Page 46 of 404 FirstFirst ... 3644454647485696146 ... LastLast
Results 451 to 460 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #451
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    Watching PadikkAdha mEdhai.
    Excellent
    Sinus problem uLLavanga pAkka koodaadhu
    Yes, the ultimate when it comes to the depiction of the innocent on screen that went on to become a template. Today while watching was able to enjoy numerous scenes where the nuances are superbly brought out by NT with able support from SVR. Whenever I watch this movie,used to be reminded of the Kumudam review which had signed off the review like this. ஒரு நாள் சிவாஜி பெயர் கூட மறைந்து போகலாம் ஆனால் ரங்கனின் பெயர் என்றும் மறைந்து போகாது.

    Nothing more needs to be said!

    Regards

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #452
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    "வீரபாண்டிய கட்டபொம்மன்" நினைவுப்பதிவு,

    "பராசக்தி" பதிவுகள்,

    "பாபு" துவக்கப்பதிவு என ஒவ்வொன்றும் அம்சமான அசத்தல் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #453
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Dear Pammalar Sir,

    While reading the Article from 'Amutha Surabhi' my eyes filled with tears when NT says that lot of money could be donated to the needy children from the funds collected from " Kattabomman" dramas abd he could never forget his name.

    What an actor and How we are blessed to have him amongst us.

    Great!!!!

    Anm

  5. #454
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை திருப்புமுனை. ஒரு படத்தையோ அல்லது ஒரு நடிகனையோ அல்லது இயக்குனரையோ உயர்த்துவதற்காக அடிக்கடி சொல்லப்படும் சொல் இது. பல நேரங்களில் அந்த சொல் முலாம் பூசிய பொய் என்பது கேட்பவருக்கும் படிப்பவருக்கும் புரியும்.

    ஆனால் இந்த வகை சொல் அலங்காரங்களோ செயற்கை பாராட்டுகளோ அல்லது பரஸ்பரம் முதுகு சொரிதல்களோ இல்லாமல் அக்மார்க் திருப்புமுனை என்றால் அது நிச்சயமாக 1952 அக்டோபர் 17-ந் தேதிதான் நிகழ்ந்தது. தமிழ் சினிமாவின் பல்வேறு துறைகளில் ஒரு பெரிய மாற்றம் அன்றைக்குத்தான் நடந்தது.

    ஜாதி மத இன ஏன் மொழி வேறுபாடுகளை எல்லாம் கடந்து லட்சக்கணக்கான மனிதர்களை ஒரு தனி மனிதன் தன் நடிப்பாற்றலினால் ஒன்றாக இணைத்த சாதனைக்கு தொடக்கமிட்ட நாள் இந்த அக்டோபர் 17. நமக்கு முன்னால் பிறந்த லட்சக்கணக்கானோர், நம்மை போன்ற லட்சக்கணக்கானோர், நமக்கு பின்னால் வந்த வரப்போகிற லட்சக்கணக்கானோர் என என்றுமே குறையாத ரசிகர் கூட்டத்தை தனக்கு சொந்தமாக வைத்திருக்கும் என்றும் ஒளி வீசப் போகும் அமர தீபத்திற்குஇன்று திரையில் வயது 59 முடிந்து 60 பிறக்கிறது.

    பராசக்தி குணசேகரனே

    நீ திரையில் தோன்றினாய்! தமிழ் சினிமாவில் நடிப்பு தோன்றியது!

    நீ வளர்ந்தாய்! தமிழ் சினிமா வளர்ந்தது!

    நீ வாழ்ந்தாய்! தமிழ் சினிமா வாழ்ந்தது!

    நீ மறைந்தாலும் இன்றும் என்றும் தமிழ் சினிமா உன் படங்களினால் வாழும்!

    வி.சி. கணேசனை சிவாஜி கணேசனாக்கி பின் நடிகர் திலகமாக வளர்த்து நம்மிடையே உலவ விட்ட ஆதி பகவன் முதல் அடித்தட்டு மனிதன் வரை அனைவருக்கும் இந்த நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றி!

    அன்புடன்

  6. #455
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு அவர்களே,

    காட்டு ராஜாவின் கர்ஜனையோடு நடிப்புலக ராஜவின் கம்பீரமான அந்த நிழற் படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! அது போன்றே பாடல் காட்சிகளின் சுட்டிகளுக்கும் நன்றி! நான் எப்போதும் குறிப்பிடும் ஒரு விஷயம் எந்த ஒரு நடிகன் தான் வாயசைக்காத பாடலில் என்ன செய்வது என்று முழிக்காமல் கைகளை எங்கே வைத்துக் கொள்வது என குழம்பாமல் ரியாக் ஷன் கொடுக்கிறானோ அவனே நல்ல நடிகன் என்று! தன்னுடைய முதல் படத்திலேயே அது போன்ற அனுபவத்தை நமக்கு அளித்தவர் நடிகர் திலகம்! பெண்ணின் மனதை தொட்டு பாடலை கவனித்தோம் என்றால் இரண்டாவது சரணத்தின் போது அவர் நிற்கும் இடத்திற்கு பின்னால் ஒரு மரம் இருக்கும் . நமக்கு profile போஸ்தான் தெரியும். அப்போது "இருட்டு வேளையிலே யாரும் காணாமலே" என்ற வரிகளின் போது ஒரு காதல் வயப்பட்ட இளைஞன் தன் காதலியின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரும்போது எப்படி உணர்வான் என்பதை அவர் வெளிப்படுத்துவார் பாருங்கள்! அற்புதங்கள் எல்லாம் முதல் படத்திலேயே நிகழ்ந்து விட்டன. நமக்கு அடுத்தடுத்த படங்களில் கிடைத்ததெல்லாம் போஃ னஸ்தான்.

    சுவாமி,

    அந்த கட்டபொம்மன் ஸ்டில் அற்புதம்! அப்படியே நேரில் பார்ப்பது போல் தத்ரூபமாக வந்திருக்கிறது. அமுத சுரபி கட்டுரை மற்றும் கட்டபொம்மன் தபால் தலை வெளியீட்டு விழா ஆவணங்கள் என்று கட்டபொம்மனின் நினைவு நாளை சிறப்பித்ததற்கு ஒரு சல்யூட் உங்களுக்கு!

    அன்புடன்

  7. #456
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Dear Mr.anm,

    You are cent percent right !

    விளம்பரம் தேடா உண்மை வள்ளலாக நமது நடிகர் திலகம் வாழ்ந்து காட்டினார். அவரது கொடைக்கரத்தை பறைசாற்ற ஏற்கனவே 'கொடைச் சக்கரவர்த்தி' என்கின்ற தலைப்பில் சில ஆவணங்களை தொடக்கப் பதிவுகளாக வெளியிட்டுள்ளோம். அத்தலைப்பில் மேலும் ஆவணப்பதிவுகள் நிறைய வரும்.

    தாங்கள் குறிப்பிட்டது போல், அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் அவருடன் வாழ்ந்தது நாம் செய்த பாக்கியம் !

    டியர் முரளி சார்,

    தங்களின் சிகர பாராட்டுக்கு எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    Last edited by pammalar; 17th October 2011 at 02:30 AM.
    pammalar

  8. #457
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    குணசேகரனுக்கு மணிவிழா : பராசக்திக்கு வைரவிழா

    கலையுலகின் கண்மணிக்கு வைர-மணி விழா

    சிவாஜி கணேச பெருமானாரின் முழுமுதற்காவியம்

    பராசக்தி

    [17.10.1952 - 17.10.2011] : 60வது ஆண்டு தொடக்கம்

    புகைப்பட ஆல்பம்









    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #458
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    அனைவருக்கும் கலையுலக 'பராசக்தி'யின்
    "பராசக்தி" வைரவிழா நல்வாழ்த்துக்கள் !


    Wish You All An Ecstatic "Parasakthi" 60th Jayanthi !

    "பராசக்தி" கணேசனுடன் பிரதான தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள்


    "பராசக்தி" பதிவுகள் தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #459
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    17.10.1952 - திரையுலக முழுமுதற் கடவுளாக கணேசன் அவதரித்த நாள் - அனைத்து எதிர்ப்புகளையும் துச்சமெனத் தூக்கி எறிந்து, சிவாஜி கணேசன் இல்லா விட்டால் நான் இந்தப் படத்தையே எடுக்க மாட்டேன் எனத் துணிந்து நின்று, பின்னாளில் அவதார புருஷனாய் நிலைத்து விட்ட நடிகர் திலகத்தை உலகுக்குத் தந்த பராசக்தியின் 60வது ஆண்டு துவக்கத்தில் நேஷனல் பிக்சர்ஸ பெருமாள் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #460
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார் மற்றும் பம்மலார் சார்,
    கலக்கல் என்ற வார்த்தைக்கு தங்களையும் பம்மலாரையும் பொருளாகக் கூறலாம். அசத்தி விட்டீர்கள். கட்டபொம்மன் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழா புகைப்படத்துடன், அதுவும் மூன்று தலைவர்களை ஒரு சேர இணைத்த அந்த விழாவினை நினைவூட்டி கலக்கி விட்டார் பம்மலார். தாங்கள் 18.10 பாபு வின் 40 ஆண்டு நிறைவினையும் நினைவூட்டி விட்டீர்கள். பாபு வெளியீட்டு தீபாவளி அன்று நான் சென்னையில் இல்லை. தர்மபுரியில் இருந்தேன். அங்கு தான் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் பார்த்தேன். பின்னர் சென்னை திரும்பியதும் முதல் வேலையாக சாந்தியில் பார்த்த பிறகுதான் மனம் நிறைவடைந்தது. மறக்க முடியாத நாட்கள்.

    முரளி சார், தங்களுடைய பதிவுகளை அன்றாடம் பார்க்க விரும்பும் பலரில் நானும் ஒருவன். தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதியுங்கள்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •