Page 16 of 28 FirstFirst ... 6141516171826 ... LastLast
Results 151 to 160 of 274

Thread: வாலு - சிலம்பரசன் - சந்தானம் - s தமன் - நிக் ஆர்

  1. #151
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Todays AD

    MDSG550132-M.jpg

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #152
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிம்புவின் 'வாலு' ரிலீஸுக்கு தடை கோரி வழக்கு

    சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் 'வாலு' படத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூலை 17ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது.
    சமீபத்தில் தான் 'வாலு' படத்தின் 'தாறுமாறு' பாடல் படப்பிடிப்பு முடிவுற்றது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படம், தற்போது வெளியீடு வரை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
    இந்நிலையில், 'வாலு' படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டுள்ளது.

    "தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள்.

    எனவே எங்களைத் தவிர வேறு நபர் மூலமாக 'வாலு' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மேஜிக் ரேஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

    இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது. ஜூலை 17ம் தேதி வெளியாக இருந்த 'வாலு' படத்துக்கு இந்த வழக்கு பெரும் பின்னடைவாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது

  4. #153
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிம்புவா? தனுஷா? எகிறவைக்கும் எதிர்பார்ப்பு

    ஜூலை பதினேழாம்தேதி சிம்புவின் வாலு, தனுஷின் மாரி மற்றும் சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் ஆகிய மூன்றுபடங்கள் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. இம்மூன்று படங்களில் ரஜினிமுருகன் படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடையாததால் 17 ஆம் தேதி வெளியாகாது என்று சொல்லப்பட்டது.
    அதன்பின்னர் சிம்பு படமும் தனுஷ் படமும் நேரடிப்போட்டியில் இருந்தது. தனுஷ் படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ் கிடைக்காததால், மறுதணிக்கை செய்து யு சான்றிதழ் பெறும் முயற்சியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியும் உறுதியாகச் சொல்லப்படவில்லை.

    வாலு படம் பதினேழாம்தேதி வெளியாகும் என்று விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. இப்போது அந்தப்படத்தின் வெளியீட்டுக்கும் தடைகோரி நீதிமன்றம் சென்றிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இப்போது பார்த்தால் ஜூலை 17 அன்று ஒருபடம் கூட வெளியாகாமல் போய்விடக்கூடும் என்கிற நிலை. இதனிடையே நீதிமன்றச்சிக்கலைச் சந்தித்து படத்தைத் திட்டமிட்டபடி கொண்டுவந்துவிடுவோம் என்று வாலு படக்குழுவினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.

    இன்னொரு பக்கம், மாரி படத்துக்கு மறுதணிக்கையில் யு சான்று கிடைத்துவிடும் அந்தப்படமும் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அந்தப்படக்குழுவினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.
    இரண்டுபடங்கள் வெளியாகி எந்தப்படம் வெற்றி பெறும் என்கிற போட்டியைத் தாண்டி இப்போது இரண்டுபடங்களில் எந்தப்படம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் எல்லோரும் இருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

  5. #154
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிம்புவின் 'வாலு' படத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

    சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் 'வாலு' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூலை 17ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட இருக்கிறது.

    இந்நிலையில், 'வாலு' படத்தின் வெளியீட்டிற்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. அதில் "தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். எனவே என்னைத் தவிர வேறு நபர் மூலமாக 'வாலு' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று மேஜிக் ரேஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

    இவ்வழக்கு இன்று (ஜூலை 8) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது 'வாலு' தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். 13ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை 'வாலு' திரைப்படம் வெளியிட தடை விதித்தும், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. Magic rays சார்பாக வழக்கறிஞர் என். ரமேஷ் வாதாடினார்.

  6. #155
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிம்புவுக்கு சோதனை மேல் சோதனை - Vikatan

    சிம்பு நடிப்பில் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வெளியாகவிருக்கும் படம் வாலு. இப்படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தனர். தற்பொழுது வாலு படத்தை வெளியிட இடைகால தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு மேலாக தயாராகி வரும் வாலு படத்திற்கு அடுத்தடுத்து பல பிரச்னைகள் நீடித்தவண்ணம் இருந்தன. இறுதியில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியீட்டில் ஜூலை 17ல் உறுதியாக வெளிவரும் என்று அறிவித்திருந்தனர்.

    சமீபத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் வெளியீட்டு உரிமையை 2013ல் 10கோடிக்கு மேஜிக் ரேஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். தற்பொழுது வேறு நபர் மூலம் இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள். என்னைத் தவிர வேறு எந்த நிறுவனம் மூலமாகவும் வாலு படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று மேஜிக் ரேஸ் நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இதன் அடிப்படையில் இன்று காலை வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது, வழக்கை 13ம் தேதிக்குத் தள்ளிவைத்ததோடு, அதுவரை வாலு வெளியீட்டிற்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஜூலை 17ம் தேதி தனுஷ் நடிக்கும் மாரி உறுதியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வாலு படம் மாரியுடன் போட்டிப்போடுமா என்பது வரும் 13ம் தேதி வழக்கு விசாரணையில் தெரியவரும். சிம்புவுக்கு சோதனை மேல் சோதனை வந்துகொண்டிருக்கிறது, இதிலிருந்து எப்போது விடுபடுவாரோ?

  7. #156
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'வாலு' ரிலீஸுக்கு எதிராக சதி: டி.ராஜேந்தர் கொந்தளிப்பு


    'வாலு' படத்தை வெளிவராமல் தடுக்க சதி நடக்கிறது என்று அப்படத்தை வெளியிடும் டி.ராஜேந்தர் காட்டமாக தெரிவித்தார்.
    விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஜூலை 17ம் தேதி சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

    'வாலு' படத்துக்கு தடைக்கோரி மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதி, " 'வாலு' தயாரிப்பாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். 13ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை 'வாலு' திரைப்படம் வெளியிட தடை விதித்தும், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இன்று காலை 'வாலு' படம் வெளியீடு தொடர்பாக டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அச்சந்திப்பில் பேசியது, "'வாலு' படத்தை ஜூன் 19ம் தேதி முதல் விளம்பரப்படுத்தி முதலே இடதுபுறத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும், வலது புறத்தில் மேஜிக் ரேஸ் நிறுவனத்தின் பெயரையும், நடுவில் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தி வருகிறேன்.

    நான் இறைவின் மீது மிகவும் நாட்டம் உடையவன். இறைவனும் இப்படத்தின் மீது நாட்டம் வைத்திருந்தால் கண்டிப்பாக ஜூலை 17ம் தேதி 'வாலு' வெளிவரும். இவ்வளவு நாள் வழக்கு தொடராமல் படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கும் சமயத்தில் வழக்கு தொடர காரணம் என்ன? உரிமையை கொண்டாட நினைக்கிறார்களா அல்லது படத்தை நான் வெளியிடுவதை தடுக்க நினைக்கிறார்களா?. 'வாலு' படத்தை வெளிவராமல் தடுக்க சதி நடக்கிறது.

    மேலும், நீதிமன்றத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டது. உடனே இந்த வழக்கு இதே நிலையிலே நீடிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார். அதனை சில பத்திரிகைகள் இடைக்கால தடை என்று வெளியிட்டு விட்டார்கள். நீதிமன்றம் எந்த ஒரு இடத்தில் படத்துக்கு இடைக்காலத் தடை என்று கூறவில்லை. தடை என்பது போன்ற செய்திகள் எனது மனதை மிகவும் காயப்படுத்தி இருக்கிறது. மீண்டும் 13-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி என்ன தீர்ப்பு வழங்கினாலும் அதற்கு நான் தலை வணங்குகிறேன்.

    'வாலு', 'வேட்டை மன்னன்' ஆகிய இரண்டு படங்களிலும் என் மகன் நடித்தான். இரண்டுமே பணப் பிரச்சினையில் சிக்கித் தவித்த போது, தயாரிப்பாளர் கஷ்டப்படக் கூடாது என்று 'வாலு' படத்தை முடித்துக் கொடுத்தான். அதற்கான உரிய சம்பளம் கூட என் மகன் வாங்கவில்லை.

    ஒரு விழாவில் 'நான் சொத்துக்களை எல்லாம் இழந்துவிட்டேன்' என்று சிம்பு தெரிவித்தார். அவர் சம்பாதித்த சொத்துக்களைத் தான் இழந்திருக்கிறார். நானும், எனது மனைவியும் அவனுக்கு சொத்துக்கள் சேர்த்து வைத்திருக்கிறோம். அவை எல்லாவற்றையும் விட எனது குழந்தைகள் தான் எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய சொத்து.

    3 வருடங்கள் கழித்து 'வாலு' படம் வருவதால், அவனுடைய ரசிகர்கள் பெரியளவில் வரவேற்பு கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இப்பிரச்சினையில் எனக்கு உறுதுணையாக இருந்து வரும் அனைவருக்கும் நன்றி" என்று பேசினார் டி.ஆர்.

  8. #157
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    'வாலு' படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்: சிம்பு

    இறை நம்பிக்கையுடன் 'வாலு' படத்தை நிச்சயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியும் என நம்புவதாக சிம்பு தெரிவித்திருக்கிறார்.
    விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஜூலை 17ம் தேதி சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
    'வாலு' படம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 13ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை 'வாலு' திரைப்படம் வெளியிட தடை விதித்தும், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. மேலும், இப்பிரச்சினைத் தொடர்பாக டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், தற்போது சிம்பு தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிக்கையில் சிம்பு "'வாலு' படத்தை வெளியிட எனது தந்தை உரிமம் பெற்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு தந்தையாக மட்டுமே அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு புகழ்பெற்ற இயக்குநர் - தயாரிப்பாளர் என்ற முறையிலும் அவர் இம்முடிவை எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் மிகவும் விரும்பினார். அதனாலேயே இந்த முடிவை எடுத்தார்.
    இம்மாத மத்தியில் 'வாலு' படத்தை வெளியிட முடிவு செய்தோம். படம் தொடர்பான பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சரி செய்து வந்தோம். ஆனால், தற்போது வேறு ஒரு தரப்பும் படத்தை வெளியிட உரிமை கோரியுள்ளது.
    ஒரு நடிகனாக எனது கடமையை செய்துவிட்டேன். எனது ரசிகர்கள் போலவே நானும் படத்தைக் காண ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடாமல் செய்ய சிலர் மறைமுகமாக சதியில் ஈடுபட்டுள்ளனர்.

    இத்தருணத்தில், எனது ரசிகர்களின் அன்பும், வாழ்த்தும், ஊடகங்களின் ஆதரவும் எனக்கு பெரும் பலத்தை தருகின்றன. இந்த பலத்துடனும், இறை நம்பிக்கையுடன் படத்தை நிச்சயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியும் என நான் நம்புகிறேன்.

    சோதனைகளும், நெருக்கடியும் அதிகரித்தால் அது நம்மை விட்டுச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்றே அர்த்தம்" என்று தெரிவித்திருக்கிறார்.

  9. #158
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  10. #159
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வாலு கண்டிப்பாக வெளியாகும் பிரார்த்தனையில் குதித்த சிம்பு ரசிகர்கள் - http://tamil.oneindia.com/



  11. #160
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Fate of Simbu's 'Vaalu' to be Decided on Tuesday- http://www.ibtimes.co.in


    The fate of Simbu's much delayed film "Vaalu" is likely to be decided on Tuesday, 14 July. If the movie clears its legal hurdle, it will hit the screens worldwide on 17 July.
    Production house Magnum Rays got the interim stay enforced on "Vaalu" release, alleging that Simbu's father T Rajender was bypassing an agreement signed by NIC Arts Chakravarthy, the original producer of the flick, in 2013.
    In the petition, it has been alleged that Magnum Rays had acquired the Tamil, Telugu and Malayalam theatrical rights of "Vaalu". But the film is now being released by Rajender on Simbu Cine Arts.
    After hearing the petition, the court had ordered an interim stay on the film's release. It will take up the case again on Tuesday and is likely to pronounce the judgement.
    Rajender needs to sort out all the issues soon if the movie has to be released without any trouble on 17 July.
    "Vaalu" has been in the making for three years. But the movie kept facing issues, delaying its release. Finally, Rajender intervened to take over the project and release the film on his own. It is mainly because his son did not have a single release for close to three years now.

    The movie is a romantic comedy written and directed by Vijay Chander. Hansika Motwani, the actor's ex-girlfriend, will be seen alongside him in the flick.

    'Vaalu' vs 'Maari'
    If "Vaalu" gets a favourable verdict from the court and the flick releases on 17 July, then the movie is going to clash with Dhanush's "Maari". The Tamil film will face a lot of competition from already successfully-running films like "Baahubali" and "Papanasam".

Page 16 of 28 FirstFirst ... 6141516171826 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •