Page 38 of 197 FirstFirst ... 2836373839404888138 ... LastLast
Results 371 to 380 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #371
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    தங்களது உள்ளக் குமுறல் தங்கள் ஒருவருடைய தனி மனிதருடையது அல்ல - ஒவ்வொரு உண்மையான தீவிர சிவாஜி ரசிகனின் உள்ளத்தையும் பிரதி பலித்திருக்கிறீர்கள். குறிப்பாக சிலர் திரும்ப திரும்ப ஸ்தாபன காங்கிரஸ் பற்றிய பழைய பல்லவியையே பாடி வருகின்றனர். அன்று பா.ரா. என்ற பா.ராமச்சந்திரன் பின்னால் நின்றவர்கள் அப்படியே தொடர்ந்தார்களா. இன்று ஸ்தாபன காங்கிரஸ் எங்கே. ஒரு கால கட்டத்தில் அனைவருமே இந்திராவின் தலைமையைத்தானே ஏற்றனர். நடிகர் திலகத்தை மட்டும் குறை கூறுவது எந்த அடிப்படையில் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. அப்படி கூறியவர்கள் தேசிய இயக்கத்தை ஏன் தமிழ் நாட்டில் மீண்டும் தழைத்து விட முடிய வில்லை, அல்லது முயற்சி எடுக்கவில்லை. இப்படி பல கேள்விகளைக் கேட்கலாம். தன் உயிர் நண்பர் என்று கூறிக்கொள்பவர்கள், அந்த நண்பரை மிகவும் ஆபாசமாக 1967 கால கட்டங்களில் மேடைகளில் தூற்றிய போது எங்கே போயினர். அரசியல் நாகரீகம் அப்போது எங்கே இருந்தது. அது மட்டுமா, தங்களிடம் மற்றொரு சக்தி இருந்த தைரியத்தில், அனுதாப அடிப்படையில் வாக்குக் கேட்கலாம் என்கின்ற எண்ணத்தின் அடிப்படையில், சிவாஜி ராசியில்லாதவர், ஆமை புகுந்த வீடும் சிவாஜி புகுந்த வீடும் உருப்படாது என்றெல்லாம் பரப்பியவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இதையெல்லாம் பழைய சிவாஜி ரசிகர்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். அது மட்டுமா, அப்படி ஆபாசமாக மேடையில் பேசிய பல கலைஞர்களை, பெருந்தன்மையுடனும் அரசியல் வேறு, கலை வேறு என்ற பகுத்தறிவாயவு மன்ப்பான்மையுடனும், அவர்களைத் தன்னுடன் தொழிலில் இணைத்து பண்பாட்டிற்கும் நாகரீகத்திற்கும் இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம். இவையெல்லாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இங்கே ஏற்கெனவே எழுதப் பட்டவைதான் என்றாலும் வருங்கால சந்ததியினர் நடிகர் திலகத்தின் செல்வாக்கையும் அவர் புகழையும் சரியான முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதப் படுகின்றன. அப்படி சிவாஜியின் நடிப்பிற்கு மட்டும் தான் நான் ரசிகன் என்று கூறுபவர்கள், அவரை எப்படி இழித்துப் பேசினாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா. அவரை தனிப்பட்ட முறையில் அவமானப் படுத்தும் வகையில் நடந்து கொண்டதையெல்லாம் அங்கீகரிக்கின்றார்களா, என்பதை அவரவர் மனசாட்சி தான் கூற வேண்டும்.

    தங்களுடைய கருத்துக்களையும் உரக்கச் சொல்லும் உண்மைகளையும் மேலும் படிக்க ஆவலாய் உள்ளோம் பம்மலார் அவர்களே.

    தொடருங்கள். நடிகர் திலகம் என்னும் மாமனிதரின் செல்வாக்கினை நாடறியச் செய்வோம்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #372
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பம்மலார்,
    மடை திறந்த வெள்ளமென பாய்ந்து வரும் ஆதங்க நதியை தடுப்பார் யார் உளர் இங்கே ? அனுபவப்பகிர்தலும் , அதன் மூலம் வரும் அடிப்படை தெளிதலும் , அதன் மூலம் வரும் வாய்மையின் புரிதலுமே எப்போதும் அறிவார்ந்தோர் நோக்காக இருக்க முடியும் . தொடருங்கள்.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #373
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    //அப்படி சிவாஜியின் நடிப்பிற்கு மட்டும் தான் நான் ரசிகன் என்று கூறுபவர்கள், அவரை எப்படி இழித்துப் பேசினாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா. அவரை தனிப்பட்ட முறையில் அவமானப் படுத்தும் வகையில் நடந்து கொண்டதையெல்லாம் அங்கீகரிக்கின்றார்களா, என்பதை அவரவர் மனசாட்சி தான் கூற வேண்டும்.//

    ராகவேந்திரா ஐயா,
    சில விடயங்களை நேருக்கு நேர் சொல்வதே நலம் பயக்கும் என நம்புகிறேன் . ‘சிவாஜி ரசிகன்’ என்பதற்கு அவரவர் கருத்துப்படி வெவ்வேறு வரையறைகள் இருக்கலாம் .அதை இன்னொருவர் மறுக்கலாம் .ஆனால் தன் மனசாட்சி படி தன்னை ‘சிவாஜி ரசிகன்’ என ஒருவர் சொல்லிக்கொள்வாரானால் அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது ..என் வரையறை படி நீ ‘சிவாஜி ரசிகன் இல்லை’ என இன்னொருவர் சொல்வது பாதிக்காமல் இருந்தால் தான் ‘சிவாஜி ரசிகன்’ என தன்னையே சொல்லிக்கொள்பவனின் மனச்சாட்சிக்கு அழகு ..அந்த வகையில் என் மனச்சாட்சி படி நான் ‘சிவாஜி ரசிகன்’ ..சிவாஜி என்ற மாபெரும் கலைஞனின் ரசிகன் ..ஆம் .அரசியல் ரீதியாக நான் திராவிட இயக்க அபிமானம் கொண்டவன் .அதிலும் எந்த மாற்றமும் இல்லை .. இரண்டையும் நான் குழப்பிக்கொள்வதில்லை .. சிவாஜி என் ஆதர்சக் கலைஞனானதற்கு அவர் உருவாகிய திராவிட இயக்கம் எந்த விதத்திலும் காரணம் இல்லையோ அது போல சிவாஜி பின்னர் சார்ந்திருந்த இயக்கத்தில் எனக்கு பற்றில்லாமல் போனதற்கும் சிவாஜிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .

    ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக்கொள்வோமே .. நடிகர் திலகம் திராவிட இயக்கத்தின் தொண்டராக இருந்தாரே ..ஏதோ வீணர்களின் குழி பறித்தல் நடவாது இருந்து ஒரு வேளை இறுதிவரை அவர் திராவிட இயக்க அனுதாபியாகவே இருந்திருந்தால் , நீங்களும் திராவிட இயக்க அனுதாபியாக இருப்பீர்கள் (உங்கள் கருத்துப்படி) ..எனக்கு நான் அந்த நிர்பந்தத்தை வைத்துக்கொள்ளவில்லை .அது தான் வித்தியாசம் .. சிவாஜி திராவிட இயக்கத்தில் இருந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் திராவிட இயக்க அனுதாபியாகவும் , சிவாஜி என்னும் மகா கலைஞனின் ரசிகனாகவும் இருப்பேன் என்பது என் நிலைப்பாடு . திராவிட இயக்கத்திலுள்ளவர்கள் சிவாஜியை திட்டித் தீர்த்தார்களே , அவமானப்படுத்தினார்களே ..அதிலே உனக்கு உடன்பாடு உண்டா ,அங்கீகாரம் உண்டா என்றால் இல்லை .. பின்னர் ஏன் திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறாய் ? நான் திராவிட இயக்கத்தை ஆதரித்து வந்ததற்கு காரணங்கள் வேறு ..சிவாஜி எங்கிருக்கிறாரோ அது தான் நான் ஆதரிக்க வேண்டிய இயக்கம் என என் அரசியல் பார்வையை நான் வகுத்துக்கொள்ளவில்லை .எனவே எனக்கு அந்த நிர்பந்தம் இல்லை .. இங்கே பம்மலாரும் , நீங்களும் கூட எதிரியாக இருந்த ஒரு இயக்கம் நேரடியாக வசைபாடிய அளவுக்கு மறைமுக குழிபறிப்பும் , வசையும் சிவாஜி இருந்த இயக்கத்திலேயே இருந்தது என ஒப்புக்கொள்ளுகிறீர்கள் .. களத்திலே எதிரில் நிற்பவரை (அதுவும் நமது அரசியல் சூழலில்) அந்தந்த காலகட்டத்தில் எதிர்த்து பேச வேண்டிய நிர்பந்தம் இரு தரப்புக்கும் இருந்திருக்கும் .. பின்னர் ஒன்றாக கரம் கோர்க்கும் போது ‘என் பிறந்த வீடும் , புகுந்த வீடும் ஒன்றாக இணைவது கண்டு மகிழ்கிறேன்’ என பேச வேண்டியதும் இருக்கும் .ஆனால் முழுக்க முழுக்க உழைப்பையும் , விசுவாசத்தையும் வாங்கிக்கொண்ட சொந்த இயக்கமே சிவாஜியை எப்படி மரியாதை செய்தது என்பதை நீங்களே சொல்கிறீர்கள் .. ஆனாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு அந்த இயக்கத்துக்கு ஆதரவாயிருக்கிறீர்கள் ..அதை நான் எள்ளளவும் குறை சொல்ல மாட்டேன் ..ஏனென்றால் சிவாஜி இருக்குமிடமே உங்கள் அரசியல் கேந்திரம் என்பது உங்கள் கொள்கை .ஆனால் எனக்கு சிவாஜி என்னும் மகத்தான கலைஞனின் ரசிகன் என்பது தவிர அரசியலில் சிவாஜி சார்ந்த நிர்பந்தம் நான் வகுத்துக்கொண்டதில்லை . அதனால் சிவாஜி என்னும் மகத்தான மனிதனை நான் அலட்சியம் செய்கிறேன் என்று அர்த்தம் அல்ல .. சிவாஜி என்னும் மகத்தான மனிதன் அரசியலிலும் நேர்மையை , பக்குவத்தை , நாணயத்தை கடைபிடித்த மனிதன் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை .. அது குறித்து எனக்கு கூடுதல் மகிழ்ச்சி உண்டு .. அத்தகைய நேர்மை , கண்ணியத்தின் பொருட்டு அம்மனிதன் கேலி செய்ப்பட்ட போதும் , வசையாடப்பட்ட போதும் அதற்கு என் அங்கீகாரம் எப்போதும் இருந்ததில்லை ..என்னளவில் அரசியலில் என்னோடு ஒத்தக்கருத்து உள்ளவரோடு கூட நான் சிவாஜி என்னும் நல்ல மனிதனை விட்டுக்கொடுத்ததில்லை ..ஆனால் இதையும் சிவாஜி என்னும் கலைஞனுக்கு ரசிகனாக இருந்ததையும் நான் சம்பந்தப்படுத்தவில்லை .. சரியாக சொல்வதாக இருந்தால் , சிவாஜி என்னும் மனிதன் ஒரு வேளை அரசியலில் நேர்மையற்றவராக , கண்ணியமற்றவராக , சந்தர்ப்பவாத அரசியல் செய்பவராக இருந்திருந்தால் கூட .. இம்மியளவும் குறைவின்றி இதே அளவு சிவாஜி ரசிகனாக இருந்திருப்பேன் ..சிவாஜி என்னும் அரசியல் நபரின் செயல்பாடுகள் சிவாஜி என்னும் கலைஞன் மேல் நான் கொண்ட அபிமானத்தில் இம்மியளவு கூட்டவோ , குறைக்கவோ முடியாது .
    Last edited by joe; 11th July 2011 at 02:43 PM.
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  5. #374
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் சார்,

    நீங்கள் எழுதியிருக்கும் 'உண்மையை உரக்கச் சொல்வோம்' என்ற கட்டுரையில் முழுக்க, முழுக்க உண்மையையே எழுதியிருக்கிறீர்கள். துளி கூட உண்மைக்குப்புறம்பான விஷயங்கள் எதுவுமில்லை. ஆகவே நீங்கள் எழுத எண்ணியுள்ள பத்து தொடர்களையும் உடனே துவங்கி, தொடருங்கள்.

    (ஒரு சின்னத்திருத்தம் மட்டும். 'கப்போலோட்டிய தமிழன்' படத்துக்கும், 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது இந்திரா காங்கிரஸின் எமர்ஜென்ஸி ஆட்சியின்போது. முன்னதற்கு நாட்டு விடுதலையை சித்தரிக்கும் படம் என்பதால் 1976-லும், பின்னதற்கு 20 அம்சத்திட்டத்தை வலியுறுத்தும் காட்சிகள் இருந்ததால் 1977 பிப்ரவரியிலும் வரிவிலக்கு அளிக்க்கப்பட்டதே தவிர, அதிமுக ஆட்சியில் அல்ல. பின்னர் மொரார்ஜி தலைமையில் ஜனதா ஆட்சி மத்தியில் வந்ததும், அவன் ஒரு சரித்திரம் படத்துக்கான வரிவிலக்கு விலக்கிக்கொள்ளப் பட்டது).

    நீங்கள் மிகச்சரியாக குறிப்பிட்டது போல, நடிகர்திலகம் எதிரிகளால் பாதிக்கப்பட்டதை விட, உடனிருந்த துரோகிகளால்தான் அதிகம் பாதிக்கப்பட்டார். ஆனால் அப்படி தன்னைத் தூற்றியவர்களை பழி வாங்காமல், தன் படங்களிலேயே அவர்களுக்கு வாய்ப்பளித்து கைதூக்கி விட்டார். எஸ்.எஸ்.ராஜேந்திரனில் இருந்து (பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், சாந்தி, பழனி, எதிரொலி) தேங்காய் சீனீவாசன் வரையில், தன்னைப்பழித்தவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கி கைதூக்கி விட்டவர். பிற்காலத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு அளித்த வாய்ப்புக்கள் எண்ணிலடங்காதவை. 1977-ல் தன் சொந்தப்படத்தில் அவருக்கு மறு வாய்ப்பு வழங்கியதில் தொடர்ந்து, தேங்காயின் சொந்தப்படமான 'கிருஷ்ணன் வந்தானு'க்கு பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தது வரை எவ்வளவு உதவிகள்?. ஆனாலும் தேங்காயின் பாசம் கடைசி வரையில் 'வேறெங்கோதான்' இருந்தது. அது நடிகர்திலகத்தின் கொடுப்பினை. என்ன செய்வது.

    நடிகர்திலகத்தைப் பொறுத்தவரையில் அவர் எல்லா ஆட்சிக்காலத்திலும் பழி வாங்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியாகட்டும், கருணாநிதி தலைமையிலான ஆட்சியாகட்டும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியாகட்டும், அவர் அவமானங்களை சந்திக்காமல் இருந்ததில்லை. கருணாநிதி ஆட்சியின்போது பல வகையிலும் அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள், மரியாதைகள், தடுக்கப்பட்டன. மேடைகளிலும் கிண்டல்களுக்கும் வசைமாரிகளுக்கும் குறை வைக்கவில்லை.

    தன்னிடம் இன்னொரு சக்தி இருக்கிறது என்பதற்காக நடிகர்திலகத்தை கருணாநிதி துச்சமாக மதித்து எள்ளி நகையாடிய அதே நேரத்தில், அவர்களுடனிருந்த அந்த 'இன்னொரு சக்தி'யும்தானே அதற்குத் துணை போனது?. மீண்டும் நிர்ப்பந்தம் காரணமாக 1980 சட்டமன்ற தேர்தலில் ஒரே மேடையேற வேண்டி வந்தபோது, அப்போது நடிகர்திலகத்தின் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் குறித்து அந்த 'இன்னொரு சக்தி' வெளியிட்ட அறிக்கை, நடிகர்திலகத்தின் தியாகத்தையே கிண்டல் செய்வதாக அமைந்ததே. ( அந்த அறிக்கையை ஏற்கெனவே சாரதா இங்கே பதிப்பித்தார். தற்போது ரெப்ரென்ஸ் காட்ட அது எந்த பாகத்தில் இருக்கிறதென்று தெரியவில்லை)

    நடிகர்திலகத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவமானப்படுத்துவதில் கருணாநிதி அளவுக்கு இல்லையென்றாலும், இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் ஒன்றும் சளைத்தவரல்ல. அவர் ஆட்சி பீடம் ஏறியபோது, நடிகர்திலகம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டபோதும், தன் பெயரில் தானே திறந்து வைத்த திரைப்பட நகர் துவக்க விழாவின்போது, நடிகர்திலகத்தை மேடையேற்றாமல் கீழேயே உட்கார வைத்து அவமானப்படுத்தியது, மிரட்டல் மூலம் ஒரு திருமண பந்தத்தை ஏற்படுத்தி நடிகர் திலகத்தின் மன உளைச்சலுக்கு காரணமாகி, பின்னர் அதே 'மகனை' கைது செய்து, அதன் பொருட்டு அவர் மறைவையே சந்திக்க்குமளவுக்கு கொண்டு சென்றது, அரசுக்குச்சொந்தமான எவ்வளவோ நல்ல இடங்கள் இருந்தும் நடிகர்திலகத்தின் நினைவு மண்டபம் கட்ட வேண்டா வெறுப்பாக பிரச்சினைக்குரிய ஒரு இடத்தை ஒதுக்கி, இன்றளவும் அந்தக்கனவு நிறைவேறாமல் செய்திருப்பது என சொல்லிக்கொண்டே போகலாம்.

    அடுத்து பதவியில் அமர்ந்த கருணாநிதியும் வேறு ஒரு நல்ல இடமாக ஒதுக்கியிருக்கலாம். செய்யவில்லை. சென்னையில் ஒரு சிலை அமைத்ததே போதும் என்பதோடு நிறுத்திக்கொண்டார். அந்த சிலை அமைக்கவும் விடாமல் இடைஞ்சல் செய்தவர்கள யாரென்பதை சரித்திரம் மறந்து விடாது, மறந்துவிடக்க்கூடாது. மதுரையில் அமைக்கப்பட்ட சிலைக்கு தினமும் மாலை மரியாதை செய்யும் உரிமையை தனக்கு தர வேண்டும் என்று கருணாநிதியின் மகன் அழகிரி கேட்டுக்கொண்டதையெல்லாம் நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை.

    நடிகர்திலகத்தின் தயாரிப்பாளர்கள் மாற்று முகாமுக்குச்சென்று படமெடுக்க எத்தனித்தபோது, நடிகர்திலகத்தை எப்படியெல்லாம் தாக்கி அறிக்கை விடுமாறு அத்தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதையும் உங்கள் தொடரில் சொல்வீர்கள் என்று நம்புகிறோம்.

    எப்படியிருப்பினும் தங்கள் தொடர் விருப்பு வெறுப்பின்றி எத்தரப்பின் துரோகங்களையும் தோலுரித்துக்காட்டுவதாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால், நடிகர்திலகம் எப்படிப்பட்ட நெருப்பாற்றில் நீந்தி கரையேறினார் என்பதை வரும் சந்ததியினர் அறிந்துகொள்ள வேண்டும். துரோகங்களையும், வஞ்சகங்களையும், சூழ்ச்சிகளையும், நன்றி கொன்றமையையும் மட்டுமே சந்தித்து வந்தவர், இன்றளவும் நிலைபெறக் காரணம் அவருடைய அசாத்திய கலைத்திறமையும், அவருக்காக எதையும் செய்யத்தயாராயிருந்த ரசிகர் படையும்தான். அப்படையின் முழு பலனையும் முழுக்க பயன்படுத்திக்கொண்டவர்கள் காங்கிரஸார் என்பதையும், காரியம் முடிந்ததும் அதே ரசிகர் படையை உதறித் தள்ளியதும் அவர்களேதான் என்பதையும் வரலாறு அறியும்.

    இன்றளவும் அந்த ரசிகர்/ தொண்டர் கூட்டம் எப்படி பாசத்தோடு இருக்கிறது என்பதற்கு தற்போதும் அவரது பட மறுவெளியீடு களின்போது நடக்கும் விழாக்கோலங்களே சான்று பகர்கின்றன.

    (கௌரவம் திரைக்காவியத்தின் அரிய விளம்பரங்களை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி).

  6. #375
    Senior Member Regular Hubber Mahesh_K's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    186
    Post Thanks / Like
    அரசியலை நாம விட்டாலும் அது நம்மை விடாது போல...

    பம்மலார் /ராகவேந்திரன் சார் ஒரு நிலையிலும் , ஜோ மற்றொரு நிலையிலும் இருந்துதங்கள்நிலைப்பாட்டை விளக்கி இருக்கிறார்கள்.

    என்னை பொறுத்தவரை தமிழக அரசியலின் இரு பெரும் கூறுகள் திராவிட மற்றும் தேசிய இயக்கங்கள்.

    பெரியஅரசியல் கட்சிகள் எல்லாமே இந்த இரண்டில் ஏதாவது ஒன்றின் அங்கங்கள்தான்.

    திராவிடஇயக்கம் - கடவுள்மறுப்பு, மொழி மற்றும் இன ரீதியான பிரிவினையில் பற்று , இந்திய தேசியத்தின் மீது அல்லாமல் திராவிட ( அதாவதுதமிழ்) தேசியத்தின் மீது நம்பிக்கை, இந்தியாவின் மற்ற கலாச்சாரக் கூறுகளைவிட திராவிட ( அதாவதுதமிழ்) கலாச்சாரம் சிறந்தது என்கிற அடிப்படைகளில் அமைந்தது.

    தேசிய இயக்கம் என்பது மேற்சொன்ன அனைத்தையும் புறந்தள்ளுவது . இவற்றிற்கு நேர்மாறானது.


    இன்று இந்த கொள்கைகள் அனைத்துமே வெறும் பெயரளவில் மட்டுமே கட்சிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் கூட, அடிப்படையான வேறுபாடு என்பது இந்த இரு அரசியல்கூறுகளின் இடையே தமிழகத்தில் இன்னும் தொடரவேசெய்கிறது.

    இவற்றில் தேசிய பாரம்பரியத்தில் பிறந்து, வளர்ந்து அந்த பாரம்பரியத்தின் ஆதரவாளராகவே (இடையில்ஒருசிலஆண்டு 'வனவாச' காலம்தவிர) இருந்து மறைந்தவர் நடிகர் திலகம் -

    இந்த இரண்டில் நான் தேசிய பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை உள்ளவன் - நடிகர்திலகத்தைப்போலவே.

    என்னுடைய இந்த நிலைப்பாட்டுக்கு நடிகர்திலகம் படங்களில் ஏற்ற பல கதாபாத்திரங்கள் , பாடல்கள் மூலம் அவர் சொன்ன கருத்துகள் இவையும் ஒரு காரணம்.

    ஒரு சமயம் நடிகர் திலகம் மாற்று அணியில் இருந்திருந்தால் நிச்சயம் இப்போது போலவே அவரது ரசிகராகத்தான் இருப்பேன். ஆனால் அரசியல் ரீதியாக மாறுபட்டிருப்பேன்.

    நான் விரும்பும் கலைஞனுக்கும் எனக்கும் ஒரே அரசியல் கருத்துக்கள் எனபதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டு.


    இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் நமக்குள்ளே இருந்தாலும் நேர்மை, விசுவாசம் , காலம் தவறாமை, (இன்றைய அரசியலுக்கு கொஞ்சமும் ஒத்துவராத) வெளிப்படையான தன்மை இவற்றின் மூலம் ஒரு நல்ல நடிகராக இருந்தது போலவே , நல்ல அரசியல்வாதியாகவும் திகழ்ந்து நம்மையெல்லாம் பெருமைப்பட வைத்தவர் நடிகர் திலகம்.

    இந்த ஒரு விஷயத்தில் நம்முடைய வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளையும் தாண்டி, நம் அனைவருக்குமே மகிழ்ச்சிதான்.
    Last edited by Mahesh_K; 11th July 2011 at 05:23 PM.

  7. #376
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    சிவாஜி என்ற அரசியல்வாதி விட நடிகர் திலகம் என்ற நடிகனை மிகவும் பிடிக்கும். வாழ்கையே நாடகம். அந்த நாடகத்தில் நடிக தெரியாத அப்பாவி மனிதன். அரசியல் சிவாஜியை பிடிக்காது. காரணம், என்னுடைய வாழ்கையில் ஏற்பட்ட அனுபவம். என்னுடைய தந்தை இந்திரா காங்கிரஸ் சார்பாக தேர்தலில் தி. மு. க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி மட்டும் அல்ல, தான் சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்த சொத்துகளை இழந்தார். காங்கிரஸ் சார்பாக வேலை செய்தவர்களே தி. மு. க வுக்கு ஒட்டு போட்டனர். இதுவும் ஒரு காரணம், இன்னொரு காரணம், தி. மு. க. பாஷையில் - "அவாளை" (இது நடந்தது காங்கிரஸ் இல் இருந்து இந்திரா காந்தி காங்கிரஸ் (இ) ஆரம்பித்த நேரம். அப்பொழுது தென்னை மர சின்னந்தில் போட்டியிட்டார்.) காங்கிரஸ் வாதியான என் தந்தை மு க வை குறை கூறியதே கிடையாது. மு. க வை ஒரு ராஜா தந்தரி என்றும், சிவாஜியை பிழைக்க தெரியாத அசாமி என்றும் சொல்வர். (என் தந்தையும் தான்).

  8. #377
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    பாரிஸ்டர் ரஜினிகாந்த் பிரவேசித்ததும் வாதப்பிரதிவாதங்கள் உருவெடுத்தது பொருத்தமே
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #378
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    மீண்டும் பெருமாள் அவருக்கு மாற்றத்தை உண்டாக்கினார். 1954-ம் ஆண்டு இறுதியில்/1955-ம் ஆண்டு தொடக்கத்தில் திருப்பதி சென்று ஆத்திகரான அவரை, அப்பொழுது அவர் சார்ந்திருந்த நாத்திக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், "திருப்பதி கணேசா கோவிந்தா" என்று கழகத்திலிருந்து கழற்றி விட்டது.

    டியர் பம்மலார் சார், ஒரு சந்தேகம் ?

    நடிகர் திலகம் அவர்கள் திருப்பதி சென்றது 1957ல் தானே? Ntஅவர்களின் சுயசரிதை நூலில் இது பற்றி t.s.n அவர்கள் கேள்வி கேட்க நடிகர் திலகம் அவர்களும் பதில் சொல்லி இருக்கிறார், மேலும் மக்களை பெற்ற மகராசி,வணங்காமுடி, தங்கமலை ரகசியம்,அம்பிகாபதி,உத்தமபுத்திரன் போன்ற படங்கள் அப்போது (1957-ல் )வெளி வந்ததாக கூறியுள்ளார்.

    தங்கள் பதிலை எதிர்நோக்கும்

    அன்பன்
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  10. #379
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார் & ஜோ சார்,

    மிக்க நன்றி !

    டியர் mr_karthik,

    பாராட்டுக்கும், திருத்தத்திற்கும் நன்றி ! மேலதிக உண்மைகளை பதிவிட்டமைக்கும் மனமார்ந்த நன்றி !

    டியர் மகேஷ் சார்,

    மிக்க நன்றி ! அற்புதமான பதிவு !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #380
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by J.Radhakrishnan View Post
    மீண்டும் பெருமாள் அவருக்கு மாற்றத்தை உண்டாக்கினார். 1954-ம் ஆண்டு இறுதியில்/1955-ம் ஆண்டு தொடக்கத்தில் திருப்பதி சென்று ஆத்திகரான அவரை, அப்பொழுது அவர் சார்ந்திருந்த நாத்திக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், "திருப்பதி கணேசா கோவிந்தா" என்று கழகத்திலிருந்து கழற்றி விட்டது.

    டியர் பம்மலார் சார், ஒரு சந்தேகம் ?

    நடிகர் திலகம் அவர்கள் திருப்பதி சென்றது 1957ல் தானே? Ntஅவர்களின் சுயசரிதை நூலில் இது பற்றி t.s.n அவர்கள் கேள்வி கேட்க நடிகர் திலகம் அவர்களும் பதில் சொல்லி இருக்கிறார், மேலும் மக்களை பெற்ற மகராசி,வணங்காமுடி, தங்கமலை ரகசியம்,அம்பிகாபதி,உத்தமபுத்திரன் போன்ற படங்கள் அப்போது (1957-ல் )வெளி வந்ததாக கூறியுள்ளார்.

    தங்கள் பதிலை எதிர்நோக்கும்

    அன்பன்
    டியர் ஜேயார் சார்,

    திருமலை தெய்வத்தை தரிசிக்க, நடிகர் திலகம் டைரக்டர் பீம்சிங்குடன் திருப்பதி சென்றார். இந்நிகழ்வு குறித்து 'பேசும் படம்' ஜனவரி 1962 இதழில் பீம்சிங் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதிலிருந்து:

    ""காவேரி" படத்தின் சமயம், ஒரு பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது. "ராஜா ராணி" படமும் அப்போதுதான் நடந்து கொண்டிருந்தது. என் சகோதரர் திருப்பதியில் இருக்கிறார். நானும் திருப்பதிக்கு போக நினைத்து கணேசனிடம் சென்று "நான் திருப்பதிக்கு போகப் போகிறேன்" என்று சொன்னேன். "நானும் வருகிறேன்" என்றார் அவர். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கோவிலுக்குப் போகும் வழக்கமே இல்லாதவராயிற்றே அவர். எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் அதிர்ச்சி. ஆனால் அவர் அப்படி எதுவும் நினைத்துச் சொன்னதாக எனக்குப் படவில்லை. ஏதோ தன்னிச்சையாகவே சொல்லி வைத்தார்.

    'கிருஷ்ணா பிக்சர்ஸ்' செவர்லட் வண்டியில் நான், காமிரா விட்டல், ஒலிப்பதிவாளர் லோகநாதன், கணேசன் நான்கு பேர்களும் திருப்பதிக்குக் கிளம்பினோம். என் சகோதரருக்கு நான் வருவதாக ஃபோன் செய்து விட்டேன். வழியெல்லாம் ஒரே மழை. சென்னைக்கு அடுத்த தடா ரோடு பூராவும் தண்ணீர் ஒரே வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. தண்ணீர் பாய்ந்து சென்ற வேகத்தில் கற்கள் வந்து எங்கள் காரை மோத ஆரம்பித்தன. காருக்குள் தண்ணீர் வந்து விட்டது. நானும் லோகுவும் இறங்கிக் கையிலிருந்த டார்ச் விளக்கை அடித்துக் கொண்டு காருக்கு முன்னால் நடந்தோம். அதைக் கண்டு கார் மெல்ல வந்தது. நேராகப் போவதற்கு பதிலாகப் பக்கவாட்டில் காரை இழுக்க ஆரம்பித்து விட்டது தண்ணீரின் வேகம். "திரும்பிப் போய்விடலாம்" என்று நான் சொன்னேன். "திருப்பதிக்குப் போகாமலா...கூடவே கூடாது. எப்படியும் போய்விடத்தான் வேண்டும்" என்று பிடிவாதம் பிடித்தார் கணேசன். முதல் நாள் பிற்பகல் புறப்பட்ட நாங்கள் மறுநாள் காலை நான்கு மணிக்கே போய்ச் சேர முடிந்தது. என் சகோதரரோ நேரம் ஆக ஆக வழியில் என்ன நடந்து விட்டதோ என்று பதறிப் போய் விட்டார்.

    போனதும் போகாததுமாகக் குளித்துவிட்டு அப்போதே கோவிலுக்குப் போனோம். மார்கழி மாதத்தின் பனி எங்களை உறையச் செய்துவிடும் போலிருந்தது. தொட்ட இடமெல்லாம் ஒரே ஜில்லென்னும் உணர்வுதான். கோவிலின் பிரதான வாயிலில் தரிசனத்துக்காக நின்றோம். கணேசன் என் அருகில் நின்றார். கோவிலின் பிரம்மாண்டமான கண்டாமணி தன் சங்கநாதத்தை எழுப்பியது. அந்த ரீங்காரத்தில் எங்களையே நாங்கள் மறந்து ஸ்தம்பித்து நின்று விட்டோம். வெங்கடாஜலபதியின் தரிசனம் எங்களுக்குக் கிடைத்தது.

    "என் வாழ்நாளிலேயே மறக்கமுடியாத காட்சி. என் சரித்திரத்தில் முக்கியமான இடம் இது. இதை மறைக்கவோ மறக்கவோ முடியாது" என்று கணேசன் என்னிடம் சொன்னார். இப்போதும் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இதை அடிக்கடிச் சொல்வார். இயற்கையிலேயே அவருக்கு இங்கு ஒரு பற்று ஏற்பட்டுவிட்டது."

    வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் அவர்களின் 'தாய்' வார இதழில், 1984-ம் ஆண்டில், நடிகர் திலகம் தனது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை தொடர்கட்டுரையாக எழுதினார். அதிலும் அவர் திருப்பதி சம்பவம் குறித்து சற்றேறக்குறைய பீம்சிங் பதிவுசெய்தவாறேதான் பதிவு செய்திருக்கிறார்.

    பீம்சிங் அவர்களின் பதிவு குறித்த நமது அனுமானங்கள்/மேலதிக விவரங்கள்:

    - "காவேரி" படப்பிடிப்பு 1954 முடிய நடைபெற்றது. இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக 13.1.1955 அன்று வெள்ளித்திரைக்கு வந்தது.

    - "ராஜா ராணி", 1954-ன் மத்தியில் தொடங்கப்பட்டு 1956-ல் வெளிவந்தது. வெளியான தேதி : 25.2.1956, இதன் டைரக்டர் பீம்சிங்.

    - 'கிருஷ்ணா பிக்சர்ஸ்' படக்கம்பெனிதான் "காவேரி" படத்தை தயாரித்தது.

    - "ராஜா ராணி"யின் ஒளிப்பதிவாளர் விட்டல், ஒலிப்பதிவாளர் லோகநாதன்.

    - மார்கழி மாதம், ஆங்கில நாள்காட்டியில் டிசம்பர் 16 முதல் ஜனவரி 13/14 வரையிலான நாட்கள். மேற்குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 16.12.1954லிருந்து 13.1.1955 வரையிலான காலகட்டம்.

    இதிலிருந்து நாம், நடிகர் திலகம் திருப்பதிக்குச் சென்றது 1954-ன் இறுதி / 1955-ன் தொடக்கம் என்பதனை தெளிவாக்கிக் கொள்ளமுடியும்.


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •