Page 12 of 28 FirstFirst ... 2101112131422 ... LastLast
Results 111 to 120 of 274

Thread: வாலு - சிலம்பரசன் - சந்தானம் - s தமன் - நிக் ஆர்

  1. #111
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    வாலு மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்!

    சிம்பு - ஹன்சிகா நடிப்பில் பல வருடங்களாக வெளிவர காத்திருக்கும் திரைப்படம் வாலு. இப்படத்தினை விஜய் சந்தர் இயக்க தமன் இசையமைப்பில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் சக்கரவர்த்தி இப்படத்தினை தயாரித்துள்ளார்.
    வாலு 2012ல் படம் தொடங்கப்பட்ட நாள் முதலே தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு தீபாவளி கடந்தும் படம் மட்டும் வந்தபாடில்லை. படம் ட்ராப்பாகும் வாய்ப்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    படம் வெளிவராததற்கு பல்வேறு காரணங்களும் பல தடைகளும் ஏற்பட்டன என்று பல அறிக்கைகள் வெளியிட்டது வாலு டீம். இறுதியில் படமும் முடிந்து வெளியிடுவதற்காக காத்திருக்கின்றது. தள்ளிக் கொண்டே சென்ற 'வாலு' படம் நேற்று (பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்த நாளுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. இறுதியில் சிம்புவின் பிறந்தாளுக்காக வாலு பாடல் டீஸர் மட்டும் முன் தினம் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் இம்மாத கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
    இறுதியில் வாலு ரிலீஸ் தேதி சில நாட்கள் தள்ளப்பட்டு படம் மார்ச் 27ல் வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் தினமும் டிரெண்ட் செட்டில் இருக்கும் அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் படம் வெளியாகவிருப்பதால் படம் தள்ளி வைத்திருக்கலாம் எனவும் இம்மாதம் ஏற்கனவே தனுஷின்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #112
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  4. #113
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    MARCH- this time cleverly year not mentioned...

    vaalu.jpg

  5. #114
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Quote Originally Posted by balaajee View Post
    MARCH- this time cleverly year not mentioned...
    .

  6. #115
    Senior Member Seasoned Hubber Anban's Avatar
    Join Date
    Aug 2008
    Location
    Calcutta, India, India
    Posts
    1,440
    Post Thanks / Like
    For the last two years, all that he has been doing is watching Ajith movies FDFS at Kasi
    Top glamorous heroines, top comedian, Oscar winning MD, commercial Director, expensive wig and other big list of commercial items irunthum thaathaa padam flop .. itha vida enna asingam venum ..

  7. #116
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like


    Ramesh ‏@rameshlaus 3h3 hours ago Glad to know today is #VaaluCensorDay - Best wishes to @iam_str and @ihansika and their fans

  8. #117
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Johnson PRO @johnsoncinepro 12m 12 minutes ago

    Congrats 2 #Vaalu team. Censor certifies 'U'. Releasing as a summer treat. @iam_str @ihansika @MusicThaman

  9. #118
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்கிற மாதிரி நடிக்கலை!" வாலு பட இயக்குநர் விஜய் பேட்டி! - vikatan

    ''பொண்ணு அழகா இருக்காளேனு ஆசைப்படுறதுக்கு பேர் காதல் இல்லை; நம்ம வாழ்க்கையை அழகாக்குவானு நம்பவைக்கிறதுதான் காதல் - இப்படி படம் முழுக்க சிம்பு ஸ்பெஷல் பன்ச்தான். திரும்பிப் பார்த்தா சமீபத்தில் தமிழ் சினிமாவுல காதல் சினிமா வரவே இல்லை. சாப்பிட, தூங்க மறந்தாலும் காதலிக்க மறக்காதவங்க நாம. அதான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காதலும் காதல் சார்ந்த விஷயங்கள் மட்டுமே இருக்கணும்னு பிளான் பண்ணி அடிச்சிருக்கோம். செம வெயிட்டான காதல் பொக்கேவா படம் இருக்கும்'' - அடித்துப் பேசுகிறார் 'வாலு பட இயக்குநர் விஜய் சந்தர். பிரசித்திபெற்ற 'சிம்பு - ஹன்சிகா காதல் தருணங்களை உடன் இருந்து பார்த்தவர்.

    ''டிரெய்லர் பரபர பட்டாசா இருந்துச்சுனு ஏகப்பட்ட லைக்ஸ், கமென்ட்ஸ். படம் அதைவிட சூடா இருக்கும். சிம்பு அடிப்பார்னு நினைக்கும்போது அடிக்கமாட்டார்; அடிக்க மாட்டார்னு நினைக்கும்போது அடி தூள் கிளப்புவார். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, கிட்டத்தட்ட ரஜினி சார் படம் மாதிரி இருக்கும். அந்த அளவுக்கு சிம்பு ஹீரோயிசம், காமெடி, ரொமான்ஸ், டான்ஸ், சென்ட்டிமென்ட்னு எல்லா ஏரியாவிலும் புகுந்து புறப்பட்டிருக்கோம். சிம்புவைப் பிடிக்காதவங்களுக்கும் இந்தப் படத்தில் அவரைப் பிடிக்கும்!''

    ''பில்ட்-அப் நல்லாத்தான் இருக்கு. ஆனா, அதுக்காக படம் ரிலீஸ் ரெண்டு வருஷமாவா தாமதம் ஆகும்?''
    ''நம்புங்க... அதுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் காரணம். கேமராவுக்கு முன்னாடியும் பின்னாடியும் ஏகப்பட்ட சிக்கல்கள். ஹைதராபாத் ரயில்வே ஸ்டேஷன்ல செட் போட்டு ஒருமாஸ் ஃபைட் எடுக்கணும். கம்பிகளை உடைச்சு சண்டை நடக்கும். அதுக்கான திட்டம் என்ன, எங்கேலாம் பொக்லைன் பயன்படுத்துவாங்க, அடிவாங்குறவங்க எந்த அளவுக்குப் பறப்பாங்கனு மொத்த ப்ளூபிரின்ட்டும் கொடுத்து, ரயில்வேல அனுமதி வாங்கினோம். ஆனா, அந்த நேரம்தான் ஹைதராபாத்தில் குண்டு வெடிச்சது. அதனால மூணு மாசம் அனுமதி தரலை. வேற ரயில்வே ஸ்டேஷன்ல ஷூட் பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனா, படம் முழுக்க வரும் அந்த ஸ்டேஷன்லதான் சண்டைக் காட்சியும் இருக்கணும்னு காத்திருந்து படம்பிடிச்சோம். இப்போ ரஷ் பார்க்கிறப்போ அந்தக் காத்திருப்புக்கு அர்த்தம் இருக்குனு தோணுது. இப்படி பல காரணங்களால் பட ரிலீஸ் தாமதம் ஆச்சு. ஆனா, அதுக்காக மேக்கிங்ல எந்தச் சமரசமும் பண்ணிக்கலை!''
    '''வாலு ஷூட்டிங்லதான் சிம்புவும் ஹன்சிகாவும் காதலிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ள பிரிஞ்சிட்டாங்களே?''
    ''படத்துக்கு வெளியே எப்படினு தெரியலை. ஆனா, படத்துல சிம்புவும் ஹன்சிகாவும் நிஜமான காதலர்கள் மாதிரியே வாழ்ந்தாங்க. 'மேட் ஃபார் ஈச் அதர் ஜோடினு தைரியமா சொல்லலாம். மத்தபடி காதல், பிரிவு எல்லாம் அவங்க பெர்சனல். நிஜ வாழ்க்கையில் சிம்புவும் ஹன்சிகாவும் காதலிச்சுட்டு இருந்தப்ப படத்துக்காக காதல் காட்சிகளைப் படம் பிடிச்சுட்டு இருந்தோம். அதேமாதிரி நிஜத்தில் அவங்க பிரிஞ்சிருந்தப்ப, படத்திலும் எமோஷனல் காட்சிகளைப் படம்பிடிச்சுட்டு இருந்தோம். ஏதோ ஒருவிதத்தில் ரீலும் ரியலும் ஒரே அலைவரிசையில இருந்தது. நிஜத்துல சிம்புவும் ஹன்சிகாவும் திரும்ப சேர்வாங்களானு படம் பார்த்தா, உங்களுக்கே தெரியும்!''
    ''சிம்புவுடன் காதல் தோல்வியால் ஹன்சிகா இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்கனு ஒரு தகவல் வந்ததே உண்மையா?''
    ''அப்படியெல்லாம் இல்லை. ஹன்சிகா ரொம்ப டெடிகேட்டிவ் ஆர்ட்டிஸ்ட். நான் முதல்முறை படம் பண்றேன்னு நிறையத் தடவை எனக்காக கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணினாங்க. ஆனா, எதிர்பார்க்காத சிக்கல்களில் சிக்கிட்டு அடுத்தடுத்து படப்பிடிப்பு கேன்சல் ஆச்சு. அதனால ஹன்சிகா வேற படங்களில் நடிச்சுட்டு இருந்தப்ப, நாங்க எங்க படத்துக்காக தேதி கேட்டோம். அப்போ அவங்களால ஒருநாள்கூட ஒதுக்கித் தர முடியலை. 'என் கால்ஷீட் இருந்தப்பலாம் வேஸ்ட் பண்ணிட்டீங்க. ஆனா, நான் ஆசைப்பட்டாலும் இப்போ என்னால தேதி கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. அது ரொம்ப நியாயமான கோபம்தான். எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது. ஆனா, அப்புறம் எப்படியோ தேதி அட்ஜஸ்ட் பண்ணி, பாங்காக்ல ஷூட் பண்ண டூயட்டுக்கு வந்து நடிச்சுக்கொடுத்தாங்க!''
    ''ரியல் காதல், பிரிவு பத்தி சிம்பு எதுவும் ஷேர் பண்ணிக்கிட்டாரா?''
    ''அவரின் முதல் காதலி சினிமாதாங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சுட்டா எல்லா கவலைகளையும் மறந்துட்டு செம ரேஸிங்ல இருப்பார். அந்த எனர்ஜிதான் சிம்பு ப்ளஸ். அதே எனர்ஜியோடு எல்லாரையும் கலாய்ப்பார். அவரோட அந்த ஜாலி கேலி தாங்காமதான், 'உயிரைக் கொடுத்து லவ் பண்றவனைப் பார்த்திருக்கேன்; ஆனா, உயிரை எடுத்து லவ் பண்றவனை இப்பத்தான் பார்க்கிறேன்னு ஒரு பன்ச் பிடிச்சார் சந்தானம்!''

  10. #119
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Yet Again....

    நான் மன்னித்தாலும் அவர்களை கர்மா மன்னிக்காது - சிம்பு!

    இரண்டு வருடங்களாக படங்களே இல்லாமல் இருந்த சிலம்பரசன் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் வாலு. படத்தின் ரிலீஸ் மார்ச் 27 என அறிவிக்கப்பட்டு மீண்டும் மே 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    படத்திற்கு சென்சார் யு சான்றிதழ் கொடுத்தும் கூட மீண்டும் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றே சங்கடத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

    கடினமான காலம், நான் கடவுளிடம் சரணடைந்துவிட்டேன், சிலர் என் மீதுள்ள வெறுப்பு மற்றும் பொறாமை காரணமாக எதிர்மறையாக செயல்படுகிறார்கள், என்னை கிண்டல் செய்பவர்களை நான் மன்னித்தாலும், கர்மா மன்னிக்காது என ட்வீட் செய்துள்ளார்.
    இதற்கு சிலர் சிம்புவின் படங்கள் ஏதும் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாததை கிண்டலடித்து வருவதாகவும், அதற்காகவே இப்படி ஒரு ட்வீட்டை சிம்பு வெளியிட்டுள்ளார் எனவும் கோலிவுட்டின் நெருங்கிய வட்டங்கள் தெரிவித்துள்ளன.

  11. #120
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    New Release date MAY 9th ...

    MDSB155347-M.jpg

Page 12 of 28 FirstFirst ... 2101112131422 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •