Page 10 of 13 FirstFirst ... 89101112 ... LastLast
Results 91 to 100 of 123

Thread: Jeyamohan

  1. #91
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    An impressive follow-up to his earlier article.
    Even more polemical and he's going about branding those who disagree with his PoV as 'seekers of mediocrity'. He uses these kind of tactics often.

    Anyway I had a few exchanges with rajasaranam on twitter about the first essay.
    I hope they'd be okay with my quoting it here.

    Quote Originally Posted by P_R
    Impressive piece by JM http://www.jeyamohan.in/?p=13982 I predict heavy #outrage though. ஏதோ நம்மால முடிஞ்சது ரீட்வீட்டுறது தான்.
    Quote Originally Posted by rajasaranam
    மோட்டார் மெக்கானிக் இப்பொ மரஏற்றுமதி செய்வதால் ’impressive piece’ ஆகி விட்டதோ?!!
    Quote Originally Posted by P_R
    மரஏற்றுமதி?
    Quote Originally Posted by rajasaranam
    முன்பு ஜெமோ இலக்கிய உனர்வு இல்லை என்றால் மோட்டார் மெக்கானிக் ஆகலாம் என்றதை ஏற்காத உங்கள் மனம் இப்பொழுது வாசிப்பு பழக முடியாத. ஒருவர் மரஏற்றுமதி செய்வதால் அதற்கு மட்டுமே லாயக்கு என்று (நித்யா) சொன்னதை எப்படி ஏற்றுகொள்கிறீர்கள் என கேட்டேன்!
    Quote Originally Posted by P_R
    oh even back then I wasn't disagreeing with his PoV only making fun of his choice of expression. IIRC I said: மோட்டார் மெக்கானிசமும் தெரியாத என் போன்றவர்கள் என்னதான் செய்வது

    I reduce the point of this article to: don't beat yourself over the inability to appreciate certain fine things despite prolonged.efforts to cultivate (eg. me and music). Oftentimes the inability is a fact in itself that cannot be questioned.Particularly liked the point about unlearning the homily 'everyone has something'. Even 7G ravikrishna knew motor mechanical !

    As Tyler Durden said: u r not a unique snowflake. JM seems to say the same: 'face it most of u add nothing to the gene pool'
    Quote Originally Posted by rajasaranam
    wats wrong with 'Everyone has something'? Well u dont music but write aint it?!! 'Nothin to GenePool' - ithu dawkinskku theriyuma?
    Quote Originally Posted by P_R
    yeah but it's only our 'ego' that is inflating what we think is special about us. Truly it's not that significantly different.that specialness we like to say is cultivable,hardwork etc. Good to 'motivate' to keep civil society running etc. Not wholly true. I tend to take 'everyone is special in their own way' as sales for kids.
    Quote Originally Posted by rajasaranam
    Got your point! but I'd say that everyone is a special selection to do their own work and contribute to the progress of mankind.but that is completely missing in JemO's!. He gives importance to few attributes of mankind as special and others nothing
    Quote Originally Posted by P_R
    equa said JM overestimates the influence that the 'nuanced' have had in human civilization. I guess that's your point too
    Quote Originally Posted by rajasaranam
    'If the common multitude had no purpose their existence is questionable' Only from this point a Nietzsche/Hitler/Nazi arrives from!
    Quote Originally Posted by P_R
    that's why i predicted outrage the possible conclusions are perhap why such opinions are not expressed.
    Quote Originally Posted by rajasaranam
    the contribution of each & every person on this planet earth is immense towards advancement of our civilization and human species.
    Quote Originally Posted by P_R
    Respect for individual will and choice does not need to proceed from assessment of his 'worth'
    Quote Originally Posted by rajasaranam
    Exactly! To regard a human trait as higher than others is absolute nonsense.He is a fool who doesnt understand a carpenters work making his writing desk possible and thinks himself a special creature!
    Quote Originally Posted by P_R
    that's possible only with a 'thou shalt not judge' frame of mind.
    Quote Originally Posted by rajasaranam
    I'd say 'thou shall judge' and know there is no specialty in any living being
    Quote Originally Posted by P_R
    i wish i could be that reassured. The anxiety of going with knowing/experiencing everything will not go away easy
    ...
    Say I write uber neat code. Proud about quality of my work etc. But i'd be kidding myself thinking that me-shakespeare #sameguy
    Quote Originally Posted by rajasaranam
    yeah #sameguy
    Quote Originally Posted by P_R
    suttham. Every human action is an act of differentiation 'nnu oru pet theory.

    I guess his follow-up clarified much about the 'politics' of this PoV. It is unabashedly elitist and condescending of course. Just no denying that (heck that's exactly what's attractive about it). But

    But, at the risk of blowing my own trumpet, much of what he said is what I meant by

    Respect for individual will and choice does not need to proceed from assessment of his 'worth'
    It is only when these two are necessarily coupled that one is 'forced' to think of absolute equality in every conceivable way. The concept of 'deserving' is so strongly ingrained that it is difficult to get out of it

    Ironically some parts of JM's article talks about how the 'society doesn't give the special one's their due' I found that a bit of a self goal.

    The specialness (உணர்கொம்பு) begins and ends with the fact that it is a natural gift. It is difficult to come to terms with the fact that that is all it is - and it will not naturally extend to other 'social awe' related stuff (you can sense a Charuvian ஏக்கம் in this article!). His emphasis seems to lean towards the 'denial of awe' by the 'mediocre multitude' rather than the 'pure' tragedy of the realization of the multitudinousness of mediocrity (the outside library scene in the previous essay).

    While the former is a பரிவட்டம் denial personal whining of an intellectual the latter condescension is more poetic.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #92
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    பள்ளிப் பாடப் பிரிவில் வைக்கப்படவேண்டிய கட்டுரை. வழக்கம் போல, கருத்துச் செறிவுள்ள கட்டுரை ஜெமோவிடமிருந்து.

    நமக்குள் இருக்கும் பேய்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #93
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2008
    Posts
    2,941
    Post Thanks / Like
    P_R,

    Was not around when you had that interesting discussion with RS. Nice viewpoints. My view is very similar to yours.

  5. #94
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    தாய்மொழி , செம்மொழி..

    இன்று ஒரு செவ்வியல் படைப்பை செம்மொழியையே தாய்மொழியாகக் கொண்டு வாசிக்க தமிழில் மட்டுமே முடியும்.
    பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. #95
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    கல்வி இருகடிதங்கள்

    அமெரிக்க கல்வித் திட்டங்களை பற்றி உரையாடும்போது..

    கல்வியில் இருவகை உண்டு. தெரிந்துகொள்வதற்கான கல்வி , சிந்திப்பதற்கான கல்வி. இந்தியாவில் உள்ளது முதல்வகை கல்வி. நீங்கள் சொல்வது இரண்டாம் வகைக் கல்வி. அதை அங்கே உருவாக்கியிருப்பதை கண்டு நான் வியந்திருக்கிறேன். அங்கே சிறு குழந்தைகள் கூட நூல்களை வாசிக்கவும் சொந்தமாக புரிந்துகொண்டு கருத்துக்களை உருவாக்கவும் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றன.

    ஆனால் அமெரிக்கா என்னை கொஞ்சமும் கவராத நாடு. அமெரிக்க பயணத்திற்குப்பின் ஒரு பயணக்கட்டுரை எழுத ஆரம்பித்தேன். அந்த நிலம் என்னை இன்றும் பெரும் கனவாக நிறைத்திருக்கிறது. அங்கே சந்தித்த நண்பர்கள் இப்போதும் என் சுற்றமாக இருக்கிறார்கள். ஆனால் அங்கே இருக்கும் முதலாளித்துவ அமைப்பு மிக அசிங்கமானது. சொல்லப்போனால் நான் அமெரிக்கா செல்வது வரை முதலாளித்துவம் மேல் கொண்டிருந்த மதிப்பு சென்றதுமே இல்லாமலாகியது

    அதே அமெரிக்காவில் என் நண்பர்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறார்கள். மிகமிகக் குறைந்த ஊதியம் . பள்ளியிலேயே தங்கி சுயமாக சமைத்து உண்டு வெளியே எங்குமே செல்லாமல் இருந்தால் பணத்தை இந்தியா அனுப்பலாம். தொகை நாணயமதிப்பில் பெரிது. உள்ளூர்க்காரர்கள் அந்த சம்பளத்தில் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதனால் இவர்களுக்கு வாய்ப்பு

    அந்தப்பள்ளியில் ஒன்றுமுதல் எட்டாம் வகுப்பு வரையிலான எல்லா பிள்ளைகளையும் ஒரே வகுப்பாக அமரச்செய்து ஒரே ஒரு ஆசிரியர் அவருக்கு தெரிந்ததைச் சொல்லி கொடுக்கிறார்- அதாவது அமைதியாக கொஞ்ச நேரம் அமரச்செய்கிறார். மதியம் சாப்பாடு போட்டு அனுப்பிவிடுகிறார்கள். பத்தாம் வகுப்புவரை படித்தாலும் சொந்தமாம நான்குவரி எழுதவோ எழுத்துக்கூட்டிப் படிக்கவோ முடியாது. கறுப்பர்களும் ஸ்பானிஷ்காரர்களும் பயிலும் பள்ளிகள் அவை. சாப்பாட்டுக்காக மட்டுமே பிள்ளைகள் பள்ளிக்கு வருகின்றன. ஆரம்பப் பள்ளியிலேயே வன்முறை , பாலுறவு, போதைப்பழக்கம்.

    அதையும் சேர்த்தே நான் அமெரிக்க பள்ளிகள் என்று சொல்வேன்
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. #96
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அறம் சிறுகதைகளைத் தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு வந்து விட்டார் ஜெமோ. கடைசி முகம் http://www.jeyamohan.in/?p=22514 வாசித்தேன். நடை, நகர்தல் எல்லாமே அழகா வந்திருக்கு. செறிவான கதை. பல தளங்களில் மனதை இயக்குகிறது. சுவாரஸ்யத்தை கொடுத்ததோடு நில்லாமல் புதிரையும் முன்வைக்கிறது கதை. புதினங்கள் வாசிப்பதில் என்னே ஒரு சுகானுபவம்!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  8. #97
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    அறம் - சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஈரோட்டுக் கூட்டத்தில் சிலரது கருத்துக்கள்
    --------------------------------------------------------------------------------------

    எஸ்.கெ.பி. கருணா கதைகளுடன் அறம்பாடுதல் பற்றிய ஆழமான நம்பிக்கை எப்படி அவரது தந்தையின் மனதில் ஊறியிருந்தது என்பதை விவரித்து தன் சொந்தவாழ்க்கை அனுபவங்கள் மூலம் எப்படி தொடர்புகொள்ளமுடிந்தது என்று சொன்னார். இக்கதைகள் எல்லாமே அற்புதமான திரைக்கதைத்தன்மைகொண்டிருப்பதை சுட்டிக்காட்டி வணங்கான் கதையின் கச்சிதமான தொடக்கம் மற்றும் உத்வேகமான உச்சம் ஆகியவை காட்சிகளாகவே இருப்பதை விளக்கினார்.

    டாக்டர் ஜீவா தனிப்பட்ட முறையில் டாக்டர் கேயுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். டாக்டர் கே பற்றிய கதை உண்மையில் அவரைப்பற்றி மட்டும் பேசுவதல்ல என்றார். அவர் நிலைகொள்ளும் மதிப்பீடுகளைப்பற்றியே அது பேசுகிறது. அத்தகைய பல மனிதர்கள் நம்மிடையே உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள, அவர்களின் மரபை ஏற்றுக்கொள்ள இக்கதை வழிகாட்டுகிறது என்றார். ஈரோடைச்சுற்றி மலைப்பகுதிகளில் மக்களிடையே சேவை செய்யும் பல மருத்துவர்கள், களப்பணியாளர்கள் பற்றி உணர்ச்சிகரமாக பேசினார்.

    மிஷ்கின் இந்த தொகுதியின் பெரும்பாலான கதைகளை அவை வெளிவந்த காலகட்டத்தில் பவா செல்லத்துரை வாயாலேயே முதலில் கேட்டதாகவும் அதன்பின்னரே வாசித்ததாகவும் சொன்னார். அறம் கதையின் தனித்தனியான வரிகள் எப்படியெல்லாம் தன்னை பாதித்தன என்று குறிப்பிட்டார். அறம் கதை முழுக்க அந்த எழுத்தாளர் கெஞ்சியபடி பணத்துக்காக காத்து நிற்கிறார். சட்டென்று கதைநேர்மாறாக மாறி அந்த ஆச்சி பணத்தை கொடுப்பதற்காக காத்து அமர்கிறாள். அந்த திருப்பத்தின் ஆச்சரியமே அந்தக்கதையின் உச்சம் என்று சொன்னார்.

    பவாசெல்லத்துரை சோற்றுக்கணக்கு கதையின் பசி என்ற அம்சத்தை தொட்டுப்பேசினார். ஷோபாசக்தி, உதய ஷங்கர் போன்றவர்களின் கதைகள் வழியாக பசி என்பது அரசியலை, சமூகவியலை தாண்டி ஒரு முக்கியமான பேசுபொருளாக இருப்பதை, எவ்வளவு எழுதியும் கரைக்கமுடியாத ஒன்றாக இருப்பதை குறிப்பிட்டார். அந்த பசியை அன்பினால் கெத்தேல்சாகிப் எதிர்கொள்வதைப்பற்றிச் சொன்னார்

    நாஞ்சில்நாடன் உணர்ச்சிகரமாகப் பேசினார். மத்துறு தயிர், தாயார்பாதம் என்ற கதைகளின் மொழியின் நுட்பத்தைச் சுட்டிக்காட்டினார். தாயார் பாதம் கதையில் இரு பிராமணர்கள் பேசிக்கொள்கிறார்கள். ஒருவர் தஞ்சைபிராமணர் இன்னொருவர் குமரிபிராமணர். இருவர் பேசுவதும் பிராமண வழக்கு. ஆனால் ஒன்று குமரிவட்டார பிராமண வழக்காகவும் இன்னொன்று தஞ்சைவட்டார பிராமண வழக்காகவும் இருக்கிறது. இருவரையும் யாரென தெரியுமென்பதனால் அவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்பதுபோலவே இருக்கிறது என்றார்.

    அதேபோல மத்துறு தயிர் கதையில் பேராசிரியர், ராஜம், குமார் மூன்று கதைமாந்தர்களும் குமரிமாவட்டத்தின் மூன்று வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பேசும் குமரித்தமிழில் மூவருடைய மொழியும் தனித்தன்மையுடன் மாறுபட்டிருக்கிறது. அதை குமரிமாவட்டத்தினர் உணரமுடியும். இத்தகைய நுட்பங்களை எவர் உணரமுடியும்? உணர முடிந்தாலும் இல்லாவிட்டாலும் அது கலையின் இயல்பு என்றே சொல்லமுடியும் என்றார்

    தாயார் பாதம், மத்துறுதயிர் இரண்டுமே நுண்மையான மரபிலக்கிய சுட்டிகள் கொண்ட கதைகள், மரபிலிருந்து வாசித்தெடுக்கவேண்டிய பல உள்ளடுக்குக்ள் கொண்டவை என்ற நாஞ்சில்நாடன் அவற்றைச் சுட்டிக்காட்டி பேசினார். தமிழ் மொழியின் இலக்கியச் சாதனைகளில் ஒன்று இந்த தொகுதி என்று கூறினார்

    கல்பற்றா நாராயணன் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட அறம் கதையைப்பற்றி மட்டும் பேசினார். பாஷாபோஷினியில் வெளியான அறம் கதை சமீபத்தில் மலையாள இலக்கிய வாசகர்களை அதிரச்செய்த, மிகவிரிவான விவாதத்தை உருவாக்கிய கதை என்றார். மலையாளிக்கு அக்கதையில் இருந்து கிடைப்பது மொழிக்கு அப்பாற்பட்ட மானுட அம்சம். ஒட்டுமொத்தக் கதையை முதலில் வாசிக்கிறோம். ஒவ்வொரு வரியிலும் வெளியாகும் கவித்துவத்தை மீண்டும் வாசிக்கவேண்டும். ‘இருளின் பிரார்த்தனை அல்லவா ஒளி’ என்ற வரியைப்போல ‘புலி காலெடுத்து வைப்பது போன்ற பேச்சு’ போன்ற வரியைப்போல கவிதையால் நிறைந்த கதை அது.

    இந்த கதையின் தரத்தில்தான் பிற பன்னிரு கதைகளும் உள்ளன என்றால் உலகமொழிகளில் வெளியான மிகச்சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று என அதைச் சொல்லிவிட முடியும் என்றார் கல்பற்றார்.புத்தர் ஒருமுறை வெயிலில் நடந்து சென்றார். அதைக்கண்டு முப்பத்தாறு தேவதைகள் முப்பத்தாறு குடைகளை அவருக்கு அனுப்பினர். எவரையும் மனம் வருந்தசெய்ய விரும்பாத புத்தர் முப்பத்தாறு தோற்றம் எடுத்து அக்குடைகளை ஏற்றுக்கொண்டார். அதைப்போன்றதே இந்த பன்னிரு கதைகளும். பன்னிரு கதைநாயகர்களாக உருவம் கொள்வது ஆசிரியனின் அறவுணர்ச்சியே என்றார்

    ------------------------------

    ஜெமோ!

    அறம் - சிறுகதைகள் வரிசையாக வெளிவந்தபோதே தீர்மானித்துவிட்டேன். புத்தகமாக வந்தால் திருமணப் பரிசாக, அன்பளிப்பாக கொடுத்துவிடவேண்டியதுதான் என.புத்தகம் அச்சடிக்கப்பட்டு விற்பனையாகிக்கொண்டு இருக்கிறது. அவ்வப்போது ஐந்து, பத்து என வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ளணும்! அறம், சோற்றுக் கணக்கு, மத்துருதயிர், தாயார்பாதம், யானை டாக்டர், வணங்கான் - 250 ரூபாய் - ஐந்தே டாலரில் அத்தனையுமா? வாழ்நாள் முழுதும் இக்கதை மாந்தர்கள் மனதில் வலம் வந்து கொண்டே இருப்பார்கள்! மனசாட்சியை உளியால் செதுக்கிக்கொண்டே செல்வார்கள்.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  9. #98
    Member Regular Hubber lord_labakudoss's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    82
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    பள்ளிப் பாடப் பிரிவில் வைக்கப்படவேண்டிய கட்டுரை. வழக்கம் போல, கருத்துச் செறிவுள்ள கட்டுரை ஜெமோவிடமிருந்து.

    நமக்குள் இருக்கும் பேய்
    Read this wonderful essay after seeing this post...

    Was reminded of this again while seeing "Mayakkam Enna"...
    --LL

  10. #99
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    தமிழ் பாரம்பர்ய கச்சேரி 2011 விழாவின் ஒரு பகுதியாக குறுந்தொகை - தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற தலைப்பில் ஜெமோ ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு!

    பத்ரிக்கு நன்றிகள்! இணையத்திற்கு நன்றிகள். கலந்துகொள்ளாமலே கேட்டு ரசிக்கமுடிகிறது.

    http://www.badriseshadri.in/2011/12/2011_23.html
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  11. #100
    Junior Member Newbie Hubber
    Join Date
    Nov 2004
    Posts
    9
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    தமிழ் பாரம்பர்ய கச்சேரி 2011 விழாவின் ஒரு பகுதியாக குறுந்தொகை - தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற தலைப்பில் ஜெமோ ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு!

    பத்ரிக்கு நன்றிகள்! இணையத்திற்கு நன்றிகள். கலந்துகொள்ளாமலே கேட்டு ரசிக்கமுடிகிறது.

    http://www.badriseshadri.in/2011/12/2011_23.html
    Here is the video of the above on youtube.


Page 10 of 13 FirstFirst ... 89101112 ... LastLast

Similar Threads

  1. Enathu India - Jeyamohan
    By Sanjeevi in forum Miscellaneous Topics
    Replies: 2
    Last Post: 16th October 2008, 11:36 AM
  2. Deconstructing Jeyamohan
    By atomhouse in forum Tamil Literature
    Replies: 4
    Last Post: 30th November 2006, 07:39 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •