View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 330 of 347 FirstFirst ... 230280320328329330331332340 ... LastLast
Results 3,291 to 3,300 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #3291
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    the entire bgm of Un samayal araiyil and Azhagarsamiyin kuthirai !

    I could hear IR's own versions of the blues, jazz, funk, and what not !!

    i feel sorry for those who don't work with this genius

  2. Likes Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3292
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    the entire bgm of Un samayal araiyil and Azhagarsamiyin kuthirai !

    I could hear IR's own versions of the blues, jazz, funk, and what not !!

    i feel sorry for those who don't work with this genius
    Oh yeah.. SUN TV played Un Samayal Arayil movie yesterday (sunday evening). Nice work Raja sir. I enjoyed listening to that bgm guitar bit of katru veliyil that was repeated twice in the movie, compared to the actual song. listen to few bits from http://www.bgmringtones.com/2014/09/...-download.html (the last 3 pieces are some funny danush voices for ringtones, i did not uploaded all these, just searched for the bgm and found this link )

    climax suspense bgm during the gramiya kalaignargal dance in the museum is excellent, can't find that one anywhere.

  5. Likes Russellhaj liked this post
  6. #3293
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Found this gem in youtube and listening in loop.. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ( இதை இப்போது முதன்முதலில் கேட்பவர்களுக்கு)

    The narration that Our hubber V_S provided

    With all elements; horns, electric guitar, acoustic drums, husky voice and singing, delectable choirs defining this club song, how about a stranger called 'urumi' for this song. Please hear the first interlude end portion and whole of second interlude with urumi coming in as percussion instead of usual drums providing a perfect backdrop for trumpets and electric guitar.

    Only Maestro can think of all possible ways from the improbable!




    வாத்தியக் கருவிகள், சப்தஸ்வரம் இப்படிப்பட்ட சொற்களுக்கு ராஜாவின் அகராதியில் தனி அர்த்தங்கள்.
    Last edited by venkkiram; 30th September 2014 at 08:16 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  7. Likes Russellhaj, mappi liked this post
  8. #3294
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    படம்: மயிலு பாடல்: யாத்தே யாத்தே.
    பாடியவர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரிணி
    எழுதியவர்: ஜீவன்

    21ம் நூற்றாண்டில் இதை விட சிறப்பாய் எப்படி சார் ஒரு கிராமிய மனம் நிரம்பிய பாடலை நவீன இசை கருவிகள் கொண்டு பதிவு செய்ய முடியும்? எல்லா அம்சங்களும் பொருந்திய பாடல் இது.

    கதையின் தன்மை, போக்கு, வேகம் சூழ்நிலை எல்லாவற்றையும் உள்வாங்கி , அதிலே தன்னுடைய சிக்னேச்சர் சற்றும் குறையாமல், அதிகபிரசங்கமும் செய்யாமல் ஒரு 5 நிமிட மாயம் செய்ய வேண்டும். - அது ராஜா சாரால் மட்டுமே முடியும். எல்லா இசை கருவிகள் இருந்தும் எதுவுமே நம்மை உறுத்தாமல் அழகாய் நகர்ந்து செல்லும் இந்த பாடலில் பவதாரிணி, நிறைய வித்தை தெரிந்த ஸ்ரீராம் பார்த்தசாரதியோடு சரிக்கு சமமாய் நடையை கட்டுகிறார். ஒரு ஊஞ்சலில் ஜாக்கிரதையாய், மெதுவாய் அமர்ந்து, சற்றே காலால் தள்ளிக்கொண்டு அப்பறம் முழு ஸ்விங்கில் போவோமே? இந்த பாடலும் அப்படி தான்.

    பாடல் மிக நன்றாய் வந்திருந்தும், காட்சி அமைப்பில் எங்கோ தெரியும் அழகிய மலைகளையும் இயற்கையையும் மறைத்து விட்டு குறுகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது ஏன் என்று தெரியவில்லை.

    அதிகம் கண்டு கொள்ளப்பாடாத மயிலு படம் வெளிவருவதுக்கு முன்னரே பாடல் பதிவுகளின் துளிகளை யூடியூபில் பார்த்தபோது மூக்கால் சொரனையற்று பாடிய பவதாரினியால், அது என்னை அதிகம் ஆட்கொள்ளவில்லை. பின்னர் முழு வடிவம் பெற்று ஆடியோ வெளியானதிலிருந்து என்னை வசியம் செய்து விட்டது. இதே படத்தில் கிறுக்கி அரை கிறுக்கி, நம்மளோட பாட்டுதாண்டா பாடல்களும் பிரமாதம்.

    ராஜா சாருக்கு 71 வயது என்பதை இந்த பாடல்களை எல்லாம் கேட்கும் போது நம்ப முடியவில்லை. 80களின் ராஜா என்று யாராவது ராஜா சாரை சொன்னால், வாயை கிழிக்கணும், அவர் எப்போதுமே ராஜா தான். நமக்கு தான் ரசனை குறைந்து விட்டது.




  9. Thanks venkkiram thanked for this post
    Likes venkkiram liked this post
  10. #3295
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெரும்
    இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
    கொதிக்கும் பாறையிலும் இசையால் பூ மலரும்
    இரும்பு பாறையிலும் இசையால் நீர் கசியும்
    பழிவாங்கும் பகை நெஞ்சம் இசையால் சாந்தி பெறும்

    அறையில் பாட்டெடுப்பேன் அரங்கம் தேவையில்லை
    சபையில் பேரெடுக்க குயில்கள் இசை எடுப்பதில்லை
    எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் நான் பாடுகின்றேன்

    நிலைக்கும் கானம் இது… நெடு நாள் வாழும் இது!!!


    வான மழை போலே ..... இது நம்ம பூமி படத்தில் இருந்து. K.J.ஜேசுதாசின் அருமையான பாடல். ‘குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவர் யார்’ வாலியின் வரிகள் soothing

    Sorry, I cannot attach the vidio ........sorry about that !!

  11. #3296
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    படம்: மயிலு பாடல்: யாத்தே யாத்தே.
    பாடியவர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரிணி
    எழுதியவர்: ஜீவன்

    21ம் நூற்றாண்டில் இதை விட சிறப்பாய் எப்படி சார் ஒரு கிராமிய மனம் நிரம்பிய பாடலை நவீன இசை கருவிகள் கொண்டு பதிவு செய்ய முடியும்? எல்லா அம்சங்களும் பொருந்திய பாடல் இது.

    கதையின் தன்மை, போக்கு, வேகம் சூழ்நிலை எல்லாவற்றையும் உள்வாங்கி , அதிலே தன்னுடைய சிக்னேச்சர் சற்றும் குறையாமல், அதிகபிரசங்கமும் செய்யாமல் ஒரு 5 நிமிட மாயம் செய்ய வேண்டும். - அது ராஜா சாரால் மட்டுமே முடியும். எல்லா இசை கருவிகள் இருந்தும் எதுவுமே நம்மை உறுத்தாமல் அழகாய் நகர்ந்து செல்லும் இந்த பாடலில் பவதாரிணி, நிறைய வித்தை தெரிந்த ஸ்ரீராம் பார்த்தசாரதியோடு சரிக்கு சமமாய் நடையை கட்டுகிறார். ஒரு ஊஞ்சலில் ஜாக்கிரதையாய், மெதுவாய் அமர்ந்து, சற்றே காலால் தள்ளிக்கொண்டு அப்பறம் முழு ஸ்விங்கில் போவோமே? இந்த பாடலும் அப்படி தான்.

    ராஜா சாருக்கு 71 வயது என்பதை இந்த பாடல்களை எல்லாம் கேட்கும் போது நம்ப முடியவில்லை. 80களின் ராஜா என்று யாராவது ராஜா சாரை சொன்னால், வாயை கிழிக்கணும், அவர் எப்போதுமே ராஜா தான். நமக்கு தான் ரசனை குறைந்து விட்டது.



    ஒரு குடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்திச்சி..
    ரெண்டு குடம் தண்ணியெடுத்து ரெண்டு பூ பூத்திச்சி
    மூணு குடம் தண்ணியெடுத்து மூணு பூ பூத்திச்சி..
    கடசில வர்றவள பூ போட்டு புடிச்சிக்கோ
    ஓம்புருஷன் யாரு?
    ஓம்புருஷன் யாரு?
    ஓம்புருஷன் யாரு?
    "செல்லபாண்டி!"


    இதுபோன்ற நாட்டுப்புற துண்டுப் பாடல்களெல்லாம் ராஜா யுகத்தோடு மறைந்துபோகும். இனி அதை சினிமா மெட்டோடு ரத்தமும் சதையுமாக நெய்ய ராஜாவே மறுபிறவி எடுத்துதான் வரணும். ராஜாவின் இசை.. வெறும் சுரங்கள் மட்டுமல்ல.. வெறும் இசை வித்தை மட்டுமல்ல.. அதில் நமது கலாச்சாரம், மண்ணின் மனம், பண்பாடு இழையோடிக் கொண்டியிருக்கிறது.
    Last edited by venkkiram; 3rd October 2014 at 09:49 PM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  12. Likes rajaramsgi liked this post
  13. #3297
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    போயம்,

    சில பாடல்களை யாராவது எடுத்து சொன்னால் மட்டுமே எனக்கு பிடிக்கிறது, இல்லாவிட்டால் அவை எல்லாம் என்னுடைய "ok-type songs folder"ல் தூங்கும், நானும் சீண்டுவதில்லை.

    வானமழை போலே மற்றும் வெங்கிராம் எடுத்து சொல்லிய இது ரோசா பூவு பாடலையும் படம் பார்த்த நாள் முதல் எனக்கு பிடித்ததில்லை . ஆனால் இப்போது உங்கள் இருவரின் புண்ணியத்தில் இந்த இரு பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டிருக்கிறேன்.

    நன்றி.
    Last edited by rajaramsgi; 3rd October 2014 at 10:05 PM.

  14. Likes Russellhaj liked this post
  15. #3298
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ஒரே மெட்டிற்கு இரண்டு வகையான அலங்கரிப்புகள். இதில் ராஜாவா அடிச்சிக்க ஆளே கிடையாது. இருவேறு காட்சி சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு காற்றில் சுரங்களை மீட்டு எடுப்பார். நிறைய சொல்லலாம். ஒரு இசையமைப்பாளருக்கு இதுபோல ஒரு மெட்டு கிடைப்பதே அதிர்ஷ்டம். அப்படி கிடைத்தாலும் அதை பெரும்பாலும் ஒருவகையான சூழ்நிலைக்கு மட்டுமே அமைத்து வேறொரு பாடலுக்கு வேறொரு மெட்டு என தீர்மானிப்பது ஒரு நிலை. ஆனால் ஒரு ரசத்திற்கு மெட்டமைக்கப் பட்ட பாடலை அதற்கு தொடர்பில்லாத இன்னொருவகை ரசத்திற்கு பயன்படுத்துவது.. இரு ரசங்களுக்கும் ஏற்றவாறு வாத்தியக் கருவிகள், குரல் மொழியை திட்டமிடுவது, செயல்படுத்துவது.. இதில் மிகப்பெரிய வெற்றி என்பது ஒரே மெட்டில் இரண்டு பாடல்கள் அதுவும் ஒரே படத்தில்.. ஒரே ஒலித் தகட்டில். கேட்டு ரசிப்பது தெகட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்கச் செய்யும் சாமார்த்தியம். இசை மீதான சிறந்த ஆளுமைகளால் மட்டுமே இதைத் துணிச்சலாக முடிவெடுத்து நிறைவேற்றி காவியமாக்க முடியும்.

    இந்தவகையில் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள். அதில் ஒன்று.. நினைவே ஒரு சங்கீதம் படத்தி அமைந்த "எடுத்த வச்ச பாலும்..".

    கண்ணுக்கு முன்னாடி ஒரு மொட்டு மலர்வதுபோல நம் மனதில் பறந்து விரிகிறது.. அதென்னமோ சொல்லுவாங்களே .. ஆர்கானிக்.. ஆர்கானிக்.. இதுதான். இரண்டு வகை ஓவியங்கள்... குறும்புத் தனத்தோடு தாபத்தை வெளிப்படுத்தும் ரசத்தில் ஜானகி.. சோக ரசத்தில் பாலு.

    பெண்ணின் சில்மிஷம் கலந்த குரும்புத்தனத்தோடும், காதல் ஏக்கத்தோடும் குழையும் விதவிதமான வாத்தியங்கள்..

    எடுத்த வச்ச பாலும்.. பெண் குரல்..



    எடுத்த வச்ச பாலும்.. ஆண் குரல்.. மனைவிக்கு ஒரு உயிர்கொல்லிநோய் எனத் தெரியவந்து.. திண்டாடும் மனநிலையில்.. பிழிந்தெடுக்கும். இடையிசைகள்



    இந்தத் திரைப்படம் வெளிவந்த வருடங்களில் நடுநிலைப் பள்ளிக் காலம். செங்கல் சூலை ஒன்று அமைத்து சில ஆட்கள் கோடை முழுதும் தொடர்ந்து இரவு பகலாக வேலை செய்துவந்தார்கள். மாலை நேரங்களில் சென்று இரவு நடுசாமத்தில் வீடு திரும்புவதுண்டு. அப்போதெல்லாம் அங்கே வேலை செய்கிற ஆட்களுக்கு காலத்தை, வேலையை ஒரு சுமையாக தோணச் செய்யாத வகையில் சிறிய டேப் ரேடியோ.. அதில் இலங்கை மற்றும் விவிதபாரதி அலைவரிசையில் இப்படத்தின் பாடல்கள் ஒலிக்கக் கேட்டிருக்கிறேன். சுகமான பொழுதுகள்.

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ராஜா!
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  16. Likes rajaramsgi, Russellhaj liked this post
  17. #3299
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ராஜாராம் அய்யா!

    யாத்தே யாத்தே பாடல் பதிவுக் கூட நிகழ்ச்சிக்கான காணொளி ஒன்று.. பவதாரிணியின் குரலை செதுக்கும் சிற்பியாக ராஜா..

    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  18. Thanks rajaramsgi thanked for this post
  19. #3300
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    படம்: முந்தானை முடிச்சு
    பாடல்: வெளக்கு வெச்ச நேரத்திலே
    எழுதியவர்: நா. காமராசன்
    பாடியவர்கள்: ஜானகி, ராஜா சார்.

    படத்துக்கு டைட்டில் சாங் அல்லது டைட்டில் மியூசிக் ரொம்ப முக்கியம். ஒரு முழு நீள படத்துக்கான முன்னோட்டம் மட்டுமல்ல, கதை ஆரம்பிக்கும் முன், உளவியல் ரீதியாக நம்மை தயார் செய்பவையே இவை. எப்போதும் போல், ராஜா சார் தன்னுடைய மாஜிக்கை ஆரம்பத்திலேயே காட்டிவிடுவார். சில சமயம் கிளைமாக்ஸ் சுபம் கார்டு போடும்போது ஏற்படும் உணர்வை ஆரம்பித்திலேயே காட்டுவதும், படம் எடுக்கப்பட்ட கிராமத்தையோ, நகரத்தையோ, ஆனைமலை, கொல்லிமலை, பொள்ளாச்சி, ஊட்டி போன்ற ஊர்களையோ - சூழ்நிலைக்கேற்ப்ப சரியான வாத்தியங்கள் கொண்டு பின்னணி இசையோடு டைட்டில் கார்டிலேயே அசத்தி விடுவதில் அவர் கில்லாடி.

    இதோ முந்தானை முடிச்சு படத்தில் வெளக்கு வெச்ச நேரத்திலே.. தலைப்புக்கும், கதைக்கும் ஏற்ற என்ன ஒரு பொருத்தமான பாடல்...

    ஆரம்பத்திலேயே ஒரு குறும்பு ஹைக்கூ கவிதை. ஒரு தாத்தாவை கை கழுவ சொல்லிவிட்டு, அவர் கையில் ஒரு கவளம் சாப்பாடு வைக்கிறார் பாட்டி. உழைத்து களைத்த தாத்தா, தான் சாப்பிடாமல், ஒரு கிக் கலந்த புன்முறுவலோடு பாட்டிக்கு ஊட்டி விடுகையில் டைங், ஏவிஎம் மின் முந்தானை முடிச்சு கார்டு.. அப்பறம் ஜானகி கொஞ்சுவதும், சிணுங்குவதும், சிரிப்பதுமாய்... கூடவே ராஜா சார் சேர்ந்து கொள்ள.. அஹா.

    பாடலின் முதல் வரி தொடங்கி கடைசியில் முடியும் வரை அக்மார்க் அசைவ சமாச்சாரங்கள். ஆனால் எங்குமே விரசம் தெரியாத வண்ணம் அழகாய் இசையும் வரிகளும் ஆலிங்கனம் செய்யும். ஷெனாயும், குழலும், தாள வாத்தியங்களும் கம்பீரமாக இருக்கும் இந்த பாடலின் இறுதியில் மற்ற தாள வாத்தியங்களை பின்னுக்கு தள்ளி, பாடலை தவில் கையகபடுத்தும் அழகை என்ன சொல்வேன்?

    பாடலின் தொடக்கத்தை அருவிக்கரை ஓரத்திலே என்று தான் நா. காமராசன் எழுதி இருக்கிறார். பாடல் பதிவில் 7 அல்லது 8 டேக் போய் கொண்டிருந்த போது பாக்யராஜ் உள்ளே வந்து இந்த வரி சரி இல்லை, அதனால் வெளக்கு வெச்ச நேரத்திலே என்று மாற்றுங்கள் என்று ராஜா சாரிடம் சொல்ல, அவர் கடுப்பாகி சத்தம் போட தயாரிப்பாளர் வந்து சொன்ன பிறகே வரிகளை வெளக்கு வெச்ச நேரத்திலே என்று மாற்றினார்களாம்.







    Last edited by rajaramsgi; 5th October 2014 at 03:32 AM.

  20. Likes venkkiram liked this post

Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 418
    Last Post: 29th November 2015, 10:52 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •