Page 13 of 28 FirstFirst ... 3111213141523 ... LastLast
Results 121 to 130 of 274

Thread: வாலு - சிலம்பரசன் - சந்தானம் - s தமன் - நிக் ஆர்

  1. #121
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ட்ரெண்டான வாலு - மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - Vikatan

    சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'வாலு'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். விஜய் சந்தர் இயக்கி இருக்கிறார்.

    படத்தின் ரிலீஸ் தேதி கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு தேதியாக அறிவிக்கப்பட்டு பின் மாற்றலாகி வருகிறது. இந்நிலையில் மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    மே 9ம் தேதி வாலு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குரிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. 2012ம் ஆண்டின் தீபாவளி சிறப்பாக வெளியானது போடா போடி. அதன் பிறகு இங்க என்ன சொல்லுது படம் அதிலும் சிம்பு சிறப்பு தோற்றம் தான்.

    எனவே இப்படத்தின் ரிலீஸ் எப்போது என அனைத்து தரப்பிலும் கேள்விகள் எழத்துவங்கி விட்டன. மேலும் சிம்புவே இப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதனையடுத்து போஸ்டர் வெளியீட்டையடுத்து ட்விட்டரில் #Vaaluஎன ட்ரெண்டாகியுள்ளது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #122
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    MAY 9th

    vaalu.jpg

  4. #123
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

  5. #124
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    அஜீத் பிறந்தநாளில் சிம்பு வெளியிடும் ட்ரெய்லர்

    நீண்டநாள் தயாரிப்பில் இருந்த சிம்புவின் வாலு ஒருவழியாக மே 9 -ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள். மே 1 தனது தலைவர் அஜீத்தின் பிறந்தநாளில் படத்தை வெளியிடத்தான் விரும்பினார் சிம்பு.

    ஆனால், அன்று உத்தம வில்லன், வை ராஜா வை படங்கள் வெளியாவதால் வாலு படத்தை வெளியிட முடியவில்லை. அதற்காக மே1 -ஐ கொண்டாடாமல் இருக்க முடியாதே.
    வாலு படத்தின் புதிய ட்ரெய்லரை மே 1 சிம்பு வெளியிடுகிறார். இது அஜீத் பிறந்தநாள் ஸ்பெஷல் ட்ரெய்லர்.

    ம்.. தொண்டன் என்றால் சிம்பு மாதிரி இருக்க வேண்டும்.

  6. #125
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    அஜித் பிறந்தநாள்.... சிம்பு , தமன் ஸ்பெஷல் ட்ரீட்


    நாளை மே தினம் என்பது ஆனால் அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான நாள். நாளை அஜித்தின் பிறந்தநாள். இந்திய அளவில் சமூக வலைகள் , துவங்கி எங்கும் எதிலும் அஜித், விஜய் ரசிகர்களை போல் எந்த ஹீரோக்களுக்கும் இவ்வளவு அன்பான ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம்.
    இதில் அஜித்துக்கு சினிமா வட்டாரங்களிலேயே பல ரசிர்கள் உள்ளனர். சிம்பு, பிரேம்ஜி அமரன், என சொல்லிக்கொண்டே போகலாம். இந்நிலையில் இப்போதே அஜித் ரசிர்கள் பிறந்தநாள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
    சிம்பு வாலு படத்தை அஜித் பிறந்தநாள் சிறப்பாக வெளியிட திட்டமிட்டிருந்தார். எனினும் பட வெளியீடு சற்று தள்ளிப்போனதால் இன்று இரவு 12 மணிக்கு 'வாலு' படத்தின் மற்றொரு டிரெய்லரை வெளியிட இருக்கிறார்.
    அதேபோல் தமன் அஜித்துக்காக சிறப்பான படல் ஒன்றை இசையமைத்துள்ளாராம், அவரும் இந்த பாடலை வெளியிட உள்ளார். சிம்பு டிரெய்லர் , தமன் பாடல் முறையே இரவு 12மணிக்கு வெளியாக உள்ளது.
    Last edited by balaajee; 30th April 2015 at 03:36 PM.

  7. #126
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மீண்டும் தள்ளிப் போகும் வாலுமீண்டும் தள்ளிப் போகும் வாலு - Webulagam

    வாலு மே 9 -ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விளம்பரங்களும் வெளியிட்டனர். இந்நிலையில், வாலு மீண்டும் தள்ளிப் போகிறது.
    சிம்புவின் சின்சியாரிட்டி காரணமாக அவர் தொடங்கும் படங்கள் முடிய இரணடிலிருந்து மூன்று வருடங்கள் எடுத்துக் கொள்ளும். வாலு படமும் அப்படியே. ஒருவழியாக படத்தை முடித்து திரைக்கு கொண்டு வரலாம் என்றால் கண்ணுக்கு தெரியாத (நமது கண்ணுக்கு) பல முட்டுக்கட்டைகள்.

    இதோ வருகிறது அதோ வருகிறது என்று ஒருவழியாக மே 9 படம் திரைக்கு கண்டிப்பாக வரும் என்றனர். எதிர்பார்த்தது போல் அன்றும் படம் திரைக்கு வரவில்லையாம். என்ன காரணம் என்பது தெரியவில்லை. எப்படியும் ஜுலையில் படத்தைப் பார்த்தால் போதும் என்கிறது கோடம்பாக்கம்.

  8. #127
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிம்புவின் ‘வாலு’ மே 15 ரிலீஸ் – ‘நாட்டாமை’ சரத்குமார்!


    கடந்த இரண்டு வருடமாக சிம்பு நடித்து எந்த படங்களும் வெளியாகவில்லை. இப்படியே சென்றால் தமிழ் ரசிகர்கள் தன்னை மறந்து விடவும் வாய்ப்புள்ளது. அவர்கள் மறப்பதற்குள் ஒரு படத்தையாவது கொடுத்துவிட வேண்டும் என்று தலை-வால் புரியாமல் (எப்பூடி டைட்டில உள்ள கொண்டு வந்தோம் பாத்தீங்களா?) சிம்பு தவித்து கொண்டிருக்கிறார். ‘வாலு’ படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் மே 9ஆம் தேதி சிம்பு நடித்த ‘வாலு’ படம் வெளியாகி விடும் என தகவல்கள் வந்தன. அப்பாடா..! என அவரது ரசிகர்கள் பெருமூச்சு விடுவதற்குள் படம் பிரச்சினைக்குள்ளாகி இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி வாங்கிய கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனவே படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி போகலாம். தற்போது இப்படத்தின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், “பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட்டு விடும். எனவே ‘வாலு’ திரைப்படம் மே 15ஆம் தேதி நிச்சயமாக வெளிவரும்” எனத் தெரிவித்துள்ளார். சமீப காலமாக பிரச்சினைக்குள்ளான ‘லிங்கா’, ‘கொம்பன்’, ‘உத்தமவில்லன்’ போன்ற படங்களை தொடர்ந்து ‘வாலு’ பட பிரச்சினையும் பஞ்சாயத்து செய்து வைத்திருக்கிறார் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘நாட்டாமை’ தீர்ப்புன்னா அது சரியாதான் இருக்கும்!

  9. #128
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஆஃப் த ரெக்கார்டு! - vikatan விரல் நடிகரோட படம் இன்னிக்கு ரிலீஸ், நாளைக்கு ரிலீஸ் என்ற காலம் போய் இப்போது எந்த வருடம் ரிலீஸ் என்ற நிலைக்கு மாற விரலைக் காப்பற்ற அவரது தந்தையாரே களத்தில் குதித்துள்ளார். அவரது சொந்த தயாரிப்பிலேயே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துவிட்டாராம். இவருக்கு பிறகு நடிக்க வந்த ஒல்லி நடிகர் கூட இந்திய அளவில் பெயர் வாங்கிவிட்ட நிலையில் தன்னால் ஒரு படத்தை கூட இரண்டரை வருட காலமாக வெளியிட முடியவில்லையே என புலம்பி வருகிறாராம் விரலு!

  10. #129
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வாலு' திரைப்படத்தின் மற்றொரு ரிலீஸ் தேதி

    சிம்பு நடித்த 'வாலு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அனுமார் வால் போலவே நீண்டுகொண்டே இருக்கின்றது. இதுவரை பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும், அறிவிக்கப்பட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஃபைனான்ஸ் பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த படத்தை மீட்டெடுக்க தற்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் களத்தில் இறங்கியுள்ளார். அவரது தலையீட்டுக்கு பிறகு கடந்த 9ஆம் தேதி 'வாலு' ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதியிலும் 'வாலு' ரிலீஸ் ஆகவில்லை.

    இந்நிலையில் தற்போது படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதாகவும், இம்முறை கண்டிப்பாக படம் ரிலீஸாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளதோடு ரிலீஸ் தேதியை ஜூன் 12 என அறிவித்துள்ளனர். இந்த மாதத்தில் சூர்யாவின் மாஸ், ஆர்யாவின் புறம்போக்கு என்னும் பொதுவுடமை, ஜோதிகாவின் 36 வயதினிலே, அருள்நிதியின் 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே ஜூன் 12ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


    இந்த முறையாவது அறிவித்த தேதியில் படம் ரிலீஸ் ஆகவேண்டும் என சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். டி.ராஜேந்தர் நேரடியாக தியேட்டர் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தி வருவதாகவும் படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய அவர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.


  11. #130
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like

    சந்தானத்துக்காக சிம்பு விட்டுக்கொடுப்

    சிம்பு நடித்த வாலு படம் பல்வேறு வெளியீட்டுத் தேதிகளைப் பார்த்துவிட்டது. ஆனாலும் வெளியான பாட்டைக்காணோம். ஒவ்வொருமுறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கும்போதும் புதுப்புது சிக்கல்கள் வந்துகொண்டிருந்தன. இதனால் இப்போது டி.ராஜேந்தர் பொறுப்பெடுத்துக்கொண்டு படத்தை வெளியிடும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

    இதனால் ஜூன் 12 ஆம் தேதி கண்டிப்பாகப் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அதிலும் தர்மசங்கடம் நேரிட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதே ஜூன் 12 ஆம் தேதி சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் இனிமேஇப்படித்தான் படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநாளில் இந்தப்படத்தையும் வெளியிட்டால் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்வது மட்டுமின்றி இரண்டு படங்களுக்கும் வசூலிலும் பாதிப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

    இதனால் இரண்டில் ஏதாவதொரு படத்தை ஒருவாரம் தள்ளிவைக்க வேண்டும் என்கிற நிலை. அண்மையில் இனிமேஇப்படித்தான் பட பாடல் வெளியீட்டுவிழாவில்தான், மன்மதன் படத்தில் நான்தான் சந்தானத்தை அறிமுகப்படுத்தினேன் அவர் இந்த அளவுக்கு வளர அவருடைய திறமைதான் காரணம் எனறு பேசினார் சிம்பு. அந்த அளவு சந்தானம் மீது அன்புடன் இருக்கின்றவர்.

    இதனாலேயே இரண்டுபடங்களும் ஒரேநாளில் வரவேண்டாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்களாம். வாலு எற்கெனவே தாமதம் மேலும் ஒருவாரம் தாமதமாவதில் ஒன்றுமாகிவிடாது என்றும் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். அதனால் வாலு படம் ஒரு வாரம் தள்ளி ஜூன் 19 அன்று வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்போதுவரை இரண்டுபடங்களும் ஜூன்12 வெளியீடு என்றுதான் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது.

Page 13 of 28 FirstFirst ... 3111213141523 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •