View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 345 of 347 FirstFirst ... 245295335343344345346347 LastLast
Results 3,441 to 3,450 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #3441
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Another fine song that went unnoticed...
    From Anbin Mugavari (1985)


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3442
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    அன்று அடித்த புயலில் மறைக்கப்பட்ட மற்றொரு பொக்கிஷம் அன்பே வா ... ....

    வித்யாசமாக இருக்கட்டுமே என பேத்தோஸ் ஒன்று
    தருகிறேன். மின்மினியின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் ஏழை ஜாதி (1993) திரைபடத்தில் இடம்பெற்றது. நாயகனுக்காக ஏங்கி அவள் பாடினாலும், அடுத்து நடக்க போகும் பயங்கரத்துக்கு நம்மை தயார் செய்யும் விதமாய் வாத்தியங்களையம் தாள அமைப்புகளையும் ராஜா சார் அமைத்திருப்பது உங்களை நிச்சயம் கவரும். படமாக்கப்பட்ட நேரத்தில் ஜெயப்ரதாவுக்கு 30 வயதுக்கு மேல் இருக்கும். தாண்டவ ஆட்டத்தை அதகளப்படுத்தி இருக்கிறார்.

    சமீப காலத்தில் நான் அதிகம் கேட்டு என்னை கவர்ந்த இந்த பாடலுக்கான உங்கள் விமர்சனத்தை காண காத்திருக்கிறேன். பாடல் பதிவு மற்றும் படமாக்க பட்ட விதம், ராஜா சாரின் கற்பனை என்று யாருக்கேனும் தோன்றியதை எழுதுங்களேன்.

    கல்லூரி முடித்து சென்னைக்கு வேலை தேடி வந்து இறங்கிய சமயத்தில் அசோக் பில்லரில் இந்த படத்துக்கான ஒரு கார் சேசிங் காட்சி எடுத்து கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்த நினைவில் மூழ்கி விட்டேன். நோட்: ஏழை ஜாதியின் மற்றொரு பொக்கிஷமான அதோ அந்த நதியோரம் உங்களுக்கு நினைவிருக்கும்.

    better quality MP3 link here.

    Last edited by rajaramsgi; 10th July 2017 at 02:04 PM.

  4. #3443
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    ராஜா சார் அவர்கள் இசை அமைத்த பாடல்களில் ஒரு 500 பாடல்களை அவராலேயே ரிப்ரொடியூஸ் பண்ண முடியாது என்று சொல்வதில் எனக்கொன்றும் அச்சமில்லை. ஏதோ ஒரு அசுர வேகத்தில் எக்கச்சக்க வேலைப்பாடுகளுடன் எல்லா அம்சங்களும் பொருத்தி அளித்த எத்தனையோ பாடல்களில் அறுவடை நாள் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். அறுவடை நாள் வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் அதன் பாடல்கள் மீது சற்றும் எனக்கு மோகம் குறையவில்லை.

    தேவனின் கோயில் மூடிய வேளையில்: எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி இருக்கிறது இந்த பாடல்? ஒரு முழு படத்தின் சோகத்தை ஒரு பாடலில் சொல்லிவிட முடியுமா? சந்தோஷ நிகழ்வுகளும் இருக்கிறது தம்பி என்று சொல்லிவிட அதே பாடலில் ரொமான்டிக்கான ஹாப்பி பீட்ஸ் வைத்து விட முடியுமா? எந்த சோக பாடலுக்கான இலக்கணத்தையும் ரெபெரென்ஸ் செய்யாமல் தொடக்கத்திலேயே சர்ச் ஆர்கன் பின்னணியில் நாலைந்து டிராக்குகளில் சுலோகம் சொல்லி சிக்ஸர் அடித்து விடுகிறார் ராஜா சார்.. பிறகு பல்லவியை தொடர்ந்து வரும் முதல் இடை இசையில் சுகமாய் அடிக்கும் சர்ச் மணியோசை ஸ்ட்ரிங்ஸ்க்கும் குழலோசைக்கும் இசையில் இழைந்து வருவது டிவைன் அல்லவா? இரண்டாவது இடை இசையோ சொர்கம்.அதில் ராஜா சார் ஓங்கி உயர்ந்து ஹே தந்தன தந்தன தந்தனா சொல்வதை எதனுடன் ஒப்பிடுவது? கிட்டாரும், புல்லாங்குழலும், கிட்டாரும், தாள அமைப்புகளும் போட்டி போடுகிறதே? கங்கை அமரனையும், சித்ராவையும் நினைத்து பெருமை பட இந்த ஒரு பாடல் போதும்.

    இந்த பாடல் என்னை அழ செய்திருக்கிறது.. துள்ளி இருக்கிறேன். இது தான் முடிவு என தெரியாமல் துவண்டு போயிருந்த வேளைகளில் இந்த பாடல் மூலம் தேவனிடம் புலம்பி இருக்கிறேன். தேவாலய மணிகள் ஒலிக்கும் போதெல்லாம் இந்த பாடலும் ரீங்காரம் இடுவதை இன்றளவும் தவிர்க்க முடிவதில்லை.

    ராஜா சார், நீங்க இல்லாமல் போயிருந்தால், நான் இன்று இருந்திருக்க மாட்டேன்.

    click here for the MP3 version




  5. #3444
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    எ பியூர் டிலைட்....


    வாசுகி படம் 1997 வெளியாகி இருக்கிறது. ராஜா சார் இசை அமைத்த படங்களும், பாடல்களும் எனக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் வாசுகி படம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. கஸ்தூரி ராஜா படமாம். எதேச்சையாக இந்த பாடலை கேட்க நேரிட, அசந்து விட்டேன். ஜனகராஜ் ஒரு அண்ணனாக தன்னுடைய தங்கை ஊர்வசிக்கு பாடுவது போல் அமைக்க பட்டிருக்கிறது. கிளாசிக்.

    Clich here to listen to the MP3 version

    with good quality sound but only stills:


    Actual movie (this is the title song for the movie)

  6. #3445
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    இங்கு யாருமே வருவதில்லையா? போவதற்கு எனக்கு சமூக வலைத்தளங்கள் பல இருந்தாலும், இருபதாண்டுகளாக இந்த TFMPAGE வந்து சென்ற என் கால்கள், பழக்கத்தின் காரணமாய் வராமல் இருக்க மறுக்கின்றன, அதனாலேயே நாளொன்றுக்கு இரு முறை வந்து தினம் தினம் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டி இருக்கிறது.

    ஒரு ஆயுள் தண்டனைக்கு மேலான காலத்தை இந்த பகுதில் நான் செலவு செய்திருக்கிறேன். அது தண்டனையாக அல்ல, மகிழ்ச்சியாக! யாரும் இந்த பக்கம் வராத காரணத்தால் இந்த பகுதிகள் எல்லாம் இழுத்து மூடப்பட்டன என்று என்றேனும் என் பார்வையில் பட்டால் நான் மிகவும் வருந்த கூடும். எவரும் இங்கு வருவதற்கான எந்த தடயமும் இங்கு இல்லை.

    ராஜா சார் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களை, மேன்மை தாங்கிய மக்கள் இங்கு எழுதியதை எல்லாம் மறக்க முடியவில்லை. இந்த இடத்தில் தெரிந்து கொண்ட விஷயங்களும் பாடல்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இங்கு எழுதிய, வந்து போன மக்களுக்கு என் நன்றி. இப்போது விடை பெறுகிறேன். நான் புண்ணியம் செய்தவனாய் இருப்பின் எங்கேனும் நீங்கள் எழுதிதை படிக்க நேரிடும். உங்களை பார்க்க நேரிடும். அது வரை....................................
    இப்போதைக்கு பை!

    வாழ்க ராஜா சார்! வளர்க அவர் புகழ் !



  7. #3446
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Iceland
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    இங்கு யாருமே வருவதில்லையா?
    ஐய்யா Indiaவில் மய்யம் தடை - that is why there is nobody here.

  8. #3447
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    உயிரே உறவில் கலந்து:

    மனசு கேட்கவில்லை.. அதனால் இங்கு மீண்டும் மீண்டும் வந்து நான் கேட்டு லயித்ததை சொல்ல வேண்டியிருக்கிறது.

    மெல்ல பேசுங்கள் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல் செவ்வந்தி பூக்களில்.. ஆனால் அதே படத்தில் அதிகம் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பாடல் தான் 'உயிரே உறவில்'.. இது சோக பாடல் அல்ல, அதை ஒட்டிய ஏதோ ஒரு உணர்வை ஜானகியின் குரலில் கேட்க முடிகிறது. இந்த ஜானரில் வாலிபமே வா வா படத்தில் அழகே உன்னை என்கிற பாடலிலும் அமைத்திருப்பார் ராஜா சார். கேளுங்க!


  9. #3448
    Senior Member Veteran Hubber jaiganes's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    West Des Moines
    Posts
    3,701
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    உயிரே உறவில் கலந்து:

    மனசு கேட்கவில்லை.. அதனால் இங்கு மீண்டும் மீண்டும் வந்து நான் கேட்டு லயித்ததை சொல்ல வேண்டியிருக்கிறது.

    மெல்ல பேசுங்கள் திரைப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல் செவ்வந்தி பூக்களில்.. ஆனால் அதே படத்தில் அதிகம் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பாடல் தான் 'உயிரே உறவில்'.. இது சோக பாடல் அல்ல, அதை ஒட்டிய ஏதோ ஒரு உணர்வை ஜானகியின் குரலில் கேட்க முடிகிறது. இந்த ஜானரில் வாலிபமே வா வா படத்தில் அழகே உன்னை என்கிற பாடலிலும் அமைத்திருப்பார் ராஜா சார். கேளுங்க!

    அதியற்புதமான பாடல்களின் வரிசையில் இதற்கு ஒரு இதமான இடம் உண்டு.

    மனதை ஏதோ செய்யும் பாடல் மெட்டு.அதற்குக்காரணம் இந்த படத்தின் கதை. படம் பாருங்கள் இந்த மெட்டின் இழை சோகம் புரியும்.
    Apparently, a democracy is a place where numerous elections are held at great cost without issues and with interchangeable candidates.
    - Gore Vidal

  10. #3449
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    நன்றி மாப்பி, ஜெய்கணேஷ் அண்ட் பன்னையபுரத்தார் அவர்களே. ஏதோ நான் மட்டும் இங்கே தனியே உலாவி கொண்டிருக்கின்றேன் என்று நினைத்தேன். உங்கள் மூவரின் ப்ரெசென்சை இங்கே காட்டியதற்கு நன்றி சொல்ல ஒரு பழைய பாடலை உங்களுக்கு நினைவு படுத்த போகிறேன், நீங்களும் ரசிப்பீர்கள். GN ரங்கராஜன் இயக்கத்தில் 1982ல் வெளிவந்த ராணி தேனீ படத்திலிருந்து ஒரு பாடல். GNR இயக்கிய 9 படங்களுக்கும் ராஜா சார் சம்பளமே வாங்கவில்லையாம், இது கொசுறு செய்தி.

    இங்கே நம்ம ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஒரு டூயட் போட வேண்டும். பாடலுக்கான சூழ்நிலை என்னவோ ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் தான். ஆனால் ராஜா சார் இந்த பாடலை அமைத்தற்கான உந்துதல் அந்த கதாபாத்திரங்களாக தான் இருந்திருக்க வேண்டுமே தவிர பாடலுக்கான சூழ்நிலை இல்லை. அழகாய் சேலை கட்டி, சீதையாகவே தெய்வீகமாய் காட்சி தரும் அந்த பெண், தான் மணமுடிக்க போகிறவரை ராமனாகவே பார்க்க கூடியவள். . ஹீரோ மெத்த படித்த ஜென்டில்மேன், இது தான் பாத்திரங்கள். ராஜா சாருக்கு இது மட்டுமே போதாதா? அருமை அருமை.


    Last edited by rajaramsgi; 10th August 2017 at 12:20 AM.

  11. #3450
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2005
    Posts
    122
    Post Thanks / Like
    Don't know if this song has been discussed in this thread before.

    The movie Panchami was never released, however the 4 songs were nothing short of masterpieces, which used to be featured in Ilangai Oliparappuk Koottuthaabanam Tamizhchevai 2 (Radio Ceylon), under the programme, 'Maranthum Malaraathavai'.

    The relatively well-known song from this movie is the P Susheela solo, 'Udhaya Kalame Nanaintha Meghame'.

    The song I am talking about today is a rare duet by S Janaki and TV Gopalakrsihan (the veteran music maestro, violinst, mridangist and guru, who taught Carnatic music to Ilaiyaraja).

    S. Janaki once again takes a masterclass to today's so-called playback singers on how to expressively sing, with the right feel and clarity of diction.

    Here's the Youtube link (audio quality is not good though).


    The same user has uploaded a better quality track on soundcloud here (thanks Narayanan)

    https://soundcloud.com/narayanan-1/m...iyile-panchami

    Enjoy!

    The song is set to Raga 'Karnataka Kamas' (remember 'Ponnil Vaanam POttathu kOlangaLe' from Villuppaattukkaaran, 'Brochevarevarura' from Shankarabharanam)

  12. Thanks mappi thanked for this post

Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 418
    Last Post: 29th November 2015, 10:52 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •