Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-20


    விக்ரமனுக்கு படத்தில் சமவயது நண்பனே கிடையாது. அவன் வாழ்க்கையில் அன்னை ,தந்தை என்ற figure heads மன அளவில் கூட கிடையாது. சொன்ன படி சகலமும் மாமாதான்.

    அதனால் மாமாவுடன் விக்ரமனின் interractions மிக மிக கவனிப்பை பெற வேண்டிய ஒன்று.

    தன் பெண் நண்பிகளுடன் உல்லாசமாக வலம் வரும் மகுடாபிஷேக காட்சியில் சுயவிரும்பி(narcist ) விக்ரமன் தன் அழகை பற்றி கேட்பது கூட மாமாவிடமே. பிறகு கிளி பிள்ளை போல், சுயமாக எதுவும் பேசாமல், மறந்து விட்டேன் என கூறி, stuck ஆகி மாமா சொன்னதை (மிக முக்கிய அறிவிப்பு), போகிற போக்கில் தண்ணி குடித்தேன் என்பது போல அறிவிக்கும் பாணியில், சுய அறிவை மழுங்கடித்து வளர்க்க பட்ட குழந்தை ,ஆசிரியர் கூறியதை மனனம் செய்து போகிற போக்கில் ஒப்பிக்கும் பாணி. எனக்கு மாமா தேவை என்றதும் ஆமோதிக்காத கூட்டத்தை அதட்டும் போதே, குழந்தைக்கு மாமா ஒன்றுதான் உலகம் என்று அழுத்தம் கிடைத்து விடும்.

    தன் விருப்பத்தை மாமாவிடம் சொல்லும் போது , ஒரு நண்பனிடம் பேசும் அன்னியோன்யம் , தாயின் எதிரிலேயே ஒரு பெண்ணை(மந்திரியின் பெண்) கயமை நோக்கோடு கண்ணியமில்லாமல் பார்த்து, மாமா பெண் பிடித்து விட்டது என்று தாயிடம் சொன்னதும்,ஒரு அவசர விழைவு கலந்த ஆமோதிப்பு, கண்ணியமற்ற முறையில் மாமாவிடம் தோழன் ஸ்தானத்தில் ஒரு ஆபாச கமெண்ட் என்று யூகிக்கும் அளவில் ஒரு கிசுகிசுப்பு. முடிவெடுக்க திணறும் அத்தனை தருணங்களிலும் மாமாவிடம், சாவி நின்ற பொம்மை போல ஆலோசனை கேட்கும் எடுப்பார் கை பிள்ளை தனம்.(ஏதாவது சொல்லுங்கள் ரீதியில்).அதில் தனக்கு ஆபத்து வரும் ரீதியில் வந்தால் மட்டும் முழித்து கொண்டு யோசனயை நிராகரிக்கும் குழந்தை தனம் கொண்ட சுய நலம்.
    ஆனால் denial என்றோ, கேட்டது கிடைக்காத போதோ இந்த குழந்தை மாமாவையோ நிர்தாட்ஷன்யத்துடன் குத்தி குதறி திட்டும் ஜோர்.(நீங்கள் மீண்டும் கோட்டை விடாமலிருக்க. நானென்ன முட்டாளா. ஆமாம்.) களித்து,சிரித்து, சகலமுமான மாமாவை பணயமாக வைத்து பார்த்திபன் சவால் விடும் பொது, அப்படியும் செய்து பார்க்கலாமா என்று sadism கலந்த குரூரத்துடன் , குழந்தைத்தனமான குறு குறு ப்புடன் கேட்கும் விதம்.

    ஆனால் , பிடிபடும் நேரம் வரும் போது சுயநலத்துடன் (தண்ட- உன்னை என்ன செய்கிறேன் பார், பேத- மாமாதான் எல்லாம், தான- இந்த நாட்டை தருகிறேன், சாம- என்னை மன்னித்து விடு) குழந்தை கொஞ்ச நேரம் சுயநல அரசன் பாணியில் முயலும். ஆனால் மாமாவை போட்டு கொடுத்து தான் தப்பிக்கவும் தயங்காது.

    மாமாவிடம் நிஜமான கரிசனமோ ,மரியாதையோ இன்றி, விளையாட்டு தோழனாக,விபரீத மந்திரியாக,சொன்னதை நிறைவேற்றும் சேவகனாக என்றுதான் உறவே.

    இது மாதிரி ஒரு அற்புத மனோதத்துவ ரீதியான நடிப்பு வெளியீட்டை ,நானறிந்த எந்த உலக படத்திலும் கண்டதில்லை.

    ----To be continued .
    Last edited by Gopal.s; 5th May 2013 at 02:15 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •