Page 158 of 197 FirstFirst ... 58108148156157158159160168 ... LastLast
Results 1,571 to 1,580 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #1571
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

    தங்கள் அன்பு உள்ளத்திற்கு பணிவான நன்றிகள்.'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' பாடல் உருவான கதையை மறுபடியும் அனுபவித்து படித்து மகிழ்ந்தேன். டி.எம்.எஸ்.எந்த மன,உடல் நிலைகளில் பாடினாலும் நம்மவர் அதை அப்படியே 100% பிரதிபலித்து விடுவார் என்ற பீம்சிங்கின் அசாத்தியமான நம்பிக்கை தான் பல்வேறு அற்புதமான பாடல்களை நமக்களித்தது.
    அதிலும் டி.எம்.எஸ்.பாவமன்னிப்பில் பாடும் அந்த 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்' பாடலில் 'காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே' என்று ஆரம்பப் பல்லவியை அவர் அற்புதமாகத் துவங்குவதும் ,தொடரும் சீரான சரணங்களில் அவர் புரியும் ஏற்ற இறக்க குரல் பாவங்களும், அதை முழுவதுமாக உள்வாங்கி உன்னத உணர்ச்சிகளின் பிரதிபலிப்பால் நம்மவர் மற்றவர் கண்களைக் குளமாக்குவதும், பாடலின் பின்னணி இசையில் மனதைப் பிசைந்தெடுக்கும் இனம் புரியாத சோகம் குடி கொண்டு நம்மை பிழிந்து எடுப்பதையும் எப்படி மறக்க முடியும்? பீம்சிங் பீம்சிங் தான்....

    நன்றியுடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 10th September 2011 at 08:21 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1572
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,
    01.10.2011 அன்று நடைபெற உள்ள நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவின் அழைப்பிதழை அருமையாகப் பதிவிட்டு அசத்தி விடீர்கள். நன்றி.

  4. #1573
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் பம்மலார் சார்,

    இயக்குனர் பீம்சிங்கின் நேரடி 'திக்' தியேட்டர் விஜயம் விவரங்களையும்,ஸ்டில்-களையும் அளித்து அமர்க்களப் படுத்தி விட்டீர்கள்.
    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா! கிருஷ்ணா!
    கேட்காமல் கொடுப்பவரே எங்கள் பம்மலாரே! பம்மலாரே!

    அன்புடன்,
    வாசுதேவன்.

  5. #1574
    Senior Member Regular Hubber kumareshanprabhu's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    Dear Ragahvendra , pammalar, murali, vasudevan sir

    i request you all to help me out in giving NT standing stills and different photos of our NT, This is required for us to put huge banners for Vasantha malaigai movie which is going to be released in Bangalore, we would be great ful.
    please help us

    regards
    kumar

  6. #1575
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    பம்மலார் அவர்கள் அளித்த பீம்சிங் பற்றிய பேசும்படம் கட்டுரை அருமை. அந்தக் காலத்தில் இயக்குனர்கள் எவ்வாறு ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதை இப்போதைய இயக்குனர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #1576
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளி,

    என்ன ஒரு சர்ப்ரைஸ்...... சிறிது நீண்ட இடைவெளிக்குப்பின்னர் உங்கள் எழுத்தோவியம் கண்டு மனம் குதூகலிக்கிறது. உங்களுக்கே உரிய அழகு நடையில், அண்ணனின் 'பாலும் பழமும்' திரைக்காவியத்தை அலசியிருக்கும் பாங்கே தனி. குறிப்பாக அவரது ஸ்டைல் வெளிப்படும் இடங்கள் பற்றிய சிறப்பு குறிப்பீடுகள்.

    'காதல் சிறகை காற்றினில் விரித்து' பாடலைப்பற்றி ஒரு மினி ஆய்வு நடத்தியிருக்கிறீர்கள். மூன்றாவது சரணம் முடிவில் வரும் இசையரசி சுசீலாவின் அந்த Humming எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அவர் பாடுவதற்கு முன்பாக அதே Humming-ஐ இரண்டாவது சரணம் முடிவில் புல்லாங்குழல் இசையில் தந்திருப்பார்கள் மெல்லிசை மன்னர்கள்.

    அந்தப்பாடலில் இன்னொரு விசேஷம், அதில் சம்மந்தப்பட்ட மூவரின் மீதும் நமக்கு பரிதாபமே வரும். அவசரப்பட்டு கணவனைப்பிரிந்து வெகுதூர்ம வந்துவிட்டோமே என்று தவிக்கும் சாந்தி (சரோஜா தேவி), இரண்டாவது மனைவி கட்டில்ல் காத்திருக்க, முதல் மனைவியின் நினைவுகளால் உந்தப்பட்டு தவிப்புடன் கட்டிலைச்சுற்றிச்சுற்றி நடந்து இறுதியில் சுழல் நாற்காலியில் கண்ணயரும் டாக்டர் ரவி (நடிகர்திலகம்), கணவனை எதிர்பார்த்துக் காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடன் கட்டிலில் உறங்கிவிடும் நளினி (சௌகார்), எதிரும் புதிருமாக திரும்பிக்கொண்டிருக்கும் பொம்மைகளில் கேமராவைக்கொண்டு போய் நிறுத்தும் பீம்சிங். என்ன ஒரு படைப்பு இப்படம்.

    முரளியண்ணா, உங்கள் கணிணிப்பிரச்சினை தீர்ந்து விட்டது என்று நினைக்கிறேன். இனி எங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்கள் அற்புதப்பதிவுகளை அள்ளித்தாருங்கள். காத்திருக்கிறோம்.

  8. #1577
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,

    இயக்குனர் பீம்சிங்கின் சாந்தி திரையரங்க விஜயம் பற்றிய கட்டுரையை அப்படியே பதிப்பித்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. காரணம், அந்த குறிப்பிட்ட 'பேசும் படம்' இதழ் என் மனதுக்கு மிக மிக நெருக்கமானது. என் தந்தை பல்லாண்டுகள் பத்திரமாக வைத்திருந்தவற்றுள் அதுவும் ஒன்று. அதை என் சிறு வயதில் ஐம்பது தடவைக்கு மேல் திருப்பித்திருப்பிப் படித்திருக்கிறேன். முன்பக்க உள் அட்டையில் 'கப்பலோட்டிய தமிழன்' விளம்பரமும் பின் அட்டையில் 'பங்காளிகள்' பட விளம்பரமும் இடம் பெற்றிருக்கும். உட்பகுதிகளில் கப்பலோட்டிய தமிழன், மற்றும் மருதநாட்டு வீரன் படங்களின் ஏராளமான ஸ்பெஷல் ஸ்டில்கள், ஜெமினியின் 'பனித்திரை' பட ஸ்டில்கள், குமாரி சச்சு பற்றிய சிறப்புக்கட்டுரை, குமுதம் படத்தில் வரும் 'நில் அங்கே' பாடல் பற்றிய பதிவு என அமர்க்களமான இதழ் அது.

    'பாலும் பழமும்' உதய தினத்தையொட்டி, பீம்சிங் சாந்தி தியேட்டரில் நேரில் ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்த அனுபவம் பற்றிய அந்த அற்புதக் கட்டுரை இங்கு இடம்பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நேற்றுக்கூட நினைத்தேன். கூடவே ஒரு எண்ணம், என் தம்பி பம்மலார் என்கிற பம்மல் சுவாமி இருக்கிறார். அந்தக் கட்டுரையை எந்த உலகத்தில் இருந்தாலும் தேடிக்கொணர்ந்து இங்கு பதித்து விடுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. அது பலித்து விட்டது. பம்மலாரா கொக்கா...?.

    அந்தக்குறிப்பிட்ட ஸ்டாம்ப் காட்சி வெட்டு பற்றிக்கூட அந்த இதழின் கேள்வி பதிலில் கூட இடம் பெற்றிருந்தது.

    கேள்வி: 'பாலும் பழமும் படத்தில் சிவாஜிக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பார்சலில் இந்திய ஸ்டாம்ப் ஒட்டப்பட்டுள்ளதாக காண்பிக்கப்படுகிறதே?'

    பதில்: 'சாந்தி தியேட்டரில் டைரக்டர் பீம்சிங்கிடம் ரசிகர்கள் நேரடியாக இந்தக்குறையைச் சுட்டிக்காட்ட, அவர் அப்போதே அக்காட்சியை வெட்டி விட்டார். வெளியூர்களில் அந்த வெட்டு வேலை நடக்கவில்லையென்று தெரிகிறது'.

    (டாக்டர் ரவி பார்சலைப்பிரிக்கும்போது, பார்சலை குளோசப்பில் காண்பிக்கும்போது தெரியும். நெகடிவில் அக்காட்சியை வெட்டாததால் இன்று வரை சி.டி.க்களில் அந்தக்குறை தெரிகிறது)

    'பாலும் பழமும்' திரைக்காவியத்தின் உதயத்தை அற்புதமாக நிறைவு செய்த உங்களுக்கு காலம் முழுதும் பாராட்டுக்கள்.

    (கூடவே, 'ஒரே ஆண்டில் மூன்று வெள்ளிவிழாப்படங்கள்' என்ற அற்புத சாதனை நிகழவிடாமல் சதி செய்தவர்களுக்கு (எதிர் அணியினர் அல்ல, நம்மவர்கள்தான்) காலம் முழுதும் வசவுகள்).

  9. #1578
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,

    தங்கள் வாழ்த்துதல்களுக்கும் அன்பிற்கும் நன்றிகள் சார். சில நாட்களுக்குப் பிறகு தங்கள் பதிவு. அருமை. மிக அருமையாக நடிகர் திலகத்தின் (பாலும் பழமும்) அசைவுகளை அற்புதமாக அலசி உள்ளீர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்னமேயே மனைவியை 'டா' போட்டு இன்றைய தலைமுறைக்கு வழி காட்டியவர் என்றால் அதே போல் பல விஷயங்களுக்கும் முன்னுதாரணம் அவர்தான்.
    'ராஜா' திரைப் படத்தில் ஒரு அருமையான சண்டைக்காட்சி. பணத்தை எடுத்துக் கொண்டு தன் காதலியுடன் ஓடி ஒரு பங்களாவுக்குள் ஒளிந்திருக்கும் வில்லனை பாலாஜியும்,நடிகர் திலகமும் கண்டு பிடித்து விடுவார்கள். முதலில் பாலாஜி அந்த வில்லனிடம் சண்டையிட்டு தோற்றுப் போவார். பின் நடிகர் திலகம் வில்லனிடம் சண்டையிட வருவார். முதலில் வில்லனை ஒரு அடி அடித்துவிட்டு குறுக்கே நிற்கும் வில்லனின் காதலியிடம் (பத்மா கண்ணா) படு ஸ்டைலாக "Escuse me Mam" என்றபடி தன் வலது உள்ளங்கையை மடக்கி, மோதிர விரலில் படும்படியாக வாயால் சிறிது காற்றை ஊதி பின் லேசாக கையை முத்தமிடுவது போன்ற பாவனையோடு களத்தில் இறங்குவார்.

    அந்த சூப்பர் சண்டைக் காட்சியின் குறிப்பிட்ட ஸ்டில்.



    1972-லேயே 'மேடம்' என்ற வார்த்தையை ""மேம்" என்று ஸ்டைலாக உச்சரித்த அந்த ஸ்டைல் சக்கரவர்த்தியை என்னவென்று சொல்வது!

    அன்புடன்
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 10th September 2011 at 01:26 PM.

  10. #1579
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    DEAR KUMARESAN SIR,
    Please give me your email id so that I can mail you some photos which I have in my computer(ofcourse those were downloaded from this thread only)
    Last edited by HARISH2619; 10th September 2011 at 01:18 PM.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  11. #1580
    Senior Member Devoted Hubber
    Join Date
    Jun 2007
    Location
    Chennai
    Posts
    287
    Post Thanks / Like
    The highlight of the lyric is the word "Parambarai Naanam". These two words speak volumes about the family background, traditional values and the moral ethics of the lady.

    There can be only one Kannadaasan, only one MSV, only one TMS and only one NT.





    Quote Originally Posted by Murali Srinivas View Post
    டாக்டர் ரவியை அவரது பல்வேறு முகபாவங்களை உணர்வுகளை இங்கே பதிந்ததற்கு வாசுதேவன் சாருக்கு நன்றி. ராகவேந்தர் சாருக்கு நன்றி. நான் பொதுவாக சுவாமிக்கு நன்றி கூறுவதில்லை. காரணம் அதையேதான் தினசரி செய்து கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்ல சுவாமியுடன் அன்றாடம் உரையாடுபவன் என்ற முறையில் what Swami is capable of என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில நேரங்களில் எனது கணிப்பையும் மீறி சுவாமி சில ஆச்சரியங்களை அளிப்பார். அப்படிப்பட்ட ஒன்றுதான் பேசும்படம் பீம்சிங் பேட்டி அழகான நேர்முக வர்ணனையோடு இன்றைக்கு மிக சரியாக 50 வருடங்களுக்கு முன் இதே நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காணும் போது மனதில் ஒரு nostalgic feeling. நன்றி சுவாமி!

    பாலும் பழமும் படத்திற்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வருடம் வெளியான மூன்று பா வரிசை படங்களில் பாலும் பழமும் படமும் சரி, நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பும் சரி class என்று சொல்வோமே அந்த வகையில் அமைந்திருக்கும். அவரது நடிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தால் முதலில் மருத்துவமனையில் நடந்து வரும் ஸ்டைல், நர்ஸ் சாந்தியின் அறிவு, அவரது தொழில் பக்தியை கவனிப்பது, அவர் மேல் உண்டாகும் பரிவு, ஒரு நாள் கிளம்புவதற்கு நேரமாகிவிட, shall I drop you, if you dont mind? என்று கேள்வி கேட்கும் நேர்த்தி, நான் பேச நினைப்பதெல்லாம் பாடலில் வெறும் ஹம்மிங்கிலேயே அசத்துவது, அதிலும் குறிப்பாக இரண்டாவது சரணத்தில் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே! உயிர் சேர்ந்த பின்னே என்ற வரியை சரோஜாதேவி பாடியவுடன் ஊஹுகும் என்ற ஹம்மிங்க்கு வாயசைத்தவாறே அந்த இடது புருவத்தை மட்டும் ஏற்றி இறக்குவாரே, ஆஹா!, அது மட்டுமா?

    அது போல மாலையில் சீக்கிரம் வருகிறேன் என்று மனைவியிடம் சொல்லும்போது மனைவியை டா போட்டு பேசுவார். இன்றைக்கு பெண்களை பார்த்து ஆண்கள் மிகவும் common ஆக உபயோகிக்கும் இந்த வார்த்தையை 50 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்து வைத்தவர் நடிகர் திலகம். சோகத்தின் கனம் முகத்தில் தெரிய மனைவியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டே பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்று பாடும் அந்த பாவம் [13 வருடங்களுக்கு பின்னால் அதே போல் ஒரு காட்சியமைப்பு என்றாலும் கூட சுமைதாங்கி சாய்ந்தால் பாடலில் சோகத்திலும் ஒரு கம்பீரத்தை காட்டி அந்த மாறுபாட்டை வெளிப்படுத்துவார். என்ன இருந்தாலும் அது எஸ்.பி. சௌத்ரி அல்லவா!]. படத்தின் உயிர்நாடியான பாடலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அந்த மலை பாதையில் அந்த நடை! அந்த முகம்!

    கண் பாதிக்கப்பட்டு முடிந்து கட்டோடு படுத்திருக்க அப்போது நர்சாக சேரும் சரோஜாதேவியின் குரல் கேட்டு சாந்தி என்று எழுந்திருப்பாரே! எப்படி அதை வர்ணிப்பது? அந்த நேரத்தில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது இரண்டு கால்களுக்கு நடுவில் காமிரா கோணம் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கும் அழகை என்னவென்று சொல்வது?என்னை யாரென்று பாடல் மட்டும் குறைந்ததா என்ன? சரோஜாதேவி கையைப் பிடித்துக் கொள்ள வேகமாக நடக்கும் அந்த நடை! இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    படத்தில் போனால் போகட்டும் போடா பாடலின் அதே உயரத்திற்கு வரும் ஒரு பாடல் இருக்கிறது. காதல் சிறகை காற்றினில் விரித்து பாடல். மன்னர்கள், கவியரசர், இசையரசி மூவர் கூட்டணி அந்த பாடலை எங்கேயோ கொண்டு போய் விடுவார்கள்.

    முதல் நாள் காணும் திருமணப் பெண் போல்
    முகத்தை மறைத்தல் வேண்டுமா
    முறையுடன் மணந்த கணவன் முன்னால்
    பரம்பரை நாணம் போகுமா


    என்ற வரிகளும் சரி அதற்கு பிறகு வரும்

    பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
    அழுதால் கொஞ்சம் நிம்மதி
    பேச மறந்து சிலையாய் நின்றால்
    பேச மறந்து சிலையாய் நின்றால்
    அதுதான் தெய்வத்தின் சன்னதி
    அதுதான் காதல் சன்னதி


    என்று சுசிலா பாடும் போது அதிலும் குறிப்பாக காதல் சன்னதி என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் இருக்கிறதே காதலிக்காதவர்களை கூட காதலின் பால் ஈர்த்துவிடும்! அந்த வரி முடிந்தவுடன் ஒரு ஹம்மிங் வரும் அதை சுசிலா பாடியிருப்பதை கேட்கும் போது இதை விட இனிமை வேறு உண்டா என்று தோன்றும். இந்த இடத்தை குறிப்பிட்டு வைரமுத்து சொல்வார். அந்த ஹம்மிங்கை கேட்கும் போதெல்லாம் என் உயிர் கூட்டை விட்டு பறந்து போய் விட்டு ஹம்மிங் முடிந்தவுடன் மீண்டும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும் என்பார்.

    தினசரி அருந்தினாலும் உட்கொண்டாலும் எப்படி பாலும் பழமும் நமக்கு அலுப்பதில்லையோ அது போலதான் பாலும் பழமும் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அதை பற்றி பேசினாலும் நமக்கு அலுப்பதில்லை.

    அன்புடன்
    Yours truly

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •