Page 47 of 404 FirstFirst ... 3745464748495797147 ... LastLast
Results 461 to 470 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #461
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    காவியத் தாயின் இளைய மகன்
    காதல் பெண்களின் பெருந்தலைவன்
    பாமர ஜாதியில் தனி மனிதன்
    நான் படைப்பதனால் என் பேர் இறைவன்

    மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன் - அவர்
    மாண்டு விட்டால் அதை பாடி வைப்பேன்
    ..
    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை...


    ---- என்ன சத்தியமான தீர்க்க தரிசனமான வார்த்தைகள்...

    இன்று மட்டுமல்ல, என்றும் உன்னை நினைவு கூர்வோம்...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #462
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    டியர் வாசுதேவன் சார் மற்றும் பம்மலார் சார்,
    பாபு வெளியீட்டு தீபாவளி அன்று நான் சென்னையில் இல்லை. தர்மபுரியில் இருந்தேன். அங்கு தான் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் பார்த்தேன்.
    அன்புடன்
    Ragavendran sir,

    How was the first show allparai in Dharmapuri? Why I am asking this question is, I got an impression that Dharmapuri is most likely MGR fort, I may be wrong. I could remember one of friend told that Babu and Rikhshakaran released together and there were lots of rivalry.

    Cheers,
    Sathish

  4. #463
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் சார்,

    உங்கள் ஒருவரால் மட்டுமே..............

    1952-ல் வெளியான பராசக்தி ஆவணங்களையும் தர முடியும்

    1970-ல் வெளியான 'சிவாஜி ரசிகன்' இதழின் பொக்கிஷப்பதிகளையும் தர முடியும்

    1989-ல் நடந்த கட்டபொம்மன் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியின் ஆவனங்களையும் தர முடியும்

    2011-ல் வெளியாகியிருக்கும் அமுத சுரபி இதழின் அரிய பதிவை சுடச்சுட தர முடியும்.

    மொத்தத்தில் நீங்கள் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம்.

    உங்களால் நடிகர்திலகத்துக்குப்பெருமை, லட்சக்கணக்கான அவரது ரசிக நெஞ்சங்களுக்கு பெருமிதம்.

    ராகவேந்தர் சார் சொன்னதுபோல, 1970 அக்டோபர் 1 அன்று நடைபெற்ற மாபெரும் மாநாட்டில், தாங்கள் இப்போது பதிப்பித்து வரும் 'சிவாஜி ரசிகன்' முதல் மலர் சிலநூறு பதிவுகளே வெளியிடப்பட்டன. பெரும்பாலோருக்குக் கிடைக்கவில்லை. நானும் கூட இன்னொருவரிடம் இரவல் வாங்கித்தான் பார்த்து மகிழ்ந்தேன். ('மாலைக்குள் திருப்பித்தர வேண்டும்' என்ற நிபந்தனையுடன் கொடுத்தார். தவறிப்போய்விடுமோ என்ற பயம் அவருக்கு).

    நாற்பதாண்டுகளுக்குப்பின் அதே பொக்கிஷப்பதிவுகளை லட்சக்கணக்கானோர் கைகளில் கொண்டு சேர்க்க மனித உருவில் ஒரு பூதம் வரப்போகிறதென்று அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இதற்கெல்லாம் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. அதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக உயர்ந்துவிட்டீர்கள்.

    இருப்பினும் பாராட்டுவதும், நன்றி தெரிவிப்பதும் எங்கள் கடமை.

  5. #464
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    Yes, the ultimate when it comes to the depiction of the innocent on screen that went on to become a template.
    Yes. The thing is, he works us to such an emotion high with his demeanor that after a point every single moment is touching.
    I guess it is pretty much like what they say about stand up comedy. It is the ice-breaking and getting the first laughs that is the problem. But once you've got the audience going you every joke is going to get a laugh.

    Similarly here, Sivaji pierces through my cynicism and thereafter I am totally captivated. Every line, every scene works. The scene where he learns Sundari Bai's son has worked overtime to redeem the jewel he stole and pawned, all he says is: "என் மாமா வீட்டு பிள்ளைங்க, யாருமே கெட்டவங்க இல்லை". Regard for the family dominates every fibre of his being. Extremely moving. Look at the time when he says that, it is when Asokan and Muthuraman are still at their worst behaviour.


    When asked about the money for spending on the tenth day ceremony: உன் பணம் தானே அத்த...நீ தானே நகை பண்ணி கொடுத்தே, அதைத் தான் வித்தேன்....மாமாவுக்கு இல்லாம பின்ன இந்த அம்மா போட்டு மினுக்குறதுக்கா?. It is uncharitable of him to talk about his wife - who is the most undemanding person - in such a manner. But even she knows that he is saying that out of love for RangaRao. That it seems obvious to him, that that is the course of action, is moving in itself. And his expression heightens the emotions. It is not even selflessness, in the normal meaning of putting others before oneself. But truly breathing meaning to the word selflessness in not even being aware of oneself as a separate entity, and relegating one's interest being a natural, unconscious response.

    The scene where he meets SundariBai gathering wood when he running to meet the sAmiyAr is just fantastic. "உனக்கு அறிவு இருக்கா" he rails at her for not coming to his home directly. Her wrongs do not even register with him. This is not even a நன்னயம் செய்து விடல் or a "they know not what they are doing", this is just being a much larger person than anyone around him. In the end also, when Sowcar Janaki asking him about his bleeding head, he says dismissively: "இந்தப்பய அடிச்சுட்டாம்....போறான் விடு"

    His posture with when he talks to the piLLaiyAr, is just earnestness personified. When the sAmiyAr asks him to bathe, in one shot he plunges into the pond and hastily crawls back out to her.


    Quote Originally Posted by Murali Srinivas View Post
    Today while watching was able to enjoy numerous scenes where the nuances are superbly brought out by NT with able support from SVR.
    SVR is terrific. Their scenes together are simply on a different level. Such ease of performance.
    அடிக்கடி தான் நினைச்சிக்கிறீங்களா...எனக்கு சதா உங்க நினைப்பு தான்.

    He describes his work as 'nothing too difficult' and elaborates on his salary: எட்டு மணிநேரம் வேலை பார்த்தா த்ரீ ருபீஸ்...ஓவர்டைம் பார்த்தா ட்டூ ருபீஸ்...அகமொத்தம் ஃபைவ் ருபீஸ்.The way he pronounces the 'rubees' has a childishness that cannot be explained, nor can one imagine it being taught. Only experienced. So much so that the 'உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது' is rendered an unnecesaary elaboration - when after all he exudes that in every action, every word, intonation.


    When he asks him why he bought him cigarettes and didn't buy his wife anything, he says

    "ஓ..இப்படி (தலையை சுத்தி மூக்கைத் தொடுவார்)...இப்படி கேக்குறீங்களாக்கும். ஏண்டா வந்தேங்கறதை....ஏண்டா சிகரெட் வாங்கிட்டு வந்தேன்னு"

    In their whole exchange, their are parts where his mumbling is even unintelligible, still they are communicating. Their is a free flow of emotions on the surface and simultaneously a torrent of emotional running deeper - which these two fantastic actors make it so evident to us, the audience. We think we have perceived a miscommunication. That we 'understand' SVR's concerns, but the simple Rangan is not getting it. But at the same time we are conscious that they share a communication whose depth is just beyond what we can perceive. A bond so strong, that while we are moved, we perhaps cannot entirely dismiss a jealousy we feel for their bond.


    Quote Originally Posted by Murali Srinivas View Post
    Whenever I watch this movie,used to be reminded of the Kumudam review which had signed off the review like this. ஒரு நாள் சிவாஜி பெயர் கூட மறைந்து போகலாம் ஆனால் ரங்கனின் பெயர் என்றும் மறைந்து போகாது.
    In the end he says, with a bleeding head: ஏண்டா நான் திருடன்னு நினைச்சு தானேடா அடிச்சீங்க....இப்பொ நான் நல்லவன்னு தெரிஞ்சதும் ஏண்டா வீட்டை விட்டு போறேன்றீங்க?

    The logic is astounding, isn't it? Sounds like wise words that tumble out of a child's mouth and stun us adults, who considered ourselves the child's intellectual superiors all along.

    Of course they will leave. That is their natural reaction (and so too goads Sundaribai). But the way Rangan puts it, he points out that what they are abandoning is 'goodness itself'. That is what he regards the house to be. An embodiment of goodness. Why on earth, will people who seek good, leave it? Even in their misconception of taking him to be a thief, he can see the goodness of their thinking that ' a thief deserves to be beaten'. Jaw dropping how he is able to see goodness every-bloody-where!

    And he is just incapable of taking offence. When Kannamba thoughtlessly asks him if he has indeed stolen like those around accuse him (and we the audience are annoyed with her for asking Rangan such a question), Rangan says: என்ன அத்த நீயும் வரவர என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சுட்ட. The way he says it, it is abundantly clear he has not taken it to heart. Merely pointing out the silliness in her supposition.

    And the cherry is of course his response to Kannamba when she asks him why he didn't come by the door. I can't recall a moment which matches this in stature in being simultaneously hilarious and poignant.

    திருவாசகத்துக்கு உருகாரும் இப்படத்துக்கு உருகுவார்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  6. #465
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by goldstar View Post
    Ragavendran sir,

    How was the first show allparai in Dharmapuri? Why I am asking this question is, I got an impression that Dharmapuri is most likely MGR fort, I may be wrong. I could remember one of friend told that Babu and Rikhshakaran released together and there were lots of rivalry.

    Cheers,
    Sathish
    சதீஷ் சார்,

    இல்லை

    1971 அக்டோபர் 18, தீபாவளியன்று 'பாபு' படமும் 'நீரும் நெருப்பும்' படமும் ஒன்றாக வெளியாயின.

    ரிக்ஷாக்காரன் அதற்கு 142 நாட்களுக்கு முன்பும் (மே 29), சவாலே சமாளி 107 நாட்களுக்கு முன்பும் வெளியாயின.

    ஒன்றில் சைக்கிள் ரிக்ஷா இன்னொன்றில் கை ரிக்ஷா என்பதால், இரண்டும் ஒரே நாளில் வெளியானதாக சிலர் கூறுவதுண்டு. அது தவறான தகவல்.

  7. #466
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    பராசக்தி ஸ்டில்களைக்கொண்டு ஒரு அணிவகுப்பே நடத்தி விட்டீர்கள். இடையே இடம் பெற்றிருந்த கர்ஜிக்கும் சிங்கத்தின் அனிமேஷன் காட்சி அற்புதம். ஸ்டில்களைப்பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அப்படத்தை உடனே மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுவது உண்மை. பாடல்கள் மற்றும் வசனங்களுக்கான வீடியோ இணைப்புகளும் சிறப்பாக உள்ளன.

    கம்ப்யூட்டர் யுகத்தில் உலகம் எவ்வளவு சிறுத்து விட்டது பாருங்கள். நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடிகிறது. முன்பெல்லாம், எப்போது தியேட்டர்களில் போடுவார்கள் என்று ஏங்கிக்கிடந்த காலங்கள் கண்முன் தோன்றி மலைப்பை தருகின்றன. இருந்தாலும் அந்த அனுபவங்களும் சுவையானவையே.

    பராசக்தி விழாவை அட்டகாசமாகக் கொண்டாடிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

  8. #467
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள முரளி சார்,

    அபூர்வமாக வந்தாலும் அற்புதமான பதிவுகளோடு வந்துள்ளீர்கள். முதல் படத்திலேயே அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார் என்று நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. அந்த அற்புதங்களை ஏற்றுக்கொண்டு முதல் படத்தையே சாதனைப்படமாக ஆக்கித்தந்த அன்றைய தமிழ்த்திரைப்பட ரசிகப்பெருமக்களை நன்றியோடு நினைவு கூர்கிறோம்.


    நீங்கள் இப்படி அபூர்வமாக போஸ்ட் பண்ணுவதற்கு மாறாக, முன்போல தினமும் உங்கள் பதிவு இடம்பெறுமானால் இன்னும் அதிகம் மகிழ்ச்சியடைவோம். ஏனென்றால் உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் பல்வேறு வரலாற்றுத்தகவல்களை உள்ளடக்கி வருபவை.

    எங்கள் வேண்டுகோளை ஏற்று முயற்சி செய்யுங்கள்.

  9. #468
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கவியரசர் கண்ணதாசன் அவர்களின் 30- ஆவது ஆண்டு நினைவு தினம்.

    எங்கிருந்த போதும் உங்களை மறக்கமுடியுமா?..
    எங்களை விட்டு உங்கள் நினைவுகளைப் பிரிக்க முடியுமா?...



    இதய தெய்வத்துடன் கண்ணதாசன்.





    மிக மிக அரிய கவியரசரின் இளவயது நிழற்படம்.



    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 17th October 2011 at 05:21 PM.

  10. #469
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    இதே நாளில் [அக்டோபர் 16]

    பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோலாகலமாக நடைபெற்ற


    வீரபாண்டிய கட்டபொம்மன் தபால்தலை வெளியீட்டு விழா
    நான் கலந்து கொள்ள எனக்கு கொடுத்து வைத்த விழா .

  11. #470
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நம் தெய்வத்தை வாழ வைத்த தெய்வம் திரு. P.A.பெருமாள் முதலியார் அவர்கள்







    அன்புடன்,
    வாசுதேவன்.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •