Page 6 of 7 FirstFirst ... 4567 LastLast
Results 51 to 60 of 68

Thread: படித்ததில் பிடித்தது..

  1. #51
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by poem View Post
    Mr. Krishna, இப்பொழுதுதான் பார்த்தேன். மன்னிக்கவும்.

    அப்பர் -600-681- CE
    சம்பந்தர் = 644- 660 CE

    சுந்தரர் - 710-735 CE

    மாணிக்கவாசகர் -660-692 CE

    இதில் அப்பர் சம்பந்தர் ,மாணிக்கவாசகர் மூவரும் 6ம் நூறண்டிலும் சுந்தரர் ஏழாம் நூர்ரண்டிலும் இருந்தவர்கள் என்று ஒரு குறிப்பு சொல்லுது. நான் ரொம்ப புத்திசாலி எல்லாம் கிடையாதுங்க! எல்லாமே தெரிந்து கொண்டு எதுவுமே தெரியாதது போல இருக்கும் பல பேருக்கு நடுவில் அரை குறையான நான்!! I am not offending you, just telling the truth !


    சரித்திர கால சான்றுகள் எவ்வளவு தூரம் மிக சரியாக இருக்கும் என்பதில் எனக்கு எப்பவுமே ஒரு தயக்கம் உண்டு, கண் முன்னாலேயே பல சரித்திரங்கள் மாறுவதை பார்க்கிறோம். பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததை பற்றி சொல்லவும் வேண்டுமா ?

    கொஞ்சம் டைம் கொடுங்க , கட்டாயம் சரியான பதிலை சீக்கிரம் சொல்லகிறேன்.


    தேவாரத்தில் முதலாம் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை, மற்றும் ஏழாம் திருமுறை சுந்தர்ரரால் இயற்ற பட்டது.

    சம்பந்தரின் மூன்றாம் திருமறையில் "மதுரையை" பற்றி

    செய்யனே! திரு ஆலவாய் மேவிய
    ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
    பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
    பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

    .

    அடுத்த முறை மதுரை சென்று மீனாக்ஷி அம்மன் கோவில் செல்லும் சந்தர்பம் கிடைத்தால் சுவாமி சன்னதிதையும் ( எப்பவும் கூட்டமே இருக்காது ) பொற்றாமரை குளத்தின் வலது பக்கத்தில் அமர்ந்து இருக்கும் விபூதி பிள்ளையாரையும் ( திருவிளயாடல் படத்தில் நாகேஷ் ஸ்பெசலாக வணக்கம் வைத்து விட்டு போவார் ) தவறாமல் வணங்கவும்.
    மிக்க நன்றி நண்பர் poem

    அடுத்த முறை மதுரை செல்லும் போது நிச்சயம் விநாயகரை வணங்குகிறேன்.

    பல நல் முன்னோர்கள் வாழ்ந்த நூற்றாண்டு சரியாக ஆவண படுத்தாததால் ஏற்படும் குழப்பம் இது. தேவார தலங்கள் 274 என்பது சமீபத்தில் மேலும் இரண்டு தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 276 ஆக உயர்ந்து உள்ளது. இது போல் பிற்காலங்களில் இன்னும் எத்தனை சேரும் என்பது நாம் அறியமுடியாத ஒன்று. தொல் பொருள் துறை இது குறித்து சற்று விழிப்புடன் வேலை செய்தால் நிறைய தகவல்கள் கொணரலாம்

    நட்புடன்
    gkrishna

  2. Thanks Russellhaj thanked for this post
    Likes Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #52
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    தேங்க்ஸ் ராஜ்ராஜ் சார் .அரிய தகவல்களை அறிய தருகிறீர்கள்
    gkrishna

  5. #53
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அன்பு நண்பர் poem அவர்களுக்கு

    மதுரை தேவார பதிகம் சில நினைவுகளை கிளறி விட்டது. 2 ஆண்டுகளுக்கு முன் எனது இரண்டாவது மகள் மற்றும் எனது அதிகாரி ஒருவரின் இரண்டாவது மகன் தமிழ் நாடு பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான சமயம். எங்கள் இல்லத்தில் இந்த தேவார திருவாசக பதிகம் மீது மிகவும் நம்பிக்கை கொண்டு தினசரி 'மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஓத வேண்டிய பதிகம் ' என்ற தலைப்பில் திருகருபறியலூர் பதிகம் ஓதுவோம். இப்படி ஒரு வேண்டுதலுக்கு ஆக பதிகம் ஓதுவது கூட சுயநலம் தான் .திருவாடுதுறை ஆதீன மடத்தின் சார்பாக ஒரு புத்தகம் கூட வெளியிட்டு உள்ளார்கள் .

    இந்த பதிகத்தை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள்.

    'சுற்றமொடு பற்று அவை துயக்க அறு அறுத்து
    குற்றம் இல் குணங்களோடு கூடும் அடியார்கள்
    மற்று அவரை வானவர் தம் வான் உலகில் ஏற்ற
    கற்றவன் இருப்பது கருப்பறியலூரே ' என்று ஆரம்பிக்கும்.

    இந்நிலையில் எனது அதிகாரி என்னிடம் 'ஒரு முறை நாம் ஏன் திருகருபறியலூர் சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு வர கூடாது ' என்று வினவினார். நானும் சரி என்று சொல்லி விட்டு map எல்லாம் எடுத்து திருகருபறியலூர் எங்கு உள்ளது என்று ஆராய்ந்தால் அந்த பெயரில் ஒரு ஊரே இல்லை. பிறகு சில பல இணைய தளங்கள் சென்று (முக்கியமாக சைவம்.org ) தலத்தை அறிந்தோம்.இந்நாளில் அதன் பெயர் தலை ஞாயிறு .வைதீஸ்வரன் கோயில் ஊரில் இருந்து 8 அல்லது 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு முன் திருப்புன்கூர் (நந்தனாருக்கு நந்தி விலகி தரிசனம் கொடுத்த இடம்) என்று தலம் உள்ளது.அங்கிருந்து தலை ஞாயிறு சென்று விட்டோம். மெயின் ரோடு இல் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அந்த கோவிலை கண்டு பிடிக்க நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே . நல்ல வேலையாக சென்னையில் இருந்து கார் அமர்த்தி கொண்டு சென்றதால் நிறுத்தி நிறுத்தி விசாரித்து கோயிலை அடைந்தோம் . இன்றும் அது என் நினைவில் கண் முன் உள்ளது . இறைவன் பெயர் 'குற்றம் பொறுத்த நாதர் ' .இறைவி நாமம் 'கோலவிழி நாயகி ' -மறக்க முடியாத அனுபவம் .

    நன்றி poem நினைவலைகளை மீட்ட வாய்ப்பு தந்தமைக்கு



    மன்னிக்கவும் மற்ற மதத்தின் நண்பர்கள் இருந்தால் தயவு செய்து மத பிராச்சாரம் என்று எண்ண வேண்டாம் . நமது பாரத மற்றும் தமிழக வரலாறு கோயில்களில் எண்ணற்ற வகையில் காண கிடைக்கின்றது என்பதை பகிர்ந்து கொள்ளவே .

    என்றும் நட்புடன்
    gkrishna

  6. Likes chinnakkannan, aanaa, Russellhaj liked this post
  7. #54
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வலி என்பது !




    ’கழுத்து வலிக்கிறது’
    என்றாள்
    ‘ எப்போதும் உன்னிடம்
    ஏதாவது ஒரு வலியைப் பற்றித்தான்
    சொல்லிக்கொண்டிருக்கிறேன்’
    என்றாள்
    இதைச் சொல்லும் போது
    அவள் குரல் தணிந்து
    இருண்டுவிட்டிருந்தது

    அவளுக்குத் தெரியவில்லை
    வலி என்பது ஒரு கோரிக்கை
    வலி என்பது ஒரு நிபந்தனை
    வலி என்பது ஒன்றைக் கடப்பதற்கான தத்தளிப்பு
    வலி என்பது அன்பிற்கான ஒரு அழைப்பு

    என்று

    - மனுஷ்ய புத்திரன்
    Last edited by poem; 26th November 2014 at 08:12 AM.

  8. Likes aanaa liked this post
  9. #55
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    "In the midst of hate, I found there was, within me,
    an invincible love.

    In the midst of tears, I found there was, within me,
    an invincible smile.

    In the midst of chaos, I found there was, within me,
    an invincible calm.

    I realized, through it all, that…
    In the midst of winter, I found there was, within me,
    an invincible summer.

    And that makes me happy. For it says that no matter how hard the world pushes against me, within me, there’s something stronger – something better, pushing right back."


    ~ (Albert Camus)

  10. #56
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    சமீபத்தில் 92வது வயதில் காலமான அமெரிக்க நகைச்சுவை நடிகர் sid ceaser ( 1922-2014) க்கு ஐன்ஸ்டீன் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சி அனுபவம்:

    1955 ஏப்ரல் 15ம் தேதி சீஸர் தன்னுடைய டி.வி.காமெடி நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு தகவலை டி.வி. நிலயத்தினர் தெரிவித்தார்கள். சார்.. பிரின்ஸ்டனிலிருந்து ஐன்ஸ்டீனின் அலுவலகத்திலிருந்து உங்களுக்கு ஒரு போன் வந்தது. ஐன்ஸ்டீன் உங்களைப் பார்க்க விரும்புகிறார். வருகிற திங்கட்கிழமையன்று வந்து அவரைப் பார்க்க முடியுமா? என்று கேட்டார்கள். ஐன்ஸ்டீன் உங்கள் விசிறியாம்! என்றார்கள்.

    சீஸருக்குத் தலைகால் புரியவில்லை. அதே சமயம் நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகமும் வந்தது.
    உடனே சீஸர் அது உண்மையான டெலிபோன்தான் என்று தெரியவந்ததும் ரிகர்ஸலை மூட்டைகட்டி வைத்துவிடுங்கள் என்றார்.

    இனி இது பற்றி சீஸர் எழுதியதைத் தருகிறேன்:
    முதலில் ஐன்ஸ்டீன் எழுதிய புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வரச் சொன்னேன். நாளை, மறுநாள் இரண்டு நாளைக்குள் முடிந்தவரை படித்து விடுகிறேன். திங்கட்கிழமை அவரை சந்திப்பது என்பது மிக அரிய வாய்ப்பு.
    அதன்படியே கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். முடிந்த வரைப் படித்தேன். புத்தகசாலைக்குச் சென்று அகப்பட்ட புத்தகங்களையெல்லாம் புரட்டினேன். திங்கட்கிழமை (ஏப்ரல் 18, 1955) காலை அவரைச் சந்திக்க பரபரப்புடன் தயார் செய்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இரவு ஒரு மணிவாக்கில் காலமாகிவிட்டார்!
    அது செய்தி அல்ல. என் தலைமேல் விழுந்த இடி!

    பெரியவர் 'கடுகு' என்ற அகத்தியன் அவர்கள் பதிவில் இருந்து -
    (குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என்று பல பத்திரிகைகளில் அகஸ்தியன், கடுகு என்ற பெயர்களிலும், வேறு பல புனைப் பெயர்களிலும் 40 ப்ளஸ் வருஷங்களாக எழுதி இவர் பிரசித்தம் - இந்த குறிப்பு திரு அகஸ்தியன் அவர்களை அறியாதவர்களுக்காக )
    gkrishna

  11. #57
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like


    சுஜாதாவும் நானும் - பெரியவர் 'கடுகு'

    ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் கணையாழியில் சுஜாதா எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். நானும் கணையாழியில் சில இதழ்களில் டில்லி வாழ்க்கை என்ற தலைப்பில் எழுதி உள்ளேன். கணையாழி ஆசிரியர் திரு.கஸ்துரிரங்கன் என் நண்பர்.குமுதத்தில் சுஜாதா என்ற பெயரில் இதுமட்டும் என்ற அவருடைய கதை வந்ததும் அவர் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியவர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தார்.
    அவருடைய கதை வெளியான வாரம் நான் கரோல்பாக் போக வேண்டிய வேலை இருந்தது. அங்கிருந்த அவர் வீட்டிற்குச் சென்று பாராட்டினேன். அப்போது குமுதத்தில் நானும் ஒரு ஆஸ்தான வித்வானாக இருந்தேன்.

    அவரது அலுவலகம் சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்தது.. பார்லிமெண்ட், கன்னாட் பிளேஸ் போன்ற மத்திய டில்லியிலிருந்து சற்றுத் தள்ளியிருந்தது. அதனால் யு.என்.ஐ கேன்டீன் ஜமாவிற்கு அவர் எப்போதாவதுதான் வருவார்.

    வித்தியாசமான நடை மட்டுமல்ல, வித்தியாசமான பதப் பிரயோகங்கள், சற்று கவர்ச்சியான வர்ணணைகள் காரணமாகவும் குமுதத்தில் நைலான் கயிறு தொடர்கதை வெளியானதும் அவருடைய பெயர் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டது.

    அச்சமயம் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன்.
    அந்தக் கதை மறந்து விட்டது. ஆனால் அதில் சில லே அவுட், சில வார்த்தைகளுக்கு வித்தியாசமான ஸ்பெல்லிங், சில எழுத்துக்களைத் திருப்பிப் போட்டிருந்தது, சில வரிகள் சாய்வுப் பாதையாக அமைந்திருப்பது போன்று பல சர்க்கஸ் வித்தைகள் செய்திருந்த அந்தப் புத்தத்தை சுஜாதாவிடம்கொடுத்தேன். ( உதாரணமாக அதில் வந்த ஒரு புதுமையைச் சொல்கிறேன். அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிஷம் மௌனமாக இருந்தாள் என்று எழுதிவிட்டு, அடுத்த ஒரு பக்கத்தைக் காலியாக விட்டிருந்தார்கள்,) என்னென்னமோ பண்ணியிருக்கான் என்று வியந்து ரசித்தார். இந்த புஸ்தகத்திலிருந்து அவர் எந்த ஐடியாவையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் வித்தியாசமாக சிந்திக்க அந்தப் புத்தகம் ஒரு சதவிகிதமாவது அவருக்கு உதவியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
    gkrishna

  12. #58
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    WhatsApp . ஒரு கல கல கலக்கள் ..!!!

    Some of them are too good

    WhatsApp . ஒரு கல கல கலக்கள் ..!!!


    SOURCE::::www.dinamalar.com
    gkrishna

  13. Likes kalnayak, raagadevan liked this post
  14. #59
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    thanks raagadevan for liking whatsapp kala kala
    gkrishna

  15. #60
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    thanks- Tamil Hindu today Newspaper


    தமிழ் சினிமாவின் முதல் சமூகப்படமான மேனகாவில் மொட்டைத் தலையுடன் அறிமுகமான என்.எஸ்.கே.

    நவம்பர் 29: கலைவாணர் பிறந்த தினம்

    பிரதீப் மாதவன்

    எத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் காலம் எல்லோரையும் பொக்கிஷமாகப் பொத்தி வைத்துப் பாதுகாப்பதில்லை. நூறாண்டு தமிழ்த் திரைக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுத்தந்த ஜாம்பவான்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமா மறக்காத பொக்கிஷம். நகைச்சுவையைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்த முனைந்த முதல் முன்மாதிரி. ஒப்புமையும் மாற்றும் இல்லாத அசல் கலைஞன். சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து என்று மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லும் முன்பே, மக்களுக்குப் புரிய வைத்தவர்.

    தனது முற்போக்குச் சிந்தனைகளால், கட்டியங்காரனுக்கும் கோமாளிக்கும் நாடக மேடையில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். நாடகத்திலிருந்து திரைக்குப் பிரவேசித்ததும், அந்த ஊடகத்தின் வீச்சைப் புரிந்துகொண்டு, மூடத்தனங்களை வலிக்காமல் கிண்டி கிழங்கெடுத்தவர். இன்று தமிழ் சினிமாவின் நகைச்சுவை தரமிழந்து விட்டாலும் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் கையாளும் கிண்டலும், கேலியும் கலைவாணர் போட்டுக்கொடுத்த பாதையைப் பின்பற்றித் தொடர்வதுதான்.

    வறுமையும் இளமையும்

    அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில் ஒழுகினசேரி என்ற கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29 அன்று கலைவாணர் பிறந்தார். தொடக்கக் கல்வியை மலையாளப் பள்ளியில் படித்த கலைவாணர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். ஆனால் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வீட்டின் வறுமையான சூழல் ஒத்துழைக்கவில்லை. அப்பா சுடலைமுத்து நாகர்கோவில் தபால் அலுவலகத்தில் கடைநிலை ஊழியர். தாயார் இசக்கி அம்மாளோ வீட்டிலேயே சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார். பெற்றோரின் வருமானம் மொத்தக் குடும்பத்துக்கும் போதவில்லை. குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த கலைவாணருக்கு இரண்டு அக்காள்கள், மூன்று தங்கைகள் ஒரு தம்பி எனப் பெரிய குடும்பமாக இருந்தது. பல வேளைகளில் அம்மாவுக்கும், மூத்த அக்காவுக்கும் காலை உணவு இல்லாமல் போவதைக் கண்டறிந்து உணவு உண்ண மறுத்துக் குடும்பத்துக்காக வேலைக்குச் செல்ல முன்வந்தார்.

    அப்போது பலசரக்குக் கடை ஒன்றில் விற்பனைப் பையனாக அவருக்கு வேலை கிடைத்தது. மாதம் ஐந்து ரூபாய் சம்பளம். ஆரம்பத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைக்கும் ஆபத்து வந்தது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் கொஞ்சம் தாமதமாகக் கடைக்குச் சென்றவரைத் திட்டி அவமானப்படுத்தினார் கடை முதலாளி. கடுமையாக வேலையும் வாங்கினார். கொஞ்சம் உட்கார்ந்துவிட்டாலோ கலைவாணரைப் பார்த்து உழக்கு, கோம்பை ஆகிய சொற்களால் அடிக்கடி திட்டத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனம் கொதித்த கலைவாணர், தனது கணக்கைப் பைசல் செய்து அனுப்பும்படி கோபத்துடன் கேட்க, பயந்துபோன முதலாளி உடன் அந்த மாதத்திற்கான நாட்களைக் கணக்கிட்டு நான்கு ரூபாய் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

    கம்பீரமாகச் சக ஊழியரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார் கலைவாணர். வேலையை விட்டது வீட்டுக்குத் தெரியக் கூடாது என்று எட்டையபுரத்தில் இருந்த தனது அக்காள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். போகும்போது கிடைத்த நான்கு ரூபாய் சம்பளத்துக்கும் சீர் பொருட்களை வாங்கிச் சென்றார் அந்தப் பதிமூன்று வயதில்! தம்பி மீது பாசம் கொண்ட அக்காவோ தம்பியைப் பிள்ளைபோல் உபசரித்ததோடு, கலைவாணரின் கோபம் குறையட்டும் என்று மிருதங்கம் கற்றுக்கொள்ள அனுப்பினார். ஆறே மாதத்தில் மிருதங்கம் கற்றுமுடித்த கலைவாணருக்கு அதன் பிறகு அங்கே கால் தரிக்கவில்லை.

    பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய கலைவாணர் 14 வயதுப் பையனாக நாடகக் கொட்டகை அருகே சோடா விற்கும் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஒருநாள் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவரை நாடக மேடை மாயம் செய்து வசப்படுத்தியது. அதன்பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கும் சிறுவனாகத் தனது வேலையிடத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் நாடகக்குழு முகாமை முடித்துக் கிளம்பியதும் வெறுமையை உணர்ந்தார். அடுத்த நாடகக் குழு வந்து முகாம் அமைக்கும் வரை, அம்மாவின் புடவையையே திரைச் சீலையாக்கி, தனது சக நண்பர்களுடன் நாடகம் நடித்தார். அப்படி அவர் நடித்தது புராணம் அல்ல. அவரே எழுதிய நகைச்சுவை நாடகம் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. அதன்பிறகு தனது 17 வயதில் வில்லுப்பாட்டுக் குழுவில் சேர்ந்தார்.

    பன்முகக் கலைஞன்

    இப்படித்தான் நாடகமும் கலையும் அவரை அழைத்துக் கொண்டது. எஸ்.எஸ்.வாசன் கதை எழுதி எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் 1936-ல் வெளியான சதிலீலாவதிபடத்தின் மூலம், எம்.ஜி.ராமச்சந்திரனோடு அறிமுகமானர். ஆனால் இந்தப் படத்துக்கு பின்னர் கலைவாணர் நடித்த மேனகா என்ற திரைப்படமே முதலில் வெளியானது. தமிழ் சினிமாவுக்கு சிரிப்பு மேதை கிடைத்தார்.

    என்.எஸ்.கிருஷ்ணனிடம் எண்ணற்ற கலையாளுமைகள் இருந்தன. நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், மூடத்தனங்கள், ஏமாற்றுக்காரர்கள் ஆகியோரை வன்மையான சொற்களைக்கூடப் பயன்படுத்தாமல் மென்மையாகப் பகடி செய்த சமூக விஞ்ஞானி அவர். பாடலையும் நகைச்சுவைக் காட்சியாக மாற்ற முடியும் என்ற மாயத்தைத் திரையில் முதலில் செய்துகாட்டியவர்.

    என்.எஸ்.கே. நாடக சபா என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை அமைத்து, 1800 காட்சிகளை நிதி திரட்டுவதற்காகவே நடத்தினார். அதில் கிடைத்த வருவாய் முழுவதையும் நலிந்த கலைஞர்களுக்காக உதவிய கருணை உள்ளம் கொண்ட கலைஞர். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை 1953 ஸ்தாபித்து, அதற்கு ஐந்து ஆண்டுகள் தலைவராகவும் இருந்தவர். ஒரு நடிகனால் வள்ளலாகவும் இருக்க முடியும் என்று வாழ்ந்து காட்டியவர். தன் உதவியாளரிடம் என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் உயிரோடு இல்லாமல் இருக்க வேண்டும்! என்று கூறுவாராம். படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன் காலை 8 மணிக்கெல்லாம் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நின்றுவிடுவார். அப்போது அவர் சொல்லும் வார்த்தை ஐயா தர்மப் பிரபு என்பது. உடன் கலைவாணர் அவர் அருகில் போய் என்னைப் பிரபுன்னு சொல்லாதென்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என்று பணத்தைக் கொடுத்துவிட்டு வருவார். அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று வீட்டார் சொல்ல என்னை ஏமாற்றி மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான்? என்று சொல்வாராம் கலைவாணர்.

    அழுதுகொண்டே சிரிக்க வைத்தவர்

    அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களின் விருப்பத்துக்குரிய ஆளுமையாக இருந்த கலைவாணருக்குத் திரையுலகில் நெருங்கிய தோழராக இருந்தவர். எம்.கே.டி. லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தனது கலை வாழ்க்கையில் பிரச்சினைகள் வரிசை கட்டி நின்றபோதெல்லாம் உள்ளே அழுதுகொண்டே, தன்னை நம்பிய ரசிகர்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தார். இவரைத் தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் என்று புகழ்ந்தபோது சார்லியை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்! என்று தன்னடக்கத்துடன் பதில் கூறினார். என்.எஸ்.கே.வின் வாழ்வைத் திரைப்படமாக்கினால் சுவைக்காகக்கூடத் திரைக்கதை யில் ஜோடனைகள் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. அத்தனை விறுவிறுப்பானது அவரது நிஜ வாழ்க்கை
    gkrishna

  16. Likes kalnayak liked this post
Page 6 of 7 FirstFirst ... 4567 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •