Page 5 of 10 FirstFirst ... 34567 ... LastLast
Results 41 to 50 of 97

Thread: S.Janaki - Lyrics

  1. #41
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    kaalai thendRalil(mangai oru gangai)

    பாடல்: காலைத் தென்றலில்
    திரைப்படம்: மங்கை ஒரு கங்கை
    இசை: மனோஜ் கியான்
    பாடியவர்: எஸ்.ஜானகி

    காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
    காதில் மன்மத தேசத்து தாளங்கள்
    இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
    மேகத் தொட்டிலில் சிட்டுகள் பாடுது
    நீலப் பட்டிலே சித்திரம் போடுது
    நீராடி வா தென்றலே...ஓஓ ஓஓ ஓஓஓஓ

    காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
    காதில் மன்மத தேசத்து தாளங்கள்
    இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
    மேகத் தொட்டிலில் சிட்டுகள் பாடுது
    நீலப் பட்டிலே சித்திரம் போடுது
    நீராடி வா தென்றலே...ஓ ஓ ஓ

    அதோ அந்த புது மலர் நானாகும் போது
    அதைவிட பெரும் சுகம் நான் காண்பதேது
    அதோ அந்த புது மலர் நானாகும் போது
    அதைவிட பெரும் சுகம் நான் காண்பதேது
    வெள்ளாடையில் தள்ளாடுதே முல்லைப்பூவின் தோழி
    மனதில் வசந்தம் மலரில் சுகந்தம்
    புது அலையாய் தவழ்ந்தேன் இளம் கவியாய் மலர்ந்தேன்
    நானாக நானில்லையே...ஓ ஓ ஓ

    காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
    காதில் மன்மத தேசத்து தாளங்கள்
    இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
    மேகத் தொட்டிலில் சிட்டுகள் பாடுது
    நீலப் பட்டிலே சித்திரம் போடுது
    நீராடி வா தென்றலே...ஓ ஓ ஓ

    நிலா மகள் உலா வரும் வான்வீதி மேலே
    ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா
    நிலா மகள் உலா வரும் வான்வீதி மேலே
    ஒரே முறை மனோரதம் நான் ஓட்டலாமா
    கண்ஜாடையில் வெண்சாமரம் வீசும் அன்னைபூமி
    இனிமை ஸ்வரங்கள் இயற்கை லயங்கள்
    சுப ராகம் சுரக்கும் ஸ்ருதி தானே பிறக்கும்
    காற்றாக நானில்லையே...ஓ ஓ ஓ

    காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள்
    காதில் மன்மத தேசத்து தாளங்கள்
    இந்த மங்கையின் உள்ளத்தில் சொர்க்கங்கள்
    மேகத் தொட்டிலில் சிட்டுகள் பாடுது
    நீலப் பட்டிலே சித்திரம் போடுது
    நீராடி வா தென்றலே...ஓஓ ஓஓ ஓஓஓஓ

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    varalaamO sugam peRalaamO(aasai manaivi)

    பாடல்: வரலாமோ சுகம் பெறலாமோ
    திரைப்படம்: ஆசை மனைவி
    இசை: ஷங்கர் கணேஷ்
    பாடியவர்: எஸ்.ஜானகி

    வரலாமோ சுகம் பெறலாமோ
    உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி
    இதழ் தன்னோடு மனம் கொண்டாடும்
    முதல் தாம்பூலம் அன்றே நான் தந்தது
    நான் வரலாமோ சுகம் பெறலாமோ

    எதிர் பார்த்த காலம் ஒன்று
    எதற்காக...இதற்காக
    துயிலாத கண்ணில் இன்று
    துயிலாத கண்ணில் இன்று
    காதல்...துளிர்விடும் நேரம்
    நான்...வரலாமோ சுகம் பெறலாமோ

    இடைவேளை கொஞ்ச நேரம்
    இனி ஏது...கிடையாது
    இடையோடு தாங்கும் பாரம்
    இடையோடு தாங்கும் பாரம்
    கண்ணன்...இரு கரம் வாங்க
    நான்...வரலாமோ சுகம் பெறலாமோ

    பன்னீரில் நீந்திக் களித்து
    களைப்பாற...கரை ஏற
    பன்னீரில் நீந்திக் களித்து
    களைப்பாற...கரை ஏற
    வெந்நீரில் காலைக் குளித்து
    வெந்நீரில் காலைக் குளித்து
    காணும்...உறவுகள் வேண்டும்
    நான்...வரலாமோ சுகம் பெறலாமோ
    உந்தன் மஞ்சத்தில் இந்த மாங்கனி

  4. #43
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    varuvaan mOhana roopan(ponnoonjal)

    பாடல்: வருவான் மோஹன ரூபன்
    திரைப்படம்: பொன்னூஞ்சல்
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: எஸ்.ஜானகி

    வருவான் மோஹன ரூபன் என
    காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
    வருவான் மோஹன ரூபன் என
    காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
    பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
    பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
    பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள
    பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள

    வருவான் மோஹன ரூபன் என
    காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

    காதல் நிலவு பாதி இரவு
    மயக்கத்தில் ஆடும் உலகம்
    பிள்ளை போல் பாட்டு
    வெள்ளித் தேர் ஓட்டு
    முத்து வண்ணத் தென்றல்
    என்னைத் தா...லா...ட்டுது

    வருவான் மோஹன ரூபன் என
    காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

    வானம் திறந்து ஊர்வசி வந்தால்
    வளைத்துக் கொள்வாயா அழகே
    பெண்ணுக்கோர் கீதம்
    கண்ணுக்கோர் பாடம்
    கட்டிக் கொண்டு மெல்ல
    மெல்ல சொ...ன்...னாலென்ன

    வருவான் மோஹன ரூபன் என
    காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
    பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
    பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
    பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள
    வருவான் மோஹன ரூபன் என
    காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

  5. #44
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Paadath Therindhavar Paadungal ( Pudhiya Vaazhkkai)

    Song : Paadath Therindhavar Paadungal
    Movie : Pudhiya Vaazhkkai
    Music : K V Mahadevan
    Lyric : Kannadasan

    பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
    ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
    இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
    ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
    பாடத் தெரிந்தவர் பாடுங்கள்...

    உற*வுகளாலே உலகங்கள்
    உரிமைகளாலே இதயங்கள்
    பரிவும் பாசமும் பந்தங்கள்
    என் பாப்பா வழியே சொந்தங்கள்
    பாடத் தெரிந்தவர் பாடுங்கள்...

    தந்தையின் மனைவி தாயாவாள்
    அவள் தாங்கிய மழலை சேயாவாள்
    சிந்தனை செய்தேன் பொன்மகளே
    நீ தெய்வம் தந்த என் மகளே

    பாடத் தெரிந்தவர் பாடுங்கள்
    ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள்
    இது தங்கப் பாப்பா பிறந்த நாள்
    ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள் !

  6. #45
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kaalam EnnOdu VarumpOthu(Pudhiya Vaazhkkai)

    Song : Kaalam EnnOdu VarumpOthu
    Movie : Pudhiya Vaazhkkai
    Music : K V Mahadevan
    Lyric : Kannadasan

    காலம் என்னோடு வரும்போது
    கடவுள் வருகின்றான்
    காதல் என் நெஞ்சைத் தொடும்போது
    என் தலைவன் வருகின்றான்
    காலம் என்னோடு வரும்போது ...

    பழமை எண்ணங்கள் விலகும்
    புதுமை வண்ணங்கள் வளரும்
    தனிமை இல்லாமல் மறையும்
    இனிமை என்றென்றும் மலரும்
    அதுதான் உலகம்
    தேடினேன் கை வந்தது
    காலம் என்னோடு வரும்போது ...

    விளக்கில் எப்போதும் ஒளியே
    கணக்கில் எப்போதும் *வரவே
    மனத்தில் எப்போதும் நிறைவே
    வளரும் கொண்ட உறவே
    அதுதான் உலகம்
    தேடினேன் கை வந்தது

    காலம் என்னோடு வரும்போது
    கடவுள் வருகின்றான்
    காதல் என் நெஞ்சைத் தொடும்போது
    என் தலைவன் வருகின்றான் !


    * debited or credited

  7. #46
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    adhikaalai nEramE(meeNdum oru kaadhal kadhai)

    பாடல்: அதிகாலை நேரமே
    திரைப்படம்: மீண்டும் ஒரு காதல் கதை
    இசை: இளையராஜா
    பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

    அதிகாலை நேரமே புதிதான ராகமே
    எங்கெங்கிலும்...ஆலாபனை
    கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

    அதிகாலை நேரமே புதிதான ராகமே
    எங்கெங்கிலும்...ஆலாபனை
    கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

    காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது
    காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது
    காவேரி நீர் அலை அது கடலோடு ஒன்று சேர்ந்தது
    புது சங்கமம்...சுகம் எங்கிலும்
    என்றேன்றும் நீயும் நானும் சேர்வதே ஆனந்தம்

    அதிகாலை நேரமே புதிதான ராகமே
    எங்கெங்கிலும்...ஆலாபனை
    கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

    உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம்
    நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
    நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற
    தோளோடு தான்...தோள் சேரவே
    தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே

    அதிகாலை நேரமே புதிதான ராகமே
    எங்கெங்கிலும்...ஆலாபனை
    கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே

  8. #47
    Senior Member Veteran Hubber priya32's Avatar
    Join Date
    Mar 2007
    Posts
    2,835
    Post Thanks / Like

    ninaiththaal pOdhum paaduvEn(nenjirukkum varai)

    பாடல்: நினைத்தால் போதும் பாடுவேன்
    திரைப்படம்: நெஞ்சிருக்கும் வரை
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடியவர்: எஸ்.ஜானகி

    நினைத்தால் போதும் பாடுவேன்
    அணைத்தால் கையில் ஆடுவேன்
    சலங்கை துள்ளும் ஓசையில்
    கலங்கும் கண்ணை மாற்றுவேன்

    நினைத்தால் போதும் பாடுவேன்
    அணைத்தால் கையில் ஆடுவேன்
    சலங்கை துள்ளும் ஓசையில்
    கலங்கும் கண்ணை மாற்றுவேன்
    கலங்கும் கண்ணை மாற்றுவேன்

    பாலின் நிறம் போல உருவான பெண்மை
    பனியில் விளையாடும் கனிவான மென்மை
    பாலின் நிறம் போல உருவான பெண்மை
    பனியில் விளையாடும் கனிவான மென்மை
    எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
    ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல
    எங்கும் பறந்தோடும் இளந்தென்றல் அல்ல
    ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல

    ஆ ஆ...நினைத்தால் போதும் பாடுவேன்
    அணைத்தால் கையில் ஆடுவேன்
    சலங்கை துள்ளும் ஓசையில்
    கலங்கும் கண்ணை மாற்றுவேன்
    கலங்கும் கண்ணை மாற்றுவேன்

    கேள்வி வரும் போது பதில் ஒன்று வேண்டும்
    கேட்க நினைக்காத மனம் ஒன்று வேண்டும்
    வாழ்வை சுகமாக நீ வாழ வேண்டும்
    மனதை மனதாக நீ காண வேண்டும்

    ஆ ஆ...நினைத்தால் போதும் பாடுவேன்
    அணைத்தால் கையில் ஆடுவேன்
    சலங்கை துள்ளும் ஓசையில்
    கலங்கும் கண்ணை மாற்றுவேன்
    கலங்கும் கண்ணை மாற்றுவேன்

  9. #48
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    wonderful priya.. your நினைத்தால் போதும் பாடுவேன்
    'a must SJ MSV Kannadasan # ,an immortal classic
    i remember listening /watching ? and it had an extra verse too that goes like

    காலம் என்னாளும் முறையானதல்ல*
    காதல் என்னாளும் தவறானதல்ல*
    நாளை இந்நேரம் நீ மாறக்கூடும்
    நடந்த நினைவோடு நான் வாழக்கூடும்

    Regards

  10. #49
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Podhigaimalai UchiyilE Purappadum Thendral(Thiruvilaiyaadal)

    Song : Podhigaimalai UchiyilE Purappadum Thendral
    Movie : Thiruvilaiyaadal
    Music: K V Mahadevan
    Lyric: Kannadasan
    SJ with PBS

    பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்
    ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்
    ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
    பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
    பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
    இந்தப் பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்
    பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

    கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
    கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
    தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்
    வண்ண தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
    தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
    பொதிகை மலை ...

    கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
    கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
    வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்
    போக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
    வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
    பொதிகை மலை ...

    வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
    வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
    தான் பறந்து ஆட்சி செய்​யும் தளிர்மணித் தென்றல்
    அது வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
    வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்

    பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் ...

    no SJ collection would be complete without this masterpiece

  11. #50
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    முத்ல் பக்கத்தில் பாடல்களின் இண்டெக்ஸ் போட்டு விட்டால் எந்தப் பாட்டு இருக்கிறது அல்லது பதியலாம் என்று தெரிந்து கொள்ள முடியுமே !

    பிரியா... கொஞ்சம் கவனிங்க !

Page 5 of 10 FirstFirst ... 34567 ... LastLast

Similar Threads

  1. S. Janaki
    By aruvi in forum Current Topics
    Replies: 46
    Last Post: 24th September 2016, 09:18 PM
  2. Thyagaraja Krithis by S Janaki
    By AV in forum Current Topics
    Replies: 0
    Last Post: 22nd November 2007, 12:02 AM
  3. Which of the 2 is best - Old songs Lyrics / New Song lyrics
    By gentlebreeze in forum Current Topics
    Replies: 9
    Last Post: 2nd August 2006, 02:55 PM
  4. Who is the best singer - P.Susheela or S.Janaki
    By S.Balaji in forum Current Topics
    Replies: 3
    Last Post: 20th July 2005, 03:07 PM
  5. can you please help with lyrics ?
    By GayathriChandra in forum Indian Classical Music
    Replies: 1
    Last Post: 11th April 2005, 08:47 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •