பாடும் நிலா பாலு பதினெண் வயதில் ஒரு பாட்டுப் போட்டியில் இரண்டாவதாக தேர்ந்தேடுக்கப்பட்டாராம். விழாவிற்கு வருகை தந்திருந்த ஜானகி முதலிடம் பெற்ற பாடகனைவிட பாலுதான் சிறந்தவர், அவருக்குத்தான் முதல் பரிசைக் கொடுக்கணும் என தீர்ப்பையே மாற்றியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த தைரியம், அக்கறை இப்ப எந்த இசைக் கலைஞருக்கு இருக்கு? அதுபோல இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற சத்யபிரகாஷிற்கு அன்றைக்கே முதல் இடத்தைக் கொடுத்திருக்கணும். மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு இதெல்லாம் இதுபோன்ற கலைஞர்களை செதுக்கி உருவாக்கும் போட்டிகளுக்கு ஒத்துவராது. தவறு செய்தவர்கள் மக்கள் கூட்டமாக இருந்தாலும், தட்டிக் கேட்கணும் நடுவர்கள். அப்போதான் இசை வாழும். எல்லாரும் கடினமா உழைத்து, இறுதிப்போட்டிக்கு வந்திருக்காங்க. அந்த இறுதிப் போட்டியில் சத்யபிரகாஷ் மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்கு பிரமாதம்.