Page 18 of 28 FirstFirst ... 81617181920 ... LastLast
Results 171 to 180 of 274

Thread: வாலு - சிலம்பரசன் - சந்தானம் - s தமன் - நிக் ஆர்

  1. #171
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    திரைக்கு வருகிறது 'வாலு': நடிகர் சிம்பு உற்சாகம்


    'வாலு' படத்துக்கு இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்த நிலையில், அப்படம் வெளியாவது குறித்து நடிகர் சிம்பு உற்சாகமாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
    விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது.

    ஜூலை 17-ம் தேதி 'வாலு' படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 'வாலு' படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
    உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் வாலு' ரிலீஸ் ஆகவில்லை. தற்போது, மேஜிக் ரேஸ் நிறுவனம் தனது வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

    இது குறித்து விசாரித்தபோது, மேஜிக் ரேஸ் நிறுவனத்துக்கு குறிப்பிட்ட தொகை அளிக்கப்பட்டது. மீதமுள்ள தொகையை விரைவில் அளிப்பதாக உத்தரவாதம் தந்ததால் சிக்கல் தீர்ந்தது எனத் தெரிகிறது.
    'வாலு' படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரிய வழக்குகள் திரும்பப்பெற்ற நிலையில், படம் ரிலீஸ் ஆவது உறுதியாகி இருக்கிறது.

    வாலு படத்துக்கு இருந்த நீதிமன்ற சிக்கல்கள் தீர்ந்தன என்றும், விரைவில் படம் வெளியாகும் என்றும் சிம்பு தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன், ஆகஸ்ட் 14ல் 'வாலு' ரிலீஸ் ஆகும் என்று வேறு சிலர் பகிர்ந்த தகவலை உறுதி செய்யும் விதமாக அவர் ரீட்வீட் செய்துள்ளார்.

    முன்னதாக, 'வாலு' படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் பண உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #172
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    gossip

    ஒருவழியாக பஞ்சாயத்தெல்லாம் முடிந்து விரல் நடிகரின் வெகு நாள் படம் ரிலீஸ் ஆகப் போகிறது. பிரச்னைகள் ஏதும் இப்போதைக்கு இல்லை. மேலும் பன்ச் நடிகரின் தலையீட்டால் இனி பிரச்னைகள் எழாது என நம்பினாலும் சின்ன பயம் படக்குழுவுக்கு லைட்டாக இருக்கத்தான் செய்கிறதாம். உங்க நல்ல மனசுக்கு!

  4. #173
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தடை விலகியது - சுதந்திர தினத்தில் வெளியாகும் வாலு - Webulagam

    சிம்பு நடிப்பில் மூன்றாண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம், வாலு. சிம்புவின் சின்சியாரிட்டி காரணமாக படம் பல வருடங்களை எடுத்துக் கொண்டது. அனைத்து வேலைகளையும் முடித்து படத்தை வெளியிடும் நேரத்தில் வழக்கு வடிவத்தில் வந்தது பிரச்சனை. நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்தது.


    பல ரிலீஸ் தேதிகளை கண்ட வாலு கடைசியாக, ஜுலை 17 வெளியாகும் என்றனர். அன்றும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் நடிகர் விஜய், வாலு படம் வெளிவருவதற்கு முயற்சி எடுத்தார். இன்று உயர்நீதிமன்றம் வாலு மீதான அத்தனை தடையையும் விலக்கி தீர்ப்பளித்தது. தடைகள் விலகியதால் சுதந்திர தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

  5. #174
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'வாலு' வெளியீட்டைத் தடுக்கிறேனா?- உதயநிதி காட்டம்- Tamil Hindu

    'வாலு' படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார் என்று ட்விட்டர் தளத்தில் கூறிவந்த சிம்பு ரசிகர்களுக்கு, காட்டமாக பதிலளித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் 'வாலு' படத்தை ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், படத்துக்கு பல்வேறு தரப்பில் பிரச்சினைகள் நிலவி வந்ததால், ஒவ்வொரு பிரச்சினையாக முடித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 14ம் தேதி படத்தை வெளியிடுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது.

    ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படமும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. ஆர்யா நடிப்பில் வெளியாகும் 25வது படம் என்பதால், படத்தை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    மேலும், ஆகஸ்ட் 14ம் தேதி வெளியீடு என்
    பதை ஒரு மாதத்துக்கு முன்பே அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்கள். இப்படத்துக்கு திரையரங்குகள் ஒப்பந்தம் மட்டும் உதயநிதி ஸ்டாலின் செய்து கொடுக்கிறார்.
    இந்நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி 'வாலு' வெளியாக கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள், உதயநிதிக்கு எதிராக ஹாஷ்டேக் ஒன்றை தயார் செய்து ட்ரெண்ட் செய்து வந்தார்கள். மேலும், உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் தளத்தை குறிப்பிட்டு திட்டி தீர்த்தார்கள் சிம்பு ரசிகர்கள்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில், "இது மிகவும் நகைப்புக்குரியதாக இருக்கிறது. நான் ஏன் வாலு பட ரிலீஸை தடுக்க வேண்டும். மேலும் அது எவ்வாறு முடியும். இத்தகைய முடிவுகளுக்கு வருவதற்கு முன் நன்றாக யோசியுங்கள்.
    அர்த்தமற்ற விஷயங்களை பதிவு செய்து காரணமே இல்லாமல் ட்விட்டரில் நான் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறேன். நான் எந்த ஒரு நட்சத்திரத்துக்கும் எதிரானவன் இல்லை. எந்த ஒரு நட்சத்திரத்தின் ரசிகர்களும் எனக்கு எதிரி இல்லை. அடுத்தவர்களை விமர்சிக்கும் முன் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு படமும் அதனை தயாரிப்பவர்கள், விநியோகிப்பவர்கள், தியேட்டரில் அதை வெளியிடுபவர்களுக்கு மிகவும் முக்கியமானது. எனது படங்கள் முக்கியத்துவம் பெற வேண்டும் என நான் நிச்சயம் நினைப்பேன். ஆனால், அதற்காக அடுத்தவர் படத்தை தடுக்க மாட்டேன்" என்று காட்டமாக தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.



    உதயநிதி, சிம்பு திடீர் மோதல், தொடரும் பரபரப்பு - Vikatan



    சிம்புவின் வாலு படம் மீதான சர்ச்சைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வருகிற 14 ஆம் தேதி அப்படம் வெளியாகிவிடும் என்று உறுதியாகச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தாலும் படத்தின் விளம்பரங்களில் வெளியீட்டுத்தேதி குறிப்பிடப்படாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் சரியான திரையரங்குகள் கிடைக்காததுதான் என்று சொல்லப்படுகிறது.
    ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவிருக்கும் வாசுவும்சரவணனும்ஒண்ணாபடிச்சவங்க படத்துக்காக நிறையத் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்திருப்பதால் இந்தப்படத்துக்குச் சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

    இதனால் அந்தப்படத்தை வெளியிடும் உதயநிதிஸ்டாலினால் வாலு படம் வெளியாவதில் சிக்கல் என்று சிம்பு ரசிகர்களும், எங்கள் அண்ணன் பாட்டுக்கு அவர் வேலைகளைப் பார்க்கிறார் அவரைச் சீண்டாதீர்கள் என்று உதயநிதி ரசிகர்களும் வலைதளங்களில் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து, தன் ரசிகர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்று சிம்பு வேண்டுகோள் விடுக்கிறார். இதனால் திரையுலகில் பரபரப்பு நிலவிக்கொண்டிருக்கிறது. இதேபோல சில மாதங்களுக்கு முன்பாக கொம்பன் படம் வெளியாக உதயநிதி தடையாக இருக்கிறார் என்கிற செய்திகள் வந்தன, அப்போது அதைக் கடுமையாக மறுத்து உதயநிதி அறிக்கை வெளியிட்டார்.

    இப்போது இந்தச்சிக்கலில், நான் எந்த நடிகருக்கும் எதிரானவன் அல்ல, அடுத்தவரைக் குற்றம் சொல்லும் போது மூளையை உபயோகியுங்கள் (அப்படி ஒன்று இருந்தால்) என்று சொல்லியிருக்கிறார்.
    I'm not against any stars or stars fans! But remember 1 basic thing! Just use ur brain (if u have one) b4 commenting on other ppl! #nonsense
    Udhay (@Udhaystalin) August 9, 2015
    Request fans to calm down ... Every thing will be solved by gods grace and if there is anything i will open up ..So stay calm #Vaaluontheway
    STR (@iam_str)

  6. #175
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    STR ‏@iam_str 4h4 hours ago With Gods grace #VaaluOnAugust14 ... All issue sorted and paper ad with date from tom ... Super happy for fans

  7. #176
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Sreedhar Pillai ‏@sri50 5h5 hours ago
    #Vaalu Release Update - #TR says : "All issues sorted out just now, film set 4 release on Aug 14. " Good News 4 @iam_str and all fans

  8. #177
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

  9. #178
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    TV Promo

  10. #179
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    விஜய்யால் மேலும் பலனடையும் டி.ராஜேந்தர்

    சில வருடங்களாக நீடித்த சிக்கல்கள் முடிவுக்கு வந்து ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவிருக்கிறது சிம்பு நடித்த வாலு. இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் டி.ராஜேந்தர்.
    இந்தச்சிக்கல் தீர நடிகர் விஜய் உதவி செய்தார் என்பதையும் குறிப்பிட்ட டி,ராஜேந்தர், விஜய் அவருடைய படத்தாயரிப்பாளரையும் அவருடைய படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தரையும் கூப்பிட்டு எனக்கு உதவும்படி சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி என்று சொன்னார்.

    அதோடு இனி தொடர்ந்து சிம்பு சினிஆர்ட்ஸ் நிறுவனம் படங்களை வாங்கி விநியோகிக்கும் வேலைகளைச் செய்யும் என்று சொன்னவர், அநேகமாக விஜய்யின் புலி படத்தின் சேலம் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் வெளியிடும் உரிமையை வாங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

    வாலு படத்துக்கு விஜய் உதவியிருக்கிறார், புலி படத்தை இரண்டுபகுதிகளில் விநியோகம் செய்வதன் மூலம் மேலும் பலனடையவிருக்கிறார் டி.ஆர் என்று சொல்லப்படுகிறது.

  11. #180
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Vaalu - 10 Sec TV Spot 2 | Releasing On 14th Aug


Page 18 of 28 FirstFirst ... 81617181920 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •