Page 57 of 404 FirstFirst ... 747555657585967107157 ... LastLast
Results 561 to 570 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #561
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'எங்க ஊர் ராஜா' நிழற்படங்கள்.






    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 21st October 2011 at 06:27 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #562
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,
    நிழற்படத்திலகம், உயிர்ப்படத்திலகம் என இரு வேறு திலகங்களை ஒரே சமயத்தில் அணிந்து வெற்றியுலா வரும் தங்களை எப்படிப் பாராட்டுவது... த்வார பாலகர்களாய் திகழும் பம்மலாரையும் தங்களையும் தாண்டிச் சென்றால்தான் நடிகர் திலகம் என்ற மூலவரை சிறப்பாக தரிசிக்க முடியும் என்கிற அளவிற்கு அவருடைய சாதனைகளின் கேடயமாய் விளங்குகின்றீர்கள். பாராட்டுக்கள்.

    டியர் பார்த்தசாரதி,
    ஆயிரம் மொழிகள் போதாது, வண்ணக்கிளியே, சாரதியின் பங்குதனை பாடுதற்கு வண்ணக்கிளியே..
    என்று கூறும் வகையில் தாங்களும் சிறப்புற தங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்..

    நமது மூத்த நண்பரும் ஹப்பருமான திரு ராமஜெயம் அவர்கள் அடியேனுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலின் மூலமாக தங்கள் அனைவருக்கும் தன்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார். அவர் அனுப்பியுள்ள ஆங்கில செய்தி இதோ நம் பார்வைக்கு

    Subject:
    HAPPY DIWALI TO ALL OUR SIVAJI RASIGARGAL- HUB FRIENDS
    Type: Embeded HTML/Text

    DEAR MR RAGHAVENDRAN,
    diwali is one of the finest and luckiest festival to all of us as most movies released on
    diwali day-week are ery much successful and box ofice hits for our super star for many years eversince parasakthi. we are defitnely missing those evergreen days that being compensated by colourful pictures and messages by our fellow RASIGARGAL in the hub and we continue to live with our NADIGAR THILAGAM on these days and moreso on deepavaliday.
    paai vilakku messages are noteworthy. picures are eyecatching. we are lucky to have pammalar raghaendran asudevan trio in our team.
    GREAT GUNS ARE SHOT IN THE HUB PL KEEPIT UP.
    COLOURFUL DIWALI GREETINGS TO ALL OUR FRIENDS AND WE salute our NADIGATHILAGAM and HE WILL BLESS US.


    Regards,
    S.Ramajayam
    for onward transmission toHUB hope mr raghaendran will do.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #563
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    விரைவில் பவனி வருகிறார் அம்சமான எங்கள் 'அம்பிகாபதி'.





    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 21st October 2011 at 06:33 PM.

  5. #564
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் படங்களில் சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள் (தொடர்ச்சி......)

    7. மாமா... மாப்ளே; படம்:- பலே பாண்டியா (1962); பாடல்:- கவியரசு கண்ணதாசன்; பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன் மற்றும் எம்.எஸ்.ராஜூ; இசை:- மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்/டி.கே.ராமமூர்த்தி; இயக்கம்:- பி.ஆர். பந்துலு; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/நடிக வேள் எம்.ஆர்.ராதா மற்றும் கே. பாலாஜி.

    நடிக வேள் எம்.ஆர். ராதா பங்கேற்ற பல காட்சிகள் மற்றும் படங்களில், முதல் பத்து இடங்களில் எப்போதும் இடம் பெறும் பாடல் இது (இரத்தக் கண்ணீர், பாவ மன்னிப்பு வரிசையில் மூன்றாவதாக இடம் பெற வேண்டிய படம் இது என்றால் அது மிகையாகாது.)

    இந்தக் கட்டுரையில் இது வரை இடம் பெற்ற பாடல்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்ற பாடல் இது. இந்த நிமிடம் வரை, எல்லோராலும், ஏன் இதற்குப் பின்னர் பிறப்பவர்களும் ரசிக்கும்/ரசிக்கப்போகும் பாடல். இந்தப் பாடலின் சுவையே அதில் இழையோடும் நகைச்சுவை கலந்த அற்புதமான கர்நாடக சங்கீதம், பாடிய விதம் மற்றும் நடித்த நடிகர்களின் ஜனரஞ்சகமான மற்றும் தீர்க்கமான நடிப்பு.

    இந்தப் படத்தை முதன் முதலில் எழுபதுகளின் துவக்கத்தில் பார்த்தபோது, படம் நெடுகிலும் நடிகர் திலகத்திற்கும் நடிக வேளுக்கும் கிடைத்த ஆரவாரமான வரவேற்பை - முக்கியமாக - இந்தப் பாடலின் போது இது வரையிலும் மறக்க முடியவில்லை. அந்த வரவேற்பு இன்றும் தொடர்கிறது என்பது தான் இந்தப் பாடலின் தனிச்சிறப்பு.

    முதலில் பாடல் - பொதுவாக பெண் பார்க்கும் படலத்தில், ஆண் தான் பெண்ணைப் பாடச் சொல்லுவார். மாறாக, இதில், வருங்கால மாமனார், மாப்பிள்ளையைப் பாடச் சொல்லி அவரது கர்நாடக சங்கீத ஞானத்தை சரி பார்ப்பார். இந்தப் பாடலும் அதற்கேற்ப கர்நாடக சங்கீத அடிப்படையில், அதே சமயம், ஜனரஞ்சகமாகவும் அமைய வேண்டும். ஏனென்றால், இந்தப் படம் அடிப்படையில் ஒரு நகைச்சுவைப் படம். இந்தப் பாடலின் சூழல் வரும் வரையிலுமே, அநியாயத்துக்கு நகைச்சுவை இழையோட சென்று கொண்டிருக்கும். அப்படிப்பட்ட சூழலுக்கு, மிகவும் பொருத்தமாக, - பாடலின் ஆரம்பமே அவரைப் பாராட்டுவதாக "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்று துவங்கி, இடையில், வருங்கால மாமனார் குஷியாவதைக் கண்டு கொண்டு "துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதைய்யா" என்று பெரிய துதியையே பாடி, அவரை ஒரேயடியாகக் குஷிப்படுத்தி, அதனால், மாமனாரும் குஷியாகி, மாப்ளே மாப்ளே என்று பாடுவதாகப் போகும். மறுபடியும், படித்தவன் முதல் பாமரன் வரை ஒரு சேர சென்று சேர்ந்த பாடல் - இந்த யுகக் கவி கண்ணதாசனின் பாடல்.

    அடுத்து, பாடிய முறை. மறுபடியும், டி.எம்.எஸ். அவர்கள் நடிகர் திலகத்திற்குப் பாடுகிறாரா, இல்லை, நடிகர் திலகமே பாடுகிறாரா என்று அனைவரையும், அதிசயிக்க வைத்தார். ஆலாபனையில் துவங்கி, பல்லவிக்குள் புகுந்து, கடைசியில் ஸ்வரப்ரஸ்தாரத்துக்குள் வெடிக்கும் அழகு ... சிலிர்க்கும். இருப்பினும், எல்லா வித ரசிகர்களையும் ரசிக்க வைப்பார். பிறகு, எம்.எஸ்.ராஜூ - இவர் நடிக வேளின் அத்தனை கோணங்கித் தனத்திற்கும் ஈடு கொடுத்து ஸ்வரம் போட்ட அழகும், ஆர்பாட்டமும்... அப்பப்பா! இருப்பினும், இன்று வரை இந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் இவர் தான் என்பது பலருக்குத் தெரியாது போனது துரதிர்ஷ்டம் தான்.

    இப்பொழுது இசை. மெல்லிசை மன்னர்கள் எப்போதுமே கர்நாடக சங்கீதத்தில் அமையும் பாடல்களை வெகு ஜன ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுப்பதில் சமர்த்தர்கள் என்பதை மறுபடியும் நிரூபித்த பாடல். அதிலும், நடிக வேளுக்கேற்றாற்போல் குரல் வளம் அமைந்த பாடகரைத் தேர்வு செய்தது மிக அழகு.

    இப்படியொரு பாடலை எல்லோரும் இன்றளவும் ரசிக்கும்படி எடுத்த இயக்குனர் பி.ஆர்.பந்துலு பாராட்டுக்குரியவர். பாலாஜி செய்யும் கொனஷ்டைகளையும் ரசிக்கும்படி எடுத்தது அற்புதம்.

    இப்போது நடிப்பு. முதலில் பாலாஜி. ஆஹா! நகைச்சுவையில், பாலாஜியும் ஸ்கோர் செய்த படமாயிற்றே. விடுவாரா? கடம் வாசிக்கும் பாவனையையும் கூடவே சில பல கொனஷ்டைகளையும் சகஜமாக செய்திருப்பார். நடிக வேள்! இவர் ஸ்வரங்களுக்குச் சரியாக வாயசைத்தாரா என்பதை யாரும் கண்டு கொள்ள விடாமல், ஏகப்பட்ட கொனஷ்டைகளை செய்து அரங்கத்தை அதிரச் செய்திருப்பார். இந்தப் பாடல், உண்மையில், இவருக்காக அமைந்த பாடல் தான் என்ற போதிலும், வழக்கம் போல சில கோணங்கித் தனங்களை அவருக்கேயுரிய பாணியில் செய்து திரையில் உள்ள மற்ற நடிகர்களை இருட்டடிப்பு செய்தார் என்ற போதிலும், நடிகர் திலகம் என்ற அந்த மாபெரும் கலைஞன், கொஞ்சமும் கவலைப் படாமல், அலட்டிக்கொள்ளாமல், செய்திருப்பார் - குறிப்பாக, நடிக வேள் ஒரு பெரிய ஸ்வரத்தைப் போட்டு எல்லோரையும் சிரிக்க வைத்த பின், உடனேயே, "ம ப ப ப......" என்று ஒரு பெரிய ஸ்வரத்திற்கு அதியற்புதமாக வாயசைத்து, அரங்கத்தை அதிர வைத்த சாதுர்யம்; ஸ்வரம் மேலேறும் போதும் கீழிறங்கும் போதும், வாசயசைத்துக் கொண்டே கையால் அதற்கேற்றாற்போல் ஏற்றி இறக்கிச் செய்யும் பாவம்; பாடல் நெடுகிலும், அனாயசமாகக் பாவனைகளின் மூலம், அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிப்பு; அவர் செய்யும் ஒவ்வொரு கோணங்கித் தனத்தின் முடிவிலும், இவர் பாட ஆரம்பிக்கும் போது, சங்கடத்தில் நெளிந்து கொண்டே அதனை முகத்திலும் காட்டிக் கொண்டே ஆனால், மிகச் சரியாக ஸ்வரம் போட்டுக் கொண்டே (அதாவது, நடித்துக் கொண்டே) போவது. இனி ஒருவன் பிறக்க வேண்டும்!

    கடந்த மாதத்தில் கூட, விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், வெளியேற்றப் பட்ட "சாய் சரண்" என்ற இளம் பாடகர் மீண்டும் "வைல்ட் கார்டு" ரவுண்டில் வந்து திரும்பவும் முக்கிய அணிக்குள் மீண்டும் வர வழி வகுத்த பாடல் இதுதான். இதற்காக, அன்று வந்திருந்த மெல்லிசை மன்னரிடமிருந்தே, முக்கியப் பரிசைப்பெற்றார்.

    அந்த அளவிற்கு, இன்று வரை எல்லோராலும் ரசிக்கப்படுகின்ற பாடலாகையால், இந்தப் பாடலும் சிரஞ்சீவித்துவம் பெற்ற நடிகர் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பாடலாகிறது.

    தொடரும்,

    இரா. பார்த்தசாரதி

  6. #565
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி,
    மாமா மாப்ளே என்று ஒரு நகைச்சுவைத் தொடரையே ஒரு தொலைக்காட்சி தயாரிக்கின்ற அளவிற்கு அந்தப் பாடல் சிரஞ்சீவித்துவம் பெற்று விட்டதே...என்று நினைக்கிற போது, உடனேயே உங்களுடைய கருத்துரை... ஆஹா.... என்ன தெளிவான பதிவு...
    நடிகர் திலகம் என்கிற இறைவனுக்கு எத்தனை சாரதிகள்...
    கலக்குங்கள் சார்...

    இன்று வெளிவந்துள்ள 27.10.2011 தேதியிட்ட புதிய தலைமுறை தீபாவளி சிறப்பிதழில் மறையாத சூரியன்கள் என்கிற தலைப்பில் நடிகர் திலகத்தைப் பற்றி திரு பாக்யராஜ் தன் கருத்துக்களை எழுதியுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள அனைத்து சாதனையாளர்களையும் மணியம் செல்வன் அவர்களின் ஓவியத்தையே படமாக வைத்துள்ளனர். அதில் அவர் வரைந்துள்ள நடிகர் திலகம் அவர்களின் திருவுருவம்.. நன்றி புதிய தலைமுறை இதழ்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #566
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பம்மலார் சார்,

    பராசக்தி திரைக்காவியத்தின் வெளியீட்டு விளம்பர வரிசை வெகு அற்புதம். காணக்கிடைக்காத பொக்கிஷங்களைக்கண்டு மிக்க மகிழ்ச்சி. இந்த திரியில் பங்கேற்கும் நம்மில் யாருமே பிறந்திராத காலத்தில் வெளிவந்த விளம்பரங்கள் இப்போதும் காணக்கிடைப்பதற்கு நிச்சய்ம பாக்கியம் செய்திருக்க வேண்டும். எங்க ஊர் ராஜா ஸ்டில்லும் வெகு நேர்த்தி. பாராட்டுக்கள்.

    ராகவேந்தர் சார்,

    'எங்க ஊர் ராஜா' வின் பொம்மை இதழ் செப்பேடுகள் கன கச்சிதம். இளமைத்தோற்றத்திலும் முதுமைத்தோற்றத்திலும் அடுத்தடுத்து அமைந்த ஸ்டில்கள் கண்கொள்ளாக்காட்சி.

    வாசுதேவன் சார்,

    எங்க ஊர் ராஜா நிழற்படத்தையும், பாடல் காட்சியையும் தந்து மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி. ஒரு படம் முடிந்ததும் அடுத்தது என்று சளைக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் சேவை தொடரட்டும்.

  8. #567
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பார்த்தசாரதி சார்,

    உங்கள் அற்புத எழுத்தில் 'மாமா... மாப்பிளே' பாடலை விவரித்திருந்த விதம் மிக அருமை. ரொம்பவே ரசித்து, ரசித்து எழுதியிருக்கிறீர்கள். எம்.ஆர்.ராதாவின் சேஷ்டைகளால் முகத்தை சுழித்துக்கொண்டு அதே சமயம் ஸ்வரத்துக்கு தப்பாமல் வாயசைத்துக்கொண்டு நடிப்பது என்பது இவரால் மட்டுமே முடியக்கூடியது. தெளிவாக காட்சியமைப்புகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    படம் வெளிவந்த சமயங்களில் இந்தப்பாடல் அவ்வளவாக வானொலிகளில் ஒலிபரப்பானதாகத் தெரியவில்லை. 'வாழ நினைத்தால்', 'அத்திக்காய் காய் காய்' பாடல்கள்தான் டாமினேஷன் பாடல்களாக திகழ்ந்தன. சமீப ஆண்டுகளாக இப்பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ராகவேந்தர் சார் சொன்னபடி, ஒரு தொலைக்காட்சி நகைச்சுவை தொடருக்கு இது டைட்டில் பாடலாக, (சில பல ரீமிக்ஸுடன்) இடம்பெற்றுள்ளது.

    உங்கள் ஆய்வு இப்பாடலை இன்னும் பல கோணங்களில் ரசிக்க வைக்கிறது. நான் எப்போதும் இப்பாடலைப் பார்க்கும்போது இவ்விருவரோடு பாலாஜியின் சேஷ்டைகளையும் வெகுவாக ரசிப்பதுண்டு (திரைக்குப்பின்னால் நின்று எட்டிப்பார்த்து ரசிக்கும் "நம்ம தேவிகா"வையும்தான்)

    நல்ல ஆய்வு, தொடருங்கள் உங்கள் சேவையை.

  9. #568
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நாளை நம் அழகு 'அம்பிகாபதி' வருகிறார்.(22-10-1957)



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 21st October 2011 at 07:41 PM.

  10. #569
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் பம்மலார் சார்,

    நடிகர்திலகத்தை பற்றிய அகிலன் அவர்களின் பதிவை கண்டேன், ஒரு எழுத்தாளர் என்கிற பார்வையில் நம்மவரை பற்றி ரசித்து எழுதிஉள்ளார், இதனை பதிவிட்ட தங்களுக்கு எனது மேலான நன்றிகள்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  11. #570
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,
    நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர்திலகத்தின் ஒரு அருமையான பாடல் பதிவோடு வந்துள்ளீர்கள் நன்றி , இந்த படத்திற்கு nt அவர்கள் கொடுத்த கால்ஷீட் மொத்தம் 14 நாட்கள் தான், இருப்பினும் அவசரகதியில் எதையும் செய்யாமல் மிக அருமையாக செய்ய இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? இதே படத்தில் வாழ நினைத்தால் வாழலாம் பாடலில் தண்ணீரில் நீந்தும் காட்சியில் அவரின் செய்கை ரசிக்கும் படி இருக்கும்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •