Page 394 of 404 FirstFirst ... 294344384392393394395396 ... LastLast
Results 3,931 to 3,940 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #3931
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    குமுதம் வார இதழில் வெளிவந்த கட்டுரையை பதிப்பித்தமைக்கு பாராட்டுக்கள். வாசுதேவன் சார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3932
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பெங்களூருவில் கர்ணன் வெளியீட்டையொட்டி நடைபெற்ற அலங்காரங்களை நிழற்படங்களாக அன்பு நண்பர் குமரேசன் அவர்கள் அனுப்பியுள்ளார். அவற்றில் சில.












  4. #3933
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    society - இதழ் பதிவு அருமை.

    மகாலட்சுமி திரையரங்க புகைப்படப் பதிவுகள் சிறப்பு.

    இளையதலைமுறை படத்தில் அறிமுகமான சங்கீதா மூலம், நீங்களும் வாசுதேவன் சாரும் சேர்ந்து ஒரு சங்கீத (சங்கீதா) சாம்ராஜ்யமே நடத்திவிட்டீர்கள்.

    நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #3934
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    87th Day - Karnan records HOUSEFULL @ ESCAPE CINEMALL 6.30pm

    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #3935
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடமாடும் ஆவணம் பம்மலார் அவர்களே. நன்றிகள் பல.

  7. #3936
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மும்பையில் சிவாஜி நாடக மன்றம் நடத்திய நாடக விழாவிற்கான விளம்பரங்களின் நிழற்படங்கள்.




  8. #3937
    Senior Member Regular Hubber Mahesh_K's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    186
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    வாணிஸ்ரீ பைத்தியம் ....
    இந்த வாசகங்களை அனைத்துலக வாணிஸ்ரீ ரசிகர் மன்றம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதன் பின்னணியில் தேவிகா ரசிகர்களின் தூண்டுதல் இருப்பதால் இதனைக் கண்டித்து தேவிகா கொடும்பாவி எரிப்பு போராட்டம், விரைவில், தங்கத் தலைவியின் வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகும்போது நடத்தப்படும்.

  9. #3938
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3939
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Mahesh_K View Post
    இந்த வாசகங்களை அனைத்துலக வாணிஸ்ரீ ரசிகர் மன்றம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இதன் பின்னணியில் தேவிகா ரசிகர்களின் தூண்டுதல் இருப்பதால் இதனைக் கண்டித்து தேவிகா கொடும்பாவி எரிப்பு போராட்டம், விரைவில், தங்கத் தலைவியின் வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகும்போது நடத்தப்படும்.
    அருமை நண்பர் வாசுதேவன் அவர்கள் யதார்த்தமாக 'வாணி பைத்தியம்' என்று குறிப்பிட்டாரே தவிர வேறெவரின் தூண்டுதலும் அதில் இல்லை. நண்பர் மகேஷ் அவர்கள் தேவையில்லாமல் தங்கத்தலைவி தேவிகா பெயரை இழுத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு என்றைக்கும் ஒரே அண்ணிதான், அது எங்கள் தேவிகா மட்டுமே என்பதை ஆணித்தரமாக பதிய வைக்கிறோம். நிறையப்படங்களில் சேர்ந்து நடித்தவர்களெல்லாம் அண்ணியாகிவிட முடியாது. இது விஷயத்தில் பத்மினியையும், கே.ஆர்.விஜயாவையுமே நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை எனும்போது உங்கள் வாணி எம்மாத்திரம்?.

    நடிப்புத்தென்றல், எழிலரசி தேவிகாவின் கொடும்பாவியை எரித்தால், எரித்தவர்கள் விபரீத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.

  11. #3940
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    சில மாதங்களுக்கு முன்பு சாரதாவின் 'விஸ்வரூபம்' திரைப்பட 100வது நாள் விழாப்பதிவைப் பார்த்ததும், நான் பார்த்த 'பைலட் பிரேம்நாத்' படத்தின் 100வது நாள் விழாவை விவரித்தால் என்ன என்று நினைத்து எழுதத் துவங்கினேன். அது பாதியிலேயே நின்றுபோய், இப்போதுதான் அதைப் பதிப்பிக்க நேரம் வந்தது.ஆனால் அத்தனை துல்லியமான நினைவுகளாக இருக்காது. இருந்தாலும் நினவுக்கெட்டிய வரையில் பார்ப்போமே என்ற முயற்சி. (ஏற்கெனவே சென்னை சித்ரா தியேட்டரில் நடந்த 'நான் வாழ வைப்பேன்' 100வது நாள் விழாவை விவரித்திருக்கிறேன்).

    பைலட் பிரேம்நாத் விழா, திரையரங்கில் நடைபெறவில்லை. எழும்பூரில் நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயருக்குச்சொந்தமான சுதர்ஸன் இண்ட்டர்நேஷனல் என்ற மூன்று நட்சத்திர ஓட்டலில் நடந்தது. (இப்போது அந்த ஓட்ட்லின் பெயர் அம்பாஸிடர் பல்லவா). சரி தியேட்டரில் நடந்தால் கலந்துகொள்ள வாய்ப்புண்டு. நட்சத்திர ஓட்டலில் நடக்கப்போகும் விழாவில், அதுவும் அழைப்பு எதுவுமில்லாமல் கலந்துகொள்ள முடியுமா?. விழாவுக்கு முதல்நாள் சாந்தி வளாகத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது, பல்லவன் போக்குவரத்து அலுவலகத்தில் வேலை செய்த நண்பன் ‘விஜி’ (என்கிற விஜயகுமார்) என்னைத்தனியே சந்தித்து, 'நாளைக்கு சாயந்திரம் சீக்கிரம் வந்திடு, எக்மோர் சுதர்ஸன் ஓட்டலில் போய்ப்பார்ப்போம். ஒருவேளை குருஜி வந்தால் உள்ளே அழைத்துப்போய் விடுவார். இல்லாவிட்டால் வேறு வழியிருக்கிறதா பார்ப்போம்' என்று சொன்னவன் 'முடியைக்கட்டி மலையை இழுப்போம், வந்தால் மலை' என்று பழமொழியெல்லாம் வேறு சொன்னான். எனக்கும் அட போய்த்தான் பார்ப்போமே என்று தோன்றியது. மறுநாள் நானும் விஜியும் மட்டும் போய் ஓட்டல் வாசலில் இருந்த ஒரு மரத்தின் பின்னே நின்று கொண்டிருந்தோம். நாங்கள் எதிர்பார்த்த குருஜி வரவில்லை.

    வி.ஐ.பிக்கள் ஒவ்வொருவராகக் காரில் வரத்துவங்கினர். அந்த நேரம் பார்த்து ஒரு முக்கால் சைஸ் மினி லாரி ஓட்டல் கேட் முன் வந்து நின்றது. உள்ளே போக முடியவில்லையா அல்லது அனுமதியில்லையா தெரியவில்லை. லாரியின் பின்பக்க கதவைத்திறந்து விட்டார்கள். லாரியினுள் ஜமுக்காளமும் அதற்கு மேல் வெல்வெட்டும் விரிக்கப்பட்டு, அதன் மீது படத்தின் ஷீல்டுகள் வரிசையாக ஒன்றோடொன்று உரசாமல் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஓட்டலின் உள்ளே கொண்டுபோக வேண்டும். ஷீல்டுகளைக்கண்டதும் அவற்றை அருகே போய்ப்பார்த்துக்கொண்டு நின்றோம்.

    அப்போது ஒரு காரிலிருந்து இறங்கி வந்த சபாரி சூட் அணிந்த ஒருவர், ஓட்டல் சிப்பந்திகளை அழைக்க இரண்டு பேர் மட்டுமே வந்து ஷீல்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு விழா நடக்கபோகும் இடத்தில் கொண்டுபோய் வைத்து விட்டு வந்து மீண்டும் எடுத்துச்சென்றார்கள். அப்போது அந்த ஸபாரி சூட் ஆள் என்னையும் விஜியையும் பார்த்து, 'தம்பி, கொஞ்சம் Help பண்ணுங்க. நீங்களும் இவைகளை உள்ளே கொண்டு போய் வையுங்களேன்' என்று சொல்ல, ‘ஆகா, ஓட்டல் உள்ளே போக இப்படியும் கூட சான்ஸ் கிடைக்குமா’ என்ற ஆனந்தத்தில் நாங்களும் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டு உள்ளே கொண்டுசென்று அவர்கள் சொன்ன இடத்தில் வைத்தோம். சுமார் நாலைந்து முறை கொண்டு போனதும், வண்டியில் இன்னும் மூன்றே ஷீல்டுகள்தான் இருந்தன. திரும்பி வெளியே வரும்போது யாரும் அவற்றைக்கொண்டுபோய் விட்டால், மீண்டும் உள்ளே போக முடியாது. கிடைத்த சான்ஸை விடக்கூடாது என்ற எண்ணத்தில் அந்த தடவை உள்ளே போனதோடு, வைத்து விட்டு ஒரு மூலையில் ஆளுக்கொரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டோம். பாக்கியிருந்ததை ஓட்டல் சிப்பந்திகள் கொண்டுவந்து வைத்து விட்டுப்போனார்கள்.

    அப்போதுதான் கவனித்தோம். ஏதோ தியேட்டர் போன்ற பெரிய அரங்கத்தில் நடக்கும் விழா போல இருக்கும், நடுவரிசையில் உட்கார்ந்து கொள்ளலாம் என்று நினைத்த எங்களுக்கு, அங்கே ஒவ்வொரு மேஜையையும் சுற்றி நான்கு சேர் போட்டு, ஏதோ பார்ட்டி போல அரேஞ்ச் பண்ணியிருப்பதைப்பார்த்து பயம் தொற்றிக்கொண்டது. ஆகா, வரக்கூடாத இடத்துக்கு வந்துட்டோம் போலும். யாராவது ஏதாவது கேட்பதற்குள் வெளியேறி விடுவோம் என்று விஜியிடம் சொல்ல, 'அதெல்லாம் ஒண்ணும் ஆகாது பயப்படாதே'ன்னு அவன் தைரியம் சொல்வானென்று பார்த்தால், அவனும் 'எனக்கும் அப்படித்தான்யா தோணுது. வா போயிடலாம்' என்று அச்சத்தைக் கிளப்ப மெல்ல கிளம்பினோம்.

    'என்னடா இது, விழாவைப்பார்க்கலாம்னு ஆசையா வந்தால், இம்மாதிரி ராயல் செட்டப்பைக்காட்டி பயமுறுத்திட்டாங்களே. கஷ்ட்டப்பட்டு உள்ளே வந்து பலனில்லாமல் போச்சே'ன்னு பேசிக்கொண்டே கேட்டை நெருங்கியபோது, அந்த சபாரி ஆசாமி பார்த்து விட்டார். 'ஏம்ப்பா போறீங்க?' என்று கேட்டதும், ஒண்ணு விடாமல் எல்லாத்தையும் அவரிடம் சொன்னோம், 'ஓ அப்படியா? நீங்க வி.ஐ.பி. பகுதியில போய் உட்கார்ந்துட்டீங்க போலிருக்கு. நீங்க விழாவைத்தானே பார்க்கணும். வாங்க வேறு இடத்துல உட்கார வைக்கிறேன்'னு அழைச்சிக்கிட்டுப்போய், கடைசியாக வரிசையாக சேர் போட்டிருந்த இடத்தில் உட்கார வைத்தார். ஏற்கெனவே அங்கும் சிலர் உட்கார்ந்திருந்தனர்.

    அந்த இடத்திலும் ஐஸ்கிரீம், கட்லெட், சாண்ட்விட்ச் என்று என்னென்னவோ பறிமாறினார்கள். ஆனால் அதிலெல்லாம் எங்களுக்கு நாட்டமில்லை. நாம் அதற்காகவா வந்தோம்?. விழாவை திருப்தியாகப் பார்த்தால் போதும் என்றிருந்தது. விழா நிகழ்ச்சிகள் சரியாக நினைவில் இல்லை, அதற்குக்காரணம் முதலில் ஏற்பட்ட மன சஞ்சலங்கள்தான்.

    நடிகர்திலகம் வந்திருந்தார். ராம்குமார், தேங்காய் சீனிவாசன், ஜெய்கணேஷ், விஜயகுமார், மஞ்சுளா, ஜெயசித்ரா, சத்யப்பிரியா, ஏ.சி.டி. என்று ஏகப்பட்ட வி.ஐ.பிக்கள் வந்திருந்தனர். ஜெய்கணேஷ் மனைவியைப்பார்த்தபோது இவ்வளவு அழகான இவரை எப்படி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் படத்தில் நடிக்காமல் விட்டு வைத்தார்கள் என்று தோன்றியது. நடிகை மாலினி பொன்சேகா வந்த மாதிரி தெரியவில்லை.

    விழா, ஒரு மேட்டுக்குடி விழா போல நடந்ததால் சாதாரண ரசிகர்களான எங்கள் மனதில் ஒட்டவில்லை என்பதுதான் உண்மை. திரும்பி வரும்போது இருவரும், 'இவங்க இப்படி நடத்துனதுக்கு பதிலாக, கலைவாணர் அரங்கம் போன்ற பொது இடத்தில் நடத்தி, ரசிகர்களையும் அனுமதிச்சிருக்கலாம். எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்' என்று பேசிக்கொண்டு வந்தோம். உண்மையிலேயே பைலட் பிரேம்நாத் 100 வது நாள் விழா எங்களுக்கு ஒரு புதிய அனுபவம்.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •