Page 12 of 13 FirstFirst ... 210111213 LastLast
Results 111 to 120 of 123

Thread: Jeyamohan

  1. #111
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    சாதாரண (தேடிச் சோறு நிதம் தின்று) வாழ்க்கைல கொஞ்சம் fantasy தேவைப்படுது.
    வேணாங்கில! ஆனால் மற்றவர்களுக்கு இம்சை தராமலும், பார்ப்பவர்கள் முகம் சுளிக்காமலும் அமைத்துக் கொள்ளலாமே! இங்கேயுள்ள ஒரு கோயிலுக்கு கடந்த கோடையில் சென்றிருந்தேன். கூட்டமில்லாததால் பாலாபிஷேகத்தை அமர்ந்து பார்க்கக் கூடிய வாய்ப்பு. Gallon Gallon-னாக பால்..1..2..3....10(!)......20.....25.. என நீண்டு கொண்டே இருந்தது. பொறுக்க முடியல. கிளம்பி வந்துட்டேன். மனம் கட்டுப்பாடில்லாமல் இருக்கும்போது எப்படி சாமி கும்பிடுவது? எல்லாத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. தானம் செய்றதுக்கு ஆளுங்க இருக்காங்க என்றால் இப்படியா விரயம் செய்வது? மதச்சடங்குகள் படிச்சவன், படிக்காதவன் என எல்லோரையும் மறைகயண்டு போக வைக்கிறது.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #112
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    உங்களுக்கு பிடிக்கலை, எந்திரிச்சு போயிட்டீங்க. இன்னொருத்தருக்கு பிடிக்கிது, அவர் உக்காந்து பாக்குறார்.

    அவ்வளொதானே.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  4. #113
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    உங்களுக்கு பிடிக்கலை, எந்திரிச்சு போயிட்டீங்க. இன்னொருத்தருக்கு பிடிக்கிது, அவர் உக்காந்து பாக்குறார்.

    அவ்வளொதானே.
    உலகமே இப்படி இயங்க ஆரம்பிச்சா சுபிட்சம் உண்டாகும்! தீர்வுக்கு நன்றி!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  5. #114
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Dec 2010
    Location
    Chennai, Tamil Nadu, India
    Posts
    544
    Post Thanks / Like
    அருமை அருமை

    மனம் சோர்வுரும்போதெல்லாம் காந்தியை படிப்பது ஒரு அருமருந்து. அதிலும் ஜெயமோகன் போல் வார்த்தை வித்தகர் எழுதினால் கேட்கவும் வேண்டுமா



    காந்தியின் திமிர்



    One of the best ever articles

  6. #115
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by San_K View Post
    அருமை அருமை

    மனம் சோர்வுரும்போதெல்லாம் காந்தியை படிப்பது ஒரு அருமருந்து. அதிலும் ஜெயமோகன் போல் வார்த்தை வித்தகர் எழுதினால் கேட்கவும் வேண்டுமா

    காந்தியின் திமிர்

    One of the best ever articles
    செறிவான பேச்சு. ஆனால் காந்தியை கொந்தர்களோடு இணைத்துப் பார்ப்பது கொஞ்சம் அதீதமா படுது. (என் லேப்டாப்புகளை பழுதடையச் செய்யும் கொந்தர்கள் யாரேனும் என் கையில் கிடைத்தால் செத்தானுங்க! )

    அசல்சிந்தனையாளர்கள் நம்மை எப்போதுமே உடைத்துக் கலைக்கிறார்கள். நம்மை குழப்பமும் கலக்கமும் அடையச்செய்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் எரிச்சலடையச் செய்கிறார்கள். நாம் நம்பி இருப்பவற்றை அவர்கள் உலுக்குவதனால் உருவாகும் மனக்குலைவு அது.

    இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். நம் இளமைப்பருவத்தில் அதிரடியான கருத்துக்கள் மூலம் நம்மைக் கலங்கடிக்கும் பேச்சாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் பலர் உண்டு. அவர்கள் அசல்சிந்தனையாளர்கள் அல்ல. காரணம் அவர்கள் அதுவரையிலான மானுட சிந்தனையை எதிர்கொள்ளவில்லை. நமக்கு மானுடசிந்தனையுடன் பெரிய அறிமுகம் இல்லாத காரணத்தால் சில கருத்துக்கள் மூலம் நம்மை அவர்கள் பாதிக்கிறார்கள், அவ்வளவுதான்.

    அந்தக்கருத்துக்களை அவர்கள் ஏற்கனவே இருந்த மானுட சிந்தனையின் பெருக்கில் இருந்து எடுத்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு அது தெரிந்திருக்காது, அவ்வளவுதான். அது மனித சிந்தனையின் ஒரு துளி, விவாதத்தில் ஒருபக்கம். அதை மிகைப்படுத்தி ஆணியறைந்து சொன்னால் இளமையில் நாம் நிலைகுலைவோம். நான் சொல்வது அதை அல்ல.

    உதாரணமாக, நமக்குச் சின்ன வயதில் கடவுள் பக்தி இருக்கும்போது ஒரு நாத்திகர் கடவுள் மறுப்பு பேசி நம்மைக் குலைக்கலாம். அது ஒருவேளை நமக்கு முக்கியமானதாகவும் இருக்கலாம். ஆனால் அது அசல்சிந்தனையே அல்ல. ஏனென்றால் நாத்திகம் என்றும் இருந்துகொண்டிருக்கும் சிந்தனை. புதியதல்ல.
    பார்த்தீங்களா! எவனாவது எதிர்கேள்வி கேட்டுரப்போறான்னு ரொம்ப எச்சரிக்கையா பெரியார் கூட்டத்தை விமர்சிக்கிறார் பாருங்க! காந்தி கொந்தார் என்றால் பெரியாரும் கொந்தர்தான்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #116
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    மின்னஞ்சல் அனுப்புவிட்டேன். பதிலளிக்கிறாரா என பொறுத்திருந்து பார்ப்போம்!
    -------------------------------------------------------------------
    திரு ஜெமோ,

    தூக்க நேர்ச்சை கட்டுரையில் கொடுக்கப்பட்ட காணொளியை கண்டேன். பச்சிளம் குழந்தைகள் கதற கதற உயரே கொண்டு செல்வது மூடத்தனத்தின் உச்சம்! "தன்னை வருத்திக்கொண்டு கடவுளின் கோபத்தைக் குறைக்கும் சடங்குகள் இல்லாத மதங்களே உலகில் இல்லை." என்ற சப்பைக்கட்டு வேறு. எந்த மதம் என்றாலும் மூடத்தனம் மூடத்தனம்தானே! ஒன்றுமே அறியாத சிசுக்களை வாட்டுவது அரக்கத்தனம் அல்லவா! சீற்றம் இதுபோன்றவைகளை காணும்போது எழாதா? ஒரு புறத்தில் அறம், ஆன்மீகத்திற்கு பக்கம் பக்கமாக எழுதித்தள்ளும் கை, இதையெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்யாமல் போறப்போக்கில் பதிவு செய்துவிட்டு நகர்வதேன்?

    வாசகன்
    வெங்கிராம்.
    -------------------------------------------------------------------
    தூக்கம் – கடிதம்

    ஆத்தா நான் பாஸாயிட்டேன்!

    புரிந்துகொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
    P_R!
    Last edited by venkkiram; 15th April 2012 at 05:12 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #117
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    தூக்கம் – கடிதம்

    ஆத்தா நான் பாஸாயிட்டேன்!



    P_R!
    nemba nallaave "ivar dhaan maaplai aanal poatrukkara sattai ennudhilla" ngra maadhiri sollittaar.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  9. #118
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Each to his own ..ங்க்ற ஜனநாயக கொள்கையோட logical extreme 'each to his own standards' தானே.

    I say this very seriously. Don't we have different standards for/expectations from different people.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  10. #119
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    இலக்கிய இடக்கரடக்கல்கள்!

    http://www.jeyamohan.in/?p=483

    சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணியே வந்துடிச்சி! ரொம்ப நாளாச்சி இதுபோல உடம்பு குலுங்க சிரித்து!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #120
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    8. விமரிசனங்களைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் படைப்பாளி அவர் [பொருமுவதோடு சரி]



    கட்டுரையை நகலெடுத்து தோள்பையில் இப்போதே வைத்துவிட்டேன். பஸ் பிரயாணத்தில் நிதானமா இன்னொரு வாசிப்பு விடனும்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

Page 12 of 13 FirstFirst ... 210111213 LastLast

Similar Threads

  1. Enathu India - Jeyamohan
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 2
    Last Post: 16th October 2008, 11:36 AM
  2. Deconstructing Jeyamohan
    By atomhouse in forum Tamil Literature
    Replies: 4
    Last Post: 30th November 2006, 07:39 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •