Page 73 of 197 FirstFirst ... 2363717273747583123173 ... LastLast
Results 721 to 730 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

  1. #721
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn View Post
    டியர் பம்மலார் &

    டியர் ராகவேந்தர்,

    காணக்கிடைக்காத 'குழந்தைகள் கண்ட குடியரசு' திரைப்பட ஸ்டில்கள், மற்றும் விளம்பரங்கள் மிக அருமை.

    அந்த ஸ்டில்களூக்குக் கீழே மறக்காமல் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம்....

    "கிட்டத்தட்ட 100 வய்துக்காரராகத் தோற்றம் தரும் அந்த வேடத்தில் நடித்தபோது நடிகர்திலகத்தின் வயது 31 மட்டுமே"

    அந்தப்படம் நான் பார்த்திருக்கிறேன் (தூரதர்ஷனில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலைப்படமாக காண்பிக்கப்பட்டது). வெறும் வயதான மேக்கப் மட்டுமல்ல. அந்த வயதுக்குரிய பெர்பாமென்ஸும் அட்டகாசமாக இருக்கும்.

    நடிகர்திலகம் ஒரு யுகக்கலைஞர் என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம்.
    சகோதரி சாரதா,

    பாராட்டுக்கு நன்றி !

    தாங்கள் குறிப்பிட்டுள்ளது போலவே இளம் வயதில், வயோதிகக் கதாபாத்திரங்களை அதிக அளவில் மிகுந்த துணிச்சலுடன் ஏற்று அப்பாத்திரங்களாகவே அப்படங்களில் வாழ்ந்து காட்டியவர், நமது தைரியத்திலகம்.

    தனது 27வது வயதில், ஒரு பொறுப்புமிக்க நடுத்தரவகுப்புக் குடும்பத்தலைவராக "முதல் தேதி(1955)"யில் அசத்தியிருப்பார்.

    தனது 28வது வயதில், "நான் பெற்ற செல்வம்(1956)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற 'புலவர்-தருமி-நக்கீரர்' ஓரங்க நாடகத்தில், புலவர் சிவபெருமானாக நடித்ததோடு முதுபெரும்புலவர் நக்கீரராகவும் வெளுத்து வாங்குவார் என்றால் "தெனாலிராமன்(1956)" திரைக்காவியத்தில், 'உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்' என்ற பாடல்காட்சியிலும் [பின்னணிக்குரல் : கண்டசாலா], அதனைத் தொடர்ந்து வரும் காட்சியிலும் ஒரு வயதான முஸ்லீம் பெரியவர் தோற்றத்தில் [மாறுவேடம் தான்!] பிரமாதப்படுத்தியிருப்பார்.

    தனது 29வது வயதில், "தங்கமலை ரகசியம்(1957)" திரைக்காவியத்தில், கதைப்படி, ஒரு கட்டத்தில் தனது இளமையையும் அழகையும் முழுவதுமாக இழந்து முதியவனாக அதுவும் குரூபியாகக் காட்சியளிப்பார். பின்னர் இறுதியில் இழந்தவற்றை அவர் திரும்பப் பெறுவார் என்பது வேறு விஷயம் !

    தனது 32 வயதில், "தெய்வப்பிறவி(1960)"யில் கம்பீரமிக்க குடும்பத்தலைவராக, தனது 38 வயதில் கோடி கொடுத்தாலும் கிடைக்காத "மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)" எனும் அன்புத்தந்தையாக [அதாவது பல முன்னணி நடிக-நடிகையருக்கு மாமனார்-அப்பா], தனது 39 வயதில் "திருவருட்செல்வர்(1967)" திரைக்காவியத்தில் 80 வயது அப்பராக, இப்படி எத்தனை எத்தனையோ பாத்திரங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

    உலக சினிமாவின் முதன்மை தைரிய நட்சத்திரம் நமது நடிகர் திலகம் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #722
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் mr_karthik,

    பாராட்டுக்கு நன்றி !

    'நாவுக்கரசராக நடிகர் திலகத்தை நினைக்கும் போதெல்லாம் தங்களுக்கு தங்களின் தமிழாசிரியரும் நினைவில் வருகிறார்' என்று தாங்கள் எழுதியதைப் படித்தபோது எனக்கு அப்படியே மெய்சிலிர்த்துவிட்டது. எப்பேர்ப்பட்ட நற்றமிழாசிரியர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள்.

    தங்களது பதிவு அறிவுபூர்வமானது மட்டுமல்ல, உணர்வுபூர்வமானதும் கூட !

    டியர் ரங்கன் சார்,

    தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கும், மனமார்ந்த வாழத்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !

    தங்களது குருநாதரை 'மகாலட்சுமி'யில் மெகா அமர்க்களக்கத்துடன் தரிசிக்கப் போவது ஒரு thrilling experience !

    டியர் முரளி சார்,

    மிக்க நன்றி !

    பலருக்கும் 'மகாலட்சுமி'யில் 'மகர ஜோதி' என்றால், நமக்கு 'மயிலை'யில் 'இல்லற ஜோதி'.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #723
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    The Picture speaks:

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #724
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆகஸ்டு 1954 திராவிட நாடு இதழில் வெளிவந்த விளம்பரம்



    கல்கி 08.08.1954 இதழில் வெளிவந்த விமர்சனம்





    தினமணி கதிர் இதழில் வெளிவந்த விமர்சனம்

    Last edited by RAGHAVENDRA; 30th July 2011 at 03:50 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #725
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மற்ற எந்த நடிகர் கதாநாயகனாக வந்தாலும் சரி, கணேசன் தனது கம்பீரத் தோற்றத்தினாலும், கணீர் என்ற பேச்சினாலும் அந்தப் பாகத்தைத் 'திருடிக்' கொண்டு விடுகிறார்.
    இந்த வரிகள் மேலே காணும் தினமணி கதிர் விமர்சனத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாராட்டை அவர் பெற்றது தனது 16வது திரைப்படத்திலேயே என்பது குறிப்பிடத் தக்கது.

    கற்பக மன்னர் சூரியகாந்தனாக நடிகர் திலகமும் நாக நாட்டு சேனாதிபதி சந்திரனாக கே.ஆர்.ராமசாமியும் தர்பாரில் ஆற்றும் சொற்போர், இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வார்த்தையும் பொருத்தமாக அமைந்துள்ளது. சில வரிகள் இன்றைய சூழ்நிலையை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றன. இக்காட்சியினைக் காணும் போது தாங்களே அதனை உணர்வீர்கள். தங்களுக்காக அக்காட்சியின் இணைப்பு.

    கற்பக நாட்டு மன்னன் - நாக நாட்டு சேனாதிபதி சொற்போர்

    இக்காட்சி கோப்பாகத் தரப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #726
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    "துளி விஷம்" build-up பிரமாதம் !

    விளம்பரமும், விமர்சனங்களும், ஒளிக்காட்சியும் அருமை மட்டுமல்ல மிகமிக அரியவையும் கூட !

    அடுத்தடுத்த பதிவுகளை அன்புடன் நோக்குங்கள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #727
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    துளி விஷம்

    [30.7.1954 - 30.7.2011]

    கற்பக நாட்டு மன்னன் 'சூரிய'காந்தனுக்கு 58வது 'உதய'தினம்

    பொக்கிஷப் புதையல்

    பட விளம்பரம் : சுதேசமித்ரன் : 26.6.1954



    முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 28.7.1954


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #728
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    'துளி விஷம்' உண்ட திருநீலகண்டர்



    "திருவிளையாடல்" புரிய வருகிறார்...
    pammalar

  10. #729
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்"

    [31.7.1965 - 31.7.2011] : 47வது ஆராதனை தினம்

    லீலா வினோதங்கள்

    'விரைவில் வருகிறது' விளம்பரம் : தினத்தந்தி : 10.2.1965



    முதல் வெளியீட்டு விளம்பரம் : வெண்திரை : ஆகஸ்ட் 1965



    முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.8.1965



    50வது நாள் : தினத்தந்தி : 18.9.1965


    லீலா வினோதங்கள் விரியும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #730
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்"

    [31.7.1965 - 31.7.2011] : 47வது ஆராதனை தினம்

    லீலா வினோதங்கள் விரிகின்றன...

    75வது நாள் : The Hindu : 13.10.1965



    100வது நாள் : தினத்தந்தி : 7.11.1965



    100வது நாள் : The Hindu : 7.11.1965



    25வது வெள்ளிவிழா வாரம் : தினத்தந்தி : 14.1.1966


    லீலா வினோதங்கள் விரியும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •