Page 250 of 404 FirstFirst ... 150200240248249250251252260300350 ... LastLast
Results 2,491 to 2,500 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2491
    Member Junior Hubber
    Join Date
    Oct 2010
    Posts
    35
    Post Thanks / Like
    மீண்டும் ஆவணங்களுடன் பம்மலாரின் தகவல்கள்..நன்று.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2492
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    தங்களை மீண்டும் வருக வருக என மனதார மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தாங்கள் இல்லாமல் சர்க்கரை இல்லா பால் போல இருந்தது. தாங்கள் திரும்பி வந்ததும் கற்கண்டும், தேனும் கலந்த பாலாய் இனிக்க ஆரம்பிக்கத் துவங்கி விட்டது.

    கர்ணன் 1964 ரிலீசில் படம் சுமாராகத்தான் போனது என்ற விவரமறியாதவர் இடும் கூக்குரலுக்கு சாட்டையடி கொடுக்க இப்படி ஒரு அற்புதப் பதிவை அளிக்க தங்களை விட்டால் வேறு யார்? அதுவும் வார ரீதியான வசூல் விவரங்கள். எவ்வளவு நீ.........ண்ட நாட்களாகி விட்டது இப்படி அருமையான பதிவுகளைப் பார்த்து? அசுரப் பதிவுகளை அட்டகாசமாக வழங்கியதற்கு நன்றிகள்.

    ராஜ ராஜ பொக்கிஷம் அளித்த பதிவு ராஜரே! தங்கள் பணி மேலும் தழைக்க வாழ்த்துக்கள்.
    Last edited by vasudevan31355; 1st April 2012 at 05:04 PM.

  4. #2493
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ராஜ ராஜ சோழன்' சில நிழற்படங்கள்.



















    Last edited by vasudevan31355; 1st April 2012 at 01:10 AM.

  5. #2494
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like










    "தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்"



    "தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!"

    Last edited by vasudevan31355; 1st April 2012 at 01:26 AM.

  6. #2495
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    வருக வருக புத்துணர்வுடன் புது பொலிவுடன் வருகை தந்திருக்கும் சுவாமி அவர்களே வருக!

    அள்ளிக் கொடுத்த கர்ணனுக்கே விளம்பரங்களை அள்ளிக் கொடுத்த வள்ளலே!

    தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கில் மூன்று நூறு நாட்கள் படங்களை கொடுத்த இந்திய சினிமாவின் ஒரே நடிகன் என்ற பெருமையை நடிகர் திலகத்திற்கு அளித்த எங்கள் மதுரையின் மாண்பை அன்றைய நாளில் வெளியான விளம்பரங்களின் மூலமாக உலகறிய செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இதே செய்தியை நான் இந்த திரியில் கடந்த ஆறு வருடமாக சொல்லி வந்தாலும் அதற்கு ஒரு ஆணித்தரமான ஆதாரத்தை அளித்த உங்களுக்கு கோடானு கோடி நன்றி.

    நடிகர் திலகமும் தங்கம் திரையரங்கும் இணை பிரிக்க முடியாதவை. காரணம் இருவருமே தங்கள் முதல் அறிமுகத்தை ஒரே நாளில்தான் துவக்கினார்கள். ஆம், எப்படி 1952 அக்டோபர் 17 நடிகர் திலகத்தின் அறிமுக நாளாயிற்றோ, அதே நாளில்தான் தங்கம் அரங்கும் தன் அறிமுகத்தை பராசக்தி படத்துடன் துவக்கியது.

    மீண்டும் நன்றி. தொடரட்டும் உங்கள் கலக்கல்கள்!

    அன்புடன்

    இன்று மார்ச் 31 ராஜ ராஜ சோழனின் வெளியீட்டு தினம் என்பது தெரியாமலே ராஜ ராஜ சோழனைப் பற்றி தற்செயலாக சகல பதிவிட அதற்கு பொருத்தமாக அந்தப் படத்தின் ஒரு விளம்பரத்தை பதிவிட்ட உங்கள் timing sense-க்கு ஒரு சல்யூட்.
    டியர் முரளி சார்,

    தங்களது அன்பிற்கும், பாராட்டுக்களுக்கும் எனது இன்பமயமான நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #2496
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post




    திரியின் நாயகரே வருக! வருக!
    திகட்டாத இன்பம் தருக! தருக!


    அன்பு பம்மலார் அவர்களே!
    ஆவணத் திலகம் அவர்களே!
    இன்முகம் காட்டி
    ஈகைக் குணத்தோடு
    உத்தமரைப் பற்றிய உண்மைகளை
    ஊர் உலகம் அறியச் செய்து
    எல்லோர் மனதிலும் குடிகொண்ட
    ஏற்றம் கொண்ட அன்பராய்
    ஐயங்கள் பல போக்கி
    ஒருவரும் தனக்கு ஈடு இல்லையென
    ஓராயிரம் ஆவணங்களை
    ஒளவைப் பிராட்டி தமிழ் தந்தது போல தந்து
    மறுபடியும் மனம் மகிழ வைக்க வந்திருக்கும்
    திரித் தென்றலே! வருக! வருக!



    அன்புடன்,
    வாசுதேவன்.
    டியர் வாசுதேவன் சார்,

    பெருந்தன்மையின் மறுவடிவமான தங்களுடைய இதயத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கி வரும் அன்பிற்கும், வான்மழை போன்ற பாராட்டுப் பதிவுகளுக்கும், வளமான வாழ்த்துக்களுக்கும் எனது எல்லையில்லா நன்றிகள் ! நெய்வேலியார் ஔவையாராக உருமாறி, இந்த எளியேனைப் பாராட்டும்விதமாக ஒரு ஆத்திசூடியையே யாத்து அளித்தது அடியேனது கண்களில் ஆனந்தக்கண்ணீரையே வரவழைத்துவிட்டது. தங்களது இணையில்லா அன்பிற்கு எனது எண்ணிலடங்கா நன்றிகள் !

    [தாங்கள் வழங்கியுள்ள "ராஜ ராஜ சோழன்" மெகா ஆல்பம் மகா கம்பீரம் !]

    அன்பு கலந்த ஆனந்தக்கண்ணீருடன்,
    உங்கள் பம்மலார்.
    pammalar

  8. #2497
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by selva7 View Post
    மீண்டும் ஆவணங்களுடன் பம்மலாரின் தகவல்கள்..நன்று.
    டியர் Mr. selva7,

    தங்களின் பாராட்டுக்கு எனது கனிவான நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #2498
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

    3 : பச்சை விளக்கு(1964), ஸ்கூல் மாஸ்டர்(மலையாளம்)(1964)

    6 : கவரிமான்(1979)

    9 : இல்லற ஜோதி(1954)

    10 : கிரஹப்பிரவேசம்(1976), படையப்பா(1999)

    11 : ஹரிச்சந்திரா(1968), வியட்நாம் வீடு(1970), அவன் தான் மனிதன்(1975), விடுதலை(1986)

    12 : வணங்காமுடி(1957), நான் வணங்கும் தெய்வம்(1963), கலாட்டா கல்யாணம்(1968), வாணி ராணி(1974), நட்சத்திரம்(1980)

    13 : அந்த நாள்(1954), கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி(1954), தெய்வப்பிறவி(1960), நீதியின் நிழல்(1985)

    14 : உலகம் பலவிதம்(1955), சம்பூர்ண ராமாயணம்(1958), தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை(1959), படித்தால் மட்டும் போதுமா(1962), பேசும் தெய்வம்(1967), சுமதி என் சுந்தரி(1971), பிராப்தம்(1971), சங்கிலி(1982), இமைகள்(1983), வாழ்க்கை(1984), வீரபாண்டியன்(1987), பசும்பொன்(1995)

    21 : புனர்ஜென்மம்(1961)

    22 : சாந்தி(1965)

    24 : அமரகாவியம்(1981)

    26 : தர்மராஜா(1980)


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #2499
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

    பச்சை விளக்கு

    [3.4.1964 - 3.4.2012] : 49வது உதயதினம்

    பொக்கிஷப் புதையல்

    சாரதியின் அழகுத் தோற்றம் வண்ணத்தில்...



    முதல் வெளியீட்டு விளம்பரம் : கலைமகள் : மே 1964



    100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 11.7.1964



    100வது நாள் விளம்பரம் : The Hindu : 11.7.1964


    குறிப்பு:
    "பச்சை விளக்கு", 100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்.


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #2500
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    HEARTY WELCOME TO PAMMALAR WITH A BIG BANG OF KARNAN VASUL DETAILS. KARNAN WAS A GREAT FILM HIT ON COLLECTIONS ALSO JUST TO DEMERIT THE MOVIE THE OTHER BANNER PEOPLE CREATED A BIG FUSS THOSE DAYS IN THEATRES WHERE IT WAS RELEASED. AFTER FEW WEEKS WHEN THEY REALISED KARNAN CAN NOT BE TOPPLED, they kept quit. that is the fact. many similar happenings took place later years also. now KARNAN IS PROVING its myth after almost half a centuary.
    vasu sir raja raja cholan stills eyecatching.

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •