Page 92 of 404 FirstFirst ... 42829091929394102142192 ... LastLast
Results 911 to 920 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

 1. #911
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,085
  Post Thanks / Like
  'விஸ்வரூப'த்தின் அற்புதப் பாடல்கள் ஒலி-ஒளிக் காட்சியாக.

  எங்கள் குல தெய்வத்திற்கு "கையோடு கள்ளமில்லே...இந்த வாயோடு பொய்யுமில்லே"...

  நடிகர் திலகத்தின் வித்தியாசமான நடிப்புப் பரிமாணத்தில் மிளிரும்
  "என்ன யாருன்னு நெனச்சே...பண மூட்டையை விரிச்சே"... அசத்தும் அரிய பாடல் வீடியோவாக.  "ராஜாதி ராஜனுக்கு ராணி மேலே காதலடி"... என்றும் இனிக்கும் டூயட் பாடல்.  "ஓ...மிஸ்.. நாம் சந்திப்பது எந்தப் பக்கம் காட்டு"... ஸ்ரீதேவியுடன் இளமைத் துள்ளல் டூயட் .  "வாழ்க்கையில் எனக்கொரு புது ராகம் வந்ததை எண்ணிப் பாடட்டுமா"...S.P.B.யின் மயக்கும் குரலில், சிம்மக்குரலோனின் உன்னத உதட்டசைவில்.  "நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து"... சாதனைத்திலகத்தின் அற்புதமான சோக நடிப்பில்.

  அன்புடன்,
  வாசுதேவன்.
  Last edited by vasudevan31355; 6th November 2011 at 08:03 PM.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 3. #912
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,085
  Post Thanks / Like
  விஸ்வரூபம் நிழற்படங்கள் தொடர்கிறது...


  அன்புடன்,
  வாசுதேவன்.

 4. #913
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,085
  Post Thanks / Like
  "விஸ்வரூபம்" திரைப் படத்தின் H.M.V. இசைத்தட்டு.

  Viswaroopam M.S. VISWANATHAN 7" EMI HMV EP 1980 7LPE 21558
  அன்புடன்,
  வாசுதேவன்.
  Last edited by vasudevan31355; 6th November 2011 at 09:47 AM.

 5. #914
  Moderator Veteran Hubber
  Join Date
  Mar 2006
  Posts
  3,024
  Post Thanks / Like
  சாரதா,

  Welcome Back!

  செவிக்கு உணவில்லாதபோதுதானே வயிற்றுக்கு ஈஃய வேண்டும். இங்கே சுவாமி என்ற சுனாமி அடித்து கலக்கும்போது அதை ரசிப்பதிலே நேரம் போய் விடுகிறது.

  பைலட் பிரேம்நாத் பற்றி நினைக்கும்போதெல்லாம் ஒரு சில விஷயங்கள் நினைவுக்கு வரும். அந்த படம் தயாரிப்பில் இருக்கும்போது எதிர்பார்ப்பு ஏராளமாக இருந்தது. முதன் முறையாக இரு நாடுகளுக்கிடையே ஒரு கூட்டு தயாரிப்பு, சிவந்த மண் மற்றும் அவன்தான் மனிதன் படங்களுக்கு பிறகு வெளிநாட்டில் படமாக்கப்படும் நடிகர் திலகத்தின் படம், இலங்கையில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம், மூன்று schedule-களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக நினைவு. அந்த நேரத்தில் இலங்கை வானொலியின் சார்பில் அப்துல் ஹமீது நடிகர் திலகத்தை பேட்டி கண்டு அது இலங்கை வானொலியில் இரண்டு மூன்று பகுதிகளாக ஒலிப்பரப்பட்டது. அந்த நிகழ்வும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை தூண்டியது. சென்னை சபாக்களில் நடிக்கப்பட்ட மெழுகு பொம்மைகள் என்ற மேடை நாடகமே இந்த படம் என்று தெரிந்த போதிலும் மேற்சொன்ன விஷயங்களால் படத்தைப் பற்றிய ஒரு ஆர்வம் இருந்தது. படம் 1978 அக்டோபர் 30 தீபாவளியன்று மதுரை சென்ட்ரல் சினிமாவில் ரிலீஸ் என்று அறிவிப்பு வந்து விட்டது.

  இதற்கிடையே அதே அக்டோபர் மாதம் 13-ந் தேதி என்று நினைவு. எங்கள் மதுரை ஸ்ரீதேவியில் பார் மகளே பார் வெளியானது. இந்த படத்தை நினைவு தெரிந்த பிறகு பார்க்கவில்லை என்பதனால் உடனே அந்த படத்திற்கு போனோம். ஞாயிறு மாலை சரியான கூட்டம். படம் ஆரம்பமே அமர்க்களம். அந்த ஆஸ்பத்திரி நடை, நீரோடும் வைகையிலே ஸ்டைல் என்று பிரமாதப்படுத்தி இருப்பார். படம் முடியும் போது simply blown away என்று சொல்லுவார்களே அப்படி ஒரு மனநிலையில் நாங்கள் இருந்தோம். சாதாரணமாக பழைய படங்கள் ஒரு வாரத்திற்குதான் போடுவார்கள். ஆனால் இந்தப் படம் தீபாவளி வரை ஓடியது. அந்த 18 நாட்களில் மூன்று முறை பார்த்தேன்.

  தீபாவளி வந்தது. அந்த முறை ஏராளமான படங்கள். தீபாவளிக்கு முதல் நாள் பகல் காட்சி லயன்ஸ் கிளப் அல்லது ரோட்டரியா என்பது நினைவில்லை. அவர்கள் சிவம் தியேட்டரில் நடத்திய தப்பு தாளங்கள் சிறப்புக் காட்சிக்கு போனோம். தீபாவளிக்கு முதல் நாளே வெளியாகி விட்ட மனிதரில் இத்தனை நிறங்களா இரவு காட்சி பார்த்தோம். மறுநாள் காலை தீபாவளி.

  காலை ஓபனிங் ஷோவிற்கு சென்ட்ரல் சினிமா போயாகி விட்டது. மிக மிக நெருங்கிய நண்பன் ஒருவனின் பிறந்த நாள் வேறு அன்று. சக சிவாஜி ரசிகனான அவனும் ஜோதியில் கலக்க வந்து விட்டான். படத்திற்கு பெரிய அளவில் அலப்பறை இருந்தது. சுவையாக ஆரம்பித்த படம் கதையின் முக்கிய முடிச்சு விழும் கட்டத்திற்கு வந்த போதுதான் ஆஹா! இது பார் மகளே பார் போலவே இருக்கிறதே என்று தோன்றியது. அப்போது முதல் எங்கள் நண்பர் குழாம் ஒவ்வொரு காட்சியையும் ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்து விட்டோம். அப்படி பார்த்தால் சிவலிங்கத்திற்கு முன்னால் பிரேம்நாத்தால் தாக்கு பிடிக்க முடியுமா? படம் முடிந்து வெளியே வருகிறோம். படம் பார்த்து விட்டு வந்தவர்கள் அனைவரும் நல்ல ரிப்போர்ட் சொல்ல எங்களால் மட்டும் அப்படி சொல்ல முடியவில்லை. இந்த ஏமாற்றத்தை போக்க வேண்டுமே! உடனே அனைவரும் கூடி ஒரு முடிவு எடுத்தோம். தீபாவளியை முன்னிட்டு வெள்ளைக்கண்ணு தியேட்டரில் புதிய பறவை வெளியாகி இருந்தது. அதற்கு மாலைக் காட்சிக்கு செல்வது என முடிவு செய்து அதன்படியே சென்றோம். அங்கும் பயங்கர கூட்டம்.ஆனாலும் டிக்கெட் வாங்கி பார்த்த பிறகுதான் தீபாவளி தீபாவளியானது.

  பின் மறுநாள் கண்ணாமூச்சி, அடுத்த நாள் வண்டிக்காரன் மகன், அடுத்து தாய்மீது சத்தியம் என வரிசையாக படங்களை பார்த்தோம். அநேகமாக எல்லா படங்களும் பார்த்தாகி விட்டது.சிகப்பு ரோஜாக்கள் மதுரையில் 10 நாட்கள் தாமதமாக ரிலீஸ் ஆனது. அதை தவிர கே.எஸ்.ஜியின் அடுக்கு மல்லி, தேங்காயின் தங்க ரங்கன் எல்லாம் எங்கள் லிஸ்டிலேயே கிடையாது என்பதால் அவற்றை ஒதுக்கி விட்டோம்.

  இந்த நேரத்தில் படம் பார்க்காத மற்றொரு நண்பன் வந்து பைலட் படம் பார்க்க கூப்பிட்டான். தயக்கமாக இருந்தது. எல்லோரும் நல்ல ரிப்போர்ட் சொல்கிறார்கள் என்று அவன் சொல்லுகிறான். சரி என்று அவனோடு சென்றோம். படத்தை ஒரு ஒட்டுதல் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தோம். இந்த முறை அந்த ட்விஸ்ட் காட்சிக்கு பிறகு எந்த வித ஒப்பீடும் இல்லாமல் பார்த்த போது அவ்வளவு மோசமில்லை என்று தோன்றியது. நாம்தான் அதிகமாக எதிர்பார்த்து விட்டோமோ என்று தோன்றியது. அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்து அடுத்த முறை பார்க்கும் வாய்ப்பு தற்செயலாக கிடைத்தது. இந்த முறை படம் முழுக்க பிடித்தது. அப்படி படம் ஓடி முடிவதற்குள் மொத்தமாக ஒரு ஐந்து தடவை பார்த்து விட்டேன். 70-களிலும் 80-களிலும் வெளி வந்த நடிகர் திலகத்தின் படங்களில் முதல் முறை பார்த்த போது தோன்றிய கருத்து அடுத்தடுத்த முறை பார்க்கும் போது மாறியது என்றால் அது பைலட் பிரேம்நாத் படத்திற்குதான்.

  அன்புடன்

  இந்த விஷயத்தை திரிக்கு வந்த புதிதிலேயே எழுதியிருக்கிறேன். ஆனால் பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இம்முறை சற்று விளக்கமாகவே எழுதியிருக்கிறேன்.

 6. #915
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  டியர் வாசுதேவன் சார்,

  "கண்கள்" காவியத்தின் இரு பதிவுகள், இரு கண்கள் !

  "விஸ்வரூபம்" காவியத்திற்காக தங்களின் உழைப்பும் 'விஸ்வரூபம்' எடுத்திருப்பது பதிவுகளைப் பார்க்கும் போது தெரிகிறது !

  தங்களுக்கு எனது வளமான பாராட்டுக்களுடன் கூடிய மனமார்ந்த நன்றிகள் !

  "காத்தவராய"னுக்காக காத்திருக்கிறோம் !

  டியர் ராகவேந்திரன் சார்,

  "கண்கள்" ஒரிஜினல் பாட்டுப் புத்தக முகப்பு அரிய ஒன்று !

  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 7. #916
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

  விஸ்வரூபம்

  [6.11.1980 - 6.11.2011] : 32வது உதயதினம்

  சாதனைச் செப்பேடுகள்

  காவிய விளம்பரம் : தினத்தந்தி : 1.10.1980  100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 13.2.1981  '100வது நாள் விழா' நிழற்படம் : முரசொலி : 17.2.1981


  குறிப்பு:
  சென்னை 'சாந்தி'யில் 100 நாள் விழாக் கொண்டாடிய இக்காவியம், 'ஸ்ரீகிருஷ்ணா' திரையரங்கில் 69 நாட்களும், 'புவனேஸ்வரி' திரையரங்கில் 69 நாட்களும் ஓடி மாநகரில் சிறந்த வெற்றி பெற்றது. தென்னகமெங்கும் கணிசமான அரங்குகளில் 10 வாரங்கள் [69 நாட்கள்] ஓடி பெருவெற்றிக்காவியமாகத் திகழ்ந்தது. இவை தவிர, இலங்கையின் கொழும்பு 'கிங்ஸ்லி' திரையரங்கில் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது.


  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 8. #917
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  சகோதரி சாரதா,

  தங்களுக்கு நல்வரவு !

  நான் முன்பு குறிப்பிட்டதையே இப்பொழுதும் குறிப்பிடுகிறேன். தங்களது பதிவு இல்லாத நமது திரி விருந்து இல்லாத திருமணவிழா போலத்தான். தங்கள் பதிவுகளைப் படித்தவுடன் மனதில் மகிழ்ச்சி. தொடர்ந்து தாங்கள் இனி பதிவிடுவீர்கள் என்று அறிந்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி.

  எப்பொழுதும் போல் தாங்கள் அளித்த உச்சமான பாராட்டுதல்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள் !

  தங்களிடம் ஒரு அன்பு வேண்டுகோள். தற்பொழுது "விஸ்வரூபம்" வெளியீட்டு மேளா நமது திரியில் கொண்டாடப்பட்டு வருவதை தாங்கள் அறிவீர்கள் ! சென்னை 'சாந்தி'யில் சிறந்த முறையில் நடைபெற்ற "விஸ்வரூபம்" 100வது நாள் விழா பற்றிய சிறப்புப்பதிவை விரைவில் பதிவிடுவதாக சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தீர்கள் ! அந்த சிறப்புப் பதிவை தற்பொழுது தாங்கள் பதிவிட்டீர்களென்றால் அது ஒரு சிறந்த பொக்கிஷப் பதிவாகத் திகழும். "விஸ்வரூபம்" 100வது நாள் விழாவில் தாங்கள் நேரில் கண்டு களித்த நிகழ்வுகளை. தங்கள் அபார எழுத்து நடையில் சிறப்புப்பதிவாகக் காண, என்னையும் சேர்த்து இங்குள்ள எல்லோருமே ஆவலாக உள்ளோம் ! அவசியம் எழுதுவீர்கள் என்று நம்புகிறோம் !

  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 9. #918
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  டியர் முரளி சார்,

  தங்களின் உயர்ந்த உள்ளத்திலிருந்து பொங்கி வரும் பாராட்டுக்கு எனது பொன்னான நன்றிகள் !

  "பைலட் பிரேம்நாத்" அனுபவப்பதிவு அருமையிலும் அருமை !

  அன்புடன்,
  பம்மலார்.
  pammalar

 10. #919
  Member Junior Hubber
  Join Date
  Dec 2009
  Posts
  50
  Post Thanks / Like

  Visvaroopam

  டியர் பம்மலர்,

  விஸ்வரூபம் கொழும்பு கிங்ஸ்லி திரையில் 93 நாட்கள் ஓடியது.

  நன்றி

  Jeev

 11. #920
  Senior Member Veteran Hubber
  Join Date
  Sep 2009
  Location
  Chennai
  Posts
  3,297
  Post Thanks / Like
  நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்

  காத்தவராயன்

  [7.11.1958 - 7.11.2011] : 54வது ஜெயந்தி

  அர்ச்சனை மலர்கள்

  சிறப்புப் புகைப்படம்  முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 29.10.1958  முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 14.11.1958


  பக்தியுடன்,
  பம்மலார்.
  pammalar

Similar Threads

 1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
  By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1966
  Last Post: 20th September 2011, 10:04 PM
 2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
  By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1982
  Last Post: 22nd May 2011, 07:39 PM
 3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
  By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1499
  Last Post: 6th August 2010, 11:57 AM
 4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
  By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1472
  Last Post: 28th February 2008, 07:05 PM
 5. Nadigar Thilagam Sivaji Ganesan
  By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
  Replies: 1492
  Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •