Page 66 of 197 FirstFirst ... 1656646566676876116166 ... LastLast
Results 651 to 660 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #651
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    சிக்கலாரை வரவேற்க சிக்கலேதும் இல்லை,
    நக்கல் செய்தவர்கள் நாணிச் சென்று விட்டார்.
    விக்கல் வந்தாலும் விண்ணவனை எண்ணிடுவோம்,
    எக்கலையும் ஏற்றமுற ஏந்திடுமே ஏந்தலையே

    வண்ணத்தில் வார்த்தெடுத்த விளம்பரப் பிரதியினை
    வாரீர் பாரீர் எண்ணத்தில் உவகையுற
    மறைந்திருந்தே பார்க்கத் தேவையில்லை -
    மனதினிலே ஏற்ற உரிமையாக்குங்கள் இதை

    சிக்கலாரின் நாயனத்தை சிங்காரமாய்க் காண
    ஆயிரம் கண் போதாது நமக்கு
    ஆங்கில இசையும் துணைக்கு





    விளம்பரப் படங்களுக்கு நன்றி பம்மலாரே,

    அன்புடன்
    Last edited by RAGHAVENDRA; 26th July 2011 at 06:36 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #652
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முந்தைய கால கட்டங்களில், படம் வெளியாகும் நாளுக்கு முந்தைய நாள் மாலை நாளிதழில் இன்று முதல் என்று குறிப்பிட்டே விளம்பரங்கள் வெளியாகும். தமிழில் மாலை முரசு, நவமணி, பத்திரிகைகளும் ஆங்கிலத்தில் தி மெயில் பத்திரிகையும் மாலை ஏடுகளாகும். மாலை மலர் அப்போது சென்னையில் வெளியிடப் படவில்லை. காலை ஏடாக வந்து கொண்டிருந்த சுதேச மித்திரன் நிர்வாகக் காரணங்களால் மாலை ஏடாக வெளிவரத் துவங்கியது 60களின் பிற்பகுதியில். தொடர்ந்து 70களின் துவக்கத்தில் மக்கள் குரல் மாலை ஏடு வெளி வரத்துவங்கியது. இவை யனைத்துமே மறுநாள் வெளியிடப் படும் படத்திற்கான விளம்பரங்களை இன்று முதல் என்று குறிப்பிட்டே வந்தன. அதனை யொட்டியே சில விளம்பரங்களில் தேதி முந்தைய தேதியாக இருந்தாலும் இன்று முதல் என்பதைக் காணலாம். அதற்கு உதாரணம் தான் மேலே பம்மலார் பதிவிட்டிருக்கும் சுதேச மித்திரன் பத்திரிகை தில்லானா மோகனாம்பாள் விளம்பரம்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #653
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Thanks

    Thanks a lot Pammallar and Ragavendran sir for complete TM posters. The beauty of these posters are all the actors say AVM Rajan or Padmini or Balaiah, Sarankabhani given equal important like NT. I just think of current cinema, 90% of screen occupied by main actor.

    We can learn from even old movie posters.

    Cheers,
    Sathish

  5. #654
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றி 11.08.1968 தேதியிட்ட கல்கி வார இதழில் வெளிவந்த விமர்சனம்





    தில்லானா மோகனாம்பாள் திரைக்காவியத்தைப் பற்றிய பேசும் படம் பத்திரிகையின் கணிப்பு



    கணேசர்களும் நாதஸ்வரங்களும் - பேசும் படம் கட்டுரை

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #655
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like

  7. #656
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like

  8. #657
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் 44 ஆம் ஆண்டு உதய தினத்தில் - பொக்கிஷப் பதிவுகளை அளித்து கலக்கிய பம்மலாருக்கும், திரு. ராகவேந்திரன் அவர்களுக்கும் நன்றி. தில்லானா மோகனாம்பாள் உதய வருடமும் நான் இந்த உலகில் உதயமான வருடமும் ஒன்றே என்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மீண்டும் என்னுடைய நன்றியை இருவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய அருமையான பதிவுகளால், ஒவ்வொரு நாளும் இன்று என்ன, யாருடைய உதய தினம் என்று திரியை ஆவலுடன் பார்க்கசெய்கிறது.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #658
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தில்லானாவை திடுதிப்பென்று எடுத்து விட்டார்களே
    - பேசும் படம் இதழில் ஒரு வாசகர் கேள்வி... இந்த கேள்வி தமிழ்நாட்டிலிருந்து கேட்கப் படவில்லை. அவர்கள் தியேட்டரில் ஓட்டுவதற்கென்ன என்று பொய்யும் புரட்டும் பேசியும் ஏசியும் வந்தவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்தவே அந்தக் காலத்தில் இந்த பதில் அமைந்தது. பேசும் படம் பத்திரிகை நடுநிலையான பத்திரிகை என்பதற்கு எந்த சான்றும் தேவையில்லை. அவர்களின் பத்திரிகையில் பல சந்தர்ப்பங்களில் நடிகர் திலகத்தின் படங்களை விமர்சித்துள்ளார்கள். அப்படிப்பட்ட இதழில் பிப்ரவரி 1969 இதழில் வெளியான கேள்வி பதில் இது. பாருங்கள்..ஏராளமான ரசிகர்களின் உள்ளக்கிடக்கையினை எதிரொலித்தது இக்கேள்வி. சாந்தியில் வெள்ளி விழா கண்டிருக்க வேண்டிய படம்.



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #659
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    முதற்கண் பாராட்டுக்கு நன்றி !

    "தில்லானா மோகனாம்பாள்" குறித்து தாங்கள் வழங்கிவரும் கலைப் பொக்கிஷங்களின் அணிவகுப்பு பிரமாதத்திலும் பிரமாதம் !

    - "பாவை விளக்கு" திரைக்காவியத்தில் நமது திலகம் கவிஞராகப் படைத்துப் பாடிய 'ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே' பாடலை "தில்லானா"வில் அவரே நாதஸ்வரத்தில் வாசித்து நாம் அதைக் கண்டு கேட்டு ரசிக்கும் போது ஒருஇனம் புரியாத மகிழ்ச்சியும், சிலிர்ப்பும் ஏற்படும். கூடவே சவாலுக்கு பதிலாய் வரும் English Note எனக் கூறப்படும் மேற்கத்திய இசை நடனப்பாடல். Performanceல் பின்னியிருப்பார் நமது சிக்கலார். கர்நாடக இசையுலகச் சக்கரவ்ர்த்தி மதுரை மணி ஐயர்தான் 'க ம ப ரி க ப ரி க ஸ' எனத் தொடங்கும் ஸ்வரங்களைப் பிரயோகித்து இந்த ஆங்கில நோட் [English Note] பாடலை மேடைக் கச்சேரிகளில் முதன்முதலில் பாடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். பின்னர் அதனைப் பல வித்வான்களும் தங்களது பாணியில் பின்பற்றத் தொடங்கினர். மதுரை மணி ஐயர் அவர்கள் பாடிய அந்த ஒரிஜினல் மெட்டிலேயே நாதஸ்வரத்தில் புகுந்து விளையாடியிருப்பார்கள் நமது சிக்கலார் குழுவினர். மதுரை மணி ஐயர் அவர்கள் பாடியது இதோ:



    - 'பொம்மை' ஜூலை 1968 இதழின் பின் அட்டை வண்ண விளம்பரம் கண்ணை விட்டு அகல மறுக்கிறது.

    - 'கல்கி' [11.8.1968] இதழின் கண்ணியமான விமர்சனம் கூடுதல் பொலிவு.

    - 'பேசும் படம்' இதழின் 'வீணையும்-நாதமும்' 'தேனும்-பாலும்' என்றால், ஜனவரி 1968 இதழில் வெளிவந்த கட்டுரையான 'கணேசர்களும் நாதஸ்வரமும்', 'உனக்காக நான்' என்று நாதஸ்வரத்தை நோக்கிப் பகருவது போல் உள்ளது. உண்மையை உரக்க உரைத்த கேள்வி-பதில், கண்டெடுக்கப்பட்ட ஒரு 'புதையல்'.

    Thanks for the links, Bala Sir.

    Thanks, goldstar.

    பாராட்டுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்.

    சிக்கலார்
    புகழ் பாடும்
    பம்மலார்.
    Last edited by pammalar; 27th July 2011 at 03:49 AM.
    pammalar

  11. #660
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    WORLD CINEMA's BLOCKBUSTER

    தில்லானா மோகனாம்பாள் : 44வது உதயதினம்

    [27.7.1968 - 27.7.2011]

    கலைப் பொக்கிஷங்கள் களை கட்டுகின்றன : பேசும் படம் : ஆகஸ்ட் 1968

    அட்டைப்பட விளம்பரம்



    காவியக் காட்சிகள்







    கலைப் பொக்கிஷங்கள் களை கட்டும்.....

    சிக்கலார்
    புகழ் பாடும்
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •