Page 4 of 199 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #31
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் NOV...

    ** இத்திரியின் முகப்பில் நடிகர்திலகத்தின் மூன்று அற்புத போஸ்களை இணைத்ததற்கும்....

    ** முந்தைய பக்கங்களின் இணைப்புக்களை முதற்பக்கத்தில் அழகுற தந்ததற்கும்....

    ** 'பாட்டும் பரதமும்' படத்தின் ஸ்டில்லை இணைத்து, அப்பதிவுக்கு அழகு சேர்த்ததற்கும்....

    மிக்க நன்றி.

    இத்திரியின் வெற்றியில் தங்களின் பங்களிப்பு மகத்தானது.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் பம்மலார் & ராகவேந்தர்...
    'பாட்டும் பரதமும்' பதிவுக்கான பாராட்டுக்களுக்கு நன்றி.

    பம்மலார்...
    தங்களின் புதிய பறவை தொடர்வது கண்டு மகிழ்ச்சி. 'அவரது தூக்கமும் நடித்தது' என்ற சொல்லாட்சி மிகவும் அருமை. ரங்கனை நிந்திக்கத் துவங்கிவிட்டனர் என்ற வாசகம், நடிகவேளுக்கு கிடைத்த பாராட்டு. ஆம், கதாநாயகனுக்கு கைதட்டல் பாராட்டு என்றால், வில்லனுக்கு திட்டுக்கள்தான் பாராட்டு. யாரும் திட்டவில்லை என்றால் அவர் தன் ரோலை செவ்வனே செய்யவில்லை என பொருளாகிறது. படத்தை ஏற்கெனவே பார்த்த அனைவருக்கும் கடைசியில் நடிகவேள் யாரென்பது தெரிந்திருந்தும், 'எங்க அண்ணனை டார்ச்சர் பண்ணுவதா?' என்ற கோபம்தான் வசவுகளாக வெளிப்படும். அதுவும் நிச்சயதார்த்தத்துக்கு வந்த விருந்தினரை விரட்டியடிக்கும் காட்சி ஒன்று போதும், நடிகவேளின் நடிப்பை பறைசாற்ற.

    தொடருங்கள்.... காத்திருக்கிறோம்....

  4. #33
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    டியர் முரளியண்ணா...

    அன்று அவசரத்தில் படித்த உங்களின் 'விளையாட்டுப்பிள்ளை' ஆய்வுக்கட்டுரையை மீண்டும் நிதானமாகப்படித்தேன். தங்களுக்கே உரித்தான சுவையுடன் எழுதியுள்ளீர்கள். ஐம்பதுகளிலேயே காலாவதியாகிவிட்ட கதைக்களத்தை எழுபதின் துவக்கத்தில் தந்தது ஒன்றே சற்று நெருடல். மற்றபடி, நடிகர்திலகம் அதுவரை செய்திராத பல வித்தைகளை அதில் பரீட்சித்திருப்பார்.

    படத்தில் இடம் பெறாத, ஆனால் வானொலிகளில் ஒலிபரப்பான பாடல் "வாழ்ந்திருந்தோம் ஒரு காலத்திலே". இப்பாடலை பி.சுசீலா பாடியிருப்பார். சோகப்பாடல் என நினைக்கிறேன்.

  5. #34
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....

    'பாட்டும் பரதமும்' ஆய்வுக்கட்டுரைக்கு நீங்கள் அளித்துள்ள பதிலுரையில் பல நிகழ்வுகளைச்சுட்டிக்காட்டி, பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளீர்கள். அவை என்றென்றும் ரசிகர்கள் நெஞ்சில் மாறாத நினைவுகள் என்பதைவிட ‘ஆறாத வடுக்கள்’ என்பதே பொருத்தம். குறிப்பாக இந்தப்படத்துக்கு எதிராக நடந்த சதிகள் நிறைய. டாக்டர் சிவாவும், வைர நெஞ்சமும் அவர் முடிவெடுக்கும் முன் வெளிவந்து பல நாட்களைக் கடந்து விட்டன. அதுபோல 'உனக்காக நான்' வந்தபோது சூடு சற்று ஆறிப்போய் விட்டிருந்தது. ஆனால் 'பாட்டும் பரதமும்'தான் மிகவும் சிக்கலான தருணத்தில் வெளிவந்து, தாக்குதலில் மாட்டியது. அப்போது அண்ணனுக்கு உறுதுணையாக நின்றது அவரது ரசிகர் கூட்டம்தான். ஆனால் அதிலும் கூட பிளவு ஏற்பட்டிருந்தது.

    தமிழகம் முழுக்க இப்படி சிக்கல் என்றால், திருச்சி - தஞ்சாவூர் விநியோக ஏரியாவில் கூடுதலாக இன்னொரு பிரச்சினை. பிரச்சினை என்பதைவிட சதி, வியாபாரக் காழ்ப்புணர்ச்சி என்பவையே சரியான பதங்களாயிருக்கும்.

    ஏ.வி.எம்.நிறுவனத்தின் பல கிளைகளில் ஒன்று, திருச்சியில் இயங்கி வரும் 'ஏ.வி.எம்.லிமிடட்' என்ற விநியோக நிறுவனம். 'பாட்டும் பரதமும்' பாதித்தயாரிப்பில் இருக்கும்போதே விநியோகஸ்தர்களுக்கான காட்சியைப்பார்த்து விட்டு, அப்படத்தை திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஏரியா உரிமையை வாங்க முயற்சித்தனர். ஆனால் அதைவிட கூடுதல் தொகைக்குக்கேட்ட வேறொரு விநியோகஸ்தருக்கு படம் வழங்கப்பட்டுவிட்டது. இதற்காகவே படம் வெளியாகும் நாளை எதிர்பார்த்து, நடிகர்திலகத்தின் 'தில்லானா மோகனாம்பாள்' படத்திற்கு அந்த ஏரியா உரிமையை A.V.M.Ltd (Trichy) வாங்கி, சுமார் ஏழெட்டு புதிய பிரிண்ட்கள் எடுத்து 'பாட்டும் பரதமும்' படத்தைத் தோற்கடிப்பதற்காக, அதே 1975 டிசம்பர் 6 அன்று திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பை பெரிதாகப்போட்டு அடைப்புக்குறிக்குள் சிறியதாக (தில்லானா மோகனாம்பாள்) என்ற தலைப்பிட்டு பெரிய பெரிய போஸ்ட்டர்கள் அடித்து வெளியிட்டனர். அதுமட்டுமல்லாது திருச்சி 'தினத்தந்தி' பதிப்பிலும், கடைசி பக்கத்தில் முழுப்பக்க 'பாட்டும் பரதமும்' விளம்பரம் வெளியிடப்பட, அதே இதழில் முதற்பக்கத்தில் கால் பக்க விளம்பரமாக, நடிகர்திலகம் நாதசுரம் வாசிக்க, பத்மினி நாட்டியமாடும் போஸுடன், இன்றுமுதல் 'நாட்டியமும் நாதசுரமும்' என்ற தலைப்பிட்டு விளம்பரம் செய்திருந்தனர். அதாவது, புதிய படத்தின் விநியோக உரிமை கிடைக்கவில்லை என்பதற்காக, நடிகர்திலகத்தின் கையை எடுத்தே அவர் கண்ணைக் குத்தினார்கள். அதிலும் பெரிய கொடுமை, பட்டுக்கோட்டையில் 'தில்லானா' படம் திரையிடப்பட்ட 'நீலா' திரையரங்கின் உரிமையாளர் ஒரு காங்கிரஸ்காரராம். (பாட்டும் பரதமும் 'முருகையா' என்ற தியேட்டரில் வெளியானதாம்).

    அதுபோக தமிழகம் முழுவதும் இப்படம் ஓடிய அரங்கின் முன் பா.ராமச்சந்திரன் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸார் கூடி நின்று, 'படம் டப்பா, போகாதீர்கள்' என்று படம் பார்க்க வந்த பொதுமக்களை திசை திருப்பிவிட்டனர். காங்கிரஸ் இணைப்பு மாநாட்டுக்கு முன் எமர்ஜென்ஸியில் தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப் பட்டிருந்ததால், அவர்களின் எதிர்ப்பும் நடிகர் திலகத்துக்கு எதிராக அமைந்தது. எதிர்வாதத்தில் ஈடுபட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்களை அடித்து விரட்டினர். எந்தவித சப்போர்ட்டும் இல்லாத ரசிகர்கள் அடிதாங்க முடியாமல் விரண்டோடினர். சென்னையில் மட்டுமல்ல, மதுரை சினிப்ரியா அரங்கின் முன்னும் தினமும் இதே கலாட்டா நீடித்ததாம். (முரளியண்ணா விவரிப்பார் என்று நம்புகிறேன்). ஆனால் மதுரையில் ரசிகர்படை சற்று பலமானது என்பதால் எதிர்ப்பு அவ்வளவாக எடுபடவில்லை. இருப்பினும் கலாட்டாவுக்குப் பயந்த மக்கள் இப்படம் ஓடிய தியேட்டர்களுக்கு வருவதைத் தவிர்க்கத்துவங்கினர். எதிர்ப்பாளர்களின் எண்ணம் பெருமளவு நிறைவேறியது.

    அந்த நேரத்தில் இப்பட வெளியீட்டைத் தவிர்த்திருந்தால் படம் நிச்சயம் பெரிய வெற்றியடைந்திருக்கும். அதற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் உள்ளன. இப்படத்துக்காக நடன மேதை கோபிகிருஷ்ணாவிடம் நடிகர்திலகம் குறுகிய காலம் பிரத்தியேகமாக நடனம் கற்றுக்கொண்டார் என்பது கூடுதல் தகவல்.

  6. #35
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,505
    Post Thanks / Like
    anbu sagothara-sagotharigalE, neengal enakku nandri solla thEvai illai. neengal ellOrum seyyum paniyil oru 1% kooda naan pannavillai.
    ellaa pugazhum nadigar thilagaththukkE.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  7. #36
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    [size=12]மற்றொரு அவா இந்நேரத்தில் வெளிப்படுத்த விழைகிறேன். நமது ஹப்பில் நடிகர் திலகம் திரியில் பங்கு பெற்று கருத்துக்களை எழுதும் அனைத்து நண்பர்களும் அனைவருக்கும் உகந்த நாளில், இடத்தில், நேரத்தில் சந்தித்து உரையாடலாம். அதைப் பற்றி அனவைரும் தங்களுடைய கருத்துக்களைக் கூறலாம். எதிர் வரும் நடிகர் திலகத்தின் பிறந்த நாளை ஒட்டிவரும் ஏதேனும் ஒரு நாளில் சந்தித்து நேர் அறிமுகம் மற்றும் உரையாடல் மேற்கொள்ளலாம்.

    இவ்விஷயத்தில் தங்கள் கருத்துக்களை எதிர் நோக்கும்

    ராகவே
    ந்திரன்
    [/size]

    டியர் ராகவேந்தர் சார்,

    உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  8. #37
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சாரதா,

    பாட்டும் பரதமும் அலசல் அருமை என்று சொல்லவும் வேண்டுமோ! நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பற்றிய செய்திகள் நாளை எழுதுகிறேன். அதற்கு முன் கொஞ்சம் புதிய பறவை.

    இன்று மாலை பாரத் அரங்கத்தை ஏன் அந்த ஏரியாவையே ஒரு குலுக்கு குலுக்கி விட்டார்கள் ரசிகர்கள். வாண வேடிக்கை என்ன, பாண்ட் மேளங்கள் என்ன ஒலிபெருக்கியில் நடிகர் திலகத்தின் பாடல்கள் என்ன என்று ஒரே திருவிழா கோலம். இது தவிர வழக்கம் போல் ஏராளமான மாலைகள், சூட தீப ஆராதனைகள் எல்லாம் நடந்தேறியன.

    டிக்கெட்கள் Rs 50 /- என்று இருந்த போதிலும் ஏராளமான கூட்டம். அரங்கத்தின் உள்ளே அமர்க்களம் மிக அதிகமாகவே இருந்தது. சாந்தியில் சூழ்நிலை நிர்பந்தம் காரணமாக சில நேரங்களில் அடக்கி வாசித்த ரசிகர்கள் இங்கே அணை மீறிய வெள்ளமாக பாய்ந்தனர்.

    வடசென்னை ரசிகர்கள் வெறி அதிகமாகவே இருக்கும் என்று சுவாமி சொன்னார். அப்படியே நடந்தது.ஆனால் யாரும் எல்லை மீறவில்லை. பாரத் அரங்கம் இப்போது குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருப்பதால் உள்ளே சூடங்கள் அனுமதிக்கப்படவில்லை. அரங்க நிர்வாகத்தினரே அதை ஈடு செய்யும் பொருட்டு ஒவ்வொரு பாடல் காட்சியின் போதும் திரையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் சின்ன மின்சார விளக்குகளை எரிய விட காட்சிகள் ஜெகஜோதியாக விளங்கின. சிட்டுகுருவி முத்தம் கொடுத்து மற்றும் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல்களுக்கு நடந்த ஆரவாரத்தை பார்த்தால் இன்று முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்களே தங்களுக்கு இப்படி ரசிகர்கள் இல்லையே என்று ஏங்கி போவார்கள். எங்கே நிம்மதி பாடலுக்கு இதை விட அதிகமாக நடந்திருக்கும் என நினைக்கிறேன். நாங்கள் அதற்கு முன்பு கிளம்பி விட்டோம்.

    இனி சில தகவல் துளிகள்

    நடிகர் திலகத்தின் முதல் படத்தையும் கடைசி படத்தையும் வெளியிட்ட பாரத் அரங்கின் உரிமையாளருக்கு மன்றங்களின் சார்பாக சால்வை அணிவிக்கப்பட்டது.

    சாந்தியில் புதிய பறவை ஒரு வார வசூல் Rs 3,40,000 /- . இது பழைய பட மறு வெளியீட்டில் புதிய சாதனை.

    மறு வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் படங்களைப் பற்றி செய்திகள் அங்கே கிடைத்தன. அவை சவாலே சமாளி, வசந்த மாளிகை, கெளரவம்[அநேகமாக சாந்தியில் வெளியாகலாம்] போன்றவை. அது தவிர எந்த படங்கள் வெளியிட்டால் நன்றாக போகும் என்பது பற்றியும் விநியோகஸ்தர்கள் நமது சுவாமி, ராகவேந்தர் சார் போன்றவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டனர்.

    தியேட்டர் புகைப்படங்களை சுவாமி மற்றும் ராகவேந்தர் சார் உங்களுக்கு வழங்குவார்கள்

    அன்புடன்

  9. #38
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு சகோதரி சாரதா அவர்களுக்கு,
    பாட்டும் பரதமும் பற்றிய பழைய நினைவுகளில் தாங்கள் அளித்துள்ள தகவல்கள் பல ரசிகர்களுக்கு புதியதாயிருக்கும். நடிகர் திலகம் எத்தனை இடர்பாடுகளையும் துரோகங்களையும் சந்தித்து வளர்ந்துள்ளார் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

    டியர் பம்மலார்,
    டாக்டர் பட்டத்திற்கு என்றே பிறந்தவர் நடிகர் திலகம். அவருடைய நினைவையும் புகழையும் போற்றும் பல கோடி பக்தர்களில் நானும் ஒருவன் அவ்வளவே. தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    டியர் பம்மலார், ராதாகிருஷ்ணன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி, என்னுடைய விருப்பத்திற்கு ஆதரவளித்தமைக்கு. அது சீக்கிரம் நடந்தேறும் என்று நம்புவோம், அதற்கான முயற்சியில் இறங்குவோம்.

    இன்று 8.8.10 ஞாயிறு மாலைக் காட்சியில் பாரத் திரையரங்கையும் நம் மக்கள் விட்டு வைக்கவில்லை. சாந்தியை நாங்கள் மிஞ்சுகிறோம் பாருங்கள் என்று போட்டியில் இறங்கி விட்டார்கள். ஒரே ஒரு வித்தியாசம் சாந்தியில் பெங்களூரு ரசிகர்களால் போடப் பட்ட ராட்சத மாலைகள். இருந்தாலும் இவர்களும் விடவில்லை. பிரம்மாண்டமான எலுமிச்ச மாலை அணிவி்த்து அசத்தி விட்டனர். தொலைக்காட்சியில் மிகவும் பெரியாய் விளம்பரப்படுத்தப் பட்ட நிகழ்ச்சியையும் மீறி மக்கள் திரையரங்கில் கூடி அமர்க்களப் படுத்தி விட்டார்கள். கிட்டத்தட்ட 70 சதவீதம் அரங்கு நிறைந்தது ஒரு பெரிய விஷயமாக திரையரங்கு நிர்வாகத்தினராலேயே கருதப் படுகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியினால் சிறிது குறைந்துள்ளதாகவும் அது இல்லையென்றால் இங்கும் அரங்கு நிறைவு பலகை மாட்டப் பட்டிருக்கும் என்றும் கூறினர்.

    பாரத் திரையரங்கு அளப்பரை பற்றி விரிவாக அடுத்து வரும் பதிவுகளில் அலசலாம்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #39

    Join Date
    Jul 2010
    Location
    Pune
    Posts
    67
    Post Thanks / Like
    Dear Mr.Ragavendra/Mr.Murali Srinivas

    Many thanks for your update on PP at Bharath. Looking forward to your detailed report.

    It is all the more heartening to note that some of our Deivam's evergreen movies are ready for a re-release and take chennai by storm.

    regards

    Shivram

  11. #40

    Join Date
    Jul 2010
    Location
    Pune
    Posts
    67
    Post Thanks / Like
    Dear Mr.Murali Srinivas

    I just read your postings on NT's political journey in 1980's and how he was betrayed by certain ungratefuls.

    Since I was a school student those days, the recordings & postings of such events is very interesting. It was also painful to note how our NT was back stabbed by once close associates.

    I had also heard those days that NT got an appointment with Rajiv Gandhi at Delhi and as his practise, NT was present half an hour before appointment but was made to wait for more than an hour to meet Mr.Gandhi. Getting frustrated over the wait, NT had walked out and headed to Airport. Coming to know of this, Gulam Nabi Azad called up NT to pacify him and informed him that Rajiv Gandhi was not aware that NT was waiting for him!!!.

    Was our TN Congress ungratefuls behind this miscommunication???.

    Kindly clarify.

    Regards

    Shivram

Page 4 of 199 FirstFirst ... 234561454104 ... LastLast

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •