Results 1 to 10 of 4002

Thread: Maestro ilaiyaraaja news & titbits

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber sakaLAKALAKAlaa Vallavar's Avatar
    Join Date
    May 2005
    Location
    Bangalore
    Posts
    5,269
    Post Thanks / Like
    கங்கை அமரன் in Kungumam magazine

    ‘பதினாறு வயதினிலே’ படத்தின் ‘செந்தூரப் பூவே... செந்தூரப் பூவே...’வை மறக்க முடியுமா? எஸ்.ஜானகிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்த அந்தப் பாடலின் மூலம்தான் கங்கை அமரன் என்கிற பாடலாசிரியரை தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பாரதிராஜா. நீண்ட இடைவெளி விட்டு இப்போது பாரதிராஜாவுடன் கை கோர்த்திருக்கிறார் கங்கை அமரன். பாரதிராஜாவின் ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்’ படத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் அமரன்.

    ‘‘இன்னிக்கு தமிழர்களால மீட்கப்படணும்னு சொல்லப்படற தேவிகுளம், பீர்மேடு மலையடிவாரத்துல பிறந்த குடும்பம் எங்கது.
    பாவலர் அண்ணன் கம்யூனிஸ்ட் கட்சிக்காக பாடுன பிரசாரப் பாடல்கள்தான் எங்களுக்கான இசை மூலம். மேடையில அவருக்கு கிடைச்ச கைதட்டல்கள், அண்ணனைப் போல பாடணும்ங்கிற ஆசையை அப்பவே என் மனசுல விதைச்சுது. 13 வயசுலயே நான் எழுதின பாடலை மேடையில அண்ணன் பாடியிருக்கார்.

    அந்தச் சமயத்துலதான் மலேரியா இன்ஸ்பெக்டரா எங்க ஊருக்கு வந்தார் பக்கத்து ஊர்க்காரரான பாரதிராஜா. சினிமாத் தேடல்ல இருந்த அவரும் இசைத் தேடல்ல இருந்த நாங்களும் சந்திச்சது பெரியவங்க செஞ்ச புண்ணியமா இருக்கணும். ராஜாண்ணா, பாஸ்கரண்ணா, பாரதிராஜா மூணு பேரும்தான் முதல்ல சென்னைக்கு வண்டி ஏறுனாங்க. வாடகைக்கு மயிலாப்பூர்ல ஒரு வீட்டைப் பிடிச்சு இருந்தவங்களுக்கு ஓட்டல்ல சாப்பிட்டு கட்டுபடியாகலை. அவுங்களுக்கு சமைச்சு, துணி மணியெல்லாம் துவைச்சுப் போடறதுக்கு ஒரு ஆள் தேவைப்பட, ஊருல சும்மா இருந்த நான் சென்னை வந்தேன். எனக்குத் தெரிஞ்ச சமையலைப் பண்ணிட்டு, நேரங்கிடைக்கிறப்ப எதையாச்சும் எழுதிட்டே இருந்தேன்.

    இந்த கங்கை அமரன், அண்ணன் பேச்சை மீறாம அவரோட டீம்ல கிடார் வாசிச்சிட்டிருந்தேன். ‘இவனும் பாட்டு எழுதுவான்யா’ன்னு நம்பி வந்த வாய்ப்புதான் ‘செந்தூரப் பூவே...’. முதல் பாட்டே தேசிய விருது. தொடர்ந்து முழுசா பாட்டெழுதுன படங்களும் வெளியாச்சு. ‘அம்மன் கோவில் கிழக்காலே’ மாதிரி சில படங்களுக்கு அத்தனை பாட்டுகளையும் எழுதுனேன். பிறகு தக்கிமுக்கி தனியா மியூசிக் பண்ற அளவுக்கு வந்தாச்சு. ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ படத்துக்கு முதன்முதலா இசையமைச்சேன். இந்த அவதாரமெல்லாம் முடிஞ்ச பிறகுதான் டைரக்டர் ரோல். பிரபு ஹீரோவா அறிமுகமான ‘கோழி கூவுது’ முதல் படம். விஜியும் அதுலதான் அறிமுகம்.

    கடவுளோட கருணையில படம் வெள்ளி விழா கண்டுச்சு. அப்படியே இருபது படங்களுக்கு மேல இயக்கியாச்சு. பாதிக்கு மேல ஹிட். அதுல எவர்கிரீன் ‘கரகாட்டக்காரன்’. அதோட வெற்றி எனக்கு அமைஞ்ச வரம்.

    எங்கயும் போய் முறையா இசையைக் கத்துக்காமலே, 200 படங்களுக்கு மேல இசையமைச்ச திருப்தி மனசுக்கு நிறைவா இருந்துச்சு. ரஜினி, கமல்னு எல்லாருக்கும் பாட்டெழுதியாச்சு. லதா மங்கேஷ்கர், ஆஷா போன் ஸ்லே ரெண்டு பேருமே முதன்முதலா என் பாட்டைப் பாடித்தான் தமிழ் உச்சரிச்சாங்க. இன்னொருபுறம் என் பையன் வெங்கட் பிரபுவோட மிருதங்க அரங்கேற்றத்துக்கு பேச முடியாத சூழல்லயும் முதலைமைச்சரா இருந்த எம்.ஜி.ஆர் வந்து கலந்துக்கிட்டார். சென்னையில சில சாலைகளுக்கு இசைக்கலைஞர்கள் பேரை வச்சது அந்த நிகழ்ச்சியிலதான். நான் எழுதுன மெலடி பாடல்கள் காலங்களைத் தாண்டி இப்பவும் இளைஞர்களால விரும்பப்படுது.

    இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு? ‘சைல்டு வெல்ஃபேர் ஃபவுண்டேஷன்’ங்கிற அமைப்பு மூலமா ஆதரவற்ற குழந்தைகளோட வளர்ச்சிக்காக நேரத்தைச் செலவிடலாம்னு இருக்கேன்’’ என்றார் கங்கை அமரன்.
    Last edited by sakaLAKALAKAlaa Vallavar; 5th February 2012 at 03:43 PM.
    Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
    https://twitter.com/KamalHaasanFans

    Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Replies: 140
    Last Post: 10th December 2010, 10:17 AM
  2. MAESTRO ILAIYARAAJA NEWS & TITBITS VER.2010
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1502
    Last Post: 1st November 2010, 08:12 AM
  3. IR News and Other Titbits Ver.2009
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1539
    Last Post: 30th January 2010, 10:14 PM
  4. P || Chennaiyil Oru Mazhaikaalam | Gautam Menon | Trisha ||
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 252
    Last Post: 1st October 2009, 12:54 PM
  5. IR News and Other Titbits
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 1493
    Last Post: 2nd January 2009, 01:59 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •