Page 5 of 5 FirstFirst ... 345
Results 41 to 47 of 47

Thread: Reviews of Old Tamil Films

  1. #41
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Motor Sundaram Pillai

    Motor Sundaram Pillai had earlier been released as DVD by Raj Video Vision. Now an even more economic version has been released. This is available in all major outlets. For your reference the image of the covers reproduced below.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    மோகமுள்

    தி.ஜானகிராமனின் 'மோகமுள்' நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றிக்குறிப்பிட்டபோது, அதைப்பற்றிய குறிப்பொன்றை தனிப்பதிவாக இட்டால் என்ன என்று தோன்றியது. தி.ஜானகிராமனின் அவ்வளவு பெரிய நாவலைப்படித்து, அதன் உணர்வுகளை உள்வாங்கியவர்களுக்கு, படத்தைப் பாக்கும்போது ஏமாற்றம் தோன்றுமே தவிர, புதிதாக படத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடித்துப்போகக்கூடும். நாவலில் சொல்லப்பட்டிருக்கும் பல உணர்ச்சிப் பூர்வமான இடங்களை காட்சியமைப்பில் கொண்டுவருவது என்பது சிரமமான காரியம் மட்டுமல்ல, பல சமயங்களில் இயலாத காரியமும் கூட. அதெப்படி மனதில் நினைப்பதையெல்லாம் காட்சியில் கொண்டுவர முடியும்?.

    அதுவும் 686 பக்கங்களைக்கொண்ட ஒரு நாவலை வெறும் இரண்டரை மணி நேரத் திரைப்படமாக்குவது என்பது பகீரதப்பிரயத்தனம். அதனாலேயே பல விஷயங்களை அவசரப்பட்டு முடிக்க வேண்டிய நிலையும், இன்னும் சிலவற்றை தொங்கலில் விடவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வருடக்கணக்கில் அல்லது குறைந்தபட்சம் மாதக்கணக்கில் இழுக்கக்கூடிய தொலைக்காட்சித்தொடராக எடுக்கப்பட்டிருந்தால் சற்று முழுமையாக சொல்லப்பட்டிருக்க முடியுமோ என்னவோ. ஆனால் இவற்றையும் மீறி படத்தை ரசிக்க முடிகிறதென்றால், அதில் ஒட்டியிருக்கும் யதார்த்தம் எனும் மிகைப்படுத்தப்படாத நிலை, செயற்கைத்தனமில்லாத காட்சியமைப்புக்கள்.

    இவ்வளவு பெரிய கதையை படமாக சுருக்க வேண்டியிருந்ததாலோ என்னவோ கதாபாத்திரங்களும், நிகழ்வுகளும் துண்டு துண்டாக நின்றன. யமுனாவைப்பார்க்க வரன்கள் வருகிறார்கள், போகிறார்கள்.. ஆனால் அவளுக்கு மட்டும் திருமணம் ஆகவேயில்லை. அதற்கான காரணங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை – படத்தில். இறுதியில் தஞ்சாவூரில் இருந்து ஒரு மைனர் வருகிறார், திருமணம் செய்துகொள்ளாமல் ‘வாழ்க்கை’ நடத்துகிறேன் என்று. பாபுவின் மனம் யமுனாவினால் ஈர்க்கப்படுவது தெரிகிறது.

    படத்தின் முக்கிய பாத்திரமாக வரும் பாபுவின் கேரக்டரில் சற்று குழப்பம் அதிகம். அதைப்புரிந்துகொள்கிற நேரத்திலேயே ஒருபகுதி போய்விடுகிறது. கிழவரைத் திருமணம் செய்துகொண்டு எந்த சுகமும் காணாத தங்கம்மாவின் வலைவீச்சில் விழுந்து பலியாகிவிடும் பாபு, பின்னர் அவளுக்கு அட்வைஸ் பண்ணுவது பாபு கேரக்டரை கீழே சரித்து விடுகிறது. அத்தகைய நிகழ்வு நேராமல் சுதாரித்து கழன்றுகொண்டு, பின் அட்வைஸ் செய்தானென்றால் இன்னும் அந்த கேரக்டர் எடுபட்டிருக்கும். பாவம் இயக்குனர் என்ன செய்வார். கிடைத்த நேரத்துக்குள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க வேண்டும். (பாபு கேரக்டரில் நடித்திருப்பவர், இன்று சின்னத்திரை சீரியல்களில் கலக்கிக் கொண்டிருக்கும் அபிஷேக். அப்போது சின்னப்பையன்).

    கதையில் ரொம்ப சிலாகித்துச்சொல்லப்படுகிற நண்பன் ராஜம் கேரக்டர் ரொம்ப சின்னதாகக் குறைக்கப்பட்டுள்ளது. தங்கம்மாவின் சாவு சட்டென்று ஒரு வசனத்தில் சொல்லி முடிக்கப்படுகிறது. அவளுக்காக பாபு ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்துவதாகக்கூடக் காண்பிக்கப்படவில்லை. தங்கம்மா அலங்கார பூஷிதையாக அலங்கரித்துக் கொண்டு வந்து நிற்க, கிழட்டுக்கணவன் உறக்கத்தில் ஆழ்ந்துவிடும் காட்சியிலெல்லாம் நம் மனது ரொம்பவே வலிக்கிறது. இன்னொருபக்கம் யமுனாவுக்கு முப்பத்து நாலு வயது வரை திருமணம் ஆகாத நிலை இவற்றைப்பார்க்கும்போது ‘மேட்டுக்குடிகளில்’ ரொம்பவே கொடுமைகள் நடந்திருப்பது தெரிகிறது.

    அதனால் கதையில் அழுத்தமாகச்சொல்லப்பட்டிருக்கும் பாபுவின் தந்தை வைத்தி ரோல் எல்லாம், போகிறபோக்கில் வந்து போகிறது. ஆனால் பாபுவின் சங்கீதகுருவான ரெங்கண்ணா, கதாநாயகியான யமுனா மற்றும் அவள் அம்மா என்ற நான்கு கேரக்டர்கள் மட்டும் சற்று விலாவரியாக சொல்லப்படுகிறது, இடையில் வந்து மாண்டுபோகும் தங்கம்மாவை தவிர்த்து விட்டுப்பார்த்தால். தங்கம்மாவின் மரணத்தைப்பார்த்தபின், அவள் பாபுவை தன் ஆசைக்குப்ப்லி கொண்டது தவறு என்று தோன்றாது. மாறாக ஒரு அனுதாபமும் அக்கால சம்பிரதாயங்களின் மீது எரிச்சலும் ஏற்படும்.

    படத்துக்கு செலவு என்றால், நடித்தவர்களுக்கு சம்பளமும், பிலிம்ரோல் வாங்கிய காசும் மட்டும்தான் ஆகியிருக்குமோ என்று சொல்லுமளவுக்கு, அப்படியே கேமரா கும்பகோணத்து தெருக்களில் புரண்டு எழுகிறது. அந்த அளவுக்கு யதார்த்தம், இயற்கைத்தன்மை எல்லாம் கொடிகட்டிப்பறக்கிறது. ‘ஸ்டுடியோ செட்’ என்பதெல்லாம் எப்படியிருக்கும் என்று கேட்டிருக்கிறார்கள் படத்தில். கும்பகோணம் வீடுகள் கோயில்கள், குளங்கள் என்று எல்லாம் அப்படியே கண்முன்னே.

    படத்தை பெரும்பங்கு ஆக்கிரமித்துக்கொண்டு, ஒரு பெரிய இசை சாம்ராஜ்யமே நடத்தியிருப்பவர் 'இசைஞானி' இளைய்ராஜா. நம் உயிரோடு ஒன்றிப்போகும் இசை. அவருக்கு பக்க பலமாக நின்றிருப்பவர்கள் ஜேசுதாஸ், எஸ்.ஜானகி மற்றும் அருண்மொழி. கலக்கியெடுத்து விட்டார்கள் என்ற கடின வார்த்தைப் பிரயோகத்தை விட, மனதை மென்மையாக வருடி, மயக்கியிருக்கிறார்கள் என்பது பொருத்தமாக இருக்கும்.

    அன்றைய நாட்களில் பிராமணப்பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதை ஒரு எவரெஸ்ட்டில் ஏறுவது போன்ற கடினமாக்கிக் காட்டியிருப்பது ஏன்?. கடைசியில் கூட யமுனா, திருமணம் செய்துகொள்ளாமல்தான் பாபுவிடம் தன்னை இழக்கிறாள். அவனுள்ளிருக்கும் இசைக்கு உயிர்ப்பூட்டுவதற்காம். புரியவில்லை என்பதைவிட ஒப்பவில்லை என்பது கொஞ்சம் அதிகம் பொருந்தும். அதுமட்டுமல்ல, பாபுவிடம் தன்னை இழந்ததுமே, உடனே தம்பூராவை அவன் கையில் கொடுத்து இசைக்கச்சொல்கிறாள். படம் வெளிவந்த நேரத்தில் இது எப்படி ஆட்சேபிக்கப்படாமல் போனது?. இசையென்பது சுத்தமானது அல்லவோ?. அதை இசைப்பவர்களும் சுத்தமாக இருக்க வேண்டாமோ?.

    படத்தை இயக்கியிருப்பவர் ஞான ராஜசேகரன். ரொம்பவே கவனமாக கத்திமேல் நடப்பதுபோல கதையைக் கையாண்டிருக்கிறார். கையாண்ட விதத்தில் வெற்றியடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். நேர்த்தியான இயக்கம்.

    'மோகமுள்' படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், தி.ஜானகிராமன் எழுதிய நாவலைப்படிக்கும் முன் பார்த்து விடுங்கள். நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.
    Last edited by saradhaa_sn; 7th May 2011 at 04:48 PM.

  4. #43
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    தரையில் வாழும் மீன்கள்

    1982-ல் இப்படி ஒரு வண்ணப்படம் வந்தது பலருக்குத்தெரிந்திருக்கும். சிலருக்கு தெரியாமலிருக்கலாம். நடிகை அம்பிகா நடித்த இரண்டாவது படம் என்பதாக நினைவு. முதல் படம் சக்களத்தி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்கு ஜோடியாக விஜய்பாபு, வில்லனாக ராதாரவி, விஜய்பாபுவின் தங்கையாக வனிதா, நகைச்சுவைக்கு எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் நடித்து வெளிவந்த படம். கதை ஒரு சாதாரண காதல் கதை. கடலோரத்தில் வாழ்ந்து மீன்பிடி தொழில் செய்துவரும் விஜய்பாபு, அவருக்கு துணையாக தங்கை வனிதா. வழக்கம்போல பண்ணையார் மகள் அம்பிகா பள்ளி மாணவி வழக்கம்போல ஏழை நாயகனுக்கும் பணக்கார நாயகிக்கும் காதல். வழக்கம்போல காதல் முறிகிறது. குடிகாரரான ராதாரவிக்கு அம்பிகா மணம்செய்து கொடுக்கப் படுகிறார். வழக்கம்போல கணவனிடம் கொடுமைகள். அதையறிந்து பழைய காதலனின் வேதனைகள். ஒருகட்டத்தில் கணவனை விட்டு காதலனிடம் ஓட முயல்கையில், அய்யனார் கோயிலில் கணவனுக்கும் அவளுக்கும் சண்டை, இழுபறி, துரத்தல்கள். அதில் கணவன் 'தானாகவே'(?) அடிபட்டு இறந்துபோகிறான். அப்போது ஒரு கொம்பில் மாட்டிக்கொண்டு அவள் தாலியும் அறுந்துபோகிறது. இப்போது லைன் கிளியர். காதலனிடம் சேரும் முயற்சியில் குற்றுயிரும் குலை உயிருமாக காதலனிடம் வந்து சேர கொஞ்ச நேரத்தில் அவன் கைகளிலேயே பிணமாகிறாள். காதலியின் பிணத்தை கையில் ஏந்தியவாறு கடலுக்குள் இறங்க, திரையில் 'தரையில் வாழ முடியாத மீன்கள் தண்ணீரை நோக்கி' என்ற டைட்டில் கார்டு.

    இவ்வளவு சொதப்பலான ஒரு காதல் கதையைப் பார்ப்பது அரிது. அம்பிகாவுக்கு திருமணம் ஆகாதவாறு காட்டியிருக்க வேண்டும். திருமணம் ஆன பின்பும் காதலன் நினைவாக இருப்பதும் அவனோடு ஓடிவிட எத்தனிப்பதும், காதலனும் அதை விரும்புவதும் அந்தப் பாத்திரப் படைப்புகளை குறைவடையச் செய்துவிட்டன. படத்தில் கிட்டத்தட்ட அனைவரும் புதுமுகங்கள். அதனால் படப்பிடிப்பின்போது இழுத்த இழுப்புக்கு வந்தனர்.

    கோரையாற்றங்கரையில் அமைந்துள்ள முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் முகம்மது அலி. அவர்தான் இப்படத்தின் இயக்குனர். படத்துறையில் ஈடுபட்டதும் தன் பெயரை 'கலை அலி' என்று மாற்றிக்கொண்டார். சைட் பிஸினசாக, வளைகுடாநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் பணியையும் செய்து வந்தார். இப்படத்துக்காக பெயரை மீண்டும் 'பாபு மகாராஜா' என்று மாற்றிக்கொண்டார்.

    இப்படத்தின் வெளிப்புறப்படப்பிடிப்புக்குக் கதைக்களமாக அவர் தேர்ந்தெடுத்தது, அவரது ஏரியாவைச்சேர்ந்த பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள "மனோரா" என்ற இடம். அப்பகுதியில் பிரபலமான சுற்றுலாத்தலம். தஞ்சாவூரை மராட்டிய மன்னர் சரபோஜி மகாராஜா ஆண்டபோது, அதிராம்பட்டினத்தை அடுத்த மல்லிபட்டினம் கடற்கரையில் ஒரு ஏழு அடுக்கு மாளிகையைக் கட்டினார். சுற்றிலும் அகழி வைத்து, நடுவில் மடக்குப்பாலம் அமைத்து பெரிய கோட்டை வடிவில் அமைக்கப்பட்ட இதன் ஏழாவது தளத்தில் ஏறி நின்றால், சுற்றுவட்டாரம் முழுக்க நன்கு தெரியும். அதனால் இவ்விடத்துக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வர்.


    ஏற்கெனவே இந்தக்கோட்டை, கலைஞரும் நடிகர்திலகமும் இணைந்த 'புதையல்' படத்தில் காண்பிக்கப்படும். இருந்தாலும் அதிக காட்சிகளில் அல்ல. பின்னர் 1967-ல் ரவிச்சந்திரனும், பாரதியும் நடித்த ஒரு டூயட் பாடல் மட்டும் இதில் படமாக்கப் பட்டது. இருந்தாலும், இந்தக்கோட்டை முழுக்க முழுக்க பயன்படுத்தப்பட்டது இந்த 'தரையில் வாழும் மீன்கள்' வண்ணப் படத்தில்தான்.

    பக்கத்திலுள்ள பெரிய நகரம் என்ற வகையில், பட்டுக்கோட்டையில்தான் படப்பிடிப்புக்குழுவினர் தங்கினர். பேருந்து நிலையம் எதிரே, காவல் நிலையத்தின் பக்கத்திலிருந்த ஏ.வி.லாட்ஜில்தான் கலைஞர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அதனால் அந்த லாட்ஜைச்சுற்றி எப்போதும் ரசிகர்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருக்கும். காலையில் ஷூட்டிங் புறப்படும் முன்பு, லாட்ஜில் வைத்தே எல்லோருக்கும் மேக்கப் போட்டு ரெடியாக்கி விடுவார்கள். கார்களிலும் வேன்களிலும் அவர்கள் படப்பிடிப்புக்குப் புறப்பட்டதும், பின்னாடியே ரசிகர்கள் கூட்டம் பைக்கில் பின் தொடர்வார்கள்.

    புறப்பட்டுப்போகும் வழியில் மணிக்கூண்டு சந்திப்பு பழனியப்பன் தெரு, தலையாரித்தெரு வளைவில் அசோக் ஸ்டுடியோவின் கீழேயிருந்த ஒரு ஒட்டுக்கடையின் அருகில் கார்களை நிறுத்தி கலைஞர்களுக்கு 'டீ' வாங்கிக்கொடுப்பார்கள். (இன்றைக்கு அந்த டீக்கடையில் அம்பிகா டீ குடிப்பாரா தெரியாது).

    பைக்குகளில் பின்தொடர்ந்த்வர்கள் போக, அந்த வசதியில்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக ஒரு பஸ் கம்பெனி இரண்டு ‘ஷூட்டிங் ஸ்பெஷல்’ பஸ்களை பட்டுக்கோட்டையில் இருந்து மனோராவுக்கு விட்டது. அவற்றிலும் கூட்டம் கூட்டம் நிரம்பி வழிய பஸ் ஓனர் நன்றாக கல்லா கட்டினார். படப்பிடிப்பு நடந்த இருபது நாட்களும் அந்தப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரிசுகள் கூட்டம் முழுக்க மனோராவில்தான் டேரா போட்டது.

    இப்படத்துக்காக மனோரா முழுதும் சுத்தம் செய்யப்பட்டு பொலிவாக விளங்கியது. அத்துடன் ஒரு பாடல் காட்சியின்போது இரவு நேரத்திலும் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஒரு பாடல் காட்சியின்போது விஜயபாபுவும், அம்பிகாவும் ராஜா ராணி உடையில் கடற்கரையோரம் குதிரையில் சவாரி செய்து வரும் காட்சிக்காக, அப்பகுதியில் பிரபலமான ஆவணம் என்ற ஊரிலிருந்து வெள்ளைக்குதிரை கொண்டுவரப்பட்டு படமாக்கப்பட்டது. அதற்குப்பெயரே 'ஆவணத்துக்குதிரை' என்பதுதான். அப்ப்குதியின் முக்கிய விழாக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்தது.

    இப்படத்துக்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். 'மணிமாளிகை கண்ட மகராணியே' என்ற பாடலை ஜெயச்சந்திரன், சுசீலாவும், 'அன்பே சிந்தாமணி இன்பத்தேமாங்கனி' என்ற பாடலை மலேசிய வாசுதேவன், ஜானகியும், 'அழகான சின்னக்குட்டி ஆட்டம் ஆடுது' என்ற பாடலை எஸ்.ஜானகியும் பாடியிருந்தனர்.

    கதை சரியாக அமையாமல் போனதால் படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

    Attached Images Attached Images

  5. #44
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெள்ளித் திரையில் மீண்டும்....

    என்று அப்போதெல்லாம் போஸ்டர் பார்த்திருப்போம்... அது போல மீண்டும் ... இங்கே சந்திப்போமே..

    நாகேஷ்... தமிழ்த் திரையுலகம் கண்ட மிகப் பெரும் கலைஞன். அவருக்குப் பின் ஒரு மாபெரும் VACCUM ஏற்படுத்திச் சென்று விட்டார். நகைச்சுவை என்ற ஒரு வட்டத்திற்குள் சிக்காமல் தன் திறமையினாலும் நெஞ்சை உருக வைக்கும் நடிப்பினாலும் பல படங்களைத் தாங்கி யிருக்கிறார். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று கல்யாண ஊர்வலம். சென்னை பாரகன் தியேட்டரி்ல் வெளியான போது பார்த்த நாள் முதல் இன்று வரை நெஞ்சில் நிலைத்திருக்கும் படம். தன் சகோதரன் மகளின் திருமணத்திற்காக வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணம் சேர்த்து வைத்து தியாகியாய் வாழும் கதா பாத்திரம். ரிக்ஷா இழுத்துப் பிழைக்கும் வாழ்க்கை.

    ஒவ்வொரு காட்சியிலும் நாகேஷின் நடிப்பு நம்மை மெய்மறக்கச் செய்யும். இந்தப் படத்திற்கு மிகப் பெரிய மற்றொரு பலம், ஆர்.பார்த்தசாரதி அவர்களின் இசை. பால் மனம், அவன் பித்தனா, என அவருடைய பிரபலமான படவரிசையில் கல்யாண ஊர்வலத்திற்கு பிரதான இடம் உண்டு. ஜேசுதாஸின் மிகச் சிறந்த பாடல்களில் கூந்தலிலே நெய் தடவி பாடலும் அடங்கும்.

    இந்த அருமையான திரைப்படத்திலிருந்து மறக்க முடியாத பாடல், ஆண்டவன் முகத்தைப் பார்க்கணும், டி.எம்.எஸ். குரலில்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #45
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கூந்தலிலே நெய் தடவி..எனக்கு மிகப் பிடித்த பாடல்..(அந்தச் சித்தப்பா குரல் மட்டும் தனியாகக் கேட்கும்) படம் நான் பார்த்ததில்லை..ம்ம் பார்க்கணும்

  7. #46
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    மனதை மயக்கும் மதுரகானங்களால் இன்றும் மக்கள் மனதில் சிரஞ்சீவியாய் நிலைத்திருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் 50வது ஆண்டு நிறைவு விழா வரும் 16.08.2014 சனிக்கிழமை அன்று மாலை சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நுழைவுச் சீட்டு பற்றிய விவரங்கள் கீழே உள்ள நிழற்படத்தில் காணும் தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #47
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
Page 5 of 5 FirstFirst ... 345

Similar Threads

  1. Tamil Pop Album Reviews
    By sureshmehcnit in forum Independent Tamil Music Artists/Bands
    Replies: 2
    Last Post: 10th September 2013, 01:06 AM
  2. Mythological Tamil Films
    By eyeofnewt in forum Tamil Films - Classics
    Replies: 5
    Last Post: 29th August 2007, 12:58 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •