Results 1 to 1 of 1

Thread: தாய்ப்பால் சுரக்கும் பசுக்கள்!

  1. #1
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    தாய்ப்பால் சுரக்கும் பசுக்கள்!

    தாய்ப்பால் சுரக்கும் பசுக்கள்! அசத்திய விஞ்ஞானிகள்

    மனித முலைப்பாலை சுரக்கக்கூடிய வகையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

    மனித மரபணுத் தன்மையோடு தாய்ப்பாலுக்கு ஒத்த சக்தி கொண்ட பாலை சுரக்கக் கூடிய 300 பசுக்கள் உருவாக்கப்பட்டு அவை பாலையும் தர ஆரம்பித்துள்ளன.

    சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் நிங் லீ தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழுவே சீனாவின் விவசாயப் பல்கலைக் கழகத்தில் இந்தப் பசுக்களை உருவாக்கியுள்ளனர்.

    இன்னும் பத்தாண்டுகளில் சுப்பர்மார்க்கட்டுக்களில் பொதி செய்யப்பட்ட முறையில் இந்த தாய்ப்பால் பசுப்பாலைப் பெறக்கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த பசுப் பாலானது தாய்ப்பால் கொண்டிருக்கும் அனைத்துப் போஷாக்குகளையும் அதே அளவாகக் கொண்டிருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    தாய்ப்பால் வழங்க முடியாத அதே நேரம் பால் மாக்களையும் பாவிக்க விரும்பாத தாய்மாருக்கு இது ஒரு சிறந்த மாற்றீடாக அமையும் என்றும், பாரம்பரியமான பால்மா சூத்திரத்துக்கு இனி அவசியம் இருக்காது என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

    ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு பிரிட்னைச் சேர்ந்த தாய்ப்பால் ஊக்குவிப்பு பிரசாரகர்களால் கண்டிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலும்,பசுப்பாலும் ஒன்றாக முடியாது.தாய்ப்பால் பிள்ளையின் அடிப்படை வளர்ச்சிக்கு மட்டுமன்றி அதன் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தி வலுவடையவும் இன்றியமையாததாகும்.

    தாய்ப்பாலை விட பசுப்பால் கனமானது, இலகுவில் ஜீரணம் ஆகாது. குழந்தைகளின் அடிப்படை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு மற்றும் காபோஹைதரேட் என்பன அதில் குறைவாகவே உள்ளன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் குளோனிங் முறையைப் பயன்படுத்தி மனித மரபணுக்களை பசுக்களுக்குள் செலுத்தி அவற்றின் மரபணுவில் மாற்றங்களைச் செய்தே இந்த பசுத் தாய்ப்பாலை உருவாக்க முடிந்துள்ளதாக பேராசிரியர் லீ விளக்கமளித்துள்ளார்.
    Last edited by aanaa; 6th April 2011 at 03:20 AM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Replies: 0
    Last Post: 19th October 2011, 11:29 AM
  2. Replies: 4
    Last Post: 16th May 2011, 05:30 PM
  3. Replies: 0
    Last Post: 29th April 2011, 02:27 AM
  4. Replies: 24
    Last Post: 16th February 2011, 11:08 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •