Page 3 of 199 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #21
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'பாட்டும் பரதமும்'


    [html:a053ed0e67]


    [/html:a053ed0e67]

    கலை, நாட்டியம் இவைபற்றிய சிந்தனையோ, அவற்றில் ஈடுபாடோ இல்லாத, சதா தன் தொழில் பற்றியே சிந்தனையும் செயலுமாக இருக்கும் ஒருவர், நாட்டியமங்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக அவரே ஒரு நாட்டியக்காரராக மாறி, கடைசிவரை நாட்டியத்துக்கே தன்னை அர்ப்பணித்து விடுவதாக முடியும் கதை.

    தொழிலதிபர் ரவிசங்கர் (நடிகர்திலகம்) சதா தன் தொழில் நிறுவன முன்னேற்றத்திலேயே கவனமாக இருப்பவர். தன் தொழிலைத்தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்காதவர். அவருக்கு வில்லங்கம் ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் மூலம் வருகிறது. தங்கள் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு தலைமைதாங்க அழைக்கிறார். அதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என மறுக்கும் ரவிசங்கரை கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். காரணம், பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாமிக்கண்ணு பாணியில் "அது அவங்க அப்பா ஆரம்பிச்சு வச்ச பள்ளிக்கூடம்". ஆகவே மறுக்க முடியவில்லை. நிகழ்ச்சியில், பரதநாட்டியத்தில் புகழ்பெற்ற ராதா (கலைச்செல்வி ஜெயலலிதா)வின் பரதநாட்டியம் நடக்கிறது. அப்போதும் அவர் மனம் நாட்டியத்தில் செல்லவில்லை. (ஆடிட்டோரியத்தில் தன் அருகே அமர்ந்திருக்கும் அத்தைமகன் விஜயகுமாரிடம், "ஏண்டா, நாமும் இதுபோல நாலு ஆடிட்டோரியம் கட்டி வாடகைக்கு விட்டா தனியாக வருமானம் வருமில்லே?" என்று கேட்க அதற்கு விஜயகுமார் 'மாமா, நாட்டியம் பார்க்க வந்த இடத்திலும் பிஸினஸ் சிந்தனையா?").

    நாட்டியம் முடிந்து விழாவில் ரவிசங்கர் பேசும்போது, 'ஒரு பொண்ணு கையை காலை ஆட்டி நடனம் ஆடிச்சு. எனக்கு அதிலெல்லாம் ஒண்ணும் பெரிசா இஷ்ட்டம் இல்லை. சொல்லப்போனா இந்த நாட்டியம் என்பதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம்' என்று பேசப்போக, அடுத்துப்பேசும் ராதா, ரவிசங்கரை ரசிப்புத்தன்மையையற்ற மனிதர் என்று குத்திக்காட்ட இவருக்கு மனது சுருக்கென்றாகிறது. வற்புறுத்தி அழைத்து வந்த தலைமை ஆசிரியருக்கோ தர்ம சங்கடமாகப்போகிறது. பின்னர் மேக்கப் அறையில் தனியே சந்திக்கும் ரவி சங்கரிடம், அவரைத் தன் நாட்டியக்கலைக்கு அடிபணிய வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள் ராதா. அது அவளால் முடியாது என்று மறுக்கும் ரவி, இன்னொரு முறை ராதாவின் நாட்டியத்தைக்காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக சலனமடைந்து அவள் பால் ஈர்க்கப்பட, வந்தது வினை. ராதாவின் நாட்டியம் எங்கு நடந்தாலும் ஓடிச்சென்று பார்க்கத்துவங்குகிறார். ஒருமுறை அரங்கத்தின் வாயிலில் ஹவுஸ்புல் போர்டு போடப்பட, மேடையின்மீது வந்து நின்று பார்க்கும், ராதாவின் தந்தையும் அவரது நாட்டிய குருவுமான மனோகருக்கு அதிர்ச்சி. அரங்கத்தில் ரவிசங்கரைத் தவிர வேறு யாருமில்லை. எல்லா டிக்கட்டுகளையும் அவரே வாங்கிவிட்டிருக்கிறார்.

    ரவிசங்கருக்கு தன்மீதுள்ள அபிமானத்தைப்பார்த்து ராதாவின் மனமும் மெல்ல மெல்ல ரவியின் பக்கம் ஈர்க்கப்பட, ரவி மீது காதல் வயப்படுகிறார். திருமணத்துக்கு முன்பே நெருங்கிப் பழகிய்தன் விளைவாக ராதா கருவுறுகிறாள். ரவி ராதா காதல் மட்டும் ராதாவின் தந்தைக்குத் தெரியவர, அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்புத்தெரிவிப்பதோடு, இனிமேலும் அந்த ஊரில் இருந்தால் ஆபத்து என்று முடிவெடுத்து நாட்டியக்குழுவை வேறு ஊருக்கு கிளப்புகிறார். அவரது எதிர்ப்புக்குக் காரணம், ஏற்கெனவே அவரது தங்கை சுகுமாரியுடன் ஒரு பணக்காரர் பழக்கம் வைத்து பின்னர் ஏமாற்றியதுதான். (அந்தப்பணக்காரர் வேறு யாரும் அல்ல, ரவிசங்கரின் தந்தையாக வரும் மேஜர்தான்).

    அப்போது அவரைப்பார்த்து ராதவை தனக்கு மணமுடிக்குமாறு கேட்கும் ரவிடம், தன் மகளை மணக்க விரும்புபவனும் நாட்டியக் கலைக்கு மதிப்புக்கொடுத்து நாட்டியம் ஆடத் தெரிந்தவனாகவே இருக்க வேண்டும் என்று சொல்ல, தானும் நாட்டியம் கற்றுக் கொண்டு வந்து அவளை மணப்பதாக சவால் விட்டுப்போகிறார். ஒருநாட்டியப்போட்டியில் தன் அண்ணன் மனோகரின் மகள் ராதாவை, தன்னிடம் நாட்டியம் பயிலும் ஒரு கத்துக்குட்டியைக் கொண்டு தோற்கடிப்பதாக, அவரது தங்கை சுகுமாரி சவால் விட, அந்தக்கத்துக்குட்டி வேறு யாருமல்ல, ரவிசங்கர்தான். போட்டியின்போது நடனமாடிக்கொண்டே யானையின் உருவம் வரையும் போட்டியில் ராதா வரையும் யானையின் படத்தில் கண் வைக்கத்தவறிவிட, போட்டியில் ராதா தோற்று, ரவிசங்கர் வெற்றிபெற, போட்டியின் நிபந்தனையின்படி ராதாவை ரவிசங்கருக்கு மணம் முடிக்க அவளது தந்தை சம்மதிக்கிறார்.

    இதனிடையே இன்னொரு பக்கம் ரவிசங்கர் - ராதா காதல் விவகாரம் ரவியின் தந்தை மேஜருக்குத் தெரியவர, அவர் பணக்காரர்களுக்கே உரிய குறுக்குப்புத்தியில் யோசித்து அவர்களைப்பிரிக்க முடிவெடுக்கிறார். அதன்படி, ஒருபக்கம் ராதா ஓட்டலுக்கு வாடிக்கையாக வரும் பெண்ணென்றும் அதை சோதிக்க வேண்டுமானால் ஓட்டலில் ஒரு நாள் தங்கியிருக்கும்படியும் சொல்லி ரவியைத் தங்க வைக்க, இன்னொருபக்கம் ரவி அழைப்பதாக ராதாவிடம் சொல்லி வரவழைக்க, ராதா ஓட்டலுக்கு வரக்கூடிய பெண்ணல்ல என்று உறுதியாக நம்பும் ரவி, கதைத்தட்டியது யாரென்று திறந்து பார்க்க, அங்கு ராதா நிற்க...... அவ்வளவுதான், ரவிசங்கரின் நம்பிக்கை உடைந்து சிதறுகிறது. ராதா சொல்ல வரும் காரணத்தை ரவி கேட்கத் தயாராயில்லை. (அப்படி கேட்பதாக இருந்தால், முக்கால்வாசிப்படங்களுக்கு மூணாவது ரீலுக்குப்பிறகு கதையை நகர்த்தவே முடியாது).

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'பாட்டும் பரதமும்' - 2

    இதனிடையே ரவியின் தங்கைக்கும் விஜயகுமாருக்கும் திருமணம் நடக்கிறது. ரவியிடம் விவரத்தைச்சொல்ல, ரவியின் வீட்டுக்கு அவரைத்தேடி வரும் ராதா, அங்கு திருமண ஏற்பாடு நடப்பதையறிந்து யாருக்கு திருமணம் என்று அங்குள்ளவரிடம் விசாரிக்க, அழையா விருந்தாளியாக திருமணத்துக்கு வந்த அந்த நபர் 'ரவிக்குத்தான் திருமணம்' என்று தப்பாகச்சொல்ல மனமுடைந்து போன ராதா, தன் வயிற்றில் ரவியின் குழந்தையை சுமந்திருந்த போதும் ரவியை விட்டு நிரந்தரமாக விலகிப் போகிறாள். ரவி ராதாவைத் தேடியலைகிறான். ரவி வீட்டைவிட்டு வெளியேறியதும், அவரது தந்தை மேஜர் மரணமடைகிறார். ராதாவின் நினைவாக நாட்டியப்பள்ளி நடத்திவரும் ரவியிடம், அவரது தங்கை மகள் (விஜயகுமாரின் மகள்) மாணவியாகச்சேர்கிறாள். ராதாவைத்தேடியலையும் ஒரே பாடலில் ரவிசங்கருக்கு மளமளவென்று வயதாகிக்கொண்டு போகிறது. அந்தப்பாடலின்போதே சுகுமாரி இறக்கிறார். மனோகர் இறக்கிறார். ரவியின் மாணவியும் வளர்ந்து பெரியவராகிறாள். (அவர்தான் ஸ்ரீப்ரியா).

    வெளிநாட்டிலிருந்து தன் மகனுடன் (இரண்டாவது சிவாஜி) சென்னை வந்திறங்கும் ராதா (ஜெயலலிதா) ஒரு ஓட்டலில் தங்கியிருக்க, அந்த மேற்கத்திய நடன நிகழ்ச்சி நடத்தும் இளைஞன் தன்னைக்கேலி செய்துவிட்டதாக, தன் குருவாகிய ரவியிடம் ஸ்ரீப்ரியா புகார் செய்ய, அதைத்தட்டிக்கேட்கச்செல்லும் இடத்தில் அந்த இளைஞன் தன்னைப்போலவே இருப்பது கண்டு ரவிசங்கர் ஆச்சரியமடைகிறார். அந்த இளைஞனோ இவர் யாரென்று தெரியாமல் போட்டி நடனத்துக்கு அழைக்க, போட்டியில் அந்த இளைஞனை வெல்ல, அப்போது வெளியில் வரும் ராதாவைக்கண்டு திகைப்பதோடு, அந்த இளைஞன் தன் மகன்தான் என்று அறிய, அனைவரும் ஒன்று சேர்வதோடு படம் நிறைவடைகின்றது.

    படம் முழுவதிலும் ஒருவிதமான சோகம் இழையோடிக்கொண்டே இருப்பது இப்படத்தின் சிறப்பு. எங்கஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா ஆகிய கருப்பு வெள்ளைப் படங்களை எடுத்து பெரும் வெற்றி கண்ட அருண்பிரசாத் மூவீஸார் வண்ணத்தில் எடுத்த படம் இது. நடிகர்திலகத்தை வைத்து அவர்கள் தயாரித்த கடைசிப்படம். இயக்குனர் பி.மாதவன் இயக்கத்தில் நடிகர்திலகம் நடித்த கடைசிப்படமும் இதுவே. இப்படம் சரியாகப்போகததன் விளைவாக நடிகர்திலகத்தைப்பற்றி, பி.மாதவன் சில வார்த்தைகளை வெளியில் விட, அதனால் திரு வி.சி.சண்முகத்துக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட, நடிகர்திலகத்தை விட்டு நிரந்தரமாகப்பிரிந்தார். 1971-ல் படப்பிடிப்பு துவங்கி இவரது இயக்கத்தில் வளர்ந்து வந்த 'சித்ரா பௌர்ணமி' படம் கூட இறுதியில் இவரது உதவியாளர்களான தேவராஜ் - மோகன் இயக்கத்திலேயே முடிக்கப்பட்டு வெளியானது.

    'பாட்டும் பரதமும்' படத்திற்கான பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பள்ளியின் ஆண்டுவிழாவின்போது ஜெயலலிதாவின் அறிமுக நடனத்துக்காக, வாணி ஜெயராம் பாடிய
    'மழைக்காலம் வருகின்றது, தேன் மலர்க்கூட்டம் தெரிகின்றது'
    என்ற பாடல். இப்பாடலின்போது உடலமைப்பிலும், உடையமைப்பிலும் கலைச்செல்வி சற்று குண்டாகத்தெரிவார். இந்த நடனத்துக்காக மேலையில் இடுப்பளவு பிரமாண்டமான நடராஜர் சிலை, கண்ணைக்கவரும்.

    இரண்டாவது பாடல், நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் பாடும் டூயட் பாடல். இதுவரை படம் பிடித்திராத அழகான அவுட்டோரில் எடுக்கப்பட்டிக்கும்.
    'மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
    மாப்பிள்ளை பெண்ணுக்கு ஏனிந்த மோகம்'

    டி.எம்.எஸ்ஸும், பி.சுசீலாவும் பாடியிருந்தனர். (இப்படியும் கூட பாடல்கள் இருக்கின்றன என்று தொலைக்காட்சிகள் தெரிந்துகொண்டால் நல்லது. 'மயக்கம் என்ன', 'மதன மாளிகையில்' பாடல்களுக்கு நடுவே இவற்றையும் கொஞ்சம் தேடிப்பாருங்கள்).

    மூன்றாவது பாடல், நடிகர்திலகமும், கலைச்செல்வியும் போட்டியிட்டு ஆடும் பாடல்....
    'சிவகாமி ஆடவந்தால் நடராஜன் என்ன செய்வான்
    நடமாடிப்பார்க்கட்டுமே - கண்கள் உறவாடிப் பார்க்கட்டுமே

    தூக்கிய காலை கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு
    பாக்கியை நான் ஆடுவேன் - அந்த பாக்கியம் நான் காணுவேன்'

    இதுவும் டி.எம்.எஸ்ஸும், சுசீலாவும் பாடிய பாடல்தான். மனதை அள்ளிக்கொண்டு போகும்.
    இதேமெட்டில் அமைந்த 'தூங்காத விழிகள் ரெண்டு' பாடலை தொலைக்காட்சிகளில் தலையில் தூக்கிவைத்து ஆடும் மைலாப்பூர் காம்பியர்களுக்கு, இப்படி ஒரு பாடல் வந்திருப்பது தெரியுமா?.

  4. #23
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'பாட்டும் பரதமும்' - 3

    நான்காவது பாடல், தன்னைவிட்டு மறைந்து போன கதாநாயகியைத்தேடி நடிகர்திலகம் பாடும் 'கற்பனைக்கு மேனி தந்து கால்சலங்கை போட்டுவிட்டேன்' என்ற தொகையறாவோடு துவங்கும்...
    'தெய்வத்தின் தேரெடுத்து தேவியைத்தேடு
    தேவிக்குத் தூது சொல்ல தென்றலே ஓடு'

    என்ற மனதை உருகவைக்கும் பாடல். டி.எம்.எஸ். தனித்துப்பாடியிருப்பார்.
    இப்பாடலின் துவக்கத்தில் இளைஞராக இருக்கும் நடிகர்திலகம், பாட்டினூடே கொஞ்சம் கொஞ்சமாக வயதாகிக்கொண்டே போவார். இதனிடையே காலமாற்றங்களும் காண்பிக்கப்படும். சுகுமாரியின் மரணம், மனோகரின் மரணம் இவற்றை, அவர்களது போட்டோக்களுக்கு மாலை அணிவித்து, காண்பித்துக்கொண்டே போவார்கள்.

    ஐந்தாவது பாடல், இளம்பருவ நினைவுகளோடு இரண்டு மயில்களைப்பார்க்கும்போது, காணாமல் போன காதலியின் நினைவு வாட்ட, அவரது கற்பனையில் இருவரும் மயில்களாகத்தோன்றும்..
    'உலகம் நீயாடும் சோலை
    உறவைத் தாலாட்டும் மாலை'

    இனிய அழகான மெலோடி. பாடலின் இறுதியில் பெண்மயிலை வல்லூறு பறித்துக்கொண்டு செல்லும்போது இயலாமையில் ஆண் மயில் பரிதாபமாகப்பார்ப்பதை நடிகர்திலகம் முகத்தில் காண்பிக்கும்போது நம் விழியோரங்களில் கண்ணீர்.

    (ஏனோ தெரியவில்லை. இப்படத்தில் மணி மணியான பாடல்கள் அமைந்தும் அவை வெளியில் தெரியாமலே போய்விட்டன. மெல்லிசை மன்னரும், அவர்தம் குழுவினரும் இப்படத்தில் உழைத்த உழைப்பு கண்டுகொள்ளாமலே விடப்பட்டது).
    இவைபோக இரண்டாவது நடிகர்திலகத்துக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் ஓட்டலில் ஒரு பாடலும் உண்டு

    நடிகர்திலகமும், கலைசெல்வியும் ஏற்றிருந்த பாத்திரங்கள் நம் மனதில் பரிதாபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டிருந்தன. கூடவே விஜயகுமார், ஸ்ரீப்ரியா, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், சுகுமாரி மற்றும் நகைச்சுவை பகுதிக்கு எம்.ஆர்.ஆர்.வாசு, மனோரமா, பகோடா காதர் ஆகியோரும் நடித்திருந்தனர்.

    படம் 1975 டிசம்பர் 6 அன்று வெளியானது. நன்றாக ஓடி பெரும் வெற்றியடைந்திருக்க வேண்டிய இப்படம், அந்நேரத்தில் நடிகர்திலகத்துக்கு அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா, வைர நெஞ்சம் போன்ற படங்களால் ஏற்பட்டிருந்த சரிவு நிலை காரணமாகவும், அதைவிட முக்கியமாக பெருந்தலைவர் காமராஜரின் மறைவுக்குப்பின் அரசியலில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பெரிய வெற்றியைப்பெற முடியாமல் போனது. ஒரு ஆண்டு முன்னர், அல்லது ஓராண்டு கழித்து வெளியாகியிருந்தால் நிச்சயம் பல இடங்களில் நூறு நாட்களைக்கடந்து ஓடி பெரிய வெற்றியடைந்திருக்கும். காரணம், ஒரு வெற்றிப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் இது.

    'பாட்டும் பரதமும்' திரைப்படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப்படித்த அத்தனை அன்பு இதயங்களுக்கும் என் நன்றி.

  5. #24
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்புச் சகோதரி சாரதா,
    என் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்ற உன்னத திரைக்காவியமான பாட்டும் பரதமும் படத்தைப் பற்றிய தங்கள் பதிவு நெஞ்சைத் தொடுகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய My Song is For You என்ற பாடலே நீங்கள் குறிப்பிட்ட ஸ்ரீப்ரியாவுடனான பாடலாகும். பல காட்சிகள் இப்படத்தில் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக கற்பனைக்கு மேனி தந்து பாடல் அப்போதைய மெல்லிசை மேடைகளில் மிகவும் பிரசித்தம். பல டி.எம்.எஸ். ரசிகர்கள் இப்பாடலை மேடை தவறாமல் பாடியதுண்டு.

    அரசியலால் பாதிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் படங்களில் இதுவும் ஒன்று. திரையரங்கில் இப்படம் பார்க்க விடாமல் பல இடங்களில் மோதல்கள் நடைபெற்றதுண்டு. இப்படம் வெளியான நேரத்தில் தான் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தை விமர்சித்து சுவரொட்டி வெளியிட்டு பரபரப்பூட்டினார் ("கல்லறை காயும்முன்னே சில்லறை தேடிய கணேசா, உனக்கு பாட்டும் பரதமும் ஒரு கேடா") என்ற வரிகள் இன்னும் நினைவிலுள்ளன. அது மட்டுமின்றி சாந்தி திரையரங்கிலேயே ரசிகர்களிடையே புகுந்து நடிகர் திலகத்தை தாறுமாறாக விமர்சித்தவர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிகளெல்லாம் உள்ளத்தின் அடித்தளத்தில் அப்படியே தங்கி விட்டன. அப்போதும் நான் நடிகர் திலகத்தின் பால் உள்ள பாசமும் பற்றும் மாறாமல் அவரை விட்டுக் கொடு்க்காமல் பேசுவேன். அது மட்டுமன்றி அவர்களிடம் சவாலும் விட்டிருக்கிறேன். உங்களுடைய அரசியலை நம்பி நடிகர் திலகம் இல்லை. அவருடைய படங்களை உங்கள் கட்சியினர் பார்த்துக் கூட இருக்க மாட்டார்கள். சொல்லப் போனால் இனிமேல் தான் அவர் பல சாதனைகளைப் படைக்கப் போகிறார் என்று கூறியிருக்கிறேன் (இவையெல்லாம் உண்மையில் நடந்தது, வெறும் வார்த்தைக்காக கூறியதில்லை.) அதே சாந்தி திரையரங்கில் இன்றும் நாம் கூடுகிறோம். அதே சாந்தியில் இன்றும் நடிகர் திலகத்தின் படம் வெற்றி நடை போட்டிருக்கிறது. ஆனால் அன்று அவரை இழித்தோரும் பழித்தோரும் காணாமல் போயினர். பாட்டும் பரதமும் படம் மட்டுமன்றி அதைத் தொடர்ந்து வந்த உனக்காக நான் படமும் பாதிக்கப் பட்டது. ஆனால் உத்தமன் படம் பெற்ற வெற்றி ஓரளவு மன சாந்தி தந்தது. 1977ல் தீபம் அடைந்த மகத்தான வெற்றி, அதைத் தொடர்ந்து அண்ணன் ஒரு கோயில் மகளிரிடம் பெற்ற அபிமானம், இவையெல்லாம் தாண்டி திரிசூலம் அடைந்த இமாலய வெற்றி என்னுடை கணிப்பை சரியானதாக்கி இன்றளவும் உள்ளத்துள் அந்த சோதனையான நாட்களை எண்ணிப் பார்க்க வைக்கின்றது.

    சகோதரி சாரதா மற்றும் அனைவரும் என்னை மன்னிக்கவும். படத்தைப் பற்றி எழுதாமல் திசை மாறியதாக தவறாக எண்ண வேண்டாம். பாட்டும் பரதமும் படம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பின் எதிரொலியே இந்த நினைவுகளின் பரிமாற்றம்.

    அன்புடன்

    ராகவேந்திரன்்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #25
    Senior Member Regular Hubber kumareshanprabhu's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    can we discuss on avanthanmanithan

  7. #26
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ஜோ சார்,

    நமது நடிகர் திலகம் திரியின் முன்னோடிகளில் தாங்கள் முதன்மையானவர். எனவே, தொடர்ந்து தங்களின் மேலான பங்களிப்பையும், மேன்மையான பதிவுகளையும் அவசியம் அளிக்குமாறு மிக மிக உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #27
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் நௌ சார்,

    தாங்கள், திரு.ஜோ அவர்களைப் போலவே, முந்தைய பாகங்களின் முக்கிய இணைப்புக்கள் அனைத்தையும் முதல் பக்கத்திலேயே அளித்தமைக்கு,

    முத்தாய்ப்பான நன்றிகள்!

    டியர் செந்தில் சார்,

    பாராட்டுக்கு நன்றி! இங்குள்ள ஒவ்வொருவருமே ஒரு தூண் தான்!

    டியர் குமரேசன் பிரபு சார்,

    தங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #28
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    நடிப்பு நுணுக்கங்கள் அனைத்தும் அறிந்த, கலைப் பல்கலைக்கழகத்தின் நிழற்படத்தை, கலை நுணுக்கங்களோடு, பல்கலைக்கழக வடிவ இலச்சினில் பாந்தமாகப் பொருத்திய தங்களுக்கு, இத்திரியின சார்பில் "டாக்டர்" பட்டமே வழங்கலாம்.

    டாக்டர் ராகவேந்திரன் வாழக! வாழ்க! வளர்க அவர்தம் திருப்பணி!! வெல்க அவர் புரியும் திருத்தொண்டு!!!

    இத்திரியில் பங்களிப்பு நல்கும் நாம் அனைவரும் ஆண்டுதோறும் ஒரு முறையேனும், ஏதேனும் ஒரு நாளில், ஒரு இடத்தில், ஒரு நேரத்தில் நிச்சயம் ஒன்று கூடி அளவளாவ வேண்டும். தங்களது கருத்தை முதல் ஆளாக அடியேன் வழிமொழிகிறேன்!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #29
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சகோதரி சாரதா,

    "பாட்டும் பரதமும்" பற்றிய 'திறனாய்வு' 'விமர்சனம்' எப்பொழுதும் போல் "அற்புதம்" "அபாரம்". நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் தங்களின் இத்திறனாய்வு, சச்சின் அடித்த செஞ்சுரி போல் செம கலக்கல்!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #30
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    சென்னை சாந்தி தியேட்டர் நிகழ்வுகள் - 7
    [புதிய பறவை : 25.7.2010 : ஞாயிறு மாலைக் காட்சி]

    பேலஸுக்கு கோபாலுடன் திரும்பும் லதா, தனது தந்தையிடம் கோபாலுக்கு BP இருப்பதைப் பற்றிக் கூறுகிறார். உடனே ராமதுரை கோபாலிடம் காலாகாலத்திலே ஒரு கல்யாணம் செய்து கொண்டா, Happy ஏறி BP இறங்கிவிடும் என்கிறார். மூவரும் உணவருந்த ஆயத்தமாக, கோபாலை மட்டும் தொலைபேசி மணி அழைக்கிறது. திகைப்புடன் கண்களை அகல விரித்து, அதிர்ச்சியுடன் புருவங்களை மேலே உயர்த்தி, மணி அடிக்கும் ஒலியை ராகமாக வைத்துக் கொண்டு, தாளம் தப்பாமல் இரு அடி பக்கவாட்டில் எடுத்து வைத்து அவர் ரிசிவரை எடுக்கும் லாவகம் இருக்கிறதே, ஆஹா! ஒயிட்-அன்ட்-ஒயிட் ப்ரோஃபைல் போஸிலும் தான் அவர் எத்தனை அழகு. 360 டிகிரியிலும் அழகாகத் தெரியக்கூடியவர், மனித குலத்திலேயே இந்த மனிதபுனிதர் ஒருவராகத்தான் இருக்க முடியும். ப்ரோஃபைல் போஸுக்கு பிரமாதமாக கற்பூரம் காட்டப்படுகிறது! காலர் ரங்கன் காலரை பிடிக்காத குறையாக கோபாலை டார்ச்சர் செய்ய, ஃபோனை கட் செய்கிறார் கோபால். திரையில் கோபாலுக்கு அஷ்டமத்து சனி துவங்கி விட்டதென்றால், இங்கே அரங்கில் ரங்கனுக்கு அர்த்தாஷ்டம சனி துவங்கி விட்டது. ஆம், அரங்கில் ரங்கனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பமாகிவிட்டது.

    அடுத்த காட்சி. நெருங்கிய உள்ளங்கள் உறங்காமல் நெருங்குகின்றன. ஏஞ்சலைப் போல இறங்கி வரும் சரோ, அண்ணலைப் பார்த்து, "தூங்கலையா" எனக் கண்களை மூடித்திறந்து கேட்கிறார். அதற்கு அண்ணல் சரோவை, பார்வையில் ஒரு அள அளந்து கொண்டே, ஊஹூம் என லேசாக தலையசைத்து, "தூக்கம் வராம விடியிற வரைக்கும் முழிச்சிக்கிட்டிருக்கிறதும், தூங்கும் போது பாதி ராத்திரியில முழிச்சிக்கிறதும் எனக்கு பழைய அனுபவம்" என சாலிடாக சொல்லிக் கொண்டே, "நீ தூங்கலையா?!", என வினவ,

    அபிநயம் : "முயற்சி செஞ்சேன், முடியல"

    அண்ணல் : "ஏன்?"

    அபிநயம் : "தெரியலை"

    அண்ணல் : மௌனம்

    அபிநயம் : "இது எனக்கு புது அனுபவம்!"

    மணிரத்ன வசனங்களுக்கு, ரத்தினம் போன்ற இம்மணியான காட்சி முன்னோடியோ!

    ஹென்றி டேனியலின் ஹேட்சம் குரலோடு இணைந்து பிஜிஎம் பிரமாதப்படுத்துகிறது.

    அன்பே உருவான அண்ணலின் சிகை நடிக்க, அவர் சிகரெட் புகை நடிக்க, இனிமையான இசையால் உறக்கத்தைத் தழுவும் கண்கள் நடிக்க, உறங்குவதற்காக மூடும் கண்களின் இமைகள் நடிக்க , அண்ணலின் உறக்கமே நடிக்கிறது.

    தெய்வம் இருக்கையில் அனந்த சயனம்! பக்தர் கூட்டம் இருக்கை நோக்கி அமைதிப் பயணம்!

    (தொடரும்...)


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

Page 3 of 199 FirstFirst 123451353103 ... LastLast

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •