Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,
    இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் இதனுடைய நோக்கம் பார்வை விஸ்தாரமாக இருக்க வேண்டும், இந்த படத்தில் தான் இதைப் பார்ப்பேன் இந்த கால கட்டத்தில் தான் என்னுடைய ஆய்வை நான் உட்படுத்துவேன் என்கிற கண்ணோட்டம் இல்லாத பட்சத்தில் இந்த கட்டுரை முழுமையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும். அந்தக் கலைஞனின் உழைப்பு இறுதிப் படம் வரையில் முழுமையாக இருந்தது. எனவே தங்களுடைய பார்வை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அல்லது குறிப்பிட்ட காலத்தில் என்று இல்லாமல் அவருடைய காலம் முழுதுமாக விஸ்தரிக்கப்படுமானால் அப்போது அதுவே அந்தக் கலைஞனுக்கு தாங்கள் செய்யும் நேர்மையான மரியாதையாக இருக்கும்.

    நடிகர்திலகம் Stanislavski ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner ,Straberg பாணியில் instinctive improvisations செய்து,
    Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில், உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.
    இதைத் தான் நானும் சொல்லி வருகிறேன். He had full control on his performance and did not allow his performance to control him. வெளியில் இருந்த வாறே உள்ளே அந்தப் பாத்திரத்தை I mean the character, உள்ளே அலசி ஆராய்ந்து அதனைத் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்து அதே சமயம் தான் அதற்குள் போகாமல், பார்வையாளனை உள்ளே தள்ளி விடும் சாமர்த்தியம் ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •