Page 20 of 21 FirstFirst ... 1018192021 LastLast
Results 191 to 200 of 203

Thread: Anjali - The actress

  1. #191
    Senior Member Seasoned Hubber hattori_hanzo's Avatar
    Join Date
    Nov 2007
    Posts
    640
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    Ellaam kedi billaa killaadi ranga pasanga

    But don't worry anjali fans... engeyum eppodhum dharmam thaan vellum
    Sellaadhu Sellaadhu. KBKR not Anjali plim.

    Anjali thaaimozhi telunganaalum avanga Katradhu Thamizh. Vathikkuchi maadhiri irundhavangala namma Thoonga Nagaram oru Madha Gaja Rani aakkiduchu. Idhu endha Rettai Suzhi kaaranoda Settaiyo?
    ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #192
    Senior Member Diamond Hubber SoftSword's Avatar
    Join Date
    Apr 2007
    Location
    Vels
    Posts
    8,063
    Post Thanks / Like
    good one..
    Sach is Life..

  4. #193
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    http://www.facebook.com/vasanta.bala...99519996727289

    கற்றது தமிழ் படம் பார்த்த போது நெசமாத்தான் சொல்றீயா என்று அஞ்சலி பல இடங்களில் கேட்கும் போது எனக்கு மிக மானசீகமான பெண் கேட்பது
    போன்ற சித்திரத்தை ஏற்படுத்தியது.பறவையே எங்கு இருக்கிறாய் என்ற பாடலில் அவள் சுடிதாரின் நிறம் வாழ்க்கைக்கு மிக நெருக்கமானதுமான பொருளாக உணர முடிந்தது. சுடிதாரை வேண்டாமுன்னு சொல்லும் போது மனஎழுச்சியூட்டும் சித்திரங்களை எழுப்பியடியிருந்தாள்.உனக்காக தான் இந்த உயிர் உள்ளது என்ற பாடல் எல்லையற்ற மனதின் சந்தோச பெருவெள்ளத்தில் காதலை தேடும் ஒருவனின் மன வெளியை பிரதிபலிப்பதாக இருந்தது. அதில் அஞ்சலி உருவாக்கிய சித்திரங்கள் ஒரு இலக்கிய நினைவூட்டலாக இருந்தது. ரத்தமும் சதையுமான பல்வேறு பெண்களின் சித்திரங்களை
    அஞ்சலி தனக்குள் கொண்டிருந்தாள். ஒரு வானம் பல்வேறு வண்ணங்களை எழுப்பி எழுப்பி காட்டுவது போல பல்வேறு மத்திய ரக பெண்களில் ஒன்றாக எனக்கு தோன்றினாள்.
    இப்படியாக அந்த படம் என் மனசுக்குள் ஆயிரம் எண்ணங்களை உசுப்பி விட்டது. மஹாராஸ்ராவில் எங்கோ மாமாவின் வீட்டில் அவள் தங்கியிருப்பாள் ஜீவா போய் பார்க்க போவார் அதன் பிறகு ஒரு விபசாரவிடுதியில் அஞ்சலியை பார்ப்பான். இப்படியாக அவளின் துயரம் இருளுக்கும் இருண்மைக்கும் புதிருக்கும் நடுவே ஒரு முறுக்கப்பட்ட கயிறாக சுற்றியபடியேயிருக்கும். இப்படியாக இந்த படம் பல்வேறு மின்மினிகளை மனதிற்குள் பறக்கவிட்டபடி நிறங்களை உதறியபடியே இருந்தது. ஒரு புதிய பெண் இத்தனை அழுத்தமாக அழகாக பல்வேறு விதமான கால கட்டங்களை மனதில் கொண்டு வந்து நடித்துவிட்டாளே என்று தோன்றியது. நம்பிக்கையான புதிய வரவு என்று தோன்றியது

    அங்காடித்தெரு படத்திற்காக சேர்மக்கனி கதாபாத்திரத்தில் நடிக்க பல புதிய பெண்களை பார்த்துக்கொண்டிருந்தேன், கதைநாயகன் மகேஷ் என்று முடிவானவுடன் இது காதல் படம் இவனும் புதுசு
    கதாநாயகியும் புதுசுன்னா இரண்டு பேரும் தயக்கத்திலேயே கூச்சத்திலே காதல் காட்சிகளில் விலகி விலகி நடித்து காதலை கொண்டு வராமல் சொதப்பி விடுவார்கள் என்று எண்ணினேன். உடனே என் மனசுக்குள் வந்த ஒரு உருவம் அஞ்சலி. அவளை பார்க்க வேண்டும் என்று அழைத்தேன், அவள் அம்மா(இப்போது சித்தி)வுடன் ஜிலுஜிலு சுடிதாருடன் வந்தாள். உடனே குழப்பமாக இருந்தது.வேறு சுடிதார் வாங்கி வந்து டெஸ்ட் சூட் பண்ணினேன், கதை நாயகன் மகேஷ் பெண் என்பதால் தயங்கினான், விலகி நின்றான், அவன் தயக்கத்தை புரிந்து கொண்டு நான் பிரச்சினையை விளக்காமலே அஞ்சலி அந்த நெருக்கத்தை வரவழைத்து நடித்தாள். மிக அற்புதமான ரசாயன மாற்றம் இருந்தது, இருவரும் நல்ல ஜோடி என்று தோன்றியது. உடனே அஞ்சலியை தேர்வு செய்தேன். படப்பிடிப்பு துவங்கியது. மெல்ல மெல்ல சேர்மக்கனியாக மாறத்துவங்கினாள் முதல் 3 நாட்களில் படத்தின் அதி முக்கியமான காட்சியை படமாக்கும் போதே அற்புதமான நடிப்பை வழங்கத்துவங்கினாள், என் மனம் மலர்ந்தது கதைக்கு உயிர் வந்தது, மகேஷ் சுமாராக நடிக்கும் பல இடங்களில் அஞ்சலி துரக்கி சாப்பிடத்துவங்கினாள், கவனம் அவள் பக்கம் திரும்பியது, மகேஷ் நடிக்க தயங்கிய நெருக்கமான காதல் காட்சிகளில் அவனின் கூச்சத்தை இவள் போக்கினாள்.
    இடைவிடாது அவனிடம் பேசிபேசி நெருக்கத்தை வரவழைத்துக்கொண்டாள் அங்காடித்தெரு திரைப்படத்தில் காதல் இத்தனை அழுத்தமாக வந்தது அஞ்சலியால் தான். பாசாங்கற்ற பெண். புத்திசாலி. ஒரு இயக்குனரின் கதாநாயகி.

    காலம் அவள் நடிப்பைக்கண்டு கொண்டது. அவளின் உலகம் கனவின் மர்ம வெளிகளாலும் பைத்திய நிலையின் பல்வேறு புதிர்களாலும் நிலைகளாலும் கட்டப்பட்டவை. கனவுக்கும் நனவுக்குமிடையே யதார்த்தத்திற்கும் புனைவிற்கும் இடையே எப்போதும் பெருகி கரைபுறண்டு ஓடிக்கொண்டிருக்கும் ரகசிய நதியின் கரையில் அவள் வாழ்கிறாள், வாழ்வின் சூட்சுமமான முடிச்சினை அவிழ்த்தபடி
    காலத்தின் சரித்திரத்தின் எல்லையற்ற விகாசத்தில் அவள் அத்தனை துயரத்தோடு சஞ்சரித்தபடியே இருக்கிறாள், கடந்த காலத்தின் மெல்லிய ஏக்கம் கனவு துயரம் ரகசியம் அவளின் முகத்தில் தெரியாதபடி புன்னகையால் மறைத்தபடியிருந்தாள், அவளை பற்றிய அத்தனை சித்திரங்களும் மாய காற்றில் மிதந்தபடியிருக்கின்றன. அவள் ஏக்கத்தின் வெக்கையும் கனவின் பெருவிம்முதலும் எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டவளாக அவள் இருக்கிறாள் விதியின் மாபெரும் கதை. அவள் விநோதமானதும் கொடூரமானதுமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அழகியல் வரம்புக்குள் சிக்காத எத்தனையோ அழகிகளில் அவளும் ஒருத்தி, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்லை பாடலில் வரும் சிறுசிறு ரியாக்சன் அத்தனை அழகாக இருக்கும்.

    இன்று அவள் மீது சுமத்தப்படும பிம்பங்கள் கனவுகளற்ற உலர்ந்த விச மொழியில் உள்ளது, விரிக்கப்படும் அத்தனை கனவுகளும் மாய மொழியிலும் வியாபார நிமிர்த்தமான மீறல்கள் கொண்டதாக உள்ளது.

    திரைக்குடும்பத்தில் இல்லாத ஒரு பெண் திரைத்துறையில் நுழைய எத்தனை ஒரு பெரிய விலை கொடுக்கவேண்டியிருக்கிறது. நிறைய மர்மமான பொய்களையும் புதிர்களையும் அவிழ்க்க வேண்டியிருக்கிறது. அதீத புனைவுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது இந்த கதைகளை கேட்கும் போது அந்த மனிதர்களை பார்க்கும் போது வாழ்வின் மதிப்பீடுகளும் கனவுகளும் உடைந்து நொறுங்குகின்றன.

    அவள் பிரச்சினைகள் அத்தனையும் தீர்ந்து புதிதாக மீண்டு வர இறையை வேண்டுகிறேன்,
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  5. #194
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,366
    Post Thanks / Like
    got confused. Watched too many movies recently. Settai kku badhilaa KBKR nu sollitten
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  6. #195
    Senior Member Veteran Hubber 19thmay's Avatar
    Join Date
    Sep 2009
    Location
    South Chennai
    Posts
    2,039
    Post Thanks / Like
    பறவையே எங்கு இருகிறாய்?

  7. #196
    Senior Member Veteran Hubber Cinemarasigan's Avatar
    Join Date
    Jun 2007
    Location
    Bangalore
    Posts
    1,230
    Post Thanks / Like
    Quote Originally Posted by 19thmay View Post
    பறவையே எங்கு இருகிறாய்?
    சுதந்திரமாக பறக்க முடியாமல் எங்கோ அடைந்து கிடக்கிறது அல்லது அடைத்து வைக்கப் பட்டிருகிறது ...
    " The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".

  8. #197
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    http://www.tamilcinema.com/CINENEWS/...apr/120413.asp
    'என் தங்கச்சிய காணலைங்க' என்று போலீசில் புகார் கொடுத்திருக்கும் அவரது அண்ணனுக்கு நேற்று வந்த செல்போன் அழைப்பில் பேசியது அஞ்சலியேதான். 'டேய்... கேஸை வாபஸ் வாங்குறா' என்று அவர் பேசியதை அப்படியே ஒலிபரப்பி உஷார் நிலையிலிருந்த தீயணைப்பு வண்டிகளை சற்றே ஆசுவாசப்படுத்தின ஆந்திர சேனல்கள்.அப்படி என்னதான் பேசினார் அஞ்சலி. இதோ

    அஞ்சலி:- ஹலோ... அண்ணா நான் பாலா பேசுறேன். (அஞ்சலியின் இயற்பெயர் பாலதிரிபுர சுந்தரி.)
    ரவி சங்கர்:- ஏய் பாலா... நீ எங்கே இருக்கே?... நாலு நாளா நீ எங்கே இருக்கேன்னே தெரியவில்லை. ஏன் இத்தனை நாளா பேசவில்லை?
    அஞ்சலி:- உன் செல்போன் நம்பர் என்னிடம் இல்லேடா... அதனால் அம்மாவிடம் வாங்கி பேசறேன்.
    ரவி சங்கர்:- சரி பாலா... நீ நல்லா இருக்கியா? உனக்கு ஒண்ணும் ஆபத்து இல்லையே?
    அஞ்சலி:- நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு ஒன்றும் பயம் இல்லை. என்னோட ஒருத்தர் இருக்கிறார். என்னைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதுசரி... நீ ஏண்டா நான் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தே...?
    ரவி சங்கர்:- சித்தி கொடுமைப்படுத்தினதா தமிழ் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த நீ, அதற்கு பிறகு எங்கே இருக்கேன்னே தெரியல. அதனால உனக்கு ஏதோ ஆகி இருக்குமோ என்று பயந்து போய்தான் போலீசில் புகார் செஞ்சேன்.
    அஞ்சலி:- சரி... உடனே அந்த புகாரை வாபஸ் வாங்கு.... நான் நல்லாத்தான் இருக்கிறேன். பத்திரமாகவும் இருக்கிறேன். நீ புகார் கொடுத்ததால எனக்கு பிரச்சினை ஆயிடுச்சு...
    ரவி சங்கர்:- அது முடியாது பாலா... உன்னை தேடி கண்டு பிடிக்க முயற்சி செய்து வருவதாகவும், உன்னை நேரில் பார்க்கும் வரை புகாரை வாபஸ் பெற முடியாது என்றும் போலீசார் என்னிடம் கூறி விட்டனர்.
    அஞ்சலி:- நான் காணவில்லை என்று கொடுத்த புகாரை மட்டும் வாபஸ் வாங்குடா.. அந்த ராட்சசி (சித்தி பாரதிதேவி) மீதும் அந்த ஆளு (சித்தப்பா சூரிபாபு) மீதும் கொடுத்த புகாரை வாபஸ் வாங்காதடா.
    அஞ்சலி:- அப்படியா?... சரி நாளை நான் நேரில் வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்.
    ரவி சங்கர்:- அது சரி பாலா... ஏன் திடீர்னு காணாமல் போயிட்டே?...
    அஞ்சலி:- சித்தியும், சித்தப்பாவும் என்னை கொடுமைப்படுத்துறாங்கடா... அந்த ஆளு என்னை செருப்பால் அடிக்கிறான்டா... ஐதராபாத் ஓட்டலில் இருந்து நான் வெளியேறிய அன்றும் அந்த ஆள் என்னை தலைமுடியை பிடித்து இழுத்து செருப்பால் அடிச்சான்டா... கடுமையாக திட்டினான். அவன் என்னை கொடுமை படுத்துனான்டா. இல்லேன்னா நான் ஏண்டா காணாமல் போகிறேன்.
    ரவி சங்கர்:- யாரு சித்தப்பா சூரிபாபுவா?
    அஞ்சலி:- ஆமா... அவன்தான்டா...
    ரவி சங்கர்:- ஏய்... சித்தப்பாவை மரியாதையா பேசு...
    அஞ்சலி:- அவனுக்கு என்னடா மரியாதை வேண்டிக் கிடக்கு...? அவங்க கொடுமை தாங்க முடியாமல்தான்டா நான் வீட்டை விட்டு ஓடினேன். இந்த விஷயத்தில் நீ எனக்கு சப்போர்ட்டா இருப்பியாடா? அந்த பொம்பளைக்கும் அந்த ஆளுக்கும் பயப்படாம நீ எனக்கு ஆதரவாக இருந்தால் நான் வெளியே வர தயாரா இருக்கேன்டா...
    ரவி சங்கர்:- சரி... சரி... பயப்படாம வா பாலா. உனக்கு நான் ஆதரவாகத்தான் இருப்பேன். உன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம், நீ எங்கே இருக்கேன்னு தவித்துப் போய் இருக்காங்க. தயாரிப்பாளர் சுரேஷ்பாபு உன்னை தேடுகிறார். எனவே நீ அவரிடம் கண்டிப்பாக ஏதாவது பேசு.
    அஞ்சலி:- நான் நாளைக்கு (இன்று) பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன்டா...
    ரவி சங்கர்:- சரி... சரி...

    இவ்வாறு அந்த உரையாடல் நடந்தது.


    http://www.youtube.com/watch?v=9XC-8wtay-g
    Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 12th April 2013 at 10:57 AM.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  9. #198
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    27,366
    Post Thanks / Like


    Finally Anjali appears at DCP Office..
    She looks battered
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  10. #199
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    ஹைதராபாத் போலீஸ் முன் ஆஜரானார் அஞ்சலி.. மும்பையில் தங்கியிருந்ததாக விளக்கம்!

    ஹைதராபாத்: காணாமல் போய்விட்டதாக கடந்த ஒரு வார காலம் பரபரப்பாக பேசப்பட்ட அஞ்சலி, நேற்று இரவு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். தன் சித்தி பாரதி தேவியும் இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த அஞ்சலி, ஹைதராபாத் ஓட்டலிலிருந்து கடந்த திங்கள் கிழமை மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார். அவரது சித்தி பாரதி தேவி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் முன் ஆஜரானார். கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். ஹைதராபாத் வடக்கு பகுதி துணை கமிஷனர் சுதீர் பாபு கூறுகையில், "மன உளைச்சல், தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மும்பை சென்றிருந்ததாக அஞ்சலி கூறினார். அவரது வாக்குமூலத்தை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்," என்றார். ஹைதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  11. #200
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    these kind of cine personalities know how to get 'ilavasa vilambaram' like this.

    but un expectedly her chithi told in pressmeet, anjali is suffering from 'theeraadha viyaadhi' which is a drawback to anjali.

    hereafter who will approach her ? (for film shooting?)

Page 20 of 21 FirstFirst ... 1018192021 LastLast

Similar Threads

  1. About actress
    By anilb123 in forum TV,TV Serials and Radio
    Replies: 13
    Last Post: 21st November 2008, 06:15 AM
  2. Anjali By:CJ Baskar
    By sahana6 in forum TV,TV Serials and Radio
    Replies: 141
    Last Post: 30th September 2008, 10:27 PM
  3. lyrics please? nataraja anjali and samayamidhey in behag
    By GayathriChandra in forum Indian Classical Music
    Replies: 9
    Last Post: 27th April 2005, 11:39 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •