Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Wecome back Mr. Neyveli Vasudevan sir, happy to see your posts again.

    You come with the bang of M.N.Rajam, the evergreen Heroine cum Villi cum charector artist.

    Following matter is picked from Saradha mam's old post about M.N.Rajam, (on copy & paste method)

    திருமதி எம்.என்.ராஜம் வழங்கிய 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு சுவாரஸ்யமான விஷயம்...

    'பாவை விளக்கு படத்துக்காக நானும் சிவாஜியும் மற்றும் படப்பிடிப்புக்குழுவினரும் டெல்லி சென்றபோது தமிழ்த்திரையுலக்மே திரண்டு வந்து, ஏன்னவோ நாங்கள் இமயமலையில் ஏறப்போவது போல வழியனுப்பினர். அதற்குக்காரணம், அதுவரை தமிழ்ப்படங்கள் ஊட்டி, கொடைக்கானல் அல்லது மிஞ்சி மிஞ்சிப்போனால் மைசூர் பிருந்தாவனம் வரைதான் சென்று படப்பிடிப்பு நடத்தினர். எங்கள் குழுதான் முதன்முதலில் டெல்லி சென்று படம் பிடித்தது.

    ஆக்ராவில் தாஜ்மகாலின் முன்பு 'காவியமா நெஞ்சின் ஓவியமா' பாடல் படமாக்கப்பட்டபோது, முதல்நாள் அவ்வளவு கூட்டம் இல்லை. மறூநாள் அதிகாலையில் அங்குள்ள மக்கள் பெருங்கூட்டமாக படப்பிடிப்பைக்காண வந்திருந்தனர். கூடவே போட்டோகிராபர்களையும் அழைத்து வந்திருந்தனர். அதற்கு முன் இந்திப்படங்கள் அங்கு எடுக்கப்பட்டிருந்தபோதிலும் அதில் நடித்தவர்கள் பேண்ட், சட்டை அல்லது பைஜாமா சுடிதார் இவற்றுடன்தான் நடித்திருப்பார்கள்.

    ஆனால் சிவாஜியும் நானும் ஷாஜகான் மும்தாஜ் ஆக வேடமிட்டு அந்த அரச உடையில் தலையில் கிரீடம் சகிதம், அதுவும் தாஜ் மகாலுக்கு முன்னால் நிற்பதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் அனைவரும் எங்கள் முன் மண்டியிட்டு சலாம் செய்தனர். அதோடு தாங்கள் அழைத்து வந்திருந்த போட்டோகிராபர்களைக் கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனியாக எங்கள் இருவருடனும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டொ எடுக்கும் சம்பவம் முடியவே ஒருமணிநேரத்துக்கும் மேலே ஆனது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததையும் அவர்கள் நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

    ஆக்ராவில் உள்ள வீடுகளில் நிஜமான ஷாஜகான் மும்தாஜ் படம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் சிவாஜியும் நானும் ஷாஜகான் மும்தாஜ் ஆக வேடமணிந்த போட்டோ பெரும்பாலான வீடுகளில் இடம்பெற்றுள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •