Page 386 of 401 FirstFirst ... 286336376384385386387388396 ... LastLast
Results 3,851 to 3,860 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

  1. #3851
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Philippines
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by thozhar View Post
    "else his fans would be so disappointed if he was just like everybody else. "

    All I can say is, "nonsense".

    I am sorry but some of his fans have even resorted to mocking IR for wearing kurta-veshthi. That leaves me no choice but to make the above conclusion. I am not including you in the above statement but I would again request you not to speak on behalf of all ARR fans.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3852
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ரஹ்மான்: அதே போல் இசையிலும் ரசனை மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கும். இன்றைக்கு ராஜாவைத் தாண்டி, நாளைக்கு என்னையும் தாண்டி, இசை ரசனை வளர்ந்துபோய்க் கொண்டுதான் இருக்கும்.

    இதிலேயும் எனக்கு முழுக்க உடன்பாடில்லை.

    "இன்றைக்கு ராஜாவைத் தாண்டி, நாளைக்கு என்னையும் தாண்டி, இசை ரசனை வளர்ந்துபோய்க் கொண்டுதான் இருக்கும்." - ரசனை மாற்றம் வரும். ஆனால் ரசனை வளர்ந்ததாக/வளர்வதாகத் தெரியவில்லை. எது "ரசனை வளர்ச்சி"?

    "இன்றைக்கு ராஜாவைத் தாண்டி," - இதிலேயே முழு உண்மையும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டுவிடுகிறது. ரஹ்மான் அலை 92-ல் தொடங்கியதிலிருந்தே ராஜா இல்லை என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ரஹ்மானின் இந்த தன்னிலை ஒப்புதல் நம்பமுடியாமல் போகலாம். "இன்று ராஜாவைத் தாண்டி" - என்பதை சொல்ல இருபது வருடங்கள் ஆகிவிட்டது. இந்த இருபது வருடத்தில் அதுவும் இரண்டாயிரம் ஆண்டுகளில் ராஜா புதிய படங்களில் முன்பு இருந்ததுபோல பெரிய பேனர் படங்கள் செய்யாமலிருந்தும் இன்னும் ராஜாவின் வீச்சு குன்றிலிட்ட விளக்குபோல ஒளிவீசிக் கொண்டே இருக்கிறது.
    Last edited by venkkiram; 22nd December 2013 at 10:29 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #3853
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    My two cents.. The question from the interviewer is absurd. Atleast ARR could have politely avoided or skipped answering to such sort of questions. He did similar thing couple of months back in CNN IBN interview.

  5. #3854
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Saw this post in FB and wanted to share with the group


    சுந்தரி கண்ணால் ஒரு சேதி.... பிரமிப்பு !!!
    971876_10201860757665118_1480886104_n.jpg


    கிழேயுள்ள புகைப்படம் 1991 இல் வெளிவந்த தளபதிப் பாடலான சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. என்ற பாட்டு இப்போதைய மும்பாயிலும் அப்போதைய பம்பாயிலும் பதிவு பண்ணிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது ( நன்றி நண்பர் எடி தினேஷ் )

    இந்தப்பாட்டைப் பற்றி இசைஞானியும் பாடிய பாலுவும் இரு முக்கியமான தகவல்களைக் கூறியிருந்தார்கள்.. இந்தப் பாட்டின் மெட்டுக்கு கன கச்சிதமாக ஐயா வாலி பாட்டெழுதிய வித்தகத்தைப் பற்றி இசைஞானியும்,
    மும்பாய் ஒலிப்பதிவுக் கூடம் ஒன்றில் இந்தப் பாடல் பதிவு நடந்த போது ராஜாவின் இசைக்குறிப்பை படித்து, வியந்து, இசைத்து முடிந்ததும், மகராஷ்டிரா இசைக்கலைஞர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டியதை பார்த்து, தான் பரவசப் பட்டதைப் பற்றி பாலுவும் கூறியதை நாங்கள் பலர் கேட்டிருக்கலாம்.

    இந்தப் பாட்டின் இன்னும் பற்பல விடயங்கள் என்னைப் பிரமிக்க வைத்துக் கொண்டேயிருக்கின்றன.
    பல்லவியில் தாள வாத்தியமே பாவிக்கப்படவில்லை.
    பின்னணியில் அலை அலையாக எழும் வயிலின்களின் ஆர்ப்பரிப்பு எனக்கு கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையே நினைவு படுத்துகின்றன....

    இடையிசையில் முதலில் ட்ரம்ஸ்களுடன் மிக அமைதியாக ஆரம்பிக்கிறார் இசைஞானி. அந்த அமைதியான ஆரம்பம் புயலுக்கு முந்திய அமைதியைப் போன்றே எனக்குத் தோன்றுவதுண்டு. அவற்றுடன் வந்து சேர்ந்து கொள்ளும் ட்ரம்பெற்களின் ஆக்ரோஷம்.. அதன் பின் அவை அடங்கிப் போதல், அவைக்குப் பதிலாக ஆர்ப்பரிக்கும் வயிலின்கள் கோரஸ் கூட்டணி என்று பயணிக்கும் அந்த இசைப் பிரமாண்டம் சிறு வயதில் நான் பார்த்துப் பிரமித்த பென்ஹர் என்ற ஆங்கிலப் படத்தின் பிரமாண்டத்துக்கு (என்னைப் பொறுத்தவரை ) ஒப்பானது. அந்த இசைப் பிரமாண்டம் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சாந்தமாகி தப்லாவுக்கும் பின் சரணத்துக்கும் வழிவிடும் அழகு .அப்பப்பா..அதுதான் ராஜா அழகு. .

    இந்தப்பாட்டைப் பாடிய பாலுவும் ஜானுவும் வேறு கலக்கியிருக்கிறார்கள். காதலால் படும் வேதனையை விபரிக்கும் இந்தப் பாட்டின் முதலாவது சரணத்தின் இடையில் வரும் வார்த்தைகளை , கவிஞர் வாலி " வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை " என காதலன் பாடுவதாக எழுதியுள்ளார். இந்த வார்த்தைகளை பாலு எப்படிப் பாடியிருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.:

    வான் நிலவை என்பதை சாதாரணமாகப் பாடும் பாலு " நீ" என்பதில் ஒரு பொடி சங்கதியும் "கேளு" என்பதை கே..ளூ..என்றும் ,கூறும் என் வேதனை என்பதில் வரும் " வேதனை" என்பதை " வேஃதனை" என்று அருமையான சங்கதி போட்டதன் மூலம் அந்த வார்த்தையின் அர்த்தத்தை... வேதனையை வேதனையுடன் பாடி ராஜாவின் இசைக்கற்பனையை இன்னும் செதுக்கி அதை முழுமையடையச் செய்கிறார். இதுதான் பாலு ராஜா கூட்டணியின் வெற்றி. இதைத்தான் mutual understanding என்பது. இனி ஒரு போதும் கிடைக்காத கூட்டணி இது என்பதை மீண்டும் ஆணித்தரமாக இங்கே பதிகிறேன்.

    இதே போலவே பலத்த வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது இரண்டாம் இடையிசை

    இதில் இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதாவது பல்லவியிலும் இடையிசையிலும் அதிகாரம் செலுத்தும் வயிலின் கூட்டணி, சரணத்தில் அடங்கி விடுகின்றது. ஆனால் சரனம் முடிந்து பல்லவிக்கு மீண்டும் பாடல் திரும் பும் போதும், அதற்கு முன் ஜானகி பாடும் " என்னையே தந்தேன் உனக்காக ..ஜென்மமே கொண்டேன் அதற்காக " என்ற வரிகளின் போதும் மீண்டும் நாசுக்காக பாட்டின் பின்னணியில் ஒலிக்கத் தொடங்கும் வயிலின் கூட்டணி, ஒவ்வொரு முறை பல்லவி பாடும் போதும் பின்னால் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது. இந்த வயிலின்களின் கூட்டணிதான் எம்மையறியாமலேயே நாம் இந்தப் பாட்டுக்குள் கிறங்கிப் போவதற்கு முக்கிய காரண*ம். ராஜாவின் இந்த இசை சூட்சுமத்தை அவரின் பல பாடல்களில் கேட்கலாம். அவரின் வெற்றியின் ப்ல சூட்சுமங்களில் இது முக்கியமானது என நான் உறுதிபட நம்புகின்றேன்.
    .
    இவற்றைவிட இன்னும் ஏராளமான , எவ்வளவோ விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக எனக்குத் தோன்றுவது புல்லாங்குழல் இசைதான்.

    பாட்டின் தொடக்கத்தை பல வயிலின்களின் கூட்டணியுடன் நடு நாயகமாக வந்து அட்டகாசமாக . ஆரம்பித்து வைக்கிறது புல்லாங்குழல் . அதன் பின் பல்லவியின் ஒவ்வொரு வார்த்தைகளின் முடிவிலும் 4 தடவைகள், கொஞ்சம் வித்தியாசமான ஒலியுடன் மீண்டும் வருகின்றது புல்லாங்குழல் .
    ஒருவேளை இரு வேறுபட்ட புல்லாங்குழல்களை இந்த இசை வித்தியாசத்தையும் அதன் மூலமான உணர்வு மாற்ற*த்தை ஏற்படுத்தும் முகமாக இசைஞானி பாவித்திருக்கக் கூடும்.
    இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், . இந்த நாலு தடவையும் அது எந்தவிதமான உணர்ச்சியை பாடலுக்குள் புகுத்துகின்றது என்பதைத்தான். பாடலின் வார்த்தைகளையும் அதைத் தொடர்ந்து அந்த வார்த்தைகளுக்கேற்ப புல்லாங்குழல் என்ன ஜாலங்களை செய்கின்றது என்பதையும் அடுத்துப் பாருங்கள் :

    " சுந்தரி கண்ணால் ஒரு சேதி...( புல்லாங்குழல் வெட்கப் படுகிறது, அல்லது வியப்பை வெளிப்படுத்துகிறது )

    சொல்லடி இந்நாள் நல்ல தேதி....( புல்லாங்குழல் சிணுங்குகிறது )

    என்னையே தந்தேன் உனக்காக...( அதே நாணம் )

    ஜென்மமே கொண்டேன் அதற்காக ( அதே சிணுங்கல் )

    உண்மையில் இது ஒரு விதமான உரையாடல் . பாலுவுக்கும் ஜானகி அம்மாவுக்கும் , புல்லாங்குழல் தன்பாட்டுக்குப் பதில் சொல்லிக் கொண்டே போவதாகவே எனக்குப் படுகின்றது.

    இந்தப்பாட்டு வெளிவந்து 23 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் எனக்குத் தெரிய இந்தப் பாடலைப் பற்றி இது வெளிவந்த காலத்தில் இதன் இனிமையைத் தவிர்த்து இதற்குள்ளிருக்கும் இசைச் சூட்சுமங்களைப் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் சமீப காலங்களாக எஸ்.பி.பாலு அடங்கலாக பலர் இது ஒரு மிகச் சிறந்த இசைச் சேர்க்கை என க் கூறத் தொடங்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ள*து.

    ஏன் அப்படி ? இந்தப் பாட்டு மிகச் சிறந்த கொம்பொசிஷனாக இருந்திருந்தால் இன்றைக்கு 22 வருடங்களுக்கு முன்னரேயே நாம் ஏன் இதைக் கொண்டாடாமல் இப்போ தூக்கிப் பிடிக்கிறோம் ?? அதற்கான விடை ஒன்றே ஒன்றுதான் இந்தப் பாடல் வெளிவந்த போது எமக்கிருந்த இசையறிவு வரையறுக்கப் பட்டது. அது இதன் சூட்சுமங்களை அறியப் போதுமானதாக இருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு தசாப்தமாக எமக்குள் ஏற்பட்ட வளர்ச்சியும் சர்வதேச
    இசைகளைக் கேட்டும் படித்தும் பெற்ற பட்டறிவும், இப்போ இந்தப் பாடலைக் கேட்கும் போது மலைக்கவும் வியக்கவும் வைக்கின்றது.

    இது 1991 இல் காலம் கடந்து போடப்பட்ட பாட்டு. இதில் இசைஞானியுடன் சேர்த்து அத்தனை இசைக்கலைஞர்களும் மனதாரப் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
    முக்கியமாக புல்லாங்குழல் கலைஞன் ( Napoleon Selvaraj திரு.நெப்போலியன்)

  6. #3855
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    The King of the Kings


  7. #3856
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    749
    Post Thanks / Like
    IR hospitalized after he complained of chest pain. Update (according to below tamil website) is that all regular tests have been completed and angiogram is in progress.

    http://entertainment.oneindia.in/tam...ed-127928.html

    http://tamil.oneindia.in/movies/news...ed-190139.html

    My sincere wishes for his speedy recovery.

    thanks,

    Krishnan

  8. #3857
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Wish him a speedy recovery.

  9. #3858
    Senior Member Devoted Hubber
    Join Date
    Apr 2007
    Location
    USA
    Posts
    133
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ரஹ்மான்: அதே போல் இசையிலும் ரசனை மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கும். இன்றைக்கு ராஜாவைத் தாண்டி, நாளைக்கு என்னையும் தாண்டி, இசை ரசனை வளர்ந்துபோய்க் கொண்டுதான் இருக்கும்.
    Just a small example:



    Movie: Kadal (2013)
    Song: Adiyee....
    MD: ARR

    Copied from



    Album: Ali Farka Toure with Ry Cooder (Talking Timbuktu) (1994)
    Artist: Ali Farka Touré (Malian - 1939-2006 RIP)

    ARR has popularized other's works not his. Hence if at all, anything that is playing in Indian villages are of others. Credit should go to the original artist.
    Last edited by dochu; 23rd December 2013 at 05:13 PM.

  10. #3859
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    England
    Posts
    0
    Post Thanks / Like
    Originally Posted by venkkiram
    ரஹ்மான்: அதே போல் இசையிலும் ரசனை மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கும். இன்றைக்கு ராஜாவைத் தாண்டி, நாளைக்கு என்னையும் தாண்டி, இசை ரசனை வளர்ந்துபோய்க் கொண்டுதான் இருக்கும்.
    First of all he is insisting that people listening to his music bcos their knowledge have improve . How sad is that , any art or music should reflect their culture or their land . Interns of music when people listen to music they should get that feel . Nothing wrong with listen music from other culture or country as long as that music give you that feel

  11. #3860
    Senior Member Devoted Hubber Vysar's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    268
    Post Thanks / Like

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •