் குறிப்பிட்ட பலதரப்பட்ட 'பாணிகள்' எவ்வாறு சிவாஜி வெளிப்படுத்தினார் என்று கொஞ்சம் எடுத்துக்காட்டுகளுடன் விவரித்திருக்கலாம். நடிப்பு/நாடகவியல் நுணுக்கங்களில் பழக்கம் (பயிற்சியும்?) உள்ள நீங்கள் அதை எடுத்துச்சொன்னால் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    மலைச்சாமியின் க்ரூரமும், latent frustratioனும் அதிகம் பேசப்படாதவை. ஆணீய மதிப்பீடுகள், சமூக அங்கீகாரம் தரும் வீங்கிய பெருமை எல்லாம் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தி இருந்தீர்கள். வெளியில் மதிப்பு, வீட்டில் அவமரியாதை (உள்ள அழுகுறேன், வெளிய சிரிக்கிறேன் - self-pity) என்பது மேல்தளம் தான். ஆட்டுக்காரன் ஊர்நாட்டாமை ஆனதென்ன, சகலோரிடமும் geniality பாராட்டுவதென்ன, வீட்டில் காட்டும் சிறுமை தான் என்ன - என்பது அடுத்த அடுக்கு.

    தன் சுயபச்சாதாபத்தை நம் மீது ஏற்றிவிடும் deceptive - to use your well chosen word - எழுத்து, நடிப்பு.

    கொஞ்சம் balance தவறினாலும் விரசமாகிவிடக் கூடிய பாத்திரம். அந்தத் துடுக்குத்தனம் ஒரு வித sense of previlegeலிருந்து தான் வருகிறது. அந்த நிலைக்கு எது காரணம்? மலைச்சாமி செய்து கொண்ட 'தியாக' திருமணம். இதில் irony - அவன் தன்னைத் தியாகியாக உணர்கிறான். பிறரை அவன் 'சமமாக' நடத்தி உறவாடுவது ஒரு பிரபுவின் வள்ளல்தன்மை தொனிக்கும் சமத்துவக் கொடைதானே!

    'பஞ்சம்பிழைக்க வந்த குயிலுக்கு ஜாதி, சமூக அந்தஸ்து பற்றி என்ன தெரியும்?' என்று தானே அவன் சொல்கிறான். பண்ணையார்தனத்தை இப்படி ஆகர்ஷித்துக்கொண்ட ஆட்டுக்காரன் தியாகியாம், 'உழப்பெருமை போதிக்கும் சமத்துவக்காரனாம்'! - என்று தன்னை நினைத்துக்கொள்கிறான்.

    மிக சிறப்பான பாத்திரம், எழுத்து. சமீபத்தில் பார்க்கவில்லை. உங்கள் இடுகை பார்க்கத் தூண்டுகிறது.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  9. #1888
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Rare Images அபூர்வ நிழற்படங்கள்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1889
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Many actors have given lip movements and body reactions to carnatic songs but see the way in which Nadigar thilagam presents this song . OUTSTANDING !
    Whenever the song is in low pitch, NT gives a soft look and when it goes in high tone, NT’s throat movements, the hands , the eyes are sync together and gives a typical impression which an established singer will give normally !
    Well such is the power of NT’s observation which he presents with precision.

    When he sings Sindhanai sei maname ( the starting part ) , he face shows SATVEEGAM . As the song touches the words, ANDAGAN VARUMBODHU AVANIYIL YAAR THUNAI, the whole body of NT reacts instantly.

    Another feature of NT in this song is he shows DEVOTION up the point he completes the 100 numbers. As soon as the count down is over, a cheerful Banumathy comes out of the balcony where she was watching , hidden thinking that NT had successfully completed his challenge.

    But as soon as NT Sees Banumathy, His Facial Expression Changes Dramatically And From Now He Becomes A Typical Lover !

    Amazing change in the facial expressions ( muga bhavam ) and words incessantly come out now on lust etc like – SATE SARINDHA KUZAL ASAIYA and from now his mood changes instantly and he starts singing with lust and describes the personality of Amaravathy unmindful of the consequences.

    As Nambiar’s count is less by one, the decision goes against NT and he gets death sentence.
    டியர் ராகுல் சார்
    அம்பிகாபதி ... உண்மையிலேயே இது ஒரு காவியம் தான். அதுவும் இப்பாடலில் தாங்கள் குறிப்பிட்டுள்ள சிறப்புகளைப் படித்த பின்னர் இப்பாடலைப் பார்க்கும் போது நிச்சயம் புதிய கோணத்தில் நடிகர் திலகத்தின் மேன்மையை உணர முடிகிறது. ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் சௌந்தர்ராஜன் குரலில் எப்பொழுதும் நடிகர் திலகத்தை,
    சிந்தனை செய் மனமே
    என சொல்லத் தூண்டுகிறதன்றோ...

    பாடலைப் பார்ப்போமா

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1890
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்று ஒரு பரத நாட்டிய விற்பன்னர் ஒருவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் முறைப்படி பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்ததோடு மட்டுமின்றி அக்கலையில் மிக உயர்ந்த நிலையில் உள்ள கல்வித் தகுதியும் பெற்றவர். அதே நிலையில் மேலும் ஓர் ஆய்வினை மேற்கொள்ள இருப்பதாகக் கூறிய அவரிடம் அந்தத் தலைப்பைப் பற்றிக் கேட்டேன். அவர் கூறிய பதிலில் நான் வியப்பில் திகைத்தது நிஜம். காரணம் அவர் பரத நாட்டியத் துறையில் அடுத்த நிலை ஆய்வுக்கான பொருள் நடிகர் திலகமும் நாட்டியமும் என்பதாகும்.

    அதற்கான துவக்கப் பணிகளை இன்னும் சில கால கட்டத்தில் தொடங்க உள்ளதாகக் கூறிய அவரிடம் காரணம் கேட்டேன்.

    சிவாஜி சார் உண்மையிலேயே ஒரு அவதார புருஷன். பரத நாட்டியத்தில் பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு பரிணாமங்கள் வந்துள்ளன. அதில் நாம் நடிப்பைப் பற்றி விவாதிக்கும் நிலைகளை அந்த நாட்டிய விற்பன்னர் விளக்கினார். மிதமான, சற்றே உரத்த, மிக உரத்த என்ற வெவ்வேறு நிலைகளை பரத நாட்டியம் கடந்த நூற்றாண்டில் சந்தித்து வந்துள்ளது. அபிநயங்கள், முத்திரைகள் என்று பரதநாட்டியத்தில் உள்ள வெளிப்பாடுகள் அத்தனையுமே இந்த நிலைப்பாடுகளை சந்தித்துள்ளன. இவற்றை ஆய்வு செய்யும் பொழுது நாம் கண்டு கொண்ட உண்மை என்ன என்றால், அதாவது எந்தெந்த கால கட்டத்தில், எந்நெந்த விதமான வெளிப்பாடுகள் எந்தெந்த விதமான நிலைப்பாடுகளைக் கண்டுள்ளன என்பதை கண்டறிய வேண்டுமென்றால், அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குபவை சிவாஜியின் படங்களும் அவற்றில் அவருடைய முக பாவங்களும் என்பதே.

    இதற்கு நான் கேட்டேன். அவருடைய நடிப்பை மிகை நடிப்பு என விமர்சிக்கிறார்களே என்று. அதற்கு அவர் கூறிய பதில் என்னை ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தது.

    இதைத் தான் பரத நாட்டியத்தில் உள்ள மிகை பாவ வெளிப்பாடு என்று கூறுகிறோம். பரத நாட்டியத்தில் மிதமான முகபாவ வெளிப்பாடு முத்திரைகள் நிலவிய கால கட்டம் 1950-1965 ஆண்டுகளாம். இந்த கால கட்டத்தில் பரத நாட்டியக் கலைஞர்களிடம் நிலவிய முக பாவமே மித வெளிப்பாடு என்பதாகும். அதனை பிரதிபலிக்கும் விதமாகவே சிவாஜி சாரின் நடிப்பு உள்ளது என்று கூறிய அவர் அதற்கு உதாரணமாய் சில படங்களின் காட்சிகளையும் கூறினார். அதில் குறிப்பிடத் தக்கது ஆண்டவன் கட்டளை படத்தில் அழகே வா பாடலில் அவருடைய முகபாவம். இது சிருங்கார ரசம். பின்னர் 1965 தொடங்கி கிட்டத் தட்ட 1980 வரை என வைத்துக் கொள்வோம் - இந்தக் கால கட்டத்தில் பரத நாட்டியம் சற்றே பரிணாம மாற்றம் கண்டு பாவங்களும் முத்திரைகளும் சற்றே உரக்க வெளிப்பட்டனவாம். இந்த கால கட்டத்திலும் அவர் எல்லா பாத்திரங்களுக்கும் அந்த மாதிரி கொண்டு வராமல் எந்த பாத்திரத்திற்கு சற்றே உரத்த பாவம் தேவை என அறிந்து அதற்கு அந்த அளவிற்கு தந்துள்ளார் எனக் குறிப்பிட்டார். இதற்கும் அவர் கூறிய உதாரணங்கள் வியப்பைத் தருபவை. ஒரு தொலைபேசி காட்சியை வைத்தே அந்த வேறுபாட்டை விளக்கினார். ஒரு அதிகாரியாக அவன் ஒரு சரித்திரத்தில் அவர் தொலைபேசியை கையாண்ட விதம், ஒரு பரபரப்பு மிக்க இளைஞனாக அஞ்சல் பெட்டி 520 படத்தில் அவர் கையாண்ட விதம், ஒரு தொழிலதிபராக அவன் தான் மனிதன் படத்தில் அதே தொலைபேசியைக் கையாண்ட விதம், ஒரு ஆவேசமிக்க வழக்கறிஞராக கௌரவம் படத்தில் அவர் தொலைபேசியை கையாண்ட விதம் என்று அவர் சொல்ல சொல்ல இப்போதே அந்த ஆய்வேட்டை கொண்டு வந்து விட மாட்டாரா என ஆவலைத் தூண்டியது.

    இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவர் சொன்னது நம் அத்தனை பேர் நெஞ்சிலும் பால் வார்த்தது.

    மிகை நடிப்பு என்பதெல்லாம் கலையைப் பற்றித் தெரியாதவர்கள் சொல்லும் வாதம். அவருடைய ஒவ்வொரு பாத்திரத்திலும் அவர் உள்ளே சென்று ஆராய்ந்து எது தேவை என்று அறிந்து செய்கிறார். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர் தன்னை இழக்க வில்லை. அதாவது அந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார் என்பதைக் காட்டிலும் அந்தப் பாத்திரத்திற்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து தேவையானவற்றைத் தருகிறார். இவர் நிச்சயம் சரஸ்வதி தேவியின் அம்சம் என்றார்.

    இன்று முழுக்க மனம் இதையே நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

    இதைப் படிக்கும் உங்களுக்கும் அப்படித் தானே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •