Page 188 of 401 FirstFirst ... 88138178186187188189190198238288 ... LastLast
Results 1,871 to 1,880 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #1871
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அவர் வீட்டு-நாட்டு பிரச்சினைகளால்,உடலும் மனமும் சோர்ந்து கிடந்த போது ,இந்த பாத்திரம் வைத்ததில்,அவரால் பல மடங்கு இயல்பாக சோபிக்க முடிந்தது.
    இந்த வரிகளைத் தவிர முதல் மரியாதை திரைப்படத்தைப் பற்றியும் நடிகர் திலகத்தைப் பற்றியும் தாங்கள் கூறிய மற்றவற்றை நான் பாராட்டுகிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 22nd February 2013 at 09:45 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1872
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முதல் மரியாதை படத்தில் நண்பர் கோபால் அவர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே பிடித்த பல காட்சிகளில் ஒன்று.



    அவர் கூறியது போல் காட்சிகள் மட்டுமல்ல மொத்தப் படமுமே தமிழ் சினிமாவின் வரலாற்றில் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்க வேண்டியதாகும். நடிப்பு மட்டுமின்றி, ஒளிப்பதிவு, எடிட்டிங், என்று அனைத்துத் துறைகளிலுமே தனிச் சிறப்பு வாய்ந்த சில திரைப்படங்களில் முதல் மரியாதை நிச்சயம் இடம் பிடித்துள்ளது.

    மிக அருமையான திரைப்படத்தைப் பற்றி மிகச் சிறப்பாக எழுதியுள்ள கோபால் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    கோபால் சாருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்காத மனிதர்களே இல்லை. நடிகர் திலகம் இதற்கு விதிவிலக்கல்ல. அதனையெல்லாம் சந்தித்ததனால் தான் ஒரு சராசரி மனிதனின் அடிப்படையில் ஒரு தலைவனுக்குரிய கொள்கையை வகுத்துக் கொண்டவர் அவர். அவர் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதற்காக அவருடைய சொந்த வாழ்க்கையப் பற்றியெல்லாம் நாம் எழுத வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். இருக்கும் போது பலரும் பல விதமாக அந்த மனிதரை காயப் படுத்தி விட்டார்கள். இனிமேலும் நாமும் அதனை நினைவு படுத்திக் கொள்ள வேண்டாமே.

    ஒரு சகோதரரைப் போல அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1873
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Dear Raghul
    Your write up on viewing experience of TS is interesting. You mentioned your parents were NT Fans, Had they saw the movie in its first release? Did they share any experience about it? What was their reaction now when they saw it with you?
    Unfortunately My mother saw it only with me few years back . My father saw it in Chitlapakkam varadaraja 3 movies in 1 ticket

    How did the movie perform in BO

  5. #1874
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear Raghul
    THANGA SURANGAM was a super hit movie as far as collection was concerned. Frequent release of movies affected its long run as it has to be lifted to give way for NT's films themselves. We were very eager to see its Silver Jubilee which did not materialise. Had it been allowed to continue in its original theatres, it would have been a SJ in at least 3 to 4 centres. It is an all time favourite of NT Fans and had the repeated audience even in its rereleases.

    In fact you can find it yourself in future, if and when it gets released even for one week in any theatre.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1875
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரைப்படப் பட்டியல் திரியில் அடுத்து இடம் பெறப் போகும் படம் விக்ரம் ப்ரொடக்ஷன்ஸ் தெனாலி ராமன். ஒவ்வொரு சிவாஜி ரசிகர் மட்டுமின்றி நல்ல திரைப்படங்களை விரும்புவோரும், பழைய சரித்திரக் கதைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கிருஷ்ண தேவராயரின் அரண்மனை தர்பாரில் தன்னுடைய திறமையால் நுழைந்து அவருடைய நெஞ்சில் தனி இடம் பிடித்து அவருடைய இக்கட்டான நேரங்களில் சரியான ஆலோசனைகளைத் தந்து புகழ் பெற்ற தெனாலி ராமன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. தெனாலி ராமனாக நடிகர் திலகமும் கிருஷ்ண தேவராயராக என்.டி.ராமராவ் அவர்களும், மற்றும் ஜமுனா, சந்தியா, பானுமதி, நாகையா, நம்பியார் மற்றும் பலரின் திறனான பங்களிப்பில் மறக்க முடியாத படம் தெனாலி ராமன். நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பில் இப்படம் தனி இடம் பிடிக்கிறது. குறிப்பாக முகலாய மன்னர்களின் தூதாக வந்து ராயரை வசியம் செய்ய முயலும் பானுமதியை விரட்ட பெண் வேடம் போட்டு நடிகர் திலகம் அந்தப் புரத்தில் நுழையும் காட்சி குறிப்பிடத் தக்கது. இதைப் பலர் பார்த்திருக்க மாட்டார்கள். அடுத்த பதிவில் இக்காட்சியினை காண இருக்கிறீர்கள்.

    கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று. நடிப்பிற்காக மட்டுமின்றி மெல்லிசை மன்னர்களின் பாடல்களுக்காகவும் இப்படம் குறிப்பிடத் தக்கது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1876
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    My Favourite Scene நான் ரசித்த காட்சி

    முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல் தெனாலி ராமன் திரைப்படத்தில் இடம் பெற்ற இக்காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானதாகும். முகலாய மன்னர்கள் கிருஷ்ண தேவ ராயரைத் தந்திரமாக வசியம் செய்து தங்களுடைய கீழ்ப்படிதலில் விஜய நகர சாம்ராஜ்யத்தைக் கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணா [பானுமதி]வை அனுப்புகின்றனர். இத்திட்டத்தைத் தெரிந்து கொண்ட, விஜய நகர சாம்ராஜ்யத்தின் பால் அக்கறை கொண்ட தெனாலி ராமன், மூத்த மந்திரி [நாகையா]யுடன் கலந்தாலோசித்து இதை முறியடிக்கும் நோக்கில் கிருஷ்ணாவின் தாயார் வேடமிட்டு அந்தப்புரத்துள் நுழைகிறார்.

    இந்தக் காட்சியில் வயதான பெண்மணி வேடம் தரிக்கும் நடிகர் திலகம், பார்ப்பவர்களுக்கு அது வேடம் என்று தெரியும் என்பதையும் மனதில் நிறுத்தி அதே சமயம் அரண்மனைக் காவலாளிகள் சந்தேகப் படா வண்ணம் தன் குரலில் அந்த பெண்மையைக் கொண்டு வந்து தன் வயோதிகத்தையும் வெளிக்காட்டும் வண்ணம் குரல் சற்று உடைந்தாற்போல பேசி இக்காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார். இவ்வளவு நுணுக்கமான விஷயங்களை இக்காட்சியில் கையாள அவருக்கு யார் கற்றுத் தந்தார்கள்.. எந்தப் பள்ளியில் போய் நடிப்பைப் படித்தார். உலகத்தில் திரைப் படங்களைப் பற்றியும் நடிப்பைப் பற்றியும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் வல்லுநர்கள் இருக்கலாம், அதன் அடிப்படையில் அவர்கள் அதனைத் தங்கள் திறமையைக் காட்டலாம்.

    ஆனால் இவருக்கு யார் கற்றுத் தந்தார்கள் ... எங்கோ தமிழ்நாட்டின் மத்தியில் பிறந்து வளர்ந்த ஒரு மனிதர் இன்றைக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா உலகப் புகழ் பெற்ற நடிகராய் இருக்கிறார் என்றால் ...

    அது அன்னை ராஜாமணியின் தவப் பயன் அன்றோ..

    இதோ தெனாலி ராமன் காட்சியைக் காணுங்கள் ...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1877
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    There is an article published in recent issue of
    Kumudham about the NT's visit to Kairo inconnection
    with the VPKB function. If anyone have facility they can
    upload for the benefit of our fans.

  9. #1878
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Recently watched Thirumal Perumai after a long gap in cristal clear print, without rainfall or cut are fadded color. (watching movie in verygood print ads additional joy to watch)

    What a fantastic movie with excelled action of Shivajiand lovely songs by kannadasan & k.v.mahadevan.

    pachai maa malaipol meni
    malargalile pala niram kanden
    kaakkai siraginile nandhalaalaa
    karai yeri meen vilaiyaadum kavirinaadu
    thirumal perumaikku nigaredhu
    gopier konjum ramana
    hara hara gokula ramana
    margazhi thingal madhi niraindha

    I was watching it without removing my eyes from the scenes. It was already discussed here about the dedication of NT when he put his mouth in Sivakumar's leg finger to remove the golden ring.

    the compossing of tune for 'margazhi thingal madhi niraindha nannaalaam' by kvm is excellent. Tears in my eyes when watching it when k.r.vijaya singing it in front of every house and collecting her 'thozhis' one by one.

    because of continuous mythological films by a.p.n. made this movie by not reaching a good box office. (I think it had met a 10 weeks run) but worth for not less than 20 weeks run.

  10. #1879
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Just now I know the news.

    A new movie is under production by name GOWRAVAM.

    old movies oru title kooda vittu vaikka maattanunga pola.

    ippave dvd shopla endha padam peyar solli kettaalum 'pudhusaa, pazahasaa?' appadeennu ketkiraanga.

  11. #1880
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    முதல் மரியாதை-1985-பகுதி-4

    கேமரா வழியாக கதை சொல்ல தெரிந்த ,திரைகதையில் பயணிக்க தெரிந்த,நடிப்பின் பலம் அறிந்த இயக்குனர்,உன்னத உலக நடிகன் இணைவில்,மற்ற கதா பாத்திரங்களும் உணர்ந்து நடித்ததால்,நடிகர்திலகத்தின் வீச்சு பல மடங்கு ஜொலிப்பதில் ஆச்சர்யம் என்ன?அவர் வீட்டு-நாட்டு பிரச்சினைகளால்,உடலும் மனமும் சோர்ந்து கிடந்த போது ,இந்த பாத்திரம் வைத்ததில்,அவரால் பல மடங்கு இயல்பாக சோபிக்க முடிந்தது. அவரின் tired looking தோற்றத்தில், மின்னி மறையும் வலுகட்டாய மகிழ் மலர்ச்சியில்,ஓராயிரம் மடங்கு இந்த melancholic பாத்திரம் மெருகேறியது,ஒரு தன்னிகழ்வு.

    தனியாக,குடிசையில் குயிலை எதிர் பார்த்து,அவளுக்காக உயிரை பிடித்து வைத்திருப்பதில் தொடங்கி,(நெஞ்சு குழிக்குள் ஏக்கத்தை பிரதிபலிப்பார்),வீட்டில் ,ஈரமில்லா மனைவியின் நடத்தையை தளர்வான ஏக்க சோர்வோடு எதிர் கொள்பவர்,சிட்டு குருவிகளை கூடு கட்ட அழைத்து சுதந்திர உணர்வு கொள்வார்.பெண்களை வம்புக்கிழுக்கையில் 75% நட்பு,25%sex உணர்வை(தட்டுமிடம் அப்படி)அழகாய் வெளிகொணர்வார்.(உலகத்திலேயே எந்த நடிகனாலும் முடியாத சாதனை)குயிலிடம் ஒரு சிறுவனை போல் மந்தகாசம் காட்டி,இளகி சிரிப்பார்.வரப்பு மேட்டில், நெல் புடைக்கையில்,கையை சொரிந்து விட்டு கொண்டு கூலியாட்களிடம் காட்டும் வாஞ்சை,ராசம்மா புருஷனிடம் அவனை திருத்தவே முடியாது என்ற பாவனையில் காட்டும் அலட்சிய ஏமாற்றம்,சந்தை காட்சியில் படி படியாய் இறுகும் நட்பு,மீன் பிடிக்கையில் செல்ல அதட்டலோடு காட்டும் அன்னியோன்யம்(உன் முந்தானையே என்கிட்டே கொடுக்கிறவ )காட்டி தன்துண்டை கொடுத்து,தங்கள் இணைவின் அதிர்ஷ்டத்தை ரசிக்கும் அழகு,பூங்காத்து பாட்டில் எனக்கொரு தாய் மடி கிடைக்குமாவில் காட்டும் தீரா ஏக்கம் ,மெத்தை வாங்கி தூக்கத்தை வாங்காத இயலாமை சோகம்,பெண் குயிலை பார்த்ததும் இன்ப அதிர்வு,குயிலின் சவாலை ஏற்று கல்லை தூக்கியதும் ,அவள் பார்த்து விட்ட கூச்சத்தில்,கல்லை ஏடா கூடமாய் விடும் தடுமாற்றம்,மீன்குழம்பு காட்சியில் விளையாட்டாய் துவங்கி,தன் தாயின் அன்பு கலந்த அன்னத்துடன் ஒப்பீடு செய்து ,செல்லமான வேறுபாட்டை சொல்லி நெகிழ்வது,தன் மாப்பிள்ளையை பிடித்து கொடுத்து விட்டு,பேரனிடம் பேசுவது போல் மகளுடன் மன்றாடும் சோக நெகிழ்வு,குயிலிடம் மனதை பரி கொடுத்தாலும் தனக்கு தானே நொண்டி சமாதான denial ,மனைவியை காலால் உதைத்து ,அவள் குறையை குத்தி, செருப்புக்கு சமம் என்று சொல்லும் தன்னிரக்கம் கலந்த குரூர கோபம் ,ஊர் பஞ்சாயத்தில் வச்சிருக்கேன் என்று பலவீனமான வீம்புடன் சொல்லி விட்டு,குயில் காதலை வெளியிட,போலியாய் பம்மும் பாங்கு,உறவு கார்களால் சீண்ட பட்டு குடிசைக்கு சீற்றத்துடன் வந்து அவள் இல்லாததை கண்ட அதிர்ச்சி ஏமாற்றம் என சொல்லி கொண்டே போனாலும்,

    நடிகர்திலகத்தின் high light மரண காட்சியே. நாட்டிய சாத்திரத்தில் சொல்லிய படியே அந்த மரணத்தை நிகழ்த்தி காட்டுவார். உயிர் போவதை அப்படியே காணலாம். ஒரு தேர்ந்த நாட்டிய விற்பன்னர் கூட இதை இவ்வளவு perfect ஆக செய்ததில்லை(வேறு யாராலும் இது சாத்திய படாது)

    (தொடரும்)

    முதல் மரியாதை-1985- பகுதி-5.

    வடிவுக்கரசி பொன்னாத்தாள் பாத்திரத்தில், அதற்கு தேவைப்படும் greyish black shade இல் பின்னியிருப்பார்.இவரின் நடிப்பு, நடிகர்திலகத்திற்கு இன்னும் ஏதுவாய் ,தூக்கி கொடுக்கும்.குயில் சுலபமான பாத்திரம்.ராதாவும் குறை வைக்கவில்லை(ராதிகா குரல் அருமை).எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் வீராசாமி,ஜனகராஜ்,அருணா, ரஞ்சனி ,தீபன் எல்லோருமே பாரதி ராஜா என்ற ring -master இனால் நன்கு பயன் படுத்த பட்டுள்ளார்கள்.

    இளைய ராஜாவுக்கு அல்வா சாப்பிடுவது போல்.தோதாய் பின்னியிருப்பார்.ஏரியிருக்கு ,குருவி குருவி,ஏறாத மல மேல,பூங்காத்து, அந்த நிலாவத்தான்,ராசாவே என்ற நல்ல பாடல்களுடன், re -recording இலும் பின்னணி யிசையும்,rustic melody ,natural sounds ,ஆகியவை கலந்து joy ,melancholy கலந்த counter -point ஆக தொடுத்திருப்பார்.வைரமுத்துவும்,வேஷம் மாறி சாமிக்கு மகுடம் ஏற விழைந்திருப்பார்.ஆனால் மத்திய அரசின் வேஷம் மாறவில்லை.

    பாரதிராஜாவும்,கண்ணனும் சில shotகள் உலக பட தரத்தில் பண்ணியிருப்பார்கள்.(முக்கியமாய் ஆரம்ப சில காட்சிகள்)

    கி.ராஜ் நாராயணின் ,கோபல்ல கிராமத்திலிருந்து உருவி, செல்லகண்ணு-செவளி துணை கதையில் அழகாக,முக்கிய கதை போக்கு கெடாமல் உபயோகித்திருப்பார்கள்.செல்வராஜின் கிழக்கே போகும் ரயிலை பார்த்து, அடடா,இவர் சிவாஜிக்கு எழுதினால்...என்று ஏங்கிய ஏக்கம் போக்க,அதை விட சிறப்பாகவே சிவாஜிக்கு இப்படத்தை தந்திருக்கிறார்.தமிழிலேயே மிக மிக சிறப்பான வசனம் கொண்ட படம் என்று இதைதான் நான் தேர்வு செய்வேன்.ஒரு அட்சரம் கூட எடுக்கவோ,மாற்றவோ,சேர்க்கவோ முடியாத ஒரு கச்சிதம்.அழகுணர்ச்சி,யதார்த்தம்,மனோதத்துவம்,ஜனரஞ்ச கம் எல்லாம் சரி-விகிதமாய், அறிவும்-உணர்ச்சியும் சரிக்கு சரி கலந்த அதிசயம்.(ஜானகிராமன் மோகமுள் கதை போல)

    பாரதிராஜாவின் மிக சிறந்த படைப்பு இதுதான்.அனைத்து நல்ல சினிமா ரசிகர்களின் சிறந்த பத்தில் நிச்சயம் இடம் பெரும் உலக-தரமான திரை படம்.

    (முற்றும்).
    பாலை வனமாய் வற்றிப் போய்க் கிடந்த திரியில் (கோ)பாலை வார்த்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள் திரு கோபால் அவர்களே. சிவாஜி என்னும் தங்கத்தை வெட்டியெடுத்து பாரதிராஜாவினால் அழகாக செதுக்கப்பட்ட முதல் மரியாதைக்கு முதலாவதாக மரியாதை செய்ததற்கு நன்றி. இது போன்ற நல்ல பதிவுகளை எப்போதாவது தான் பார்க்க முடிகிறது.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •