Page 65 of 197 FirstFirst ... 1555636465666775115165 ... LastLast
Results 641 to 650 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

 1. #641
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  டியர் ராகவேந்திரன் சார்,

  விரைவில் "கர்ணன்" 'திவ்ய'மாகக் கலக்க வருகிறார். 21.7.2011 'தினத்தந்தி'யில் வெளியான இந்த விளம்பரத்தைப் பதிவிட்டமைக்கு நன்றி !

  டியர் பாலா சார், தாங்கள் அளித்து வரும் லிங்க்குகள் அனைத்துமே கற்கண்டுகளாய் இனிக்கின்றன !

  டியர் ஜோ சார்,

  தாங்கள் பதிவிட்டுள்ள "வீரபாண்டிய கட்டபொம்மு" ஓவியத்தைப் பார்க்கும் அனைவருமே புகைப்படம் என்றுதான் கூறுவார்கள். அந்த அளவுக்கு அவ்வோவியம் தத்ரூபமாய்க் காட்சியளிக்கிறது. வரைந்த அன்பருக்கும், வழங்கிய உங்களுக்கும் வளமான நன்றிகள் !

  டியர் செந்தில் சார்,

  சரமாரியான பாராட்டுதல்களுக்கு சிரம் தாழ்த்திய நன்றிகள் !

  டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !

  டியர் ஜேயார் சார், நன்றி !

  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #642
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  டியர் ராகவேந்திரன் சார்,

  தங்களின் பாராட்டுக்களுக்கு எனது பணிவான நன்றிகள் !

  'சித்ராலயா' வார இதழிலிருந்து தாங்கள் வழங்கிய சென்னை அரங்குகளுடன் கூடிய "தேனும் பாலும்" இன்று [22.7.1971] முதல் விளம்பரம், பசும்"பால்" என்றால் பாடல்கள் அனைத்தும் கொம்புத்"தேன்". தங்களது நினைவலைகள் எங்களுக்கு போனஸ்.

  கவிஞர் நாகை கண்ணனின் படைப்பு அருமை; டாக்டர் சாந்தாராமின் 'பாட்டும் பதமும்' அற்புதம்; இவற்றை தாங்கள் இங்கே பதிவிட்டது அபாரம் !

  இல்லற ஜோதி, விஸ்வரூபம், நெஞ்சங்கள், திருப்பம், பாரம்பர்யம் எனும் பஞ்சரத்னங்களை நெடுந்தகடுகளாக [DVDs] நல்லிதயங்களும், பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில, அவை வெளிவந்துவிட்ட வெல்லப்பாகு செய்தியை உடனுக்குடன் தந்தமைக்கு உளங்கனிந்த நன்றிகள் !

  கவி கா.மு.ஷெரிஃப் அவர்களின் அற்புத வரிகளைக் கொண்ட அண்ணலின் "அன்பு" பட டூயட் பாடலான 'எண்ண எண்ண இன்பமே' பாடலின் ஒளிக்காட்சியை அளித்தது பிரமாதம் !

  டியர் mr_karthik,

  தாங்கள் வழங்கிவரும் தொடர் பாராட்டுக்களுக்கு எனது பசுமையான நன்றிகள் !

  "தேனும் பாலும்" ஆரம்ப தினத்தன்று [22.7.1971] சென்னை மிட்லண்டில் ஏற்பட்ட அனுபவங்களை தங்கள் பதிவில், ஒரு ஒளிப்பேழையைக் [வீடியோ] காண்பது போல் வழங்கியுள்ளீர்கள். நன்றி கலந்த பாராட்டுக்கள் !

  டியர் செந்தில் சார்,

  நமது இதயதெய்வத்தின் பத்தாவது அவதார நிறைவு நாளன்று [21.7.2011], பெங்களூரூவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் விவரங்களை செவ்வனே தொகுத்தளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !

  டியர் கிருஷ்ணாஜி, பாராட்டுக்கும் பதிவுக்கும் நன்றி !

  டியர் ஜேயார் சார் & கோல்ட்ஸ்டார் சதீஷ், மிக்க நன்றி !

  Dear sankara1970, Thanks & Welcome back.

  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 4. #643
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,857
  Post Thanks / Like
  Vintage Heritage அமைப்பின் சார்பில் 1950களில் தமிழ்த்திரையுலகம் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களைப் பற்றிய ஆய்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்த ஜூன் திங்கள் தன்னுடைய 19வது ஆண்டினைக் கொண்டாடும் விதமாக, நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் என்கிற நிகழ்ச்சியினை நடத்தியது. இம்மாதம், அதாவது ஜூலை 2011 நிகழ்ச்சியாக, நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியமான இல்லற ஜோதி  திரையிடப் படுகிறது. விவரங்கள் கீழே தரப்படுகின்றன. அனுமதிச் சீட்டு வேண்டுவோர், திரு ராகப்பிரவாகம் சுந்தர் அவர்களை அணுகலாம். அவருடைய கைப்பேசி எண்ணும் கீழே தரப்பட்டுள்ளது.

  இடம் - விவேகாநந்தர் ஹால், பி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகம், ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4.
  நாள் - 31.07.2011 ஞாயிறு. நேரம் - மாலை 6.30 மணி
  அனுமதிச் சீட்டு மற்றும் மேல் விவரங்களுக்கு அணுகவும்
  ராகப்பிரவாகம் திரு சுந்தர். கைப்பேசி எண்9444047714
  Last edited by RAGHAVENDRA; 25th July 2011 at 07:57 AM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 5. #644
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,857
  Post Thanks / Like
  இல்லற ஜோதி திரைக்காவியத்தின் சிறப்பு  படத்திற்கு கதை வசனம் கவியரசர் கண்ணதாசன்,  இதில் இடம் பெறும் சலீம்-அனார் காதல் காட்சியின் உரையாடல் கலைஞர் கருணாநிதி அவர்கள்.  இசை ஜி.ராமநாதன்

  படம் வெளியான நாள் - ஏப்ரல் 9, 1954

  தயாரிப்பு - மாடர்ன் தியேட்டர்ஸ்

  இயக்கம் - ஜி.ஆர்.ராவ்

  நடிக நடிகையர்

  சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.ஏ.அசோகன், தங்கவேலு, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்

  இடம் பெற்றுள்ள பாடல்கள்

  1. கல்யாண வைபோகமே

  2. பார் பார்  3. களங்கமில்லா காதலிலே - இப்பாடல் காரில் துவங்கி, திடீரென மேடையில் தொடரும் வண்ணம் சில ஒளித்தகடுகளில் உள்ளது. ஆனால் முன்னர் திரையரங்குகளில் இப்படத்தைப் பார்த்த போது தனித்தனியே இருமுறை இடம் பெற்ற நினைவு. பாடியவர்கள் ஏ.எம்.ராஜா, ஜிக்கி. மேலே தரப்பட்டுள்ள ஒளிக்காட்சியில் நாடகத்தில் இடம் பெறுவதாக அமைந்துள்ள பாடல் உள்ளது.

  4. காதலே

  5. சிறு விழி

  6. கேட்பதெல்லாம் காதல் கீதங்களே - பி.லீலா பாடிய இப்பாடல் அவருடைய மிகவும் பிடித்த பாடல்களின் வரிசையில் இடம் பெற்றதாகும். இப்பாடலின் சிறப்பு, நடிகர் திலகம் இப்பாடலில் இரு இசைக் கருவிகளை வாசிப்பதாக வரும் காட்சி. பின்னாளில் திருவிளையாடல் படத்தில் ஐந்து இசைக் கருவிகளுடன் தோன்றும் காட்சிக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது இப்பாடல். இப்பாடல் காட்சிக்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

  7. உனக்கும் எனக்கும். - இப்பாடல் வேறொரு படத்தில் இடம் பெற்ற அவர்க்கும் எனக்கும் என்ற பானுமதியின் பாடலை நினைவூட்டும்.

  இல்லற ஜோதி திரையரங்குகளில் காணும் வாய்ப்பு கிடைப்பது அரிது. என்றாலும் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பினை அன்பர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.

  அன்புடன்

  பி.கு. முன்னர் தவறுதலாக ஜி.ராமநாதன் அவர்களுக்கு பதிலாக எழுத்தாளர் புதுமைப் பித்தன் படம் இடப்பட்டு விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.
  Last edited by RAGHAVENDRA; 25th July 2011 at 06:37 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 6. #645
  Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
  Join Date
  May 2010
  Location
  CHENNAI
  Posts
  1,639
  Post Thanks / Like
  பாராட்டுக்கு நன்றி திரு. கார்த்திக்.
  அன்புடன்

  K.CHANDRASEKARAN
  President
  Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
  sivajiperavai@gmail.com
  https://www.facebook.com/sivaji.peravai

 7. #646
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,857
  Post Thanks / Like
  சிக்கல்களைக் களையும் சிவபெருமானின் புதல்வரை நினைவு கூரத் தயாராவோம்...
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 8. #647
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,857
  Post Thanks / Like


  விதி தன் வேலையைக் காட்டி விட்டது. தமிழ்த்திரை உலகில் பாகவதர்-சின்னப்பா, எம்.ஜி.ஆர்.-சிவாஜி இவர்களுக்குப் பிறகு புதிய தலைமுறை கதாநாயகர்களாக வலம் வந்த ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் சகாப்தம் முடிந்து விட்டது. இன்று இரவு கலை நிலவு என அன்போடு அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி, எங்களைப் போன்ற பழைய தலைமுறை ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது. திரு ரவிச்சந்திரன் அவர்களின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகில் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய பாணி தனித்துவம் பெற்றது. பல ரசிகர்களை ஈர்த்தவர் ரவிச்சந்திரன். அவரைப் பற்றிப் பல விஷயங்களை சொல்ல எண்ணினாலும் இந்த சூழ்நிலையில் வார்த்தை வரவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம்.

  அவர் நினைவாக சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் ஜஸ்டிஸ் விஸ்வநாதன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற உள்ளம் உருக்கும் பாடல்

  Last edited by RAGHAVENDRA; 25th July 2011 at 09:46 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 9. #648
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  'கலை நிலவு', 'ஸ்மார்ட் ஹீரோ' என்கின்ற அடைமொழிகளுடன் திரையுலகில் 1960களிலும், 1970களிலும் மிகப் பெரிய வலம் வந்த நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் மறைவு கலையுலகுக்கு ஒரு பேரிழப்பு. நமது நடிகர் திலகத்துடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை, கவரிமான் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள ரவிச்சந்திரன் ஒரு திரையுலக சாதனையாளர். அவரது மறைவுக்கு நமது அஞ்சலி.

  அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர், நண்பர்களுக்கும், கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும், சகோதரி சாரதா முதற்கொண்ட ரசிகைகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவோம்.

  பம்மல் ஆர். சுவாமிநாதன்.
  pammalar

 10. #649
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  Quote Originally Posted by RAGHAVENDRA View Post
  சிக்கல்களைக் களையும் சிவபெருமானின் புதல்வரை நினைவு கூரத் தயாராவோம்...
  தங்கள் சித்தம் என் பாக்கியம் !

  இதோ சிக்கலாரைப் போற்றுகிறார் பம்மலார் !
  pammalar

 11. #650
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  WORLD CINEMA's BLOCKBUSTER

  தில்லானா மோகனாம்பாள் : 44வது உதயதினம்

  [27.7.1968 - 27.7.2011]

  கலைப் பொக்கிஷங்கள்

  முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1968  ஆறாவது வாரம் [NSC Areas] : தினத்தந்தி : 31.8.1968  75வது நாள் : தினத்தந்தி : 9.10.1968  100வது நாள் : தினத்தந்தி : 3.11.1968


  கலைப் பொக்கிஷங்கள் களை கட்டும்.....

  சிக்கலார்
  புகழ் பாடும்
  பம்மலார்.
  pammalar

Similar Threads

 1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
  By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1982
  Last Post: 22nd May 2011, 07:39 PM
 2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
  By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1490
  Last Post: 4th February 2010, 01:35 PM
 3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
  By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1478
  Last Post: 17th November 2008, 08:45 AM
 4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
  By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1472
  Last Post: 28th February 2008, 07:05 PM
 5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
  By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1470
  Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •