Page 87 of 116 FirstFirst ... 3777858687888997 ... LastLast
Results 861 to 870 of 1160

Thread: IlayaRaja's New Albums 2013-15 - Mahendran film/Thaarai thappattai/Mythri

  1. #861
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - முன்னணி இசை என டைட்டிலில் மிஷ்கின் போட்டது ஒருவிதத்தில் சரியே. இசையானது பின்னணியில் சற்றுக் குறைவான அளவில் ஒலிக்காமல் பெரும்பாலான இடங்களில் மிகுந்தே காணப்படுகிறது. இந்த ஒரு படத்தில் என இல்லை. தமிழ்ப் படங்களில் தென்படும் வழக்கமான ஒன்றுதான். இந்த ஒலி அளவை யார் தீர்மானிக்கிறார்கள்? இசையமைப்பாளரா ? இல்லை படத் தொகுப்பாளரா? இயக்குனரா? இப்படத்தின் பின்னணி இசைத் துண்டுகளை படம் பார்ப்பதற்கு முன்பு கேட்டு ரசித்ததற்கும் படத்தோடு பார்த்து கேட்டு ரசித்ததற்கும் வித்யாசம் இருக்கு. முன்னதில் மனசு ஒன்றி கேட்க முடிந்த எனக்கு இரண்டாவதில் சுவாரஸ்யம் குறைந்து போக இந்த மிகை ஒலி அளவும், கதையோட்டமும் ஒரு காரணம். என் ராசாவின் மனசிலே, முதல் மரியாதை, தேவர் மகன், காதலுக்கு மரியாதைகளை ஒரு சிறந்த உதாரணமாகச் சொல்வேன். காதலுக்கு மரியாதை -இறுதிக் கட்டக் காட்சி பின்னணி இசையினை தனியாக கவனம் வைத்துக் கேட்க என்னால் முடியவே முடியாமல் பல முறை தோற்றுப் போயிருக்கிறேன். அந்த அளவுக்கு இலைமறைக் காய் போல பின்னணி இசையிருந்தால் அது ஜீவன். இதில் அப்பட்டமாக வெளியே தெரிவது போல பல இடங்களில். இது இயக்கத்தின் குறைபாட்டினால் எனச் சொன்னால் மிகையில்லை.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #862
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    For people who are interested in buying Onayum Attaukuttiyum Movie Sound Track CD

    http://600024.com/store/onayum-aatuk...-audio-cd-free

  4. #863
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    806
    Post Thanks / Like
    Listened to the "OnAiyum Attukuttiyum" tracks from a good audio quality link provided by KV.
    Most of the tracks are too brief like firefly , to say anything. I started singing "EdhO mOgam" from where Compassion left . Growl indeed is heart pounding. Need to watch the movie. Grim reaper again is too trim but seems interesting. Fairy tale is fairly long and very soulful like somebody repenting over the lost innocence. Ithnoondu trailerAE ippidinnaa innum silver screenla kEttaa, appappaa!!! I am super excited about Raja scoring for a crime thriller after decades ,like after "sigappu rOjAkkaL","Gayathri","NoorAvadhu nAL" ....

  5. #864
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Hey Thumburu, Watch AADINAGALU - kannada, about under world 80s B'lore thriller movie Raja has worked .

    oh... subtle, delicate, fine feelings, none of these tracks gave you while watching? let me see..
    Myshkin's last movie with Cheran Yudham Sei, I liked it. Hope I will get a quality DVD release for me to watch. I am eager about OAK and Malayalam thriller - Mumbai police

    K, thanks for the link!

    Vinatha
    Last edited by baroque; 3rd October 2013 at 03:24 AM.

  6. #865
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Some info about one of the songs of RD 3D (Rudramadevi 3D ):

    "Already Gunasekhar spent lots of money to build lavish sets for this ‘Rudramadevi 3D’ shoot and now he is ready to built "Anthahpuram Mandiram’ set at Annapurna 7 Acres complex to shoot a song and few scenes....For this set Gunasekhar is spending more than a Crore because he is also the producer for this film.Gunasekhar is spending more money for this film.
    The song ‘Anthahpuram lo Andhala Chilaka’ will be shot on Anushka, Zara Shah and Nathalia Kaur in this Anthahpuram Mandiram set. Antahpuramlo andala chiluka.. song lyrics is penned by Sirivennela Seetharama Sastry, Ilayaraja composed the tunes and Rajasundaram master is the choreographer..."

    Lavish set....wondering about the orchestration for the song !

    thanks,

    Krishnan

  7. #866
    Senior Member Senior Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    806
    Post Thanks / Like
    Vinatha : Hey Thumburu, Watch AADINAGALU - kannada, about under world 80s B'lore thriller movie Raja has worked .

    Me : Thanks for the reco Vinatha. Will watch it sometime . My favourite genre is crime thriller.

    Vinatha : oh... subtle, delicate, fine feelings, none of these tracks gave you while watching? let me see..

    Me : Ofcourse , they are in plenty. Tracks like Compassion, Fairy tale, Someone loves us all are quite endearing . There cannot be a Raja album without evoking these fine, subtle emotions, however dark the theme may be.

  8. #867
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Indonesia
    Posts
    0
    Post Thanks / Like
    http://tamil.thehindu.com/cinema/tam...cle5203674.ece

    உயிர் மூச்சை உணர்த்தும் இசை

    கானக இருளில் கரடியும் புலிகளும் துரத்த ஒளிய இடமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் உயிர்ப் பயணம். திரைக்கதையின் திருப்பங்களினூடே ஆங்காங்கே மறைந்து நிற்கும் வெளிச்ச விதைகள். சமீபத்தில் வெளியானவற்றில் இத்தனை நேர்த்தியான மர்மப் பின்னலுடன் அமைந்த திரைப்படம் இதுதான் என்று சொல்லலாம். படத்தின் திரைக்கதைக்கு நிகரான வெளியில், வேறொரு தளத்தில் உயிர்ப்பூட்டும் இசை தந்திருக்கிறார் இளையராஜா.

    ஒரு இசையமைப்பாளர் தந்த பாடல்களை அடிப்படையாக வைத்தே அவரைப் பற்றிய மதிப்பீடு உருவாகிவந்த இந்தியத் திரையுலகில், படத்தின் பின்னணி இசையைக் கதையோட்டத்துடன் பிணைத்து இசைக்கத் தெரிந்த முதல் இசையமைப்பாளர் நிச்சயமாக இளையராஜாதான். முள்ளும் மலரும் படத்தின் இறுதிக் காட்சியில் சூழல் காரணமாக விரிசல் கண்டு நிற்கும் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான பந்தத்தை, பின்னணியில் ஒலிக்கும் ஒரு தாள இசை இசை மூலம் சேர்த்து வைக்கும் ஆற்றல் வாய்ந்த இசையைத் தந்தவர். நெஞ்சத்தைக் கிள்ளாதே, மவுனராகம், ஜானி, தளபதி, பாரதி என்று ராஜாவின் பின்னணி இசை உச்சம் தொட்ட திரைப்படங்கள் எண்ணிக்கையில் ஐநூறுக்குக் குறையாது. திரை ரசிகர்களுக்கு இது புதிதான செய்தியும் அல்ல.

    சில வருட இடைவெளிக்குப் பின்னர், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தரும் ஒரு முக்கியமான படமாக ராஜாவுக்கு அமைந்திருக்கிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும். சாலையில் கவனிப்பாரின்றி விழுந்து கிடக்கும் காயம்பட்ட மனிதனைக் காட்டும்போது பரிவுடன் வருடும் வயலின், இரக்கமுள்ள இளைஞன் அம்மனிதனை பைக்கில் ஏற்றி, அந்த இருள் சாலையில் விரையும்போது தீவிரமாக இசைக்கிறது. படத்தின் பல காட்சிகளில் ராஜாவின் முதன்மை இசைக்கருவிகளான வயலினும், செல்லோவும் உருகி உருகி இசைக்கின்றன.

    கதையின் முடிச்சு என்ன, ஓநாய் மீது ஏன் பார்வையாளன் பரிவுகாட்ட வேண்டும் என்பது கடைசியில்தான் தெரியவருகிறது. அதுவரை, உறக்கம் கலையாத கண்களுடன் வீட்டுக்கு வெளியே நிகழ்ந்த விபத்தைப் பார்வையிடும் சிறுவன் போலவே, மங்கலான பார்வையுடன் பார்வையாளர் கவனித்துக்கொண்டிருக்கிறார். முடிச்சு அவிழும்வரை மர்மத்தைத் தக்கவைப்பது தனித்திறமை. அது மிஷ்கினுக்குக் கூடியிருக்கிறது. படத்தின் பல காட்சிகளில் மஞ்சளும் கருப்பும் கலந்த அசையும் ஓவியங்களாகச் செதுக்கியிருக்கிறார்கள் படக்குழுவினர். அத்தனை காட்சிகளையும் உள்வாங்கி அமைதியான கணங்களில் மவுனம் காத்து, தேவையான காட்சிகளில் மட்டும் உணர்வை மீட்டும் இசையை இழையோட விட்டிருக்கிறார் ராஜா. பார்வையற்ற குழந்தையிடம் மிஷ்கின் கதை சொல்லும் காட்சியில் வயலினை வலிந்து அறுத்துக் கண்ணீரை வரவழைக்க முயலவில்லை. மாறாக அவ்வப்போது விம்மி, கடைசியில் தாளாமல் பீறிடும் துக்கத்தை இசையால் மொழிபெயர்த்திருக்கிறார் ராஜா.

    படத்தின் பின்னணி இசைக் கோவையைத் தனது இணையதளத்தில் இலவசமாகவே பதிவேற்றம் செய்திருக்கிறார் மிஷ்கின். படத்தின் பெயர்ப் பட்டியலில் நடிகர்கள் விலங்குகளாகவே குறிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் வனத்தின் இலைகளாக. கானகத்தின் உயிர் சந்தேகமில்லாமல் இளையராஜாதான்.

    தமிழ் சினிமாவுக்கும் இளையராஜாவுக்கும் இது போன்ற சந்தர்ப்பங்கள் அடிக்கடி அமைய வேண்டும்.

    படத்தின் பின்னணி இசை ட்ராக்குகளை ஒரு சி.டி.யாகவே வெளியிட்டிருக்கிறார் மிஷ்கின். அதுவும் இலவசமாக. படத்தின் கதையை எழுதியவுடன் அதை இசையால் மொழிபெயர்க்க இந்தியாவில் ஒருவர்தான் உண்டு என்ற முடிவுடன் ராஜாவை சந்திக்கச் சென்றதாகவும், தன் மேல் கோபமாக இருந்த இளையராஜா முதலில் படத்துக்கு இசையமைக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார் மிஷ்கின்.கதையைக் கேட்டவுடன் இசையமைக்க சம்மதித்தாராம் இளையராஜா. மிகச் சிறப்பாக உருவாகியுள்ள பின்னணி இசை அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே 10,000 சி.டி.களைத் தயாரித்திருக்கிறார். வேண்டும் என்று கேட்கும் இசை ரசிகர்களுக்கு சி.டி. இலவசமாகவே அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இது வரவேற்கத்தக்க நல்ல முயற்சி.

  9. #868
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Vinatha

  10. #869
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    This was posted in Ilayaraja(Indian maestro) face book page.

    இந்த படம் எழுதின உடனே, ”பாடல்கள் வைப்பதற்கு இடம் இல்லை. Heroine இல்லை. So .. Duet இல்லை. .. Love’ம் கிடையாது”. இதெல்லாம் இல்லை என்று தெரிந்தபிறகு இன்னும் யோசித்தால்.. படத்தில் 90% Dialogue இல்லை. படம் Silent’ஆ ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு Action படம். Deep Emotions நிறைந்த படம். இதை யார் ஒரு Deeper Music Sensibility’யுடன் Handle பண்ண முடியும் என்று யோசித்தபோது இந்தியாவிலேயே ஒரே ஆள் இளையராஜா மட்டும்தான். இது அவரை உயர்த்திப் பேச வேண்டும் என்பதற்காக இல்லை. இதுதான் Fact.. எனக்குத் தெரியும்.

    So.. நேராக அவரிடம் சென்றேன். அவர் வழக்கம்போல பயங்கரமாக என்னைத் திட்டினார். ‘என்ன இது..? பாடல்களே இல்லாமல் எதற்கு நீ வந்தாய்?” என்று கேட்டார். “இல்லப்பா.. நீங்க கதை கேளுங்க” என்றேன். கதை கேட்ட உடனே, ‘என்னடா இது? இப்படிச் செய்திருக்கிறாய்” என்றார். நான் அவரிடம், ‘இல்லப்பா.. நீங்கதான் பண்ண முடியும்” என்றேன். அதேபோல Double Positive முடிந்து அவரிடம் காட்டியபொழுது அவர் இதைத்தான் கூறினார்.. “நிறைய வேலை கொடுத்திருக்க நீ.. நான் எப்டி பண்ணப்போறேன்? எனக்கு Time’ஏ இல்லை” என்றார். ‘இல்லப்பா.. நீங்கதான் பண்ணனும்’ என்றேன். அவர் செய்து முடித்ததும் பார்த்தால்.. I was Shattered… அப்படி ஒரு Sweet Shock எனக்கு. ”இந்த மாமேதையைத் தவிர வேறு யாரால் இப்படிச் செய்திருக்க முடியும்” என்று யோசித்து.. I touched his feet. ‘ரொம்ப thanks’ப்பா’ என்றேன். ‘இல்லடா.. இன்னும் நான் நிறைய Justice பண்ணிருக்கணும்னு ஆசைப்படுறேன். அடுத்த படம் பண்ணும்போது எனக்கு நிறைய Space and Time கொடு’ என்றார். அவருக்கு சம்பளமே மிகக் கம்மியாகத்தான் கொடுத்தேன். ஆனால் அந்த இசையைக் கேட்கக் கேட்க.. I wanted to dedicate that to all the fans of Ilayaraja… as well as Music Lovers. Tracks எல்லாம் எடுத்து Net’ல் எல்லோருக்கும் Free’யாகக் கொடுத்தேன். It has now become a huge news. இப்போது அதன் Original Soundtrack’ஐ எல்லோரும் கேட்கிறார்கள். எனவே ஒரு 10,000 CDs நானே போட்டு.. I’m going to give them to people who ever want that. இது கொஞ்சம் Expensiveதான். ஆனால் இதுதான் ஒரு Greatest Musician’க்கு நான் செலுத்தும் மரியாதை.

    இளையராஜா இல்லாமல் என்னால் Cinema’வுக்கு வந்திருக்க முடியாது. அவர் பாடல்கள்தான் என்னை சினிமாவை ரசிக்க வைத்தன. Cinema என்பது ஒரு Exotic ஆன மொழி என்பது எனக்குத் தெரிந்ததே இளையராஜாவால்தான். Whenever I go to Ilayaraja.. that’s going to be a great film or gud film. அது ஓடுதோ ஓடவில்லையோ அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. My Father is always there to take care of me. He will always be giving me great wonderful Music. நான் ராத்திரி பன்னிரண்டு மணிக்குக் கூட அவர் வீட்டுக்குச் சென்று அவரைத் தட்டி எழுப்பலாம். அந்த அளவுக்கு அவரிடம் எனக்கு உரிமை உண்டு. இது என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய Blessing" - Director Myshkin

  11. #870
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    Some news bit about EMSum Penkuttiyum movie. Not sure when was the last update on this movie came on the net.

    http://english.manoramaonline.com/cg...Id=-1073865026

    "...The plot revolves around a Sri Lankan Tamil girl who goes abroad and lives through the turmoil of sectarian strife back home...And maestro Ilayaraja has composed the music for the melodious songs of the movie..."

    thanks,

    Krishnan

Page 87 of 116 FirstFirst ... 3777858687888997 ... LastLast

Similar Threads

  1. Welcome to 2012-Let discuss 2012 expected movies...
    By Rock star_KB in forum Tamil Films
    Replies: 179
    Last Post: 23rd October 2012, 03:50 PM
  2. Dhoni - Director Prakashraj - 'Isaignani' Ilaiyaraaja
    By venkkiram in forum Tamil Films
    Replies: 68
    Last Post: 8th April 2012, 08:44 PM
  3. Villu (Devisri prasad)
    By ajaybaskar in forum Current Topics
    Replies: 3
    Last Post: 24th December 2008, 05:00 AM
  4. DHONI new CAPTAIN - Dravid resigns
    By anoops in forum Sports
    Replies: 41
    Last Post: 24th September 2007, 08:04 AM
  5. IlayaRaja's Malayalam Albums
    By ahmedrockinblues in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 33
    Last Post: 20th June 2005, 05:39 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •