Page 199 of 199 FirstFirst ... 99149189197198199
Results 1,981 to 1,983 of 1983

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7

  1. #1981
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,284
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    சிவந்த மண் படத்தில் பட்டத்து ராணி பாடல் டி.வியில் ஓடிக் கொண்டிருந்தது.
    enna oru coincidence.
    naan inga "paattu paadava" engira nigazhchi paarththu kondirukkEn. indraikku LRE special. ippathaan oru ammaa pattaththu raani paatta paadi mudichaanga !
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1982
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    நாலைந்து நாட்களாக இந்தப்பக்கம் வர முடியவில்லை. ஒரு சிறிய சுனாமியே அடித்து ஓய்ந்திருக்கிறது. நல்லவேளை சேதாரம் எதுவுமில்லை. மாறாக ஒற்றுமை பலப்பட்டிருக்கிறது.

    முரளியண்ணாவின் முயற்சிக்கு மிக்க நன்றி. அவரது வார்த்தைகளை செவியேற்று களத்துக்கு திரும்பிய ராகவேந்தர், ஜோ, கார்த்திக் ஆகியோருக்கு நன்றி. ('என்ன இருந்தாலும் கோடீஸ்வரன் வார்த்தைன்னா தனி மரியாதைதான்' காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா).

    டியர் தனுஷ்,

    உங்களுடைய பதிவுகளுக்கு எப்போதுமே நமது திரியிலும், நமது இதயங்களிலும் தனி மதிப்பு உண்டு. உங்களது பங்களிப்புகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.

    டியர் பம்மலார்,

    சரியான நேரத்தில் நீங்க போஸ்ட் செய்த 'ஒண்ணாயிருக்க கத்துக்கனும்' பாடல் அருமையான டைம்லி ஆக்ஷன். சூப்பர்ப். கேள்வி பதில் பதிவுகளும் அருமை.

    டியர் ராகவேந்தர்,

    ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற இருக்கும் உங்கள் நிகழ்ச்சி முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்களது பங்களிப்பு எப்போதுமே சிறப்பானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. (இனி ஒரு தரம் 'போறே'ன்னு சொல்லிப்பாருங்க, அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது)

    டியர் பார்த்த்சாரதி,

    அற்புதமான ஆய்வுக்கட்டுரைகள். 'நலந்தானா' பாடல் ஆய்வு பற்றி படித்து முடித்து விட்டுப் பார்த்தால் உடனே 'பட்டத்து ராணி' பாடல் பற்றிய ஆய்வு. என்ன ஒரு வேகம். என்ன ஒரு தெளிவு. ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் விடாமல் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அருமை, அட்டகாசம்.

    டியர் ஜோ & கார்த்திக்,

    உங்கள் பதிவுகளை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. மறுபடியும் முழு வீச்சில் இறங்குங்கள்.

    மற்றவர்களின் பதிவுகளுக்கும் பங்களிப்புகளுக்கும் மிக்க நன்றி.

  4. #1983
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    'மெழுகு வர்த்தி எரிகின்றது' (கௌரவம்)

    ஒரு திரைப்படத்தில் சில பாடல்கள் ஓகோவென்று உச்சத்திற்குப் போகும்போது, மற்ற பாடல்கள் பின்தங்கி, அவற்றுள் சில நல்ல பாடல்கள் நிழலுக்குள் தள்ளப்படுவதுண்டு. நடிப்புச்சக்கரவர்த்தியின் கௌரவம் படத்தில் அப்படி, மற்றவர்களால் போதிய அளவு சிலாகிக்கப்படாத ஒரு பாடல்தான் 'மெழுகு வர்த்தி எரிகின்றது' பாடல்.

    பெரியவரின் இரண்டு பாடல்களான 'பாலூட்டி வளர்த்த கிளி' பாடலும், 'நீயும் நானுமா கண்ணா' பாடலும் ரசிகர்களின் மனதில் டாப்பில் போய் அமர்ந்துகொண்டன. இப்படத்தின் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவோர் யாவரும் இவ்விரண்டு பாடல்களையே குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். அதையடுத்து சின்னவரான கண்ணனின் பாடல்களில் கூட சட்டென்று யாவரும் நினைவில் கொண்டுவருவது, அவருக்கும் ராதாவுக்கும் (உஷா நந்தினி) ஒரே டூயட் பாடலான 'யமுனா நதியிங்கே ராதை முகமிங்கே' பாடல்தான். அதற்கு அடுத்த இடத்தைப்பிடிப்பது கூட, மெல்லிசை மன்னர் தன் இசையால் டாமினேஷன் செய்த 'அதிசய உலகம் ரகசிய இதயம்' பாடல்தான். ஐந்தாவது இடம் போனால் போகிறதென்று 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடலுக்கு.

    ஆனால் பெரியவரின் இரண்டு ஆக்ரோஷமான பாடலுக்கும், சின்னவரின் நளினமான டூயட் பாடலுக்கும், ஈஸ்வரியின் துள்ளல் பாடலுக்கும் இடையே... மனதை வருடும் அமைதியான பாடலாக அமைந்தது மெழுகுவர்த்தி பாடல்தான்.

    இதற்கு முன் எத்தனையோ பாடல்களில் பியானோ வாசிப்பவராக நடித்திருக்கிறார் நடிகர்திலகம். பாசமலர், புதிய பறவை, எங்க மாமா இப்படி நிறைய. ஆனால் அவைகளிலெல்லாம் முடிந்த வரையில் தன் உடல் மொழியால் ஸ்டைல் காட்டுவார். ஆனால் இப்பாடலில் அப்படி எந்த ஸ்டைலும் உற்சாகத்துள்ளலும் இல்லாமல் மிக அமைதியாக வாசித்திருப்பார். காரணம் கதைப்படி தொழிலில் கருத்து வேறுபாடால் தன் உயிருக்குயிரான பெரியபாவையும் பெரியம்மாவையும் பிரிந்து ஓட்டலில் தங்கியிருக்கிறார். இருப்பினும் காதலியின் பிறந்தநாளின்போது பாட வேண்டிய சூழல். அப்படிப்பட்ட நிலையில் ஸ்டைல் காட்டினால் அது அபத்தமாக அல்லவா ஆகிவிடும். அதை உணர்ந்தே காதலிக்கு வெளிக்காட்டாமல் மனதில் சோகத்தை அடக்கிக்கொண்டு ரொம்பவே இயல்பான பெர்பார்மென்ஸை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார்.

    ஒருபக்கம் காதலி கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடும்போது, இவர் லேசாக திரும்பிப் பார்த்தபடி, கருமமே கண்ணாக பாடிக்கொண்டிருப்பதும், தனக்கு கேக் ஊட்ட வரும் காதலியின் கையைப்பிடித்து அவளுக்கே ஊட்டி விடுவதும், அந்த நேரத்தில் கூட அளவுக்கதிகமாக சிரித்து விடாமல் அடக்கி வாசித்திருப்பதுமாக நம மனதை அப்படியே உருக வைப்பார்.

    மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
    புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
    புதுவேகம் எழுகின்றது பூஞ்சோலை அசைகின்றது

    கவியரசரின் என்ன அழகான வரிகள், மெல்லிசை மன்னரின் எவ்வளவு இனிமையாக மனதை வருடும் மென்மையான இசை, இவரா பெரியவருக்கு அவ்வளவு ஆக்ரோஷமாகப்பாடினார் என்று வியக்க வைக்கும் வண்ணம் டி.எம்.எஸ்ஸின் அமைதியான குரல், அமைதி தோய்ந்த முகத்தோடு பாடிக்கொண்டிருக்கும் நடிகர்திலகம், அவர் பாடுவதை முகத்தில் ஆவலும் கனிவும் பொங்க பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் உஷா நந்தினி, இந்தக்கூட்டத்தின் நடுவே கேக் தின்னுவதும், பரிசுப்பொருளைத் திருடுவதுமாக சேட்டை செய்துகொண்டிருக்கும் நாகேஷ், இப்படி பலதரப்பட்ட விஷயங்களுடன் பாடல் தொடர்ந்து கொண்டிருக்கும்....

    அன்பு என்னும் கோயில்தன்னிலே
    பாசம் என்னும் தீபம் தன்னிலே
    உள்ளம் ஒன்று மயங்குகின்றது
    தன்னை எண்ணி கலங்குகின்றது
    தன்னை எண்ணி கலங்குகின்றது

    இது ஒன்றும் வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட பாடல் அல்ல, ஒரு வீட்டின் நடுக்கூடத்தில் படமாக்கப்பட்டதுதான். ஆனாலும் கூட தன்னுடைய கேமராவை லாவகமாக அங்குமிங்கும் சுழற்றி அந்த இடத்தை அங்குலம் அங்குலமாக கவர் செய்திருக்கும் ஒளிப்பதிவு இயக்குனர் வின்சென்ட், பியானோ பாடல்கள் என்றாலே சிறப்பு கவனம் செலுத்தும் மெல்லிசை மன்னர், இவர்களை ஒருங்கிணைத்து பாடலை அழகுற பாடமாக்கியிருக்கும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம், இப்படி எல்லோரது கூட்டு முயற்சியில் பாடல் வெகு சூப்பராக அமைந்து விட்டது.

    வழக்கமாக கூடத்தின் நடுவே இருக்கும் பெரிய பியானோ, அதனைத் திறந்து வைத்து ஒரு கோலால் முட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும் டாப் என்றில்லாமல் சுவரோடு ஒட்டிய அடக்கமான பியானோ, அதன் முன்னே எந்த பந்தாவான உடையும் இல்லாமல் ஜஸ்ட் ஒரு வெள்ளை பேண்ட், வெளிர் ரோஸ் நிற அரைக்கை சட்டையணிந்து சிம்பிளாகக் காட்சி தரும் நடிகர்திலகம் என எல்லாம் ஒருங்கிணைந்து நம் மனதைக் கவர்ந்த பாடலாக இப்பாடல் காட்சி அமைந்து விட்டது.

    என் மனதைக்கவர்ந்த 'மெழுகுவர்த்தி எரிகின்றது' பாடல் காட்சியை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
    Attached Images Attached Images

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •