-
29th April 2012, 03:14 AM
#11
Senior Member
Diamond Hubber
நாளை, சாதனை புரிந்த தேவ இசைத்தூதனை, நேரில் காணும் பாகியவான்கள் பூரிப்படைந்து சந்தோஷிக்க வாழ்த்துக்கள்! என்னைப்பொருத்தவரை, என்றென்றும் ராஜா, துபாயில் ராஜா, ராஜா லைவ்-இன்-இத்தாலி போன்ற பிரம்மாண்ட நிகழ்சிகளுக்கு, பொதுமையான ரசிகர்களே வருவர். ஆனால் எப்படிப்பெயரிட, காற்றைத்தவிர வேரொன்றுமில்லை போன்ற நிகழ்சிக்கு வருவோர், சற்றே தீவிர ரசிகர்கள். நம்மைப்போன்ற நெட்டிசன்களே அதிகம்! கூட்டமும் (சதை ஒப்பிட்டால்) குறைவுதான்! எனவே, ஐயாவுடன் சற்றே நெருக்கமாக இருப்பதுபோல் உணரலாம். மற்ற நாட்களை விட, இளையராஜா ரசிகனென காட்டிக்கொள்ள எத்தனிப்பும் அதிகமாக இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேல், ராஜா அரங்கினுள் நுழைந்த உடனே உண்டாகும் உணர்ச்சி நெகிழ்சிப்பெருக்கு ஒன்றே போதும், கொடுத்த காசு அதற்கே சரி! பிறகு, மூன்று மணிநேரமும் போனஸ் தான்! இருந்து பாருங்கள், "அட, போதும் உக்காருங்கப்பா!" என சிரித்துக்கொண்டே உரிமையுடனும் சந்தோஷத்துடனும் சொல்லும் வரை, நம் ரசிகசிகாமணிகள் கரவொலி எழுப்புவார்கள், கடந்தமுறை அப்படித்தான் ஆனது!
அதே சமயம், சென்றமுறை போல், அதிகப்பிரசிங்கி ரசிகர்கள் தேவையில்லாமல், தேவையில்லாததை கத்திப்பேசி ஐயாவை மூட் அவுட் ஆக்கக்கூடாது!
இந்த நிகழ்சியை தவரவிடும் அனைவரும் அபாக்யசாலிகளே
-
29th April 2012 03:14 AM
# ADS
Circuit advertisement
Bookmarks