Page 37 of 197 FirstFirst ... 2735363738394787137 ... LastLast
Results 361 to 370 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

 1. #361
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,024
  Post Thanks / Like
  நன்றி சந்திரசேகர் சார்.

  கார்த்திக்,

  உணர்வுபூர்வமான உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

  ஜோ,

  நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை மிக அழகாய் சொல்லி விட்டீர்கள். உண்மைகள் நமது பக்கத்திலிருந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

  சதீஷ்,

  அந்த புகைப்படங்கள் அதிலும் குறிப்பாக நீலவானத்தின் "ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே" பாடலின் ஸ்டைலிஷ் நடிகர் திலகத்தின் படம் பிரமாதம்.

  அன்புடன்

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #362
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  டியர் ராகவேந்திரன் சார்,

  பாராட்டுக்கு நன்றி !

  தாங்கள் பதிவிட்டுள்ள 150வது படவிழாவின் ஆவணங்களான 16.7.1971 தேதியிட்ட 'சித்ராலயா' வார இதழின் பக்கங்கள், 150வது காவியத்தின் 100வது நாள் விழாக் காட்சிகளின் ஆதாரங்களான 22.10.1971 தேதியிட்ட அதே இதழின் பக்கங்கள் மற்றும் லேட்டஸ்ட் [ஜுலை 2011] 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' முகப்பு மற்றும் உட்பக்கப்புகைப்படம் ஆகிய ஒவ்வொன்றுமே அட்டகாசம், அற்புதம், அருமை. பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள் !

  Mr.Rakesh, Thank You Very Much.

  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 4. #363
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  Quote Originally Posted by gkrishna View Post
  வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எல்லா புகழும் அந்த சிவா (ஜி) (னு) க்கே

  சிவன்(ஜி) அவன் என் சிந்தனயில் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை மகிழ
  சிவா (ஜி) புராணம் தன்னை முந்தை வினை முழுதம் ஓய உரைப்போம்


  என்றும் அன்புடன்

  கிருஷ்ணா
  டியர் கிருஷ்ணாஜி,

  சிவபெருமானைப் போற்றி மாணிக்கவாசகர் அருளிய திருவாசக வரிகளை, ரசிக மாணிக்கமாகிய தாங்கள் நமது மாணிக்க[சவாலே சமாளி]மாம் சிவாஜி பெருமானுக்கு [இத்]திரிவாசக வரிகளாக சூட்டியுள்ள அழகே அழகு ! நன்றி கலந்த பாராட்டுக்கள் !

  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 5. #364
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  Quote Originally Posted by Murali Srinivas View Post
  இந்த சவாலே சமாளி படம் வெளியான போதும் சரி, விழா் நடந்த 1971 ஜூலை 10,11 தேதிகளிலும் சரி அந்தக் காலக் கட்டத்தில் இவற்றை நேரில் பார்த்த எங்களைப் போன்றோர் இந்த நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மட்டும் சொல்லி போக, அந்த காலக் கட்டத்தில் இந்த பூமி பந்தில் ஜனனம் கூட கண்டிராத நண்பர் சுவாமியின் மூலமாக இன்று உலகில் பல்வேறு இடங்களில் வாழும் பல்வேறு தலைமுறையினரும் அதை புகைப்பட வடிவிலும் செய்தியாகவும் கண்டு களிக்கிறார்கள் என்றால் அனைத்தும் அந்த "சுவாமியின் " கருணை.

  உண்மைதானே! தந்தைக்கே உபதேசம் செய்ததால்தானே அவன் "சுவாமிநாதன்" ஆனான்!

  அன்புடன்
  டியர் முரளி சார்,

  தங்களது உச்சமான பாராட்டு அடியேனது கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்து விட்டது.

  தங்களுக்கு எனது இதயபூர்வமான நன்றிகள் !

  அன்புடன்,
  பம்மல் ஆர். சுவாமிநாதன்.
  pammalar

 6. #365
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  டியர் mr_karthik,

  பாராட்டுக்கும், பட்டியலுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ! அப்பட்டியலில் ஒரே ஒரு சிறுதிருத்தம். "சவாலே சமாளி" முதல் வெளியீட்டு விளம்பரங்களாக பதிவிடப்பட்டுள்ளவை - 'The Hindu' நாளிதழ் விளம்பரமும், 'முரசொலி' நாளிதழ் விளம்பரமும்.

  தாங்கள் கூறியது போல் இந்த வாரத்தை மாணிக்க[சவாலே சமாளி] வாரமாக மாற்றிய பெருமை நம் அனைவரையும் சாரும்.

  டியர் சந்திரசேகரன் சார், மிக்க நன்றி !

  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 7. #366
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  கலைச் சக்கரவர்த்தியின் "கௌரவம்"

  சாதனைப் பொன்னேடுகள்

  முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 25.10.1973  100வது நாள் விளம்பரம் : அலை ஓசை : 1.2.1974


  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 8. #367
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  "திரும்பிப் பார்" பரந்தாமனுக்கு அகவை 59 [10.7.1953 - 10.7.2011]

  பொக்கிஷப் புதையல்

  முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 10.7.1953  Third Week Running Ad : The Hindu : 24.7.1953


  மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்புகளில் நடிகர் திலகம் நடித்த இரு திரைப்படங்களில் முதல் திரைப்படம், மற்றொன்று "இல்லற ஜோதி(1954)".

  தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் வரும் "ட்ரெய்லர்" காண்பிக்கப்பட்ட முதல் திரைப்படம்.

  ராகதேவன் ஜி.ராமநாதன் இசையமைத்த முதல் நடிகர் திலகத்தின் படம்.

  இன்னும் இதுபோன்று எத்தனை எத்தனையோ...சொல்லிக் கொண்டே போகலாம். அவையாவும் பின்னொரு நாளில், பின்னொரு பதிவில்.


  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 9. #368
  Senior Member Diamond Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  9,868
  Post Thanks / Like
  Quote Originally Posted by joe View Post
  மிக உண்மை முரளி சார்.

  சிங்கையில் தமிழ் வலைப்பதிவுகள் மூலமாக ஏற்பட்ட ஒரு குழுமத்தில் இளைய தலைமுறையினரோடு கலந்துரையாடும் வாய்ப்புகள் நிறைய வாய்த்ததுண்டு ..அவர்களிடையே சிவாஜி என்ற பெயரை கேட்டதும் நினைவுக்கு வருபவனாக நான் அமைந்துவிட்டது எனக்கு பெருமை ..பொதுவாக அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் நடிகர் திலகம் மிகச்சிறந்த நடிகர் என்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நடிகர் திலகம் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்பதை அறிந்திருக்கவில்லை ..அதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு பிறகு வந்த தலைமுறைக்கு எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கு பெற்ற மாபெரும் வெற்றியாளர் , சிவாஜி அரசியலில் தோல்வி கண்ட மிகச்சிறந்த கலைஞர் என்றே அறிந்திருக்கிறார்கள் .. எனவே எம்.ஜி.ஆர் என்பவர் மிகப்பெரிய மாஸ் ஹீரோ , சிவாஜி அந்தளவுக்கு ரசிகர் கூட்டம் கொண்டிருந்தவரல்ல என்றே ஒரு அனுமானம் இருக்கிறது . இதற்கு முழுக்காரணமும் எம்.ஜி.ஆரின் அரசியல் விஸ்வரூபம் தான் ..அதைத் தாண்டி , எம்.ஜி.ஆரும் .சிவாஜியும் ஒன்றாக கோலோச்சிய காலத்தில் வணிகரீதியிலும் , ரசிகர்கள் எண்ணிக்கையிலும் நடிகர்திலகம் யாருக்கும் குறைந்தவர் அல்ல என நாம் சொன்னாலும் அதை ஏற்க அவர்கள் மனம் மறுக்கிறது . இது பற்றி நண்பர் ஒருவரோடு என் தொடர்ச்சியான விவாதத்தின் இறுதியில் உங்களின் நடிகர் திலகம் சாதனைப்பட்டியலை படிக்க கொடுத்த பின்னர் தான் அவர் தன் கருத்தை மாற்றிக்கொண்டார் .

  ஒரு காலத்தில் ஒன்றை ஒன்று ஒட்டி உரசி செல்லும் சாதனை நட்சத்திரங்களாக விளங்கிய இருவர் , காலப்போக்கில் அரசியல் ஓட்டத்தில் கிடைத்த ஓடங்களின் தன்மையைப் பொறுத்து ஒருவர் முக்கியத்துவம் அதிகமாக பெற்றுவிட்ட காரணத்தால் , ஏதோ ஒரு வகையில் ஒருவர் ஏற்படுத்திய அமைப்பு இன்றும் மாபெரும் சக்தியாக வலம் வரும் நிலையில் , பின்னர் வந்த தலைமுறை முந்தைய வரலாற்றை வேறு கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாது .. ஆனாலும் முடிந்த வரை நமக்கு தெரிந்தவர்களிடம் உண்மையை உரக்கச்சொல்வதை எப்போதும் தொடர்வோம் .
  அன்புமிக்க ஜோ அவர்களுக்கு,
  தனியொரு நபராக அந்நிய மண்ணில் தாங்கள் நடிகர் திலகத்தின் புகழ் பரப்ப ஆற்றி வரும் தொண்டுக்கு ஒவ்வொரு சிவாஜி ரசிகர் சார்பிலும் என் சார்பிலும் என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தங்களுடைய பதிவின் கடைசி பாரா பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியதாகும். இதைத்தான் நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறோம். இதற்குக் காரணம் திராவிட இயக்கங்கள் மட்டுமல்ல, நடிகர் திலகம் சார்ந்திருந்த இயக்கமும் கூட. அன்னை இந்திரா காந்தி நடிகர் திலகத்தின் செல்வாக்கை உணர்ந்திருந்த அளவிற்கு அவருக்கு முன்னர் இருந்திருந்த தேசிய தலைவர்கள் இயக்கத்தவர்கள் மற்றும் தமிழகத் தலைவர்கள் உணர்ந்திருந்தால் 1967 மாற்றத்தை விரைவில் சரி செய்திருப்பர். திராவிட இயக்கத்தினர் கலை உலகை சரியான விகிதத்தில் பயன் படுத்திக்கொண்டு தாங்களும் வளர்ந்து கலைஞர்களையும் வளர்த்ததோடு மட்டுமன்றி தேசியத்தை முற்றிலும் மறக்கடிக்கும் விதத்தில் தமிழக மக்களை பயன் படுத்திக்கொண்டனர். இருந்தாலும் நடிகர் திலகம் என்கிற தூண் தன்னந்தனியாக தாங்கி நின்றதால் தான் தேசியம் இன்றளவும் மீதமிருக்கும் மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது. அவருடைய மக்கள் செல்வாக்கு இன்னும் தமிழகத்தில் தெரியவில்லை. ஒரே ஒரு தேர்தலில் மட்டும் போட்டியிட்டு, அதுவும் மற்றவர்களுக்காக வாக்குக் கேட்டுத் தோற்றதை, அவருடைய தோல்வி என்று கூறுவது நியாயமாகாது, தர்மமாகாது. இறுதி வரை அவர் தனக்காக மக்களிடம் கையேந்த வில்லை. யாரை மக்கள் தொடர்ந்து வெற்ற பெறச் செய்தனரோ, அவருடைய மறைவிற்குப் பிறகு, அவருடைய இயக்கம் பிளவு படக் கூடாது என்கின்ற நல்லெண்ணத்தில் தான் வாக்குக் கேட்டார். அந்த நேரத்தில் அவருடைய நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்திருக்கலாம். இதை வைத்து அவருடைய தேர்தல் தோல்வியையும் செல்வாக்கையும் எடை போடுவது நியாயமாகவும் தர்மமாகவும் இருக்காது என்பதே என் எண்ணம். அது மட்டுமல்லாமல் பின்னொரு காலத்தில் அவர் விரும்பியது போலவே அந்த இயக்கம் ஒன்று பட்டு மீண்டும் பழைய நிலையில் நிமிர்ந்து நின்றது, நடிகர் திலகம் எடுத்த நிலைப்பாடு தவறில்லை என்று மக்கள் அங்கீகரித்ததாகத் தானே இருக்க முடியும்?

  சரியான நேரம் வாய்ப்பு அமைந்தால் மீண்டும் சிவாஜி ரசிகர்களால் (மட்டும்) தான் தமிழகத்தில் தேசீயத்தை மீண்டும் அரியணை ஏற்ற முடியும்.என்பதை காலம் நிரூபிக்கும்.

  அன்புடன்
  Last edited by RAGHAVENDRA; 10th July 2011 at 12:01 PM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 10. #369
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  இன்றைய [10.7.2011 : ஞாயிறு] சென்னைப் பதிப்பு 'தினத்தந்தி'யில் வெளிவந்துள்ள விளம்பரம் :  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 11. #370
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  Quote Originally Posted by joe View Post
  நமக்கு தெரிந்தவர்களிடம் உண்மையை உரக்கச்சொல்வதை எப்போதும் தொடர்வோம் .
  உண்மைகளை உரக்கச் சொல்வோம்

  டியர் ஜோ சார்,

  'உண்மையை உரக்கச் சொல்வோம்' என்று தாங்கள் கூறியுள்ளதால் இப்பதிவில் சில உண்மைகளைப் பதிவு செய்ய சித்தமாயுள்ளேன்.

  நடிகர் திலகத்துக்கும், மக்கள் திலகத்துக்கும் வாய்க்கப் பெற்ற ஓடங்கள் ஒன்றுக்கொன்று மிகமிக வித்தியாசமானவை, மிகுந்த முரண்பாடானவை.

  தனது ஏழாவது அகவையில் அரிதாரம் பூசத் தொடங்கிய நடிகர் திலகம் தொடர்ந்து தனது எழுபதாவது அகவையையும் தாண்டி அரிதாரம் தரித்தார் என்கின்ற சாதனை உலகறிந்ததே. இதில் 1950-ம் ஆண்டில் முதல் படமான "பராசக்தி"யில் கதாநாயகனாக அவர் நடிக்கத் தொடங்கியதிலிருந்து அவர் அரசியலிலிருந்து முழுவதுமாக விலகிய 1993-ம் ஆண்டு வரை தொடர்ந்து அவரது வாழ்க்கைப் பாதையின் வளர்ச்சிக்கு குழிப் பறிக்கும் வேலைகள் நடந்து கொண்டேதான் இருந்தன. கெடுகுடிகள் தோண்டிய அத்தனை படுகுழிகளையும் ஒவ்வொரு முறையும் தாண்டியே அவர் வளர்ந்து வெற்றி வலம் வந்தார். அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவை : அவரது அபரிமிதமான திறமை, அவருக்காக எதையும் செய்ய சித்தமாயிருந்த(இருக்கும்) தொண்டர்கள்[ரசிக-பக்தர்கள்] கூட்டம் மற்றும் அவரை வீழ்த்த எண்ணியவர்களும் கண்டு அஞ்சிய அவரது அளப்பரிய மக்கள் செல்வாக்கு. படுகுழிகள் பறித்த பாதகர்களுக்கு இவர் என்றுமே பதிலுக்கு படுகுழி பறித்து பழிவாங்கியதில்லை. அந்த எண்ணம் கூட அவருக்குத் தோன்றியதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட கோமான் அவர் என்பது அவருடன் நெருங்கிப் பழகிய அனைவருக்கும் தெரியும்.

  திரையுலகுக்கு வருவதற்கு முன்னர், நாடக உலகில் கொடிகட்டிப் பறந்த பதினைந்து வருட காலகட்டத்தில் [1935-1950]தான் அவரைக் கவிழ்க்கும் முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. "பராசக்தி"யில் அவர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி சந்தித்த சங்கடங்களை, சோதனைகளை தனியொரு அத்தியாகமாகவே எழுதலாம். அவரை முளையிலேயே கிள்ளி எறியும் முயற்சிகளை அவரை வாழவைத்த தெய்வம் 'பெருமாள்' துணையோடு முறியடித்து "பராசக்தி" அருளால் பாராளும் சக்தி ஆனார். இறையருளும் அவருக்கு எல்லா இக்கட்டிலும் கைகொடுத்தது மறுக்கமுடியாதது.

  மீண்டும் பெருமாள் அவருக்கு மாற்றத்தை உண்டாக்கினார். 1954-ம் ஆண்டு இறுதியில்/1955-ம் ஆண்டு தொடக்கத்தில் திருப்பதி சென்று ஆத்திகரான அவரை, அப்பொழுது அவர் சார்ந்திருந்த நாத்திக இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், "திருப்பதி கணேசா கோவிந்தா" என்று கழகத்திலிருந்து கழற்றி விட்டது. இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். நடிகர் திலகம் திருப்பதி சென்றது திடீர்ப்பயணம். அதற்காக திமுகழகம் அவரை நீக்கியது தருணம் பார்த்து செயலாற்றிய விதம். 1945லிருந்து 1954 வரை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் திராவிடக் கட்சிகளின் பெரும் ஆதரவாளனாக தொண்டாற்றியிருக்கிறார் நடிகர் திலகம். "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்(1945)" நாடகத்தின் மூலம் திராவிடப் பாசறையின் கொள்கைகளை ஆர்ப்பரிக்கும் அடலேறுவாக முழங்கினார் என்றால் "பராசக்தி(1952)" திரைப்படத்தின் மூலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளை பாரதமெங்கும் கொண்டு சென்றார். கழகத்தின் வளர்ச்சி நிதிக்காக பல நாடகங்கள் நடித்தும், தமிழகத்தின் வீதிகளிளெல்லாம் "பராசக்தி" வசனம் பேசி அதிகதிக நிதி வசூலித்தும் அளித்திருக்கிறார். கழகத்திற்கு நன்மை மட்டுமே செய்த கணேசனுக்கு/அவரது வாழக்கைப் பயணத்துக்கு, "கோவிந்தா" போட்டு கழகம் படுபாதகமும் செய்தது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

  1955லிருந்து அனைத்து கட்சிகளுடனும் [திராவிடக் கட்சிகள் உட்பட], அனைத்துக் கட்சிப் பிரமுகர்களுடனும் நல்லிணக்கத்தை, நல்லுறவை பேணிய நடிகர் திலகம், அத்தகைய சிறந்த அணுகுமுறையை தனது இறுதிவரை கடைபிடித்தார். இன்றளவும் அன்னை இல்லத்துச் செல்வங்கள் இந்த அணுகுமுறையையே பின்பற்றுவது போற்றத்தக்கது.1955லிருந்து சர்வகட்சிகளுடன் இணக்கமாக இருந்த அதே நேரத்தில், காங்கிரஸ் பேரியக்கத்துடனும், கர்மவீரர் காமராஜருடனும் கூடுதல் இணக்கத்துடன் திகழ்ந்தார். பின்னர் 1965ல் காங்கிரஸில் உறுப்பினராக இணைந்து 1987 வரை தீவிரமாக தொண்டு புரிந்தார். 1955லிருந்து 1965 வரை அவர் காங்கிரஸ் விசுவாசியாக இருந்து அக்கட்சிக்காக உழைத்தபோதும் சரி, 1965லிருந்து 1987 வரை காங்கிரஸ் உறுப்பினராக அதிதீவிரமாக தொண்டாற்றியபோதும் சரி, அதுவும் ஒருதலைக்காதலாகவே இருந்தது என்பதும் மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் முழக்கத்தை "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் மூலம் 1959-ல் தேசிய திலகம் வெள்ளித்திரையில் வலம்வரச் செய்து தேசபக்தியை ஊட்டியபோது, அப்போதிருந்த காங்கிரஸ் அரசு குறைந்தபட்சம் அப்படத்தை ஊக்குவிக்க ஒரு வரிவிலக்கு [Tax-Free] சலுகை கூட வழங்கவில்லை. அதே போல் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை செந்தமிழ்நாட்டுச் செல்வங்களுக்கெல்லாம் அவர் வடித்துக் காட்டிய "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படம் 1961-ல் வெளிவந்தபோதும் அதே காங்கிரஸ் அரசு அப்படத்தை ஊக்குவிக்க வரிவிலக்கு சலுகை எதுவும் அளிக்கவில்லை. மேலும் கதர்ச்சட்டைக்காரர்களே "கப்பலோட்டிய தமிழ"னைக் காண வரவில்லை. [இதுகுறித்து சகோதரி சாரதா சமயம் வாய்க்கும் போதெல்லாம் குமுறியிருக்கிறார்].

  [மறுவெளியீடுகளின் போது, 1977-ல் "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்திற்கும், பின்னர் 1984-ல் "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்திற்கும் அப்போதைய அதிமுக அரசு வரிவிலக்குச் சலுகை வழங்கியது].

  1962-ல், ஜான் கென்னடி ஜனாதிபதியாகத் திகழ்ந்த அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகளுக்கு இந்திய நாட்டின் கலைத்தூதுவராக நடிகர் திலகம் உலகப்பயணம் மேற்கொண்டார். அவர் புறப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், இங்கே இந்தியாவிலிருந்து அவரது மிக முக்கிய திரைப்படக் காட்சிகள் அடங்கிய படச்சுருள், ஒரு பயணிகள் விமானத்தில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது. அந்த விமானம் குறிப்பிட்டபடி அமெரிக்கா போய்ச் சேர்ந்தது. அந்தப்படச்சுருள் அமெரிக்கா போய்ச் சேரவில்லை. படச்சுருள் காணாமல் போனது மர்மமாகவே இருந்தது. நடிகர் திலகம் அமெரிக்கா செல்வதற்கு முன், அவரைப் பற்றி அமெரிக்கர்கள் அறிந்து கொள்வதற்காகவே இந்தப் படச்சுருள் அனுப்பபட்டது. ஆனால் யார் செய்த சதியோ அது சென்றடையவில்லை. 1962-ல் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியே.

  பின்னர் 1965-ல் நடிகர் திலகம் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு தீவிர அரசியலில் இறங்கினார்.1967 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போதும், பின்னர் ஸ்தாபன காங்கிரஸிற்காக 1971 சட்டமன்ற தேர்தலின் போதும் பற்பல இடைத்தேர்தல்களின் போதும் தென்னகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும், மூலை முடுக்கெங்கும் சுற்றி தேர்தல் பணி ஆற்றினார். இந்தக் காலகட்டங்களில் காங்கிரஸிற்காக தன் உடல், பொருள், ஆவி மூன்றையும் தன்னலம் கருதாது அர்ப்பணித்து தொண்டு செய்தவர் அவர் ஒருவரே. சமயம் வாய்க்கும் போதெல்லாம் தனது திரைப்படங்களிலும் கதைக்கு பங்கம் ஏற்படாமல் காங்கிரஸ் புகழும், கர்மவீரர் புகழும் பாடினார். 1975-ல் பெருந்தலைவரின் மறைவுக்குப் பிறகு [2.10.1975], அவர் எடுத்த அரசியல் முடிவின் காரணமாக ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் வெறுப்புக்கு ஆளானார். நடிகர் திலகமும், அவரது அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றமும் மற்றும் பற்பல ஸ்தாபன காங்கிரஸ் காமராஜர்-சிவாஜி தொண்டர்களும்
  இந்திரா காங்கிரஸில் இணைந்தது, இந்திராவின் தலைமையை ஏற்க முடியாத ஸ்தாபன காங்கிரஸ் பிரமுகர்களுக்கு, தொண்டர்களுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. "காமராஜரின் கல்லறை காயுமுன்னே சில்லறைக்கு அலையும் கணேசா, உனக்கு 'பாட்டும் பரதமும்' ஒரு கேடா?" என்று "பாட்டும் பரதமும்" [6.12.1975] திரைப்படம் வெளியான இடங்களிலெல்லாம், 1955லிருந்து தீவிர காமராஜ் அனுதாபியாக வாழ்ந்து கட்சிக்காக தன் சொந்தப் பணத்தை செலவு செய்து தொண்டாற்றிய, தேசிய திலகத்தை வசைபாடி தொடர் துரோகச் செயல்களில் ஈடுபட்டனர். அந்தக் காலகட்டத்தில் திராவிடக் கட்சியினர் அவரை வசை பாடியது குறைவு. தன்னால் வளர்த்துவிடப்பட்ட ஸ்தாபன காங்கிரஸார் அவரைத் திட்டித் தீர்த்தது போல் வேறு எவரும் அவரை அவ்வளவு வசை பாடியதில்லை. பின்னர் வசை பாடியவர்கள் அனைவருமே [ஓரிருவர் தவிர] இந்திரா காங்கிரஸில் தஞ்சம் புகுந்தனர். அவரிடம் தொடர்ந்து பொய்ப் புன்னகை உதிர்த்து நாடகமாடி வந்தனர்.பின்னர் இந்திரா காங்கிரஸில் அவர் இருந்த 1988 ஜனவரி வரை அவரது பணம், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டு அவரால்
  உயர்ந்த பதவிகளை அடைந்த பின்னர், அவரைத் தூற்றியவர்கள் ஏராளம். நடிகர் திலகத்திடம் சிறு உதவி முதல் பெரும் உதவி வரை பெற்றுக் கொண்டு அவரது முதுகில் குத்திய, அவருக்கு துரோகம் இழைத்தவர்களின் பட்டியல் நீண்டது, நெடியது. இதில் கோமான்கள் முதல் சாமானியர்கள் வரை கட்சி வேறுபாடின்றி சகலரும் அடங்குவர். அவரைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு தவறிழைக்காதவர்களை விரல் கணக்கில் கொண்டு வந்து விடலாம்.

  சற்றேறக்குறைய 33 ஆண்டுகள் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தன்னலம் கருதாது அபரிமிதமான தொண்டாற்றிய நடிகர் திலகத்துக்கு அக்கட்சியும், அதன் பிரமுகர்களும் செய்த நன்மைகள் மிகமிகக் குறைவு; இழைத்த துரோகங்கள் மிகமிக அதிகம். "சிவாஜி" என்ற மூன்றெழுத்துக்கு, "நன்றி" என்ற மூன்றெழுத்தை, தமிழ்நாடு காங்கிரஸ் தெரிந்தே தெரிவிக்கத் தவறியதால், இன்று "முடிவு" [THE END] என்ற மூன்றெழுத்தை எதிர்நோக்கியுள்ளது.

  நடிகர் திலகம் தனது அரசியல் ஓட்டத்தில் பயணித்த இருபெரும் ஓடங்களின் சிற்சில ஓட்டைகளை உரைப்பதே இப்பதிவின் நோக்கம்.

  மேலும், இப்பதிவு சுவாமிநாதன் என்கின்ற சிவாஜி தொண்டனின் உள்ளக்குமுறலேயன்றி வேறேதுமல்ல.

  ['உண்மைகளை உரக்கச் சொல்வோம்' என்கின்ற தலைப்பில் ஒரு பத்து பதிவுகள் தொடராகவே எழுதும் எண்ணம் உள்ளது. அதனாலேயே வெகு சில உண்மைகளை மட்டும் இப்பதிவில் எழுதி, பல உண்மைகளை பதிவிடாமல் தவிர்த்துள்ளேன். திறந்த மனதுடன், விசால நோக்கத்துடன், "சிவாஜி தொண்டன்" என்கின்ற ரீதியில் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் அப்பதிவுகளை எழுத நமது நல்லிதயங்கள் 'பச்சை விளக்கு' காட்டினால் தயக்கமில்லாமல் விரைவில் அவசியம் எழுதுகிறேன்].

  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

Similar Threads

 1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
  By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1982
  Last Post: 22nd May 2011, 07:39 PM
 2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
  By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1490
  Last Post: 4th February 2010, 01:35 PM
 3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
  By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1478
  Last Post: 17th November 2008, 08:45 AM
 4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
  By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1472
  Last Post: 28th February 2008, 07:05 PM
 5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
  By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1470
  Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •