Page 8 of 18 FirstFirst ... 678910 ... LastLast
Results 71 to 80 of 175

Thread: just sharing

  1. #71
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #72
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வேலூரில் உணவோடு தமிழையும் சேர்த்தே பரிமாறும் ஒரு உணவகம்.


    வேலூருக்குஒரு பயணம் சென்றிருந்த போது உணவுக்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துர்காபவன் என்னும் உணவு விடுதியில் நுழைந்தோம். உணவு கிடைக்குமிடத்தில் கண்டகாட்சி எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தஉணவகத்தில் ஒரு பலகையில் திருக்குறளும் , அதன் விளக்கமும்எழுதப்பட்டிருந்தது. கூடவே அந்த நாளுக்கான அறிவுரையும் தமிழில்எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பின் சும்மா இருப்போமா, உடனே நம் படக்கருவியை எடுத்து அந்த காட்சியை படம் பிடித்தோம். பின்பு கடை உரிமையாளரிடம்பேச்சுக் கொடுத்தோம்.


    அவர்கூறியதாவது, வயிற்றுப் பசிக்கு உணவு அருந்த இங்கு நிறைய பேர்வருகிறார்கள். எங்கள் உணவகத்தை போல் பல உணவு விடுதிகள் வயிற்றுப் பசிக்குஉணவு வழங்குகிறார்கள். நாங்கள் வயிற்றுக்கு மட்டுமின்றி அறிவுக்கும் உணவுகொடுக்கும் விதமாக தினமும் ஒரு திருக்குறளையும், அதன் விளக்கத்தையும்பலகையில் எழுதி வருகிறோம். இதனால் பலரும் ஒவ்வொரு நாளும் ஒரு நல்லசெய்தியை அறிந்து கொண்டு செல்கிறார்கள். எங்களால் முடிந்த வரை இது போல்தமிழ் பணியை செய்து வருகிறோம் என்று கூறினார். நாங்களும் வயிறார உண்டு,எங்கள் அறிவுப் பசியையும் சேர்த்தே தனித்துக் கொண்டு விடுதிஉரிமையாளர்களுக்கு நன்றி சொல்லி, அவர்களையும் படம் எடுத்து விட்டுஅங்கிருந்து நகர்ந்தோம்.


    இந்தஉணவகத்தில் , மொழியையும் அறிவையும் வளர்பதற்கு பல தமிழ் நூல்களையும்விற்பனைக்கு வைத்துள்ளனர். இப்படி பல வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் சார்ந்தசமூக பொறுப்பை உணர்ந்து இத்தகைய உயர்ந்த செயல்களை செய்ய முன் வந்தால், நம்தமிழ் நாட்டில் மொழியும், அறிவும் சேர்ந்தே மென்மேலும் வளரும் என்பதில்ஐயமில்லை.

    http://www.newsalai.com/2012/04/blog...V-3Tc.facebook
    --
    "அன்பே சிவம்.

  4. #73
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    FeTNA Silver Jubilee Invitation

    "அன்பே சிவம்.

  5. #74
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
    கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம். உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூ பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது fedex, e bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் e bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் e bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.





    recently a man in the name of k.r. Sridhar had shown to the world his bloom box which is the most talked about fuel cell-based energy source of 2010. The project was started about eight years ago with a capital of about $400 million. The media was taken aback by the press conference in silicon valley with people like california governor arnold schwarzenegger as part of the crowd. The little boxes that is believed to change the world in the future were first used by big companies like fedex, google, and others. The whole concept of the boxes are that they are like tiny power plants set in your own backyard. They are mainly run by any fuel source like natural gas, solar energy and others as they are used minimally to create a reaction with oxygen to convert it into electrical energy. Basically the power of the bloom box come from the ceramic plates that are piled on top of each other and they produced very clean electricity for your consumption.


    k.r. Sidhar, who's originally from india, is the face of bloom energy, the company that invented the bloom box. As an advisor for nasa, k.r. Sidhar also led a team of scientists to develop an equipment so that human could live in mars. It is through that mission that k.r. Was able to conceptualize the now known device he calls bloom box.



    it is quite amazing that this scientist can actually make a unit as large as bread loaf, which can produce electricity that can power an american home. Although this device now is overly hyped, many people are supporting him in his endeavor to promote clean energy that's simple to use, safe and uses common materials. The business of manufacturing these fuel cells that can earn about trillion dollars did come unfazed by skeptics. Their reason is that these fuel cells are so expensive until they can be produced in mass scale. Although google are already using them in their headquarters, they are not confident enough to try using it in their servers where their investments are holed up. There are also experts that believe that if this company would unveil that their equipment produces much cheaper alternative source, then it can survive the market race.



    prior to founding bloom energy, dr. Sridhar led a team developing technologies to sustain life on mars for nasa. For his work, fortune magazine cited him as “one of the top five futurists that are inventing tomorrow today”. Before this dr. Sridhar was a professor of aerospace and mechanical engineering as well as director of the renowned space technologies laboratory (stl) at the university of arizona. dr. Sridhar received his bachelors degree in mechanical engineering with honors from the university of madras, india, as well as his m.s. In nuclear engineering and ph.d. In mechanical engineering from the university of illinois, urbana-champaign.
    dr. Sridhar has served on many technical committees, panels and boards. He has over fifty publications and is a sought-after speaker and advisor on energy and environmental issues. He is outspoken in his belief that the climate crisis we face is also a tremendous economic opportunity, that energy policy must be technology-neutral and performance-based and that we can solve our current energy problems through a combination of technology, innovation and conservation.




    "அன்பே சிவம்.

  6. #75
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "அன்பே சிவம்.

  7. #76
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஆத்திசூடி

    "அன்பே சிவம்.

  8. #77
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    தமிழுடன் தொடங்கும் இலண்டன் ஒலிம்பிக் விளம்பரம் !

    http://www.youtube.com/user/london2012
    "அன்பே சிவம்.

  9. #78
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    அ, ஆ. ...

    "அன்பே சிவம்.

  10. #79
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    12,000 year old city of Lord Krishna found...

    "அன்பே சிவம்.

  11. #80
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    "அன்பே சிவம்.

Page 8 of 18 FirstFirst ... 678910 ... LastLast

Similar Threads

  1. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  2. Sharing Thoughts on Uthiri Pookkal
    By Plum in forum Tamil Films
    Replies: 146
    Last Post: 6th November 2011, 06:23 AM
  3. Meet People Online Through Music Sharing
    By jasmine11 in forum Classifieds
    Replies: 0
    Last Post: 31st January 2008, 12:32 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •