Page 112 of 197 FirstFirst ... 1262102110111112113114122162 ... LastLast
Results 1,111 to 1,120 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #1111
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள வாசுதேவன் சார், பார்த்தசாரதி சார் மற்றும் ராகவேந்தர் சார்....

    'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நீங்கள் குறிப்பிடும் காட்சி பற்றி, சாரதா அவர்கள் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் இடம் இதோ.....

    ""// ......படத்தில் இரண்டு முறை வரும் ' அம்மாடீ.... பொண்ணுக்குத் தங்க மனசு' பாடல் அப்போது (இப்போதும்) SUPER HIT.. அதிலும் இரண்டாவது பாடலைவிட, முதலில் அப்பாவி ராமு பாடும் பாடல், மெட்டு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரொம்பவே பாப்புலர். இந்தப்பாடலுக்கு முன்னால், கே.ஆர்.விஜயாவும் தோழிகளும் வருமுன்னர் கூட்டாளிகளோடு 'கொலை கொலையா முந்திரிக்கா' விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர்திலகத்தைக்காட்டி, ‘இவர்தாம்பா வீரபாண்டிய கட்டபொம்மனிலும், பாசமலரிலும் நடித்தவர். இவ்வளவு ஏன், இதற்கு முந்தைய படமான வியட்நாம் வீட்டில் பிரிஸ்டீஜ் பத்மனாபனாக நடித்தவர்தான்யா இதோ ‘கொலை கொலையா முந்திரிக்கா’ விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என்றால் யாராவது நம்புவார்கள் என்கிறீர்களா?. ஆம், எங்கள் அண்ணன் நடிப்பின் எல்லா நீள, அகல, உயர, ஆழங்களையும் அளந்து முடித்தவர் என்று மார்தட்டிச்சொல்வோம்.

    சில ஆண்டுகளுக்குப்பிறகு அதே லொக்கேஷனில், தனித்தவராக ஏமாற்றத்தின் விளிம்பில் நின்று அவர் பாடும்... 'அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு... தங்க மனசு... தங்க மனசு...' அடுத்த வரி பாட முடியாமல், அண்ணாந்து பார்க்க, அங்கே எரிந்துகொண்டிருக்கும் டியூப் லைட், கிராமம் ரொம்ப மாறிவிட்டது என்பதற்கு அடையாளம் காட்டும்.

    எந்த தேவகி என்ற மந்திரச்சொல் தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றி அமைத்ததோ அந்த தேவகியை சந்திக்கப்போகிறோம் என்ற உற்சாகத்துடன் ரயிலில் வந்துகொண்டிருக்கும் ராமுவுக்கு, முந்தைய ஸ்டேஷனிலேயே தன்னை வரவேற்க வந்து நிற்கும் தேவகியுடன், ரயிலில் பயணிக்கும்போது தேவகி (கே.ஆர்.விஜயா) பாடுவதாக வரும், 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்' பாடல் மெல்லிசை மன்னரின் அபார திறமைக்கு எடுத்துக்காட்டு. 'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் முத்துரதங்கள் ஊர்வலம் போகும்' என்பது ஒரு மெட்டு, 'தேரில் வந்த ராஜராஜன் என்பக்கம்' இன்னொரு மெட்டு, சரணத்தில் 'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்பது இன்னொரு மெட்டு... இந்த வாமனர், தன் மூன்று காலடிகளில் இசையுலகையே அளந்து முடித்து விட்டார் என்றால் அது மிகையா?. இல்லவே இல்லை. இப்பாடலுக்கு பக்க வாத்தியமாக வரும் ரயிலின் தாலாட்டு, அது பக்க வாத்தியமல்ல 'பக்கா' வாத்தியம். அக்கால நீராவி எஞ்சினின் விசில் சத்தமாகக்காட்டி அதையே, ஸ்ருதி மாறும்போது ராமு என்கிற விஜயகுமார், புல்லாங்குழல் வாசிப்பதாகக்காட்டுவது மெல்லிசை மன்னரின் கம்போஸிங்கை இயக்குனர் பி.மாதவன் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். பாடலும் தேவகியும் கனவு என்று அறியும்போதும், அதை மாஸ்டர் பிரபாகர் கிண்டல் செய்யும்போதும் அவர் முகத்தில் தோன்றும் நாணம்.

    இந்தப்பாடல் முடிந்து ஸ்டேஷனில் வந்திறங்கும்போது, ஃபுல் சூட்டும் கண்களில் குளிர்க்கண்ணாடியுமாக, ரயில் பெட்டியின் வாசலில் தோன்றும்போது ரசிகர்களின் கைதட்டல் காதைக்கிழிக்கும். (வரவேற்கும் பேண்டு வாத்தியத்தில் 'செல்லக்கிளிகளாம் பள்ளியிலே' பாடல்) இதே உடையுடனும், மைனர் அணிவிக்கும் ஆளுயர மாலையுடனும் அவர் நிற்கும் போஸ்தான் படத்தின் முழுப்பக்க விளம்பரம். .........//""

    'ராமன் எத்தனை ராமனடி'பற்றிய சாரதாவின் முழு ஆய்வுக்கட்டுரையும் படிக்க, இங்கே சொடுக்கவும்....

    http://www.mayyam.com/talk/showthrea...890#post427890
    அன்புள்ள திரு. கார்த்திக் அவர்களே,

    ராமன் எத்தனை ராமனடி படத்தைப் பற்றிய சாரதா மேடம் அவர்களின் ஆய்வுக்கட்டுரையைப் படித்து அணு அணுவாகப் படித்து ரசித்த எண்ணற்ற ரசிகர்களில் நானும் ஒருவன்.
    இந்தப் படம் மட்டுமல்லாது இன்னும் பல படங்களைப் பற்றியும் அதில் அவரது நடிப்பைப் பற்றியும், அவர்களும், திரு. முரளி போன்ற நண்பர்களும் எழுதிய கட்டுரைகளைப் படித்து இன்புற்றேன்.
    சரி, பல வருடங்களுக்கு முன்னரே நாம் எழுதிக் காணாமல் போன கட்டுரைகளை நம்முடைய பார்வையிலிருந்து தருவோம் என்று இறங்கினேன்.
    அதனால் தான், ஏற்கனவே எழுதப் பட்ட பல படங்களைப் பற்றி என்னுடைய பார்வையிலிருந்து நான் எழுதும்போது, அந்தந்தப் படங்களின் கதை மற்றும் பிற தகவலைப் பற்றி எழுதாமல், முழுக்க முழுக்க நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன்.

    எப்படி நடிகர் திலகம் எவ்வளவு முடியுமோ அத்தனை நடிப்பு ரசங்களையும் நடித்து/வடித்து, பின்னாளில் வரும் கலைஞர்களுக்குக் கொஞ்சமே கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுத்தாரோ, அதைப் போல, சாரதா மேடம் மற்றும் திரு. முரளி மற்றும் பல நண்பர்கள் நடிகர் திலகத்தின் படங்களையும் அதில் அவரது வெவ்வேறு பரிமாணங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக அலசி, வடித்து விட்டனர்.

    இருப்பினும், இந்தப் புவி உள்ளளவும், புதிது புதிதாக எண்ணற்ற ரசிகர்கள் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள், அவர்களும் முந்தைய யாரும் கண்டிராத நடிகர் திலகத்தின் ஆற்றலைத் தாங்கிய புதுப்புது விஷயங்களைத் தங்கள் பார்வையிலிருந்து கொடுத்துக் கொண்டே தான் இருக்கப் போகிறார்கள். அது தான் இந்த யுகக் கலைஞனின் தனிச்சிறப்பு.

    ரசனை தொடரும்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 19th August 2011 at 05:41 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1112
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு நண்பர்களே,

    நம் யாவராலும் மறக்க முடியாத ,மறக்க இயலாத நெஞ்சமெல்லாம் நிறைத்திருக்கும் அம்மாடி..பொண்ணுக்குத் தங்க மனசு...தங்க மனசு...தங்க மனசு... அற்புதப் பாடல் காட்சியினை மறுபடியும் கண்டு மகிழ இதோ....





    அன்புடன்,

    நெய்வேலி வாசுதேவன்.

  4. #1113
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    தினகரன்.காம்மில் வெளியான கட்டுரை

    நட்பின் இலக்கணம் சிவாஜி

    பதிவு செய்த நாள் 8/18/2011 17:10:12


    சிவாஜிக்கும் பாலாஜிக்கும் இருந்த நட்பு ரொம்ப ஆழமானது. நடிகர்கள் என்ற ரேஞ்சில் தொடங்கிய நட்பு, நடிகர், தயாரிப்பாளர் என்ற நிலையிலும் தொடர்ந்தது.

    சிவாஜியை வைத்து பல படங்களை பாலாஜி தயாரித்திருக்கிறார். கதை, சம்பளம் எல்லாமே சிவாஜிக்கு இரண்டாம்பட்சம்தான். நண்பர் பாலாஜி கேட்டுவிட்டால்,

    உடனே கால்ஷீட் தருவார். கதைகளை தேர்வு செய்வதில் பாலாஜியும் சிறந்து விளங்கினார். அதனால்தான் அவர் பல காலம் சினிமாவில் ராஜ்ஜியம் செய்ய

    முடிந்தது. ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் ‘என் தம்பி’ படத்தை ச¤வாஜியை நடிக்க வைத்து தயாரித்தார்.
    கே.ஆர்.விஜயா, நாகேஷுடன் பாலாஜியும் நடித்திருந்தார்.

    ஏ.பி.என்.னின் புராண படங்களின் வரிசையில் இடம்பெற்ற மற்றொரு படம் ‘திருமால் பெருமை’. வசனம் எழுதி ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந¢தார்.

    ஏபிஎன், சிவாஜி கூட்டணியாக இருந்தும் இந்த படம் சரியாக போகவில்லை[/b]. [/color]



    திரு. முரளி ஸ்ரீநிவாஸ் எழுதிய சிவாஜின் சாதனை சிகரங்களில் , திருமால் பெருமை 75 நாட்கள் கடந்து ஓடிய படம் என்று எழுதிருந்தார். இப்படம் ஒரு தோல்வி படம் இல்லை என்று நினைகிறேன்.

    பம்மாலர், ராகவேந்திரா தெளிவு படுத்தவும்.

  5. #1114
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பாலா சார்,

    'திருமால் பெருமை' சரியாகப்போகவில்லை என்று தினகரன் எழுதியதை, அதை தோல்விப்படம் என்று சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

    பொதுவாக நடிகர்திலகம் - ஏ.பி.நாகராஜன் கூட்டணியின் வெற்றிகளை எடைபோடும் பலரும் அவர்களது நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், தில்லானா மோகனாம்பாள் ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களை அளவுகோலாகக்கொண்டு அளப்பது வழக்கம்.

    அந்த அளவை எட்டாத படங்கள் சிலவற்றை 'சரியாகப்போகவில்லை' என்று சொல்வார்கள். அந்த வகையில் 'திருமால் பெருமை'யைப் பற்றி அப்படி எழுதியிருக்கக்கூடும்.

    குற்றவாளி ஏ.பி.என்.தான். கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் சகட்டு மேனிக்கு வரிசையாக புராணப்படங்களை எடுத்துத்தள்ளினார். அதனால் ஒன்றை விட ஒன்று வெற்றியில் குறைந்து கொண்டே போனது. பாருங்கள்......

    'திருவிளையாடல்'போன அளவுக்கு 'சரஸ்வதி சபதம்' போகவில்லை

    'சரஸ்வதி சபதம்' போன அளவுக்கு 'கந்தன் கருணை' போகவில்லை

    'கந்தன் கருணை' போன அளவுக்கு 'திருவருட்செல்வர்'போகவில்லை

    'திருவருட்செல்வர்' போன அளவுக்கு 'திருமால் பெருமை' போகவில்லை

    நல்லவேளையாக பாதையை மாற்றி 'தில்லானா மோகனாம்பாள்' எடுத்தார். இக்கூட்டணி மீண்டும் மாபெரும் வெற்றியை சுவைத்தது.

  6. #1115
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,

    ஏ. பி. என் அவர்களின் படங்கள் எப்படிப் போயின என்று அற்புதமாக எழுதி உள்ளீர்கள். முற்றிலும் உண்மை. மெகா ஹிட்டான'திருவிளையாடல்' மக்கள் மனதில் வெகு ஆழமாகப் படிந்து விட்டதால் வந்த கோளாறு தான் மற்ற படங்கள் சுமாராகப் போனதற்குக் காரணம். இன்னொரு காரணமும் உண்டு. திருவிளையாடல் பக்தியுடன் சேர்த்து வெகு ஜனரஞ்சகம். 'கல கல' என நகரும். ஆனால் திருவருட்செல்வர் அப்படி இல்லை. 'அப்பராக' அபார நடிப்புத்திறமையில் அசத்தியும் கூட சுமாராகப் போனதற்குக் காரணம் கிளாசிக்-ஆக அமைந்துவிட்டதோடல்லாமல் வெகுஜன ரசனைக்கேற்ப காட்சிகள் 'கல கல' வென நகராதது தான் என்று நான் நினைக்கிறேன்.

    கந்தன் கருணையிலோ இவர் வரும் நேரம் குறைவு. இவர் வராத காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்தும். 'First is the best' என்பது இதிலும் உண்மையாகி விட்டது. கமர்ஷியல் கலவைகள் குறைந்ததனாலோ என்னவோ திருமால் பெருமையும், திருவருட்செல்வரும் அற்புதமான நடிப்பு இருந்தும் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லையோ?.....என்று எண்ணத் தோன்றுகிறது.

    எப்படியிருந்தாலும் அந்த அப்பரின் அசத்தலால் பின்னாட்களில் நன்றாகத் தான் திருவருட்செல்வர் போனது. (கப்பலோட்டிய தமிழன், பழநி போல)

    அன்புடன்,

    நெய்வேலி வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 20th August 2011 at 07:06 AM.

  7. #1116
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தைப் பற்றி ஒரு தவறான குறிப்பு வெளியானதும் இங்கே நமது திரியிலும் வெளியிலும் அதற்கு ஏற்பட்ட எதிர்ப்பின் வீர்யத்தை தங்களுக்கு வந்த மின்னஞ்சல்களின் மூலமாக பார்த்தவுடன் தவறு செய்தவர்களுக்கு தாங்கள் செய்தது எத்தனை பெரிய வரலாற்று பிழை என்பது புரிந்திருக்கும். தெரிந்தோ தெரியாமலோ நடந்த இந்த தவறுக்கு நமது கண்டனத்தையும் வருத்தத்தையும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் கவனத்திற்கு சில முக்கிய நபர்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. தங்கள் தவறை அவர்கள் உணர்வார்கள் என நம்புவோம்.

    அன்புடன்

  8. #1117
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சாரதியும் வாசுதேவன் சாரும் ராமன் எத்தனை ராமனடி படத்தை அதிலும் விஜயகுமாராக அவர் கிராமத்திற்கு வந்து ஒரு கலக்கு கலக்குவதை ஒரு அலசு அலசி விட்டார்கள். நடிகர் திலகத்தின் பல்வேறு ரசிகர்களை போல் எனக்கும் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் ராமன் எத்தனை ராமனடி. அதை பலமுறை இங்கே எழுதியிருக்கிறேன். இருப்பினும் ஒவ்வொரு முறையும் சித்திரை மாதம் பௌர்ணமி நேரமும் பாடலும் சரி அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு பாடலும் சரி, அதை கேட்கும் போதும் பார்க்கும் போதும் அதை பற்றி படிக்கும் போதும் சந்தோஷம் தொற்றிக் கொள்ளும்.

    பாலா,

    கார்த்திக் சொன்னது போல திருமால் பெருமை திரைப்படம் திருவிளையாடல் சரஸ்வதி சபதம் போன்ற படங்களைப் போல் வெற்றி பெறவில்லையே தவிர அது ஒரு தோல்வி படமல்ல. நான் சாதனை சிகரங்களில் குறிப்பிட்டது போல் அது 75 நாட்களை நெருக்கி ஓடியது. படத்தின் முதற் பகுதியில் இருந்த விறுவிறுப்பு இடைவேளைக்கு பிறகு maintain செய்யப்படாமல் தொய்வு விழுந்ததே அதற்கு காரணம். மேலும் 16-02-1968 அன்று வெளியான இந்த படம் 50 நாட்களை நிறைவு செய்யும்போதே நமது படங்களான ஹரிச்சந்திராவும் கலாட்டா கல்யாணமும் அடுத்தடுத்த நாட்களில் [ஏப்ரல் 11,12] வெளியாகி திருமால் பெருமையின் ஓட்டத்தை பாதித்தது. இந்த பாதகமான சூழலில் கூட எங்கள் மதுரையில் அதன் பிறகும் ஒரு மூன்று வாரம் ஓடி தமிழகத்திலேயே அதிகபட்சமாக மதுரை ஸ்ரீதேவியில் 71 நாட்களை நிறைவு செய்தது. ரிலீஸ் அரங்கிலிருந்து ஷிப்ட் செய்யப்பட்ட இந்த படம் வழக்கம் போல் ஷிப்டிங் அரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்தது.

    நமது திரியில் நேர்ந்த digression மூலமாக மகாகவி காளிதாஸ் என்ற அற்புத காவியத்தின் 46-வது வெளியிட்டு தின விழா சிறப்புகள் உரிய முறையில் விவாதிக்கப்படவில்லை என்பது ஒரு குறை.

    அன்புடன்

  9. #1118
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் சந்திரசேகரன் சார்,

    மிக்க நன்றி !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #1119
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    அடியேன் அஞ்சல் செய்த மின்மடல் :

    கலைப் பிரம்மாவைப் படைத்தது பாலசந்தரா ?!

    சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதர் அருளிய விண்ணுலக கணேசர் புகழ் பாடுகின்ற அற்புதக்கிருதியாம் "வாதாபிகணபதிம் பஜேஹம்" அமைந்த "ஹம்ஸத்வனி" ராகத்தின் பெயரையே அமைப்பின் பெயராக்கி செயல்படும் "ஹம்ஸத்வனி" நிர்வாகத்திற்கு கலையுலக கணேசர் புகழ் பாடும் பம்மலார் என்கிற பம்மல் ஆர். சுவாமிநாதன் வரையும் மின்மடல்.

    தங்களது விழா அழைப்பிதழை இணையத்தில் கண்டேன்.

    முதற்கண் தங்களது அமைப்பின் 21வது ஆண்டு விழா இனிதே நடைபெற இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் !

    விழாவின் தொடக்க நாள் நிகழ்வாக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு "DISTINGUISHED CITIZEN OF THE YEAR AWARD 2011" அளிப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி.

    தொடர்ந்து தங்களது அமைப்பின் ஆண்டு விழா அழைப்பிதழின் முன்பக்கத்தை வாசித்துக் கொண்டே வந்த எனக்கு அதன் பின்பக்கத்தைப் படித்ததும் ஷாக் அடித்தது. திரு.கே.பாலசந்தர் குறித்து பின்பக்கத்தில் தாங்கள் மிகுந்த கவனக்குறைவுடன் வழங்கியுள்ள குறிப்பின் மூன்றாவது பாரா(Para) மீண்டும் தங்கள் பொன்னான கவனத்திற்கு:


    "His own Production Unit, Kavithalayaa Productions is known for its mature creations, also for the small screen. In the course of several decades of KB's close involvement in Kollywood, he played a prominent role in further shaping the careers of a few of the yester-year's icons of Tamil Cinema such as Shivaji Ganesan, Sowcar Janaki, the inimitable Nagesh, Muthuraman & others."

    1935-ல், ஏழு வயதில் நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, 17 வருடங்கள் நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து, 1952-ல் "பராசக்தி" மூலம் பாராளும் சக்தியாகி, 47 வருடங்கள் திரையுலகில் ஏக சக்ராதிபதியாக விளங்கி, அதே சமயம் 1952 முதல் 1974 வரை "சிவாஜி நாடக மன்றம்" மூலம் நாடக உலகுக்கும், நமது பாரத சமுதாயத்திற்கும் அருந்தொண்டு புரிந்து, மேடையிலும் ஈடு-இணையற்றவராகத் திகழ்ந்து, என்றென்றும் நடிப்புலக சாம்ராஜ்யத்தின் நிரந்தர சக்கரவர்த்தியாக, திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக, கலையுலகின் குலதெய்வமாக, எங்களது / எனது இதயதெய்வாமாகத் திகழும் கலைப்பிரம்மா நடிகர் திலகம் சிவாஜி கணேசரின் கேரியரை இயக்குனர் கே.பாலசந்தர் ஷேப் செய்தாரா ?! கேலிக்கூத்தாயிருக்கிறதே.

    47 ஆண்டுகளில் [1952-1999], 306 திரைக்காவியங்களில் வாழ்ந்து காட்டிய கலையுலக மகானுடன், இரண்டே இரண்டு திரைக்காவியங்களில் மட்டுமே பணிபுரிந்திருக்கும் கே.பி. அவர்கள் எப்படி நடிகர் திலகத்தின் திரைப்பயணத்தை ஷேப் செய்தவராக முடியும் ?! நடிகர் திலகத்தின் திரையுலகப்பயணத்தில் அவருடன் பயணித்து அவரது பற்பல பரிமாணங்களை இவ்வுலகுக்கு காட்டிய இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களான திரு.ஏ.பீம்சிங், திரு.பி.ஆர்.பந்துலு, திரு.ஏ.பி.நாகராஜன் போன்றோர் கூட அவரை நாங்கள் செதுக்கினோம் என்று கூறியதில்லை. அவரால் தான் நாங்கள் உயர்வு பெற்றோம் என்றே கூறியுள்ளனர். அதுதான் உண்மையும்கூட. விஷயம் இப்படியிருக்க, அவரது கேரியரில் 0.65 சதவீதம் படங்களில் மட்டுமே அவருடன் பணிபுரிந்த திரு.கே.பி., நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய பெருமையைப் பெற்றார் என்று கூறினால் அதுதான் சரி. அதைவிடுத்து இதெல்லாம் என்ன வேண்டாத வேலை.

    ஆழ்மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ளுங்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை எந்தவொரு இயக்குனரோ, தயாரிப்பாளரோ, எந்தவொரு பிரமுகரோ ஷேப் செய்யவில்லை, உருவாக்கவில்லை. விண்ணுலக பிரம்மனின் படைப்பால் மட்டுமே அவர் கலையுலக பிரம்மன் ஆனார். தனது அபரிமிதமான-அபாரமான-அற்புதமான நடிப்புத்திறமையால் மட்டுமே அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    தங்களது விழா அழைப்பிதழின் பின்பக்கக் குறிப்புக்களை எழுதிய அந்த மகானுபாவருக்கு எங்களது / எனது மெகா கண்டனங்கள். தங்களது அறிவீனத்தை அழைப்பிதழின் பின்பக்கம் கண்ணாடி போல் காட்டுகிறது. அருமையான ஸ்வரங்களும், அற்புதமான கீர்த்தனைகளும் கொண்ட "ஹம்ஸத்வனி", அபஸ்வரமும், ஸ்ருதிபேதமும் நிறைந்ததாக மாறியது விந்தையிலும் விந்தை ! இந்த மூன்று நாள் விழாவின் ஏதேனும் ஒரு நாளிலாவது இந்த மாபெரும் தவறுக்குத் தாங்கள் விழா மேடையில் ஒரு வருத்தமோ / மன்னிப்போ தெரிவித்தால் அது அந்த கலையுலக மகானாகிய நடிகர் திலகத்துக்கு செய்த உண்மையான சேவை. செய்வீர்கள் என்று நம்புகிறோம்.


    சிவாஜி பக்தன்,
    பம்மலார் என்கிற பம்மல் ஆர்.சுவாமிநாதன்,
    ஆசிரியர் & வெளியீட்டாளர்,
    மனிதபுனிதர் சிவாஜி அவர்களின் புகழ் பரப்பும்
    "வசந்த மாளிகை" இதழ்.


    குறிப்பு:
    நடிகர் திலகத்துடன் திரு.கே.பி. அவர்கள் இணைந்து பணியாற்றிய அந்த இரண்டு திரைப்படங்கள்:

    1. நீலவானம்(1965) [திரைக்கதை-வசனம்]

    2. எதிரொலி(1970) [திரைக்கதை-வசனம்-இயக்கம்]

    இணைப்பு;
    1986-ம் ஆண்டு 'கலைத்தென்றல்' சினிமா இதழில், "படிக்காதவன்(1985)" பட வெள்ளிவிழாவில் நடிகர் திலகம் பற்றி திரு.கே.பி. அவர்கள் கூறியதாக வெளிவந்துள்ள தகவல் [நமது திரியில் இந்த ஆவணம் நேற்று இடுகை செய்யபட்டது].
    Last edited by pammalar; 20th August 2011 at 05:11 AM.
    pammalar

  11. #1120
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,
    மிகப் பெரிய வரலாற்றுப் பிழையினை உரியவர்கள் மூலம் அந்ந நிர்வாகத்திற்கு எடுத்துரைத்த தங்களுக்கும், மற்றும் மின்னஞ்சல் மூலம் தங்களது வருத்தத்தினைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும். குறிப்பாக பம்மலார் அவர்கள் ஆதாரங்களுடன் தமது வாதத்தை வைத்து முத்திரை பதித்து விட்டார். அவருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    இனிமேலும் நடிகர் திலகத்தைப் பற்றி மேம்போக்காக கமெண்ட் செய்பவர்களுக்கும், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று போகிற போக்கில் ஏசி விட்டுப் போகிறவர்களுக்கும், யார் கேட்கப் போகிறார்கள் என்கிற அலட்சிய மனப்பான்மையில் அவரைப்பற்றி எழுதுவோர்க்கும் பேசுவோர்க்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும், இருக்கும். எந்த வித பின்புலமும் இன்றி தனியொரு மனிதனாக தன் ஆளுமையை ஆணித்தரமாகப் பதித்த அந்த உன்னத கலைஞனை யாரும் எதுவும் பேசவோ எழுதவோ முடியாத படி தட்டிக் கேட்க கடைசி சிவாஜி ரசிகன் இருக்கும் வரை முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை எடுத்துரைத்த நமது நண்பர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •