Page 62 of 404 FirstFirst ... 1252606162636472112162 ... LastLast
Results 611 to 620 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #611
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    திருவிளையாடல் திரைக்காவியத்தில் மன்னனுக்கு ஏற்பட்ட ஐயத்தை சிவபெருமான் தீர்த்து வைத்தது போல் உடனே ஜெயகாந்தன் புத்தகத்தின் மூலமாக தீர்த்து விட்டீர்கள். எனக்கு அதில் சந்தேகம் இல்லை, கா.மு.ஷெரீப் எழுதியது தான் என்பதை சீதக்காதி அவர்கள் அந்தக் காலத்தில் கூறிய போதே உறுதியாகி விட்டது. என்றாலும் திரையில் கவியரசரின் பெயரில் வந்ததால் நமக்குக் கிடைத்த தகவலை நாம் ஆதாரபூர்வமாக அல்லவா அறிய வேண்டும்.
    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #612
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'வம்ச விளக்கு' திரைப் படத்தில் தந்தையும் தனயனும்.[23.10.1984 - 23.10.2011] : 28வது உதயதினம்



    (1985 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சமயத்தில் கடைகளில் கிடைத்த பொங்கல் வாழ்த்து அட்டையின் இமேஜைத்தான் மேலே காண்கிறீர்கள்.)

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 23rd October 2011 at 08:11 AM.

  4. #613
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் சார்,

    நாளுக்கு நாள் உங்கள் அசுர சாதனைகள் எல்லோரையும் மலைக்க வைக்கின்றன. அமுத சுரபி இதழில் வந்த ஏ.வி.எம்.செட்டியாரின் கட்டுரையைப் பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. தான் முதலில் நடிகர்திலகத்தை பராசக்தியில் நடிக்க வைக்க மறுத்ததையும், இடையில் கூட அவரை மாற்றி கே.ஆர்.ஆரைப் போடச்சொன்னதையும் ஒப்புக்கொள்கிறார். அந்நேரத்தில் நடிகர்திலகத்தின் பக்கம் நின்று உறுதியாக வாதாடிய பெருமாள் முதலியாரின் பண்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது.

    'பாட்டும் நானே' பாடல் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதியது என்று அவரது மகன் சீதக்காதி அவர்கள் (எனக்கும் அவர் நெருங்கிய நண்பர், இதுபற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன்) சொன்னதாக ராகவேந்தர் சார் சொன்னதும், உடனே ஜெயகாந்தனின் நூலில் இருந்து ஆதாரத்தைக்கொண்டு வந்து, அது உண்மைதான் என்று நிரூபித்த விதமும் வேகமும், உண்மையாகவே நீங்கள் 'ஜீபூம்பா' பூதம்தானோ என்ற ஐயத்தையே தோற்றுவிக்கிறது. திரு கா.மு.ஷெரீப் அவர்கள் பெயரை ஏ.பி.என். டைட்டிலில் போட்டிருக்க வேண்டும். கண்ணதாசனும் இதை பிற்பாடு எழுதிய தனது மனவாசம் நூலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இருவரும் ஷெரீப் அவர்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. உண்மையை வெளிக்கொணர்ந்து சரியானவருக்குப் பெருமை சென்றடையச்செய்த ராகவேந்தர் சாரும், நீங்களும் பாராட்டுக்குரியவர்கள்.

    எங்களை மலைக்க வைத்த இன்னொரு விஷயம், 'கள்வனின் காதலி' மற்றும் 'கோடீஸ்வரன்' விவகாரமம். இரண்டும் ஒரே நாளில் வெளியானதால் எதையாவது ஒன்றை 24 வது படமாகவும், இன்னொன்றை 25 வது படமாகவும் போடலாம் என்று அகில இந்திய தலை மன்றம், அதன் தலைவர் சின்ன அண்ணாமலை ஆகியோர் முடிவு செய்து 'கள்வனின் காதலிக்கு' 25 வது பட அந்தஸ்தைக்கொடுக்க (இத்தனைக்கும் மலர் தயாரிப்புக்குழுவில் பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களும் இடம்பெற்றுள்ளார்).....

    நீங்களோ, ஒரே நாளில் தணிக்கையாகி, ஒரே நாளில் வெளியாகியிருந்தபோதிலும் தணிக்கைச் சான்றிதழ் எண்ணின் படி 'கோடீஸ்வரன்'தான் 25வது படம் என ஆணித்தரமாக நிரூபித்ததைப் பார்க்கும்போது.... 'அடடா ரசிகன் என்றால் இப்படியிருக்க வேண்டும். நாமும் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன் என்று சொல்லிக்கொண்டு வெட்கமில்லாமல் வளைய வருகிறோமே' என்ற எண்ணம்தான் தோன்றியது. இதுதான் ரசிகனுக்கும், பக்தனுக்கும் உள்ள வித்தியாசம்.

    இன்னும் எப்படியெப்படியெல்லாம் அசத்தப்போகிறீர்களோ.... காத்திருக்கிறோம்.

  5. #614
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Awesome Pammalar

    Awesome Pammlar sir... You got NT details like "Karuvoolam".... Hats off to you sir...

    Murali sir, looking for your detailed email about our NT.

    Cheers,
    Sathish

  6. #615
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள பம்மலார் சார்,

    எங்களை மலைக்க வைத்த இன்னொரு விஷயம், 'கள்வனின் காதலி' மற்றும் 'கோடீஸ்வரன்' விவகாரமம். இரண்டும் ஒரே நாளில் வெளியானதால் எதையாவது ஒன்றை 24 வது படமாகவும், இன்னொன்றை 25 வது படமாகவும் போடலாம் என்று அகில இந்திய தலை மன்றம், அதன் தலைவர் சின்ன அண்ணாமலை ஆகியோர் முடிவு செய்து 'கள்வனின் காதலிக்கு' 25 வது பட அந்தஸ்தைக்கொடுக்க (இத்தனைக்கும் மலர் தயாரிப்புக்குழுவில் பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களும் இடம்பெற்றுள்ளார்).....

    நீங்களோ, ஒரே நாளில் தணிக்கையாகி, ஒரே நாளில் வெளியாகியிருந்தபோதிலும் தணிக்கைச் சான்றிதழ் எண்ணின் படி 'கோடீஸ்வரன்'தான் 25வது படம் என ஆணித்தரமாக நிரூபித்ததைப் பார்க்கும்போது....
    டியர் mr_karthik,

    என்னைப் பாராட்டு மழையில் நனையச் செய்துவிட்டீர்கள். தங்களுக்கு எனது பணிவான நன்றிகள் !

    நாம் அனைவருமே நமது இதயதெய்வத்திற்கு பக்தர்கள்தான் !

    "திருவிளையாடல்" டைட்டில் கார்டில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலை இயற்றியவர் கவி கா.மு.ஷெரிஃப் என்று போட்டிருக்கப்பட வேண்டும். எந்தவொரு படைப்பாளியினுடைய படைப்பையும் யாரும் இருட்டடிப்பு செய்யக்கூடாது. அது பச்சைத்துரோகம் அல்லாமல் வேறென்ன?! இது பற்றி தங்கள் பதிவில் தாங்கள் தெரிவித்த கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரி !

    மேலும், தங்கள் பதிவில் "கோடீஸ்வரன்", "கள்வனின் காதலி" காவியங்கள் குறித்து தாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் ஒரு திருத்தம்:

    தணிக்கை சான்றிதழ் எண்களின் அடிப்படையில், "கோடீஸ்வரன்"தான் 24வது திரைக்காவியம்; "கள்வனின் காதலி" 25வது திரைக்காவியம்.

    தற்பொழுது இந்த இரு காவியங்களையும் இந்த எண்ணிக்கைகளைக் கொண்டேதான் நாம் அணுகி வருகிறோம், இதுவே சரி !
    ("சிவாஜி ரசிகன்" [1.10.1970] சிறப்பு மலரில் தவறுதலாக இது மாறுபட்டு உள்ளது என்பதை தான் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தப் பதிவை தாங்கள் மீண்டும் வாசித்தீர்களானால் தங்களுக்குத் தெரிய வரும் !)


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #616
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார், மிக்க நன்றி !

    டியர் வாசுதேவன் சார்,

    நமது நடிகர் திலகத்தின் திரையுலக வம்ச விளக்கான அவரது இளைய புதல்வர் இளைய திலகத்துடன் கூடிய "வம்ச விளக்கு" [தந்தையும் தனயனும்] பொங்கல் வாழ்த்து அட்டை ஸ்டில் Simply Superb !

    Dear goldstar, Thanks for your accolade !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #617
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

    சபாஷ் மீனா

    [3.10.1958 - 3.10.2011] : 54வது உதயதினம்

    சாதனைச் செப்பேடுகள்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 27.9.1958



    முதல் வெளியீட்டு விளம்பரம்



    50வது நாள் விளம்பரம் : The Hindu : 21.11.1958



    100வது நாள் விளம்பரம் : Indian Express : 10.1.1959


    குறிப்பு:
    சென்னை 'காஸினோ'வில் 119 நாட்கள் ஓடி மாபெரும்வெற்றி பெற்ற "சபாஷ் மீனா", சேலம் 'ஓரியண்டல்' திரையரங்கிலும் 100 நாட்கள் ஓடி பெரும் வெற்றி கண்டது.


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #618
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

    சபாஷ் மீனா

    [3.10.1958 - 3.10.2011] : 54வது உதயதினம்

    பொக்கிஷப் புதையல்

    சிறப்பு வண்ணப் புகைப்படம்


    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #619
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலையுலக ஆண்டவரின் அக்டோபர் காவியங்கள்

    குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

    கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

    சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

    பராசக்தி

    [17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

    பொன்னுக்கு மேலான பொக்கிஷம் : வரலாற்று ஆவணம்

    தினத்தந்தி : ஞாயிறு மலர் : 2.9.2001
    [நடிகர் திலகம் குறித்து அவரது முதல் கதாநாயகி பண்டரிபாய்]




    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #620
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    வீறு கொண்டு வருகிறார்கள்...



    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •