Page 173 of 197 FirstFirst ... 73123163171172173174175183 ... LastLast
Results 1,721 to 1,730 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #1721
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    திரு. ஆதிராம்,

    எங்கள் அனைவரின் சார்பாகவும் சகோதரர் பம்மலார் அவர்கள் உங்களுக்கு அளித்திருக்கும் பதில், எங்கள் மனநிலையை தெளிவுபடுத்தியிருக்கும் என்று நம்புகிறோம். வயல்வெளி, நான்கு காளைகள், ஒரு சிங்கம், ஒரு நரி கதையை நாங்கள் இரண்டாம் வகுப்பிலேயே படித்திருக்கிறோம்.

    சரஸ்வதியிடமே சபதம் போட்ட நாரதரின் பரம ரசிகர்களான எங்களிடமே நாரதர் வேலைக்காண்பிக்க வேண்டாம். பம்மாலாரை தூக்குவது போல, ராகவேந்தர் சார அவர்களையும், வாசுதேவன் அவர்களையும் மட்டம் தட்ட முயலும் உங்கள் குள்ளநரித்தனம் புரியாமல் இல்லை. அதை நாங்கள் அனுமதிக்கப்போவதும் இல்லை. பம்மலார் சரியாகச்சொன்னது போல, இது பலபேர் வடம் பிடித்து இழுக்கும் திருத்தேர். இதில் பதிவுகளை இடும் ஒவ்வொருவரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்.

    சில பக்கங்களுக்கு முன்னால், இங்கு பதிவுகளை அளித்த திரு.தனுசு அவர்களை குறை சொன்னீர்கள். இதெல்லாம் நல்லதுக்கில்லை. நீங்கள் யாரென்பது எங்களால் ஊகிக்க முடிகிறது. உங்கள் அபிமான நடிகரின் திரி மாதக்கணக்கில் தூங்குகிறது. போய் அதை எதாவது செய்து உசுப்ப முடியுமா என்று பாருங்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1722
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார், ராகவேந்தர், வாசுதேவன்.......

    'எங்களைப்பொறுத்தவரை நடிகர்திலகத்தின் எல்லாப்படங்களுமே கொண்டாட்டத்துக்கு உரியவையே. எனவே பாலும் பழமும், புதிய பறவை போன்ற ஓகோ என்று ஓடிய படங்களுக்கு மட்டுமல்ல, சாதாரண படங்களுக்கும் கொண்டாட்டத்தில் குறை வைக்க மாட்டோம்' என்று நிரூபிக்கும் வண்ணமாக.......

    'செந்தாமரை', 'இரத்தத்திலகம்' மற்றும் அவர் சிறப்பு வேடம் ஏற்றிருந்த 'தாவணிக்கனவுகள்' என்று அடுத்த கொண்டாட்ட வரிசையைத்துவக்கி விட்டீர்கள். வாசுதேவன் அளித்துள்ள இரத்தத்திலகம் நிழற்பட வரிசையும், பம்மலார் அளித்துள்ள செந்தாமரைக்கான பேசும்படம் சிறப்புப்பதிவும் வெகு அருமை.

    ராகவேந்தர் சார்,

    இங்கு பதியப்படும் அந்நாளைய செய்தித்தாள் விளம்பரங்கள் மற்றும் நிழற்பட வரிசையை வருங்காலத்தில் ஒரே இடத்தில் கிடைப்பதற்கான சேகரிப்பு முயற்சி சூப்பர் ஐடியா.

    அங்கு விஸிட் செய்தேன். பம்மலார் மற்றும் வாசுதேவனின் சேகரிப்புகளில் மட்டும் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்களது அபார சேமிப்புகளில் உங்கள் பெயரைக்காணோம். ஏன் இந்த அளவுக்கு மீறிய அடக்கம்?. உடனடியாக தங்கள் பெயரையும் பதிப்பிக்க வேண்டும். இது எங்கள் அன்பு வேண்டுகோள். (சில நேரங்களில் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படலாம், எனவே இது எங்கள் அன்புக்கட்டளை).

    (பம்மலார் அவர்களே, பெங்களூருவில் நடக்கவிருக்கும் 'வசந்த மாளிகை' கோலாகலத்திற்கு வாழ்த்துச்சொல்லியிருந்த தாங்கள், என் பெயரையும் சேர்த்திருந்தீர்கள். நான் இருப்பது கர்நாடக மாநிலத்திலேயே தவிர பெங்களூரில் அல்ல. ரெய்ச்சூர் மாவட்டத்திலுள்ள சிந்தனூர் என்ற நகரத்தில் ஒரு நிறுவனத்தில் இருக்கிறேன். அதனால் சென்னை, பெங்களுர் என எல்லா கொண்டாட்டங்களும் மிஸ்ஸிங்).

  4. #1723
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு கார்த்திக் சார்,
    நன்றிகள் சார். தங்களுடய தூய்மையான பாசமும்,நம்மவர்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத பாங்கும், அபரிமிதமான அன்பும் நெஞ்சை நெகிழச் செய்கின்றன.மாபெரும் ஆலமரமான இந்தத் திரியத் தாங்கும் விழுதுகளாக பெருமைப் பட்டுக் கொண்டு அனைவரும் செவ்வனே அவரவர்கள் பங்கை தங்களால் முடிந்த வரையில் ஆத்ம திருப்தியுடன் செய்து கொண்டிருக்கிறோம். பம்மலார் அவர்கள் கூறுவது போல் நடிகர் திலகத்தைப் போல சிறந்த தலைவர் வேறெந்தத் தொண்டர்களுக்கும் அமைந்ததில்லை. நம்மைப் போல சிறந்த தொண்டர்கள் வேறெந்தத் தலைவருக்கும் அமைந்ததில்லை.இதுதான் உண்மை..இதுதான் நிதர்சனம். உங்கள் அன்புக்கு என் சிரம் தாழ்த்திய நன்றி!

    மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய அன்பு ராகவேந்தர் சார் விஷயத்தில் உங்கள் அன்புக்கட்டளையை அப்படியே வழிமொழிகிறேன். தன்னடக்கத்தில் தலைசிறந்த பெருந்தகையார் அவர்.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 14th September 2011 at 05:15 PM.

  5. #1724
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    முந்தானை முடிச்சு மெகா வெற்றிக்குப்பின் 'தாவணிக்கனவுகள்' படத்தின் ஆரமப கட்ட வேலைகளில் இருந்தார் பாக்யராஜ். இதனிடையே அவரது முதல் மனைவி பிரவீனா மறைந்து விட்டதால் அவர் பூர்ணிமாவைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும், செய்யமாட்டார் என்றும் இருவேறு செய்திகள் உலா வந்துகொண்டிருந்தன.

    அந்நேரத்தில் ஒரு பொது விழாவில் கலந்துகொண்டு பேசிய பாக்யராஜ், 'நான் இப்போ இங்கே ஒரு முக்கியமான செய்தியை அறிவிக்கப்போகிறேன்' என்றதும், கூட்டத்தினர் 'பூர்ணிமா, பூர்ணிமா' என்று கத்தினார்கள். உட்னே பாக்கியராஜ், 'அதுவும் இருக்கு, ஆனா இது அதைவிட முக்கியமானது. நான் அடுத்து எடுக்கவிருக்கும் தாவணிக்கனவுகள் படத்தில் எனது பெரிய ஆசை நிறைவேறப்போகிறது. ஆம், அந்தப்படத்தில் நடிகர்திலகம் சிவாஜி சார் நடிக்கப்போகிறார்' என்று பாக்யராஜ் சொன்னதும், அரங்கமே அதிரும் வண்ணம் கைதட்டல் எழுந்தது.

  6. #1725
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Friends, Please Click the links below to view the Invitation of Nadigarthilagam's 84th Birthday function to be held at Trichy on 2nd October 2011

    http://4.bp.blogspot.com/-TVcWkucgRQ...e+1%281%29.jpg

    http://4.bp.blogspot.com/-XzhrISr6ER...e+2%282%29.jpg

    With best regards,
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #1726
    Senior Member Regular Hubber kumareshanprabhu's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    thank you raghavendra sir for ur imagination for natraj

  8. #1727
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,
    ரத்த திலகம் திரைக்காவியத்தின் ஒத்தெல்லோ நாடகத்தை பதிவிட்டு நடிகர் திலகத்தின் ரசிகர் திலகமாகி விட்டீர்கள். பாராட்டுக்கள். அதே போல் பல்வேறு பாவனைகளில் நடிகர் திலகத்தின் தோற்றங்கள், தாவணிக் கனவுகள் ஸ்டில்கள், என சூப்பரோ சூப்பர் அமர்க்களப் படுத்தியுள்ளீர்கள். நன்றிகளும் பாராட்டுக்களும்.

    டியர் கார்த்திக்,
    தங்களுடைய உள்ளன்பு மிக்க வார்த்தைகள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து வரும் வண்ணம் உள்ளன. நன்றிகள் பல.
    தாங்கள் கூறியது போல் அந்தந்த மாத நினைவூட்டல் நெஞ்சிருக்கும் வரை தலைப்பில், விரும்பிய நேரத்தில் பார்க்கும் வண்ணம் அமைக்கப் பட்டது நம் அனைவரின் வசதிக்காகவும் தான். எனவே தங்களைப் போன்ற அனைத்து நண்பர்களுக்கும் அது சௌகரியமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியதாக இருக்கும். நண்பர்கள் வாசுதேவன், பம்மலார் மற்றும் அவர்களைப் போன்று எவருடைய படைப்பைப் பயன் படுத்தினாலும் அதனை அங்கே அங்கீகரிப்பது நமது கடமையல்லவா.

    அதே போல் நம்முடைய இணைய தளம் சார்பாக இடப் படும் இணைப்புகளுக்கு தனியாக குறிப்பிடுதல் தேவையல்லவே. எனவே தான் அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளது.
    தங்களுடைய அன்பிற்கு நான் என்றென்றும் நன்றி கூறுவதில் தயங்க மாட்டேன்.

    டியர் சந்திர சேகர்,
    நடிகர் திலகத்தின் புகழ் பாடும் தங்கள் முயற்சிகளுக்கு அடியேனுடைய வாழ்த்துக்கள் என்றுமே உண்டு (தங்களுடைய அணுகுமுறையில் நான் வேறுபட்டாலும்).

    டியர் குமரேஷ்,
    தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1728
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு சகோதரி சக்தி பிரபா மற்றும் ராஜேஷ்,
    தங்களுடைய வரவு மிகுந்த மன நிறைவையூட்டுகிறது. என்றாலும் எப்போதாவது தோன்றி விட்டு நீண்ட இடைவெளி விடுவது ஏமாற்றமாயுள்ளது. தங்களுடைய பதிவுகளை எதிர்நோக்கும் பலரில் நானும் ஒருவன். எனவே அடிக்கடி தாங்கள் தங்களுடைய கருத்துக்களைப் பகிரந்து கொள்ள வேண்டும் என்பது அடியேனுடைய தாழ்மையான வேண்டுகோள்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1729
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இரு மேதைகள் திரைக்காவியத்தில் நடிகர் திலகமும் இளைய திலகமும் தோன்றும் காட்சி



    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1730
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்

    தேசிய திலகத்தின் "இரத்தத்திலகம்"

    [14.9.1963 - 14.9.2011] : 49வது உதயதினம்

    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

    காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஜூலை 1963








    தொடரும்...

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •