Page 28 of 28 FirstFirst ... 18262728
Results 271 to 279 of 279

Thread: Pazhamozhigal

  1. #271
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ""அசத்தப் போவது யாரு ""
    இங்கும் இக் கருத்தையேதான் சொன்னார்கள்
    ??
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #272
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    .
    . ஒரே பழமொழி.!!...கருத்து-6 ...'விபரீத-கற்பனை'.!!


    . ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

    தன் பிள்ளை தானே வளரும்.!



    Quote Originally Posted by pavalamani pragasam
    உண்மையிலே இந்த கற்பனையில் 'விபரீதம்' உள்ளதா?
    அரிய சிந்தனைக்கு-உகந்த நல்ல கேள்வி.!

    ஆம்.! இந்த 6-ஆம் கருத்தே விபரீத-கற்பனை தான்.! எப்படி.?

    Quote Originally Posted by pavalamani pragasam
    'ஊரானுக்கு பிறந்தது' என்று பெண் குழந்தை பிறந்ததும் சொல்வது வழக்கில் உள்ளது.
    ஆம். உண்மையே.!.. பேச்சு-வழக்கிலே, இலக்கிய-மரபுக்கு மாறான கொச்சை-பொருளிலே...

    ..."ஊரான்" என்னும் சொல்லுக்கு... "யாரோ முன்பின் அறியப்படாத அந்நியன் (Stranger)"... என்னும் கருத்திலே அவ்வாறு கூறப்படுவது உண்டு.

    இங்கு "ஊரான்" என சுட்டப்படுபவர் யார்.? அந்த பெண்- பிள்ளைக்கு வாய்க்க-போகும் கணவன்... பெண்ணை பெற்றோரது மாப்பிள்ளை.

    பெற்றோர் என்ன நினைக்கின்றனர்.? ...

    நாம் பெற்ற இரு குழந்தைகளான ஆண்-பிள்ளையையும் பெண்-பிள்ளையையும் சமமாக கருதி... உயர்வு-தாழ்வு இல்லா பாசத்துடனும் அக்கறையுடனும் இருவரையுமே ஒரே தரமாக மதித்து...

    ..."நம் குழந்தை" என்று நாம் தற்போது உரிமை-கொண்டாடி, பேணி வளர்க்கிறோமே.!...

    ...இதே உரிமை என்றென்றும் தொடருமா.?

    "நாம் பெற்ற ஆண்-பிள்ளை நம்மை விட்டு அகலாது... நம்மோடேயே நம் வீட்டையே தன் வீடாக கருதி நம்மோடு வாழ-போகிறவன் அன்றோ.?

    மாறாக, நமது மற்றோர் குழந்தையான நம் வீட்டு பெண்-பிள்ளையை...

    ...நம்மிடமிருந்து பிற்காலத்தில் கன்னிகாதானம் பெற-போகும் அவளது கணவன் தனது-என உரிமை கொண்டாட தகுதி கொண்டவன் ஆயிற்றே.!

    ...நாம் முன்பின் அறிந்திராத அந்த "ஊரான்" யாரோ தெரியாது... யாருக்கு மாப்பிள்ளை யாரோ.? அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ.?...

    நாம் அரும் பாடுபட்டு வளர்க்கும் இந்த பெண்-பிள்ளை... திருமணத்திற்கு பின், நம்மிடமிருந்து பிரிந்து போய், புக்ககமே தன் வீடாய் கொள்ள-போகிறவள் ஆயிற்றே.!

    அந்நிலையில் நாம் பெற்றெடுத்த நமது ஆண்-பெண் இரு குழந்தைகள்-பாலும் சமமான உரிமை கொண்டாட இயலுமா.?

    'ஊரானுக்கு பிறந்தது'= ஊரானுக்காக பிறந்தது'

    Quote Originally Posted by pavalamani pragasam
    கணவன் 'ஊட்டி வளர்ப்பது' குடும்பத்தை சம்பாத்தியத்தால் காப்பாற்றுவது ஆகாதா?
    காப்பது வேறு.... வளர்ப்பது வேறு.

    காப்பது என்னும் சொல்லின் பொருள்... காக்கப்படும் சொத்து வளமுற வாழ்ந்து- ஓங்க தேவையான செல்வ- ஈட்டம் ஈட்டி, வளமை கொணர்ந்து-தந்து... சேதம், குற்றம்-குறை, கேடு, அழிவு, திருட்டு, இடையூறு, ஆபத்து, விபத்து ஆகிய புற- தலையீடுகளின்றும் தடுத்து பாதுகாத்து, மொத்த மேலாண்மை நிர்வாகம் செய்வது....

    ... விவசாய-வயல் நிர்வாகி , நாட்டு-மன்னன், குடும்ப-தலைவனாகிய தந்தை ஆகியோர் செய்யும் கடமை-பங்கு வகை.

    உதாரணமாக தோழர்கள் இருவர் சேர்ந்து ஒரு வயல்-நிலத்தை வாங்கி, இருவரும் சம-பங்கு சொந்தக்காரர்கள் ஆகின்றனர்....

    மூத்தவன் கல்வியறிவு கொண்டு உடல்-வலிமை குன்றியவன்.. ஆனால் விவசாயம் முற்றும் அறிந்தவன்.. அரசு-அலுவலக தொடர்பு, வரி கட்டுவது... உரம், விதை, பூச்சி-மருந்து போன்ற கடை-சரக்குகளை கொண்டு சேர்ப்பது, விளைச்சலை விற்று காசாக்குவது... இரவு-காவலாய் வயலடியே உறங்கி பாதுகாப்பது போன்ற பணிகளை பொறுப்பு-ஏற்று நடத்துகிறான்

    இளையவன் உடல்-வலிமை மிக்கவன் நல்ல உழைப்பாளி. வயலில் உழைப்பு பணிகளை மட்டுமே கவனித்துக்-கொள்கிறான்.. என்று கொண்டால்..

    ...வயல்-சொத்தை பெருக்கி வளர்ப்பது விவசாயி.... நிர்வாகி செய்வது இல்லை.. ஆனால் பயிர்- விளைச்சலில் இருவரும் சொந்தமும் உரிமையும் கொண்டாடுகின்றனர்... நமது என்று.!

    அதே போல தந்தை என்னும் குடும்ப-தலைவன் காக்கிறான்... வளர்ப்பது இல்லை.

    ...தாய்-தந்தையர் பெற்ற பிள்ளையை ஊட்டி- வளர்ப்பது தாயே அன்றோ.?

    "தாயும்-ஆனவன்" என்ற சிவ-பெருமான் திருநாமத்தின் "உள்ளுறை மறை-பொருள்" இங்கு சிந்தித்தற்பாலது... குறிப்பாக, அதன் உட்பொதிந்த "உம்"

    ஆம். சிவ-பெருமான் எனப்படும் தலைவன்... பொதுவாக பக்தர்களுக்கு ஓர் தந்தையின் பாங்கும் பணி-கடமையும் மட்டுமே கொண்டு பக்தர்களுக்கு வாழ்க்கையில் வளமும், பாதுகாப்பும் மட்டுமே திருவருள் புரிந்து கடவுள்-துணையாய் காப்பவன்.

    ஆனால் அந்த ஈசன் என்னும் தேவநாதன் தந்தையோடு... ஒன்றியும் தனித்தும் இரு வேறு வகைகளிலே காட்சி தந்து... பக்தர்களுக்கு திருவருள் புரிந்து-வரும் அன்னையோ... பக்தர்களை பேணி வளர்ப்பவள், தாய்-பண்பிலே...

    ...தம் மக்களின் அக-வலிமைகளான உள்ளத்தையும், அறிவையும், ஆன்மாவையும்... தூண்டி, பக்குவப்படுத்தி, பெருக்கி வளர்த்து ஆளாக்குபவள்... அந்த அன்னை தேவ-நாயகியே அன்றோ.?

    அன்னையான அவளால் தந்தை-கடமையும் செய்ய இயலும்.! ஆனால் செய்வது இல்லை...

    ...ஆம்! "தந்தையும்-ஆனவள்" தாய் நானே.. என்னும் தனிப்பெயர் கொள்ள அந்த மாதேவி உவப்பது-இல்லை.

    ...ஏனெனில் காக்கும் தலையாய பணி தன் நாதனின் கடமை அது... நாம் தலையிட கூடாது. ஆண்-தன்மையால் ஏற்படும் தலைமை சிறப்பு- ஆதலால் நாதன்-அவன் பணியை அந்த தந்தை ஆளும்-ஈசன் செய்வதே நன்று.... என்றும்,

    ...தந்தையின் ஈட்டத்தை மக்களுக்கு வழங்கி... தாயாய் பரிவும் பாசமும் காட்டி நல்வாழ்க்கைக்கு உரிய பால்-வளம் ஊட்ட தக்க வகையிலே... பெண்மை-பண்பு கொண்ட மனைவி நான் உறு-துணையாக தாய்-கடமையாற்றுவதே நன்று.... என ஒதுங்கி இருப்பவள்... ஆண்-தன்மையினின்றும் மேலோங்கிய பெண்மை-பண்பால்

    ...தன்னடக்கத்திற்கே முன்-உதாரணமாய்... பெண்மையின் சீர்மை உணர்த்தும் உமையன்னை.

    [இராமாயணத்தில் அசோக-வன சீதா-தேவி அனுமனிடம் கூறிய தன்னிலை கருத்தும் அதுவே.]

    மாறாக தந்தை ஈசனோ... இக்கட்டான சூழல்களில்...தனது இயல்பான ஆண்-தன்மையோடு, பெண்-தன்மையை-"உம்" கூட்டிக்கொண்டு...

    ...தாயும்-ஆனவனாய்... பக்தர்களின் பல்வகை தேவைகள் அனைத்திற்கும் முழு-பொறுப்பு ஏற்றுக்கொண்டு காத்தும் வளர்த்தும் தாய்-தந்தையரின் இருவேறு பண்புகளையும் ஒருங்கு-கூட்டி செயல்படுத்தும் நோக்கும் அணுகுமுறையும் கொண்ட தலைவன்... என்பதே கருத்து.

    ஆண்-அல்லன், பெண்-அல்லன், அல்லா அலியும் அல்லன்... என்னும் தமிழ்-மறை திருவாய்மொழி சொற்களின் முதல்- பகுதி பொருளும் அதுவே.

    Quote Originally Posted by pavalamani pragasam
    ஆரோக்கியமான இல்வாழ்கையின் பயனாய் வாரிசுகள் உதிப்பதில் அதிசயமுண்டோ?
    தலைமை-நிர்வாகியும் விவசாயியும் சேர்ந்து விளைவிப்பதே பயிர்- விளைச்சல்.

    எனவே இருவருக்கும் பொது உடைமையே பயிர்-விளைச்சல் பயன்.

    ஆனால் பயிரை ஊட்டி வளர்ப்பவன் விவசாயி மட்டுமே.... பயிரும் தானாக வளர்வது அன்று.. வளர்க்கப்படுவது.

    இந்திய பாரம்பரியத்தின்படியும், தமிழர் வாழ்-நெறி கலாச்சாரத்தின்படியும்... விதைக்கு உவமானமாக தந்தையையும்...அதன் அடி-நிலத்திற்கு உவமானமாக தாயையும் சுட்டுவது மரபு. எப்படி.?

    ஓர் கனிமரத்தை உருவாக்குவது அதன் விதையும்... நிலமும் தான்.

    விதையை தன்னுள் மறைத்து-புதைத்து வைத்துக்கொண்டே, ஊட்டி வளர்த்து... சிறு விதையை பெரு மரமாய் உருவாக்கி அதை தாங்கி நிற்பது நிலம் தான்.

    ...தாய் தன்னுள்ளே ஒரு வித்தை புதைத்து வைத்து மறைத்து வளர்த்து... திடீரென ஒரு வளர்ந்த முத்தாய் வழங்கி தாங்குவதை போல.!

    விதையே மரத்தின் ஆதார-வித்து என்னும் தந்தையே எனினும்...

    ...விதையை வளர்த்து ஆளாக்கி விளை-பயனை தலை-நிமிர்த்தி நிற்க-செய்வது தாய்-நிலமே.

    எனவே ஊரான் என்னும் பெயர்-கொண்டவராய் விளங்கும்... பெண்ணை-பெற்ற அந்நிய பெற்றோரின் மகள் பெண்-பிள்ளையை...

    ...அதன் கணவனான ஆண்-பிள்ளை ஊட்டுவதும் இல்லை... வளர்ப்பதும் இல்லை.

    ஏனெனில் முன்னமேயே வளர்ந்து ஆளான-பின் தான்... கணவனிடம் வந்து சேர்கிறாள்... பெண்-பிள்ளை.

    அவ்விருவரும் பெற்ற பிள்ளைகள்... "தன்-பிள்ளை" ஆகா... "தம்-பிள்ளையே" தாய்-தந்தை இருவருக்குமே.!

    ...அந்த பிள்ளையும் தானாகவே வளர்வது அன்று... வளர்க்கப்படுவது.

    ஆகவே இத்தகைய 6-வது வகையான கற்பனை-கருத்து...

    ...பாமரரிலிருந்து பண்டிதர் வரை எவருமே ஏற்கவொண்ணா விபரீத-கருத்தேயாம்.!
    .

  4. #273
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    .
    .

    .
    அரசன் அன்று கொல்வான்.!...

    ஈசன் நின்று கொல்லும்.!!!



    அன்பர்களே,

    எல்லோரும் அறிந்த பிரபலமான...

    ....இப்பழமொழியின் ஆழ்பொருள் என்ன.?

    ...விவாதிக்கலாமா.?

    அன்பன்... சுதாமா..
    .
    .

  5. #274
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    22,164
    Post Thanks / Like
    அரசனின் ஆணைகள்/தீர்ப்புகள்/தண்டனைகள் வெகு விரைவில்/உடனடியாக நிறைவேற்றப்படும்- பாண்டியன் கோவலனை கொல்ல உத்தரவிட்டது போல, சோழ மன்னன் மகனை தேர்காலில் கொல்ல ஆணையிட்டது போல. ஆனால் கடவுளின் தீர்ப்பு/தண்டனை அவசரமில்லாமல் நிதானமாய் பல காலம் கழித்து நிறைவேற்றப்படும்.
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  6. #275
    Kambar_Kannagi's Avatar
    Join Date
    Jan 2010
    Posts
    406
    Post Thanks / Like
    Quote Originally Posted by pavalamani pragasam
    அரசனின் ஆணைகள்/தீர்ப்புகள்/தண்டனைகள் வெகு விரைவில்/உடனடியாக நிறைவேற்றப்படும்- பாண்டியன் கோவலனை கொல்ல உத்தரவிட்டது போல, சோழ மன்னன் மகனை தேர்காலில் கொல்ல ஆணையிட்டது போல. ஆனால் கடவுளின் தீர்ப்பு/தண்டனை அவசரமில்லாமல் நிதானமாய் பல காலம் கழித்து நிறைவேற்றப்படும்.
    மேலும், தீங்கு/அனியாயம் செய்து அதிலிருந்து தப்பித்துக் கொள்பவர்களுக்கு இதை பாதிக்கப்பட்டவர்கள் சொல்லகூடும்.
    அதாவது, என்றாவது ஒரு நாள், செய்த தவறுக்கு உகந்த கூலி கிடைக்கும் என்றும் சொல்லலாம். எனது கருத்து.
    Thambi, valukkaiyA oru iLaneer vettupA...

  7. #276
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    Quote Originally Posted by Sudhaama
    .
    .

    .
    அரசன் அன்று கொல்வான்.!...

    ஈசன் நின்று கொல்லும்.!!!


    .
    Quote Originally Posted by pavalamani pragasam
    அரசனின் ஆணைகள்/தீர்ப்புகள்/தண்டனைகள் வெகு விரைவில்/உடனடியாக நிறைவேற்றப்படும்- பாண்டியன் கோவலனை கொல்ல உத்தரவிட்டது போல, சோழ மன்னன் மகனை தேர்காலில் கொல்ல ஆணையிட்டது போல. ஆனால் கடவுளின் தீர்ப்பு/தண்டனை அவசரமில்லாமல் நிதானமாய் பல காலம் கழித்து நிறைவேற்றப்படும்.
    "நின்று"... என்ற சொல்லுக்கு.... தாமதித்து.... அல்லது மெதுவாக... காலம் தாழ்த்தி... என்பன போன்ற கருத்தா.?

    அப்படித்தான் நம்மிடையே தவறான வழக்கு நிலவி வருகிறது.

    சற்று சிந்தித்துப் பாருங்கள்...

    அவ்வாறு கருதுவது... காலம் கடந்த தீர்ப்பு அன்றோ.?

    Justice delayed... means Justice DENIED... என்னும் சட்ட-விதிப்படி.... அத்தகைய இறை-பண்பு... இறைவனுக்கே அழகா.? பெருமையா.?

    இறைவனுக்கு இழிவு அன்றோ.?

    ஆம். அவ்வாறு பொருள்-கொள்வது விபரீத கருத்து....

    அன்பர்களே.... மேலும் உங்களது சிந்தனை-குதிரையை... தட்டி ஓட்டுங்களேன்...

    ....உயர்-திசை நோக்கி.!

    .

    .

  8. #277
    Senior Member Senior Hubber kirukan's Avatar
    Join Date
    Nov 2004
    Location
    udal koodu
    Posts
    600
    Post Thanks / Like
    அன்று செய்த தவற்றிக்கு நல்லவனாயினும்
    தண்டனை அளிப்பவன் அரசன்.

    நின்று நிறைகுறை அறிந்து சீர்தூக்கி
    தீர்ப்பை அளிப்பான் இறைவன்.

    கிறுக்கனின் பார்வையில்....

  9. #278
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    [tscii]

    .
    Quote Originally Posted by Sudhaama
    .
    .
    .
    அரசன் அன்று கொல்வான்.!...

    ஈசன் நின்று கொல்லும்.!!!


    .
    .

    அன்பர்களே,

    இந்த விபரீத-பழமொழியின் அசல் பொருளைக்-காண உதவியாக ---

    இதோ சில சிந்தனைப்-பொறிகள் (Clues) தருகிறேன்

    1. இப்பழமொழி குற்றவாளியைக் குறித்து மட்டுமே சுட்டப்-படுவது

    ஆயின் எத்தகைய குற்றவாளிக்கும் உரிய தண்டனை கொல்லப்படுவது ஒன்றேயா?... அரசனும் ஈசனுமேயா.?

    2. குற்றத்தை நேரிடையாக இழைத்த முதல் குற்றவாளிக்கும் ஏனைய குற்றவாளியருக்குமே கொல்லப்படுவது ஒன்றே சமமான தண்டனையா.?

    3. “அரசன் கொல்வான்” என்றும் ஈசன் கொல்லும்” என்றும்--- அரசனை உயர்வாகவும் ஈசனை அஃறிணை சொல்லிலும் குறிப்பிடுவது ஏன்.?

    4. “அன்று” என்னும் சொல் ஏன்.? இங்கு அதன் பொருள் யாது.?

    5. “நின்று” என்னும் சொல் ஈசனுக்கு மட்டுமே தான் பொருந்துமா.? எப்படி.? என்ன பொருள்.?

    6. “அன்றுக்கு” மாறாக “இன்று”--- என்னாது, “நின்று” என்பதன் கருத்து என்ன-?

    7. “அன்றுக்கும்” “நின்றுக்கும்” என்ன வித்தியாசம்.?

    அன்பர்களே சிந்தியுங்கள்.!-- விடை கிட்டும்-!!

    நல்-வாழ்த்துக்கள்.!!!
    .
    .

  10. #279
    Senior Member Veteran Hubber
    Join Date
    Dec 2004
    Location
    USA
    Posts
    3,099
    Post Thanks / Like
    [tscii].
    .
    Quote Originally Posted by Sudhaama
    .
    .
    .
    அரசன் அன்று கொல்வான்.!...

    ஈசன் நின்று கொல்லும்.!!!


    .
    .
    - விடை விளக்கம்



    இது ஓர் விபரீதப் பழமொழி--- அதாவது நல்லறம் கூறும் கருத்தை விடுத்து…

    ---தான்-தோன்றித் தனமாக விபரீத பொருள் செய்யப்படுவது.

    ஆம்.—இதன் பொருள் என--- தற்கால சமுதாயத்தில் பெரும்பாலும் பரப்பப்பட்டுள்ள கருத்து என்ன.?

    குற்றவாளி என தெரிந்த அன்றே--- அரசன் தண்டனை அளிப்பான்

    ஆனால் ஈசனோ நின்று நிதானித்து தாமதமாகத்-தான் தக்க தீர்ப்பும் உரிய தண்டனையும் வழங்குவான் --- என்பதாம்-

    இவ்வாறு கூறுவது விபரீத கருத்தே.!

    ஆயின் அசல் கருத்து என்ன.?

    அரசன் அன்று கொல்வான் =

    குற்றவாளியா அல்லவா என்று நீதி-மன்ற விசாரணையின் மூலமாக தெரிந்து-கொள்வதற்கு முன்னதாகவே---

    ---குற்றம் சாட்டப்பட்ட அன்றே / அன்றைய தினமே ---

    ---குற்றம் சாட்டப்பட்டவனை (Alleged Culprit) அரசன் கைது செய்து, வலுக்கட்டாயமாக நீதி-மன்றத்துக்கு இழுத்து-வரச்செய்வான் ஊரார் காண

    ஆக உண்மையில் குற்றம்-சாட்டப்பட்டவன் குற்றம்-அற்ற நிரபராதியாய் இருந்தாலும்---

    ---சந்தேகத்தின் அடிப்படையிலே மட்டுமே--- குற்றவாளிக்கு சமமாகவும், ஒருவனை குற்றவாளி போலவேயும் நடத்துவது ஒன்றே---

    ---அந்த மனிதனின் கௌரவத்தையும், அந்தஸ்தையும், புகழையும் தன்-மானத்தையும் ஓரளவுக்கேனும் கொன்று விடும்.

    ---விளைவாக தான் நிரபராதி என நீதி-மன்றத்திலே நிரூபித்து தீர்ப்பு வழங்கப்படும் வரை—அவன் சமுதாயத்தின் முன்னே தலை-நிமிர்ந்து நடக்க இயலாது… அணு அணுவாக செத்துக்-கொண்டிருப்பான்.

    ---ஆம். ஒருவனை... குற்றம் சாட்டப்பட்ட அன்றே அவ்வாறு கொல்வான் அரசன்.

    மாறாக ஈசனோ.!


    ஈசன் நின்று கொல்லும் =

    ஈசன் தீர்ப்பே என்றென்றைக்கும் நிலைத்து நிற்பது. அதுவே நின்று கொல்வது.

    -- உண்மையான குற்றவாளியை நீண்ட காலம் வரை நிலைத்து கொல்லும்

    அரியாசனத்திலே பாண்டிய மன்னன் தலை-குனிந்து அமர்ந்திருக்க--- அவனது மக்களுள் ஒருவள் கண்ணகி தலை-நிமிர்ந்து நின்று்---

    ---“தேரா மன்னா செப்புவது உடையேன்”… என்று தொடங்கி, கேள்வி மேல் கேள்விகளாக கேட்டது போல---

    ---ஈசனின் குற்றச்சாட்டு, உண்மையான குற்றவாளிக்கு எதிரே நின்று கேட்டுக்-கேட்டு-- பதில் கூற-முடியாது திணற-அடித்து சித்திரவதையாய் அணுஅணுவாய் கொல்லும்

    எப்படி.? இரு வகையிலே.!

    உலக-உயிரினங்களிலேயே மனச்சாட்சி (Conscience) கொண்ட ஒரே பிறவி --- மனிதன் மட்டுமே.

    மனச்சாட்சி என்பது இறைவனின் குரல்.

    ஒவ்வொரு மாந்தனின் உள்ளேயே மறைந்து வாழ்ந்து-கொண்டு மனதை அவ்வப்போதே இடித்துக்காட்டியும், கேள்வி-கேட்டும், மாந்தனுக்கு உரிய தகைமை வழுவாது சிந்திக்க-வைப்பது.

    மன-எண்ணங்களும் தீர்மானங்களும் – மானிட சால்பு வழுவியதாகவோ, அல்லது

    அதர்மமாகவோ இருந்தால்--- அவனது மனச்சாட்சியே மென்மேலும் அவனை இடித்துக்-காட்டி சித்திரவதை செய்யும் அவனது நிம்மதியை கொல்லும்-

    ---அவன் பொய் கூறி, புத்திசாலித்தனமாக தப்பித்து சமுதாயத்தின் கண்களிலும் நீதி-மனறத்தின் முன்னேயும் குற்றமற்றவனாக நிரபராதியாக தீர்ப்பு பெற்றாலுமே---

    ஆக உண்மையான குற்றவாளி ஒருவன்--- ஒருவேளை தனது அரசனிடமிருந்து தப்ப இயலலாம் – சமுதாயத்தின் இழிவிலிருந்தும் தப்ப முடியலாம்—தம் உற்றார் உறவினர் குடும்பத்தினரின் குற்றச்-சாட்டுகளிலிருந்தும் கூட தப்பிக்க முடியலாம் –

    ---- பொய் புனை-சுருட்டு சாமர்த்தியங்கள், பண-பலம், செல்வாக்கு ஆகிய குறுக்கு-வழிகளின் சப்பைக்-கட்டுகளால்..

    ஆனால், அவன் உண்மையான குற்றவாளியாய் இருந்தால்--- ஈசன் குரல் என்னும் மனச்சாட்சி ஒன்றே அணுஅணுவாய் அவனை கொல்லும்-

    தைரியத்தை கொல்லும்.

    சமுதாய மதிப்பு கௌரவத்தின் தரத்தை கொல்லும்.

    அவனது மன அமைதியை கொல்லும்.

    ..உறக்கத்தை கொல்லும்

    நிம்மதியை கொல்லும்.

    இன்பத்தை கொல்லும்.

    தலை-நிமிர்ந்த பெருமிதத்தை கொல்லும்.

    வாழ்வையே என்றென்றும் கொல்லும்….

    பிறர் முன்னே--- அவன் ஓர் போலிக்-காட்சி மனிதன் ---

    ---உள்ளுக்கு உள்ளே, அவனது சுய-உணர்வால் நடை-பிணம்.!.


    தன்னை உத்தம-பிறவி மாந்தன் என கூறிக்கொள்ளத் தக்க கௌரவ- நிலைகள் அனைத்தையும்---

    --மன்னர்-மாமன்னனான ஈசனின் மேலாட்சி நீதியே கொல்லும் .! ---


    --மனச்சாட்சியின் குத்திக்காட்டல் இடி- குரலாலும்--- பாவத்தின் பின் விளைவாலுமே-!!



    குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது.?



    ..

Page 28 of 28 FirstFirst ... 18262728

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •