Page 24 of 197 FirstFirst ... 1422232425263474124 ... LastLast
Results 231 to 240 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #231
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    MS, oru vArththai SikkalAr paththiyum sollalAmE.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #232
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    chandrababu experience with NT/MGR/Jaya

    http://kobikashok.blogspot.com/2010/...post_5536.html

    Read this article today. Just to share.

    regards

    Gk
    gkrishna

  4. #233
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Plum,

    It is not often that one finds you unplugged as you were in the last 2 days. Especially when you and Rakesh interact, it is always very absorbing to read it. Even a week or 10 days back if you remember, you two were discussing about Muradan Muthu and even there I didn't interfere. Rakesh who used to come up with short and sweet reviews earlier, is not that active now. There would be nothing novel if I, Saradha or Ragavendar discuss. Like I wanted, there were so many people, [who are not regular contributors to this thread] visited this thread and discussed about TM in the last couple of days.

    But coming to your point, yes like any NT fan, Sikkalar happens to be one of my favourite characters. As many pointed out it requires great guts to don this role and NT didn't even hesitate for a second. Will pen my thoughts on Sikkalar shortly.

    Regards

  5. #234
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கிருஷ்ணாஜி,
    சந்திரபாபுவும் நடிகர் திலகமும் பற்றிய தகவல் ஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் படிக்கும் போது புதியதாய் தெரிகிறது. இணைப்புக்கு வாழ்த்துக்கள்.

    இருநாட்களுக்கு முன்னர் ஒரு முக்கியமான படத்தின் வெளியீட்டு நாள். நாம் அனவரும் சந்திப்பதற்கு காரணமான நடிகர் திலகத்தின் சந்திப்பு வெளியான நாள் 16.06.1983. மறக்க முடியுமா அந்த நாட்களை.

    சந்திப்பு படம் வெளியாவதற்கு முன்னர் நீதிபதி ஓடிக் கொண்டிருந்த நேரம். சாந்தி திரையரங்கில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மின்னலென என் உள்ளத்தில் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. இந்த சுவர்களில் ஏதாவது ஒரு இடத்தை பயனுள்ளதாக ஆக்கி, அதில் சிவாஜி ரசிகர்கள் பலன் பெறும் வகையில் செய்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது, தொடர்ந்து அதற்கான திட்டமும் அடியேனின் உள்ளத்தில் உதித்தது. இந்த சுவற்றில் நடிகர் திலகத்தின் படங்களை எழுதி பட்டியலிட்டால் என்ன... நிர்வாகி அவர்களை அணுக, அடுத்த நொடியே எனக்கு அனுமதி... அனைத்து நண்பர்களும் அப்போதே செயலில் இறங்கி விட்டோம். எங்கள் குழுவில் ஒரு நண்பர் - சக்கரவர்த்தி என்று பெயர் - மிகவும் அருமையாகவும் அழகாகவும் ஓவியம் தீட்டுவார் - அவர் உடனே சொல்லி விட்டார் ... நான் தான் அந்தப் பட்டியலை எழுதுவேன் என்று. அடியேனின் பொறுப்பு அந்தப் பட்டியலைக் கொடுத்து, எழுதும் போது அதனை சரிபார்த்து வருவது. பணம் வேண்டுமே. இடம் கிடைத்து விட்டது. பொருளுக்கும் மற்ற செலவுக்கும் நாங்கள் அனைவரும் எங்களாலான செலவைப் பார்த்துக்கொண்டு மீதத்தை வெளியில் வசூல் செய்து கொள்வது. ரசிகர்கள் பலர் தாமாக முன்வந்து பொருளுதவி அளித்தது மட்டுமன்றி உடலுழைப்பையும் அளித்தனர். அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவர் - சொன்னால் நம்ப மாட்டீர்கள் - அப்போதைய வங்கி ஒன்றில் தலைமை நிர்வாகியாக இருந்தவர் - அவர் வங்கிப் பணிகளை முடித்துக் கொண்டு நேராக சாந்திக்கு வந்து, எழதுபவருக்கு வண்ணங்கள் அடங்கிய பக்கெட்டைப் பிடித்துக் கொண்டிருப்பார் - அவரை நினைக்கையில் இப்போதும் உள்ளம் நெகிழ்கிறது. சுவற்றில் சாரம் கட்டி அதில் அமர்ந்து எழுதுவது ... இந்தப் பட்டியலை எழுதி முடிக்க கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேல் ஆனது. அனைவரும் அவரவர் பணிகளை முடித்து விட்டு மாலையில் எழுதி இரவு வெகு நேரம் கழித்து வீடு போய் சேர்ந்து வீட்டில் அவரவர் திட்டு உதை போன்றவற்றை வாங்கியது தனிக்கதை.
    இப்படி நண்பர்கள் வசூல் செய்ய அணுகியவர்களில் திரு ஒய்.ஜி.மகேந்திரா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, திரு ஜெய்கணேஷ், மறைந்த திருமதி சுஜாதா ஜெயகர் உட்பட பலரும் அடங்குவர். இதில் சி.வி. ராஜேந்திரன் அவர்கள் பொருளுதவியோடு நிறுத்தாமல் எங்கள் அனைவரையும் அவருடைய வண்டியில் ஏற்றிக் கொண்டு உட்லண்ட்ஸ் டிரைவ் இன் - தற்பொழுது செம்மொழிப் பூங்கா உள்ள இடம் - ஹோட்டலுக்கு அழைத்து சென்று சிற்றுண்டியும் வாங்கித் தந்தார். அது மட்டுமன்றி அவ்வப்போது சாந்தி திரையரங்கில் எங்களுடைய பணிகளின் போது கூட இருந்து ஆலோசனைகளையும் வழங்கினார்.

    இந்தப் பணிகளையெல்லாம் நீதிபதிக்கும் சந்திப்புக்கும் இடையேயான காலகட்டத்தில் முடித்து சந்திப்பு திரைப்பட வெளியீடு அன்று திறந்து வைக்கப் பட்டது.

    (பின்னாளில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் திலகத்தின் நினைவினை ஒட்டி மற்றோர் சகோதர மன்றம் அதனை சலவைக்கல்லில் பதித்து நடிகர் திலகத்தின் புகழை நிரந்தரமாக்கி நம் அனைவரின் உள்ளத்திலும் நீங்கா இடம் பெற்றது பெரும் மன நிறைவைத் தந்துள்ளது. )

    படம் வெளியீடு அன்று அரங்கில் ஆரவாரம் விண்ணைத் தொட்டது என்றால் மிகையில்லை. குறிப்பாக உன்னைத்தான் கும்பிட்டேன் பாடல் காட்சியில் அரங்கில் ஆரவாரம் உச்சக்கட்டம். அந்த வரிகள், எனையே நம்பி இருந்தாலென்ன எவருக்கும் நான் ஓர் ஏணி, என் மேல் ஏறி உதைத்தால் கூட எனக்கென்ன நான் ஓர் ஞானி, எனக்கா வாழ்கிறேன், நான் பிறர்க்கா வாழ்கிறேன் என்ற வரிகள் ... பின்னர் எதையும் சுமக்கும் மனம் ஒன்று தேவன் தந்தான், அதற்காகவே என்னை வாழ்கென்று சொன்னான் என்ற வரிகளின் போது காமராஜரை இவர் வணங்கும் காட்சியிலும் ஆரவாரம் விண்ணைப் பிளந்து பெருந்தலைவருக்குக் கேட்டிருக்கும்.

    இன்னொரு நிகழ்வு... இந்தப் பாடல் காட்சியில் நடுவில் பின்னணியில் விசில் ஒலிக்க நடிகர் திலகமும் பிரபு அவர்களும் இணைந்து நடந்து வரும் காட்சியின் பின்னணியில் நிறைய பார்வையாளர்களைக் காட்டுவார்கள். அவர்களில் அடியேனும் இருக்கிறேன் என்பதையும் மகிழ்வுடன் கூற விரும்புகிறேன்.

    தங்கள் அனைவருக்காவும் கதைக்களத்தில் இடம் பெறும் அப்பாடல் காட்சி இங்கே பார்வைக்காக
    அன்புடன்
    ராகவேந்திரன்

    கதைக்களப் பாடல்களில் நடிகர் திலகம் – 04



    பாடல் வரிகள்

    எஸ்.பி.பாலா - உன்னைத்தான் கும்பிட்டேன்
    உன்னையே நம்பிட்டேன்
    நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு
    என்னைப் போல் உன்னைத்தான்
    ரொம்பப் பேர் நம்பித்தான்
    வாழ்கின்றார் இங்கே தான் பாரு

    சௌந்தர் என்னையே நம்பி இருந்தாலென்ன
    எவருக்கும் நான் ஒரு ஏணி
    என் மேல் ஏறி உதைத்தால் கூட
    எனக்கென்ன நான் ஓர் ஞானி
    எனக்கா வாழ்கிறேன் - நான்
    பிறர்க்கே வாழ்கிறேன்

    உன்னைத் தான் கும்பிட்டேன
    உன்னையே நம்பிட்டேன்
    நான் யாரு நீ சொல்லு சாமி
    தும்பிக்கை அப்பனே
    சண்முகன் அண்ணனே
    நீ சொன்னா கேட்காது பூமி


    சரணம் 1

    பாலா - உன்னைப் போல தெய்வம் கூட
    இருக்காது அன்போடு
    உன்னை வி்ட்டு நானும் சென்றால்
    சிரிக்காது நம் வீடு

    சௌந்தர் - உனக்கே தெரியும்
    எனக்கிந்த நாடே வீடு
    உறவென்பதே நாளும்
    உழைக்கின்ற கைதான்

    எங்கே இருந்தாலும்
    எனக்கென்ன தொண்டன் தானே
    ஊர் வாழவே பாடும்
    பூந்தென்றல் நானே

    பாலா - உன்னைத் தான் கும்பிட்டேன்
    ....

    சரணம் 2

    பாலா - தவிக்கின்ற நெஞ்சையெல்லாம்
    கரை ஏற்றும் ஓடம் நீ
    தியாகத்தின் ஏட்டில் எல்லாம்
    புகழ் கூட்டும் பாடல் நீ

    சௌந்தர் - பதவி பெருமை
    இதற்கென்று வாழ்ந்தேனில்லை
    பணி செய்யவே என்னை படைத்தாளே அன்னை
    எதையும் சுமக்கும் மனம் ஒன்று
    தேவன் தந்தான்
    அதற்காகவே என்னை
    வாழ்கென்று சொன்னான்

    சௌந்தர் - உன்னைத் தான் கும்பிட்டேன்
    உன்னையே நம்பிட்டேன்
    நான் யாரு நீ சொல்லு சாமி
    தும்பிக்கை அப்பனே
    சண்முகன் அண்ணனே
    நீ சொன்னால் கேட்காது பூமி...

    பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
    Last edited by RAGHAVENDRA; 18th June 2011 at 12:44 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #235
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை KTV - யில் பார்த்துவிட்டு - ஏதாவது நாமும் என் மன ஓட்டத்தை எழுதுவோமே என்று நினைத்திருந்தேன் - ஒரு நாள் HUB -ற்கு வரவில்லை. அதற்குள் விமர்சனங்கள் எல்லாம் வந்துவிட்டது.

    நான் நினைத்திருந்த பலவற்றை திரியின் மற்ற நண்பர்கள் கூறிவிட்டாலும் (திரு முரளி, திரு.ராகவேந்திரன், திரு.பம்மலர்ர், சாரதா மேடம், திரு.பார்த்தசாரதி மற்றும் பல நண்பர்களின் சிறப்பான விமர்சன பதிவுகளுக்கிடையே) என்னுடைய சிறு பதிவாக சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

    எனக்கு பிடித்த திரைப்படங்களுள் முதலிடத்தை பிடித்தது இப்படம்.
    நாதஸ்வர வித்வான்கள் பலர் வாழ்ந்த, அக்கலையை வளர்த்த மண் தஞ்சை மாவட்டம் குறிப்பாக இப்போதைய திருவாரூர் மாவட்டத்திலிருந்து வந்தவன் நான் என்பதால் இப்படம் சிறு வயதிலிருந்தே என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்று சொல்லலாம். எங்கள் ஊர் கோவில் திருவிழாக்களில், பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் நாதஸ்வர கச்சேரிகளை கேட்டிருக்கிறேன் நாதஸ்வர வித்வான்கள் போட்டி போட்டு வாசிப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இதெல்லாம் தில்லானா மோகனம்பாள் பார்க்கும் வரைக்கும்தான். அதன்பின் நம் சிவாஜிபோல வாசிக்க யாரும இல்லை என்பது என் மனதில் பலகாலம் இருந்தது. ஒருநாள் pammalar அவர்கள் என்னிடம் எனக்கு பிடித்த ஒரு படம் குறித்து கேட்டபோதுகூட இதைத்தான் குறிப்பிட்டேன்.

    சாரதா மேடம் குறிப்பிட்டதை போல பலவீனங்களை எல்லாம் பலமாக மாற்றும் சக்தி கொண்டவர் நடிகர்திலகம் என்பதற்கு இப்படம் ஒரு Classic Example. மெயின் ரோல் பத்மினிக்கு என்றாலும் தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை சவாலாக எடுத்துக்கொண்டு அதில் வெற்றியும் காண்பவர் நடிகர்திலகம் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்தான் தில்லானா மோகனாம்பாள்.

    "தில்லானா மோகனாம்பாள் வெற்றியால் எங்கள் வாசிப்பு சிலாகிக்கப்பட்டு, எங்களை எங்கேயோ உயர்த்திவிட்டது - நடிகர்திலகம் சிவாஜியின் விரலசைப்பால் நாங்கள் உலகப்புகழ் பெற்றோம்" , என்று எம்.பி.என்.பொன்னுசாமி அவர்கள் 2003 ஆம் ஆண்டு குமுதம் ஜங்ஷன் பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இரு வருடங்களுக்கு முன்பு "சிவாஜி-ஒரு வரலாற்றின் வரலாறு" நூலிற்காக திரு.உமையாள்புரம் சிவராமன் அவர்களை சந்தித்தபோது - மிருதங்க சக்கரவர்த்தி படத்திற்குப் பிறகு ஒரு கச்சேரியை முடித்த பிறகு ஒருவர் கூறினாராம் "என்ன இருந்தாலும் உங்க வாசிப்பு சிவாஜி மிருதங்கம் வாசித்தது மாதிரி இல்லை" என்று.

    இதுதான் நடிகர்திலகத்தின் நடிப்பின் சக்தி. அதனால்தான் அவருடைய ரசிகராய் இருப்பதில் நாமெல்லாம் பெருமைகொள்கிறோம், மகிழ்கிறோம்.


    நன்றி
    Last edited by KCSHEKAR; 18th June 2011 at 12:03 PM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #236
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    The 19th Anniversary Programme of Vintage Heritage is scheduled on Sunday, 19th June, 2011, at the P.S. Senior Secondary School Campus, Mylapore, at 6.30 p.m. "Nadigar Thilagamum Naattiya Peroliyum" is the topic with focus on their films in 1950s. About 25 clippings may be analysed.

    For membership/ entry passes contact: 91 44 24728396

    Last edited by RAGHAVENDRA; 18th June 2011 at 12:04 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #237
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Santhippu

    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    இன்னொரு நிகழ்வு... இந்தப் பாடல் காட்சியில் நடுவில் பின்னணியில் விசில் ஒலிக்க நடிகர் திலகமும் பிரபு அவர்களும் இணைந்து நடந்து வரும் காட்சியின் பின்னணியில் நிறைய பார்வையாளர்களைக் காட்டுவார்கள். அவர்களில் அடியேனும் இருக்கிறேன் என்பதையும் மகிழ்வுடன் கூற விரும்புகிறேன்.


    பம்மலார் மற்றும் ராகவேந்திரன்
    Ragavendran sir,

    Santhippu is one of NT movie very much closer to my heart because this is first NT movie I have watched at Madurai Sugapriya theatre as NT fan when I was in class 7th and a silver jubilee movie at Madurai Sugapriya theatre.

    Cheers,
    Sathish

  9. #238
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    MS, nAngallAm appappO othu oodhuvOm, main nAyanam nInga dhAn vAsikkaNum, adhuvum sikkalArukE nAyanam vAsikkaRa thagudhi vERa yArukku irukku

  10. #239
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    நீதிபதி, சந்திப்பு படங்களின் ஓட்டத்திற்கிடையே சாந்தி தியேட்டர் பக்கவாட்டு சுவரில் பதிந்த படப்பட்டியல் அது பின்னாளில் கல்வெட்டு் போன்ற அமைப்பில் மாற்றப்பட்டது போன்ற செய்திகளோடு நீங்கள் சந்திப்பு படத்தில் scene ஆர்டிஸ்ட் ஆக வந்திருக்கிறீர்கள் என்ற செய்தியையும் பதிந்ததற்கு நன்றி. உங்கள் எழுத்து நடையிலிருந்தே அதை நீங்கள் எவ்வளவு ஆர்வமாக செய்திருக்கிறீர்கள் என்பது வெளிப்படுகிறது.

    நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி படப் பாடல்களின் காட்சி வடிவில் தொகுப்பு நிகழ்ச்சி வேறு ஒரு நாளில் நடத்தப்பட்டிருந்தால் நமக்கு மிகவும் வசதியாக இருந்திருக்கும்.

    அன்புடன்.

  11. #240
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,368
    Post Thanks / Like
    Happy Father's Day to all!

    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •