Results 1 to 10 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

Threaded View

  1. #11
    Senior Member Senior Hubber K's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai48
    Posts
    405
    Post Thanks / Like
    http://www.facebook.com/raagadevan

    இசைஞானி பக்தர்கள் (The Maestro’s Devotees)
    11 hours ago

    ஜூன் 2002 ‘கணையாழி’யில் வெளியான திரு. செழியன் அவர்களின் கட்டுரையிலிருந்து…

    ”ஒருமுறை எனது இசைவகுப்பின் ஆசிரியர் மேற்கத்திய இசையின் கூட்டுச்சுரங்கள் (Chords) பற்றிய பாடத்தில் ‘C Major’ Scale பற்றி நடத்தினார். அப்போது ‘C Major’ Scale’ன் முதல் Chord ‘C’ Major, இரண்டாவது Chord ‘D Minor”. ஒரு பாடலின் ஏற்பாட்டில் (Arrangements) இந்த இரண்டு Chordகளையும் அடுத்தடுத்து இசைப்பது தவறானது' என்று சொன்னார். கர்நாடக சங்கீதத்திலும், ஸட்ஜமம் என்கிற முதல் ஸ்வரத்திற்கு, அடுத்து வருகிற இரண்டாவது ஸ்வரமான ரிஷபம் பகைஸ்வரம். இதுபோலவே மேற்கத்திய இசையிலும் முதல் Chord (இதனை Tonic Chord என்றும் இரண்டாவது Super tonic Chord என்றும் அழைக்க வேண்டும்) அதற்கடுத்த இரண்டாவது Chord’உடன் இணைந்து வருவதில்லை.

    ’உதிரிப்பூக்கள்’ படத்தில் ‘அழகிய கண்ணே’ பாடலைக் கேட்கும்போது அந்தப் பாடலின் துவக்கமே C Major, D Minor இரண்டு Chord’களின் அடுத்தடுத்த தொடர்ச்சியோடு இருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதைப்போல ஹார்மனி (Harmony) பற்றிய பாடத்தில், ஒரு இசையை இயற்றும்போது, ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்த ஸ்வரத்திற்கு நகருகையில் ஒரு ஒழுங்கான இயக்கம் (movement) இருக்க வேண்டும். முதல் ஸ்வரத்திலிருந்து ஏழாவது ஸ்வரத்துக்கு தாவுதல் போன்ற Great Jump செய்யக்கூடாது; அது இனிமையாக இருக்காது என்பது இசைக் கோட்பாடு. ஒரு இசைவிதி. ‘செந்தூரப்பூவே’ என்ற ‘பதினாறு வயதினிலே’ பாடலைக் கேட்கும்போதும், ‘என்னுள்ளில் எங்கோ..’ என்ற ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ பாடலின் ஹம்மிங் கேட்கும்போதும் இந்த விதி இவரால் எவ்வளவு அழகாக மீறப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது.

    இவை மிகச்சிறிய உதாரணங்கள். இதுபோல மேலோட்டமாகப் புலப்படாத, இசைவிதிகளுக்கு முரணான மீறல்களைத் தனது பாடல்கள் பெரும்பாலானவற்றில் நிகழ்த்துவதன் மூலம் விதிகளைத் திருத்தி எழுதியிருக்கிறார். இதுபோலவே ‘மலர்களே, நாதஸ்வரங்கள்’ என்ற பாடலின் முடிவு அந்தரத்தில் ஒரு மணியோசையோடு முடியும். Cadence’ விதிகளின் இனிமையான மீறல் இது.

    ஒரு பாடலை ஏதேனும் இசைக்கருவியில் வாசித்துப் பார்க்கும்போதுதான் ராகங்களை, அதன் கடினத்தன்மையை எப்படியெல்லாம் இவர் இனிமையாக்கியிருக்கிறார் என்பது புரியும். Chord Progression’ல் Dischord என்று ஒதுக்கப்படுகிறவைகளைக்கூட இவர் இனிமையாகக் கையாள்கிற விதம் ஆச்சரியமானது. ‘என் வானிலே’ என்ற ‘ஜானி’ படப்பாடலின் ஸ்வரங்களின் முரணான தொடர்ச்சியும், அதன் போக்குக்கேற்ப புனையப்படும் chordகளின் தொடர்ச்சியும் அலாதியானது.

    ஒரு மைத்துளி நீர்ப்பரப்பில் உதிரும்போது உள்வரையும் சித்திரம்போல, இவரது படைப்புச் செயல்பாடு தன்னிச்சையாக, விதிகளைப் பொருட்படுத்தாமல் தனக்குள்ளாக ஒரு இயங்குதலோடு நிகழ்கிறது.

    நன்றி : கணையாழி, ஜூன் 2002

    தகவல் நன்றி: திரு. Senthil Kumar Jayakumar — with Bala Venkatesh.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •