Page 4 of 10 FirstFirst ... 23456 ... LastLast
Results 31 to 40 of 97

Thread: S.Janaki - Lyrics

  1. #31
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    en kaadhal OdangaL(anjaadha nenjangaL)

    பாடல்: என் காதல் ஓடங்கள்
    திரைப்படம்: அஞ்சாத நெஞ்சங்கள்
    இசை: ஷங்கர் கணேஷ்
    பாடியவர்: எஸ். ஜானகி

    என் காதல் ஓடங்கள்
    கரை சேரும் நேரங்கள்
    பூங்காற்று மேலும் வீசுதே
    அலை வந்து பூக்கள் தூவுதே
    மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
    ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே

    என் காதல் ஓடங்கள்
    கரை சேரும் நேரங்கள்
    பூங்காற்று மேலும் வீசுதே
    அலை வந்து பூக்கள் தூவுதே
    மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
    ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே

    தீயின் மீது வீழ்ந்த மீன் ஒன்று
    தண்ணீரை மீண்டும் தேடும்
    வீசும் காற்றில் வீழ்ந்த பூ ஒன்று
    கிளை மீது என்று சேரும்
    நீலவானில் ஜோடி மேகம்
    போகும் போது சோக ராகம்
    ஒரு கண்ணில் சலனம்
    மறு கண்ணில் மௌனம்
    சூரியன் ஏங்குது தாமரை தூங்குது

    என் காதல் ஓடங்கள்
    கரை சேரும் நேரங்கள்
    பூங்காற்று மேலும் வீசுதே
    அலை வந்து பூக்கள் தூவுதே
    மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
    ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே

    பாவை நெஞ்சில் நூறு காயங்கள்
    ஆறாமல் காதல் ஏது
    கண்ணில் சோக ஆறு பாருங்கள்
    கண்ணீரே எந்தன் தூது
    கோதை வீடு சரிந்த போது
    கோலம் போட வாசல் ஏது
    கனவுகள் மீது உறங்கினள் மாது
    நெஞ்சிலே ஆசைகள் மௌனமே பாஷைகள்

    என் காதல் ஓடங்கள்
    கரை சேரும் நேரங்கள்
    பூங்காற்று மேலும் வீசுதே
    அலை வந்து பூக்கள் தூவுதே
    மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
    ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே
    மலர்க்கணை நெஞ்சில் பாய்ந்ததே
    ஆனால் விழிகளில் சோகம் ஊறுதே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    ennai azhaiththadhu yaaradi(oruvanukku oruththi)

    பாடல்: என்னை அழைத்தது யாரடி
    திரைப்படம்: ஒருவனுக்கு ஒருத்தி
    இசை: வி.குமார்
    பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.ஜானகி

    என்னை அழைத்தது யாரடி கண்ணே
    என்னை அழைத்தது யாரடி கண்ணே
    என்னை அறியாமலே
    என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
    என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
    என் வசம் நானில்லையே
    என்னை அழைத்தது யாரடி கண்ணே
    என்னை அறியாமலே

    வண்ணக்கிளியே என்னைக் காக்கும்
    எண்ணம் ஏன் வந்ததோ
    ஒரு விழி அழுதால் மறு விழி சிரிக்காது
    உணர்வு ஒன்றல்லவோ
    ஆயிரம் ஜென்மங்கள் பார்த்த நினைவாக
    அன்பு மலர்கின்றதோ

    என்னை அழைத்தது யாரது கண்ணா
    என்னை அறியாமலே
    என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
    என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
    என் வசம் நானில்லையே

    வெள்ளி நிலவைக் கையில் பிடிக்க
    உள்ளம் நினைக்கின்றதே
    பூமியில் வந்து சந்திர கிரணங்கள்
    பூவை அணைக்கின்றதே
    மாளிகை தனைத்தேடி வாசல் வரும் போது
    வாசல் திறக்கின்றதே

    என்னை அழைத்தது யாரடி கண்ணே
    என்னை அறியாமலே
    என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
    என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
    என் வசம் நானில்லையே

  4. #33
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    pooththa malligai(namma ooru nalla ooru)

    பாடல்: பூத்த மல்லிகை
    திரைப்படம்: நம்ம ஊரு நல்ல ஊரு
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ்.ஜானகி

    பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
    காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
    பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
    காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
    அந்த காலம் வரும் நேரம்
    அதன் வாழ்வில் வரும் யோகம்
    பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
    காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

    ராகம் தனைத்தேடும் புது வீணையே
    மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே
    ராகம் தனைத்தேடும் புது வீணையே
    மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே
    சந்தோஷம்...ம்ம் கொண்டாடும்...ம்
    சந்தோஷம் கொண்டாடும் சங்கீதம்
    நெஞ்சில் சுகம் கோடி தருமே

    பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
    காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

    கங்கை வரும் என்றே கடல் தேடுதே
    தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே
    கங்கை வரும் என்றே கடல் தேடுதே
    தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே
    பூங்காற்றும்...ம்ம் தேனாறும்...ம்
    பூங்காற்றும் தேனாறும் பெண்பூவே
    வாழ்வில் பிறை நாளில் வருமே

    பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
    காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
    அந்த காலம் வரும் நேரம்
    அதன் வாழ்வில் வரும் யோகம்
    பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
    காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே

  5. #34
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Jal Jal Jallenum Salangai oli ( Paasam)

    Song : Jal Jal Jallenum
    Movie : Paasam
    Music : Visvanathan Ramamurthy
    Lyric : Kannadasan

    ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
    சல சல சலவென சாலையிலே
    செல் செல் செல்லுங்கள் காளைகளே
    சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே

    காட்டினில் ஒருவன் எனைக் கண்டான்
    கையில் உள்ளதைக் கொடு என்றான்
    கையில் எதுவும் இல்லை என்று
    கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
    ஜல் ஜல் ஜல் ...

    அவன்தான் திருடன் என்றிருந்தேன்
    அவனை நானும் திருடி விட்டேன்
    முதன்முதல் திருடும் காரணத்தால்
    முழுசாய் திருட மறந்துவிட்டேன்
    ஜல் ஜல் ஜல் ...

    இன்றே அவனை கைது செய்வேன்
    என்றும் சிறையில் வைத்திருப்பேன்
    விளக்கம் சொல்லவும் முடியாது
    விடுதலை என்பதும் கிடையாது !


    ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி...

  6. #35
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Sandhanathil Nirameduthu(Thendral Veesum)

    Song : Sandhanathil Nirameduthu
    Music : Visvanathan Ramamurthy
    Lyric : Kannadasan
    SJ with GKV

    சந்தனத்தில் நிறமெடுத்து
    செண்பகத்தில் மணம் எடுத்து
    குங்குமத்தில் பொதிந்த உடல்
    இந்தக் கண்ணிரண்டும் நிறைந்த கடல்
    சந்தனத்தில் நிறமெடுத்து...

    வண்ணமலர் இதழ் அணைத்து
    வைத்திருக்கும் தேன் எடுத்து
    உண்ண இன்னும் தயங்குவதேன்
    நீர் உறக்கத்தில் மயங்குவதேன்
    சந்தனத்தில் நிறமெடுத்து ..

    மின்னலதில் இழை எடுத்து
    கருமேகமதில் குழல் பதித்த***
    என்னழகு கசிந்திருந்தால்
    இனி யார் அழகில் கரும்பிருக்கும்
    சந்தனத்தில் நிறமெடுத்து ..

    கண் சிவக்கும் முகம் சிவக்கும்
    கால் கட்டைவிரல் கோலமிடும்
    பொன் சுமக்க உடல் தவிக்கும்
    இந்தப் பெண் இருக்கும் இடம் இனிக்கும்

    சந்தனத்தில் நிறமெடுத்து ..

  7. #36
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    vaNNa vaNNa vaNNa(poottaadha poottukkaL)

    பாடல்: வண்ண வண்ண வண்ண
    திரைப்படம்: பூட்டாத பூட்டுக்கள்
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ்.ஜானகி

    லால்ல லால்ல லல லால்லா லலா லால்லா லலா
    லல லல லாலா லல லல லாலா லால லால லாலா
    வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே
    செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்
    செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்
    மிதக்கும் இனிய கனவே
    வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே

    சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள்
    மஞ்சளின் திருநாள்...நிலவோ
    அன்னநடை பின்ன சின்ன இடை வளைய
    பெண்மையின் நாணம்...சிலையோ
    ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும்
    குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட
    என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே
    இது காலம் செய்த பிணைப்பு

    ஹே...லல லல லா லா லா...லா லலா
    லல லல லா லா லா...லா லலா
    லா லல லல லால்லா லால்லா லால்லா லா
    லா லல லல லால்லா லால்லா லால்லா லால்லா லா

    மஞ்சளோடு மாலை சூடினர் மண நாள்
    சேர்ந்தனர் மனதால்...உறவில்
    கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம்
    வளர்ந்தன வருடம்...கனவால்
    பல நாள் உறவு பலன் வேண்டுமே
    மழலை விரும்பும் மனம் பாரம்மா
    என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண
    எதிர்காலம் தேடிச் சென்றாள்

    வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே
    செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்
    செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்
    மிதக்கும் இனிய கனவே
    வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே
    லால்லா லலா லால்லா லலா...லால்லா லலா லால்லா லலா

  8. Likes naarayanan liked this post
  9. #37
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    kaNdEn engum(kaatRinilE varum geetham)

    பாடல்: கண்டேன் எங்கும்
    திரைப்படம்: காற்றினிலே வரும் கீதம்
    இசை: இளையராஜா
    பாடியவர்: எஸ்.ஜானகி

    கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
    காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்
    கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
    காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்

    தொட்டுத் தொட்டு பேசும் தென்றல்
    தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்
    தொட்டுத் தொட்டு பேசும் தென்றல்
    தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்
    காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
    அள்ளிக்கொள்ள மன்னன் எங்கே
    நினைத்தேனே...அழைத்தேனே
    வருவாய் அன்பே என்று இங்கே இன்று

    அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
    கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
    காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்

    வனக்கிளியே ஏக்கம் ஏனோ
    கருங்குயிலே மோகம் தானோ
    தூக்கமும் இல்லை துவளுது முல்லை
    தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை
    பனிவாடை...விலகாதோ
    நினைத்தால் சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
    அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

    கள்ளம் இல்லை கபடம் இல்லை
    காவலுக்கு யாரும் இல்லை
    யார் வருவாரோ கனிகளும் பழுத்தம்மா
    கொடி மொட்டு மலர்ந்ததம்மா
    என் வீடு...இது தானே
    எங்கும் எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்

    அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்
    காற்றினிலே வரும் கீதம்

  10. #38
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kaatru Varum Kaalamondru(Naanum Manithanthaan)

    Song : Kaatru Varum Kaalamondru
    Movie : Naanum Manithanthaan
    Music: G K Venkatesh
    Lyric : Kannadasan or Panchu Arunachalam
    SJ with PBS

    காற்று வரும் காலம் ஒன்று
    நதி ஊற்று வரும் நேரம் ஒன்று
    காதல் வரும் பருவம் ஒன்று
    அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று
    காற்று வரும்..

    வானில் வரும் நிலவும் ஒன்று
    அதில் வளர்ந்து வரும் சுகமும் ஒன்று
    கண்ணிரண்டின் காட்சி ஒன்று
    கடவுளவன் ஆட்சி ஒன்று
    காற்று வரும்...

    ஆசையுடன் நெருங்கி வந்து
    அணைத்திடவே துடித்ததொன்று
    அன்றொரு நாள் அருகில் நின்று
    அழகுடனே சிரித்ததொன்று
    காற்று வரும்..
    ஹா..ஹா..ஹா..

    அன்புக்கரம் தந்து நம்மை
    அணைத்திட ஓர் அண்ணா உண்டு
    கருணைக்கரம் தந்து என்னை
    காத்திட நீ கண்ணா உண்டு

    காற்று வரும் காலம் ஒன்று..

  11. #39
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kaadhalin Ponveedhiyil(Pookkaari)

    Song : Kaadhalin Ponveedhiyil
    Movie :Pookkaari
    Music: MSV
    Lyric: Panju Arunachalam
    SJ with TMS

    காதலின் பொன் வீதியில்
    காதலன் பண்பாடினான்
    பண்ணோடு அருகே வந்தேன் நான்
    கண்ணோடு உறவுகொண்டேன்

    காதலின் பொன் வீதியில்
    நானோரு பண்பாடினேன்
    பண்ணோடு ஒருத்தி வந்தாள்
    என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

    திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
    நான் காத்திருப்பேன் உனக்காக
    இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
    நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

    இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
    தேன் கொள்ள வந்தேன் மனம்போல
    என் மனதினிலே உன் நினைவுகளே
    அதை அள்ளி வந்தேன் உனக்காக
    காதலின் பொன் வீதியில்...

    விழி ஓரங்களில் சில நேரங்களில்
    வரும் பாவங்களும் கவியாகும்
    அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
    அதை சுவைப்பதுதான் கலையா...கும்

    அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு
    அதைப் பழகுவதே பேரின்பம்
    இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
    இனி காலம் எல்லாம் உன் சொந்தம் !

    காதலின் பொன் வீ...தியில் காதலன் பண்பா...டினான் ..

  12. #40
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Pagalil pEsum Nilavinaik kandEn(Sengamalatheevu)

    Song : Pagalil pEsum Nilavinaik kandEn
    Movie:Sengamalatheevu
    Music : K V Mahadevan
    Lyric: Trichy ThyagaRajan or Egalaivan
    SJ with TMS

    பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
    பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
    பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
    பாவை நிலவாய் நின்றேன்

    மலையில் அருவி பாய்ந்தோடும்
    ம*தியைக் க*ண்ட* க*ட*ல் பொங்கி எழும்
    மங்கை உந்தன் முகமதி கண்டு
    மனதில் இன்பம் பொங்கிடுதே
    மனதில் இன்பம் பொங்கிடுதே
    பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

    மாமலையாகி நீங்கள் இருக்க*
    மங்கை அருவியாய் பாய்ந்திடுவேன்
    அன்புக் கடலாய் நீங்கள் இருக்க*
    அமுதம் பொழியும் மதியாவேன்
    அமுதம் பொழியும் மதியாவேன்
    பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

    துன்பம் தீர்ந்தது வாழ்வினிலே
    இன்பம் வந்தது மனம் போலே
    மணமாலை நாளை அணிந்திடுவோம்
    ஹ்ம்..கனவு நனவாகி மகிழ்ந்திடுவோம்

    ...பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
    பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
    பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
    பாவை நிலவாய் நின்றேன் !

Page 4 of 10 FirstFirst ... 23456 ... LastLast

Similar Threads

  1. S. Janaki
    By aruvi in forum Current Topics
    Replies: 46
    Last Post: 24th September 2016, 09:18 PM
  2. Thyagaraja Krithis by S Janaki
    By AV in forum Current Topics
    Replies: 0
    Last Post: 22nd November 2007, 12:02 AM
  3. Which of the 2 is best - Old songs Lyrics / New Song lyrics
    By gentlebreeze in forum Current Topics
    Replies: 9
    Last Post: 2nd August 2006, 02:55 PM
  4. Who is the best singer - P.Susheela or S.Janaki
    By S.Balaji in forum Current Topics
    Replies: 3
    Last Post: 20th July 2005, 03:07 PM
  5. can you please help with lyrics ?
    By GayathriChandra in forum Indian Classical Music
    Replies: 1
    Last Post: 11th April 2005, 08:47 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •