Page 11 of 150 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 1500

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6

  1. #101
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar
    28.9.2001 அன்று ராஜ் டிவி நிறுவனம் நடத்திய "இமயத்திற்கு இந்திய அஞ்சலி" நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

    அன்புடன்,
    பம்மலார்.
    thank you pammalar sir.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நன்றி திரு.மோகன், தங்களது பொக்கிஷம் (சிடி/டிவிடி சேகரிப்பு) வியக்க வைக்கிறது. அது மென்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #103
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நாகர்கோவில் பயோனீர்முத்து திரையரங்கில், 25.12.2009(வெள்ளி) முதல் 27.12.2009(ஞாயிறு) வரை 3 நாட்களுக்கு, தினசரி 4 காட்சிகளாக, பாரத ஜோதியின் "பச்சை விளக்கு" திரைக்காவியம் திரையிடப்பட்டு, நல்லதொரு வெற்றியைப் பெற்றுள்ளது. இத்தகவலை எமக்களித்த எமது நெருங்கிய நண்பர் ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றி!

    அன்புடன்,
    பம்மலார்.

    pammalar

  5. #104
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திருப்பூர் வெற்றி அரங்கில் 9.2.2010(செவ்வாய்) முதல் 11.2.2010(வியாழன்) வரை 3 நாட்கள், தினசரி 4 காட்சிகளாக, நமது நடிகர் திலகத்தின் "கெளரவம்" வெற்றி நடை போட்டுள்ளது. நகரெங்கும் நிறைய போஸ்டர்களும் காணப்பட்டதாம். போஸ்டர் வாசகம் : "கண்ணா நீயும் நானுமா - சிவாஜி மிரட்டும் கெளரவம்". இச்செய்தியைத் தெரிவித்த கடலைக்காட்டுப்புதூர் திரு.சங்கர் அவர்களுக்கும், திரு.தி.அய்யம்பெருமாள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!

    அன்புடன்,
    பம்மலார்.

    pammalar

  6. #105
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    Quote Originally Posted by tacinema
    Quote Originally Posted by groucho070
    Revisited Savale Samali (in the process of converting wife to NTism).

    Some notes:

    - On the contrary, NT looks great.
    This is 100% true. NT looks fabulous with a great hair style, simple dhoti and cotton shirt. I am sure this is the only movie in modern tamil films in which a super hero appeared in simple dhoti and shirt and still managed to look great. I guess the best in savale samali is its strong dialogues and the wonderful delivery from NT. All in all Saveli samali - A well etched and very restrained performance from NT.

    Out of his 40+ years in films, I guess NT looked best during Savale Samali times. Question to NT veterans: How did he manage to look so good during these years? How sweet it would have been if he had maintained the same look in 80s and 90s..... Imagine Sumathi en Sundari look in 80s and 90s - man, it just feels wonderful!!!

    Regards
    Dear tac.... வெகு நாட்களுக்குப்பின் தலைகாட்டியிருக்கீங்க..., வருக.

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. நீங்கள் குறிப்பிடும் அந்த கால கட்டம் நடிகர்திலகத்தின் அழகிய தோற்றம் கொண்ட காலம் எனலாம்.

    அதாவது 'ஊட்டிவரை உறவு' துவங்கி 'அண்ணன் ஒரு கோயில்' வரையான காலம். (தியாகத்திலிருந்து மீண்டும் அவரது உருவம், அறுபதுகளின் துவக்கத்தில் இருந்த நிலை நோக்கி திரும்பியது). ஆனால் அறுபதுகளின் துவக்கத்தில் அந்த தோற்றத்தை தனது அலாதியான பெர்ஃபாமன்ஸைக்கொண்டு வென்று தள்ளினார். (குறிப்பாக 'பீம்பாய்' படங்கள்). ஆனால் தியாகத்துக்குப்பின் அவருக்கு அமைந்த ரோல்கள், அவரது உருவத்தோற்றத்தை மறக்கடிக்கப்போதுமானவையாக அமையவில்லை என்பதும் சற்று ஸ்டீரியோ டைப்பில் அமைந்தன என்பதும் உண்மை. அப்படியும் கூட அவர் ஏராளமான வெற்றிப்படங்களைக்கொடுத்தார். (உங்களது அடுத்த பதிவுக்கான பதிலில் சொல்லியிருக்கிறேன்). தமிழ்ப்பட வெற்றி வரலாற்றை திருப்பிப்போட்ட 'திரிசூலம்' போன்றவை வந்ததும் அந்தக்கால கட்டத்தில்தான்.

    நான் எப்போதுமே சொல்லி சொல்லி மாய்வதுபோல 67 முதல் 77 வரையிலான அவரது தோற்றம் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அழகு. அப்போது வந்த அவரது படங்களுக்கு அவரது அந்த ஒல்லியான அழகு தோற்றம் ரொம்பவே பொருந்தியது. அந்நேரத்தில்தான் பாலாஜி படங்களில் துவங்கி எல்லா படங்களிலும் ஒன்றிரண்டு சண்டைக்காட்சிகளாவது இடம்பெறத்துவங்கி, படங்களுக்கு சிறப்பு சேர்த்தன. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட 'சவாலே சமாளி'. அந்நேரத்தில் வந்த அவரது படங்களுக்கும் ஏற்றிருந்த ரோல்களுக்கும் அவரது ஸ்லிம் உடலமைப்பு எப்படி ஒத்துழைத்தது என்பது படங்களின் வரிசையைப் பார்த்தாலே தெரியும்.

    சமீபத்தில் முரளியண்ணா ஆய்வு செய்த 'திருடன்' படமும் அவற்றில் ஒன்று. 'தங்கச்சுரங்கம்' சி.பி.ஐ ஆபீசரும் அவர்களில் ஒருவர். 'எங்கமாமா'வின் சொர்க்கம் பக்கத்தில் பாடலில், அழகிய நிர்மலாவோடு இவரும் சரிக்கு சரி ஒல்லியாக இருந்ததால்தானே அப்பாடல் காட்சி இன்னும் கண்களைக்கவர்கிறது. உள்ளே பனியன் போடாமல் வெறுமனே ஸ்பன் ஷர்ட்டோடு தெய்வமகனில் 'காதல் மலர்க்கூட்டம் ஒன்று' பாட முடிந்ததும் அந்த ஒல்லி உடம்பு தந்த போனஸ். புரட்சிக்காரன் 'பாரத்'துக்கு (சிவந்த மண்) தன் சாகசங்களில் ஒத்துழைத்தது அந்த ஸ்லிம் பாடிதான் என்றால் மறுப்பதற்கில்லை. நீங்கள் குறிப்பிட்ட சுமதி என் சுந்தரி நம் நெஞ்சங்களில் ஸ்டிக்கராக ஒட்டிக்கொள்ள உறுதுணையாக இருந்ததும் அந்த அழகு உடம்பு அல்லவா? (பொட்டுவைத்த முகமோ, ஒருதரம் ஒரேதரம் பாடல் காட்சிகளை இன்றைக்கும் கண்ணில் ஒற்றிக்கொள்கிறோமே). அந்த சிக்கென்ற தோற்றத்தில்னால் அல்லவா 'பொன்மகள் வந்தாள்' பாடும்போது விஜயலலிதாவை விட ஒல்லியாகத் தோற்றமளித்தார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அமைந்த துப்பறியும் 'ராஜா'.

    ஜோவியல் படங்களில்தான் என்றில்லை. சீரியஸ் ரோல்களுக்கும் அந்த மெலிந்த உடல் ரொம்பவே பாந்தமாக பொருந்தியது. பேண்ட்டுக்குள் ஷர்ட் இன் பண்ணி சட்டைக்கைகளை முழங்கைகளுக்கு மேல மடித்து விட்டபடி 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே' பாடிய அதே தோற்றத்தில் இருந்த அழகுக்கு மாறாக, ஏழு ஆண்டுகளுக்குமுன் அவர் நடித்த 'நான் பேச நினைப்பதெல்லாம்' பாடல் காட்சியில் உடல் கண்களை உறுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.

    'திருமால் பெருமை' திருமங்கை ஆழ்வாரும், சிக்கல் ஷண்முக சுந்தரமும், நாடக நடிகர் ரங்கதுரையும் சிறப்பான நடிப்போடு சேர்ந்து அழகிய தோற்றத்திலும் நம்மைக்கவர்ந்தனர் என்றால் அதற்கு முழுக்காரணம் அவரது அன்றைய அழகிய தோற்றம் என்பது உண்மைதானே. சுருக்கமாகச்சொன்னால், கட்டபொம்மனுக்குப்பின் காணாமல் போன அழகிய தோற்றம் திரும்பக்கிடைத்தது 67-ல் தான். இடைப்பட்ட காலத்தில் தன் அபார நடிப்புத் திறமையால் அந்தக்குறைபாடு தெரியாமல் ஊதித்தள்ளினார் (உதாரணம் நீங்களே இப்போது குறிப்பிட்ட 'எங்கே நிம்மதி' பாடல் காட்சி).

    அனைத்துக்கும் மேலாக 'ஒரு குறிப்பிட்ட வார்த்தையால்' அவரது தோற்றத்தை கிண்டல் செய்து வந்தோரின் வாய்களுக்கு 'ரிவிட்' அடிக்கப்பட்டிருந்ததும் அந்த 'பிளாட்டினம் பீரியடில்'தான்.

    சாரதா மேடம்,
    ரசித்து எழுதிய மிக அருமையான பதிவு. தமிழ் படங்களில் மிக "அழகான" சிவாஜி பார்க்க வேண்டுமா? பிடியுங்கள் இந்த பதிவை என்று சொல்லலாம்!! அந்த அளவுக்கு மிக விரும்பி ரசித்து எழுதிய பதிவு. நடிகர் திலகத்தின் புகழ் பரப்புவதில் உங்களுக்கு தனி இடம் இருக்க வேண்டும்.

    இந்த லிஸ்டில் மற்ற சில படங்களையும் சேர்க்கலாம்

    1- ராமன் எத்தனை ராமனடி: திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆகி சென்னையில் இருந்து தன் சொந்த ஊருக்கு கே ஆர் விஜயாவை கல்யாணம் செய்து கொள்ளும் ஆசையுடன் ரயிலில் வரும் பாட்டு சீனில் என்னஅழகாக இருப்பார் பாருங்கள் - நம் கண்கள் அப்போது வேற எதையும் பார்க்காமல் அவரை மட்டும் தான் பார்க்கும்.

    2 - உயர்ந்த மனிதன்: "பால் போலவே - நாளை இந்த வேலை" பாட்டு சீனில் என்ன அழகாக இருப்பார்!! Very handsome Ganesan

    3 - கலாட்டா கல்யாணம் - இந்த காமெடி படத்திலும் அழகாக இருப்பார் - குறிப்பாக "மெல்ல வரும் காற்று" பாட்டில் சற்றே சரிந்த கேமரா கோணத்தில் தனக்கே உரிய நடையோடு சிறிய புன்னகை கொடுத்து ஸ்டைல் செய்வார் பாருங்கள் - Unique walking style of nadippu chakravarthy!!!

    இன்னும் பல படங்கள் ..........

    May be we should prepare a list of all such movies.

    Regards

  7. #106
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் நெள, ராகேஷ், டாக், மோகன், கார்த்திக், சகோதரி சாரதா,

    சவாலே சமாளி, தேனும் பாலும் குறித்த நடிப்பு ஆய்வுகள், அலசல்கள் அருமை. தங்களது பதிவுகளையெல்லாம் காணும் போது, நடிகர் திலீப்குமார் அவர்கள் நமது நடிகர் திலகத்தைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வருகிறது. "சிவாஜி அவர்கள், தனது நடிப்பின் ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவிலும் முத்திரை பதிப்பார். அவரைப் போல் வேறு எவராலும் நடிக்க முடியாது."

    இக்கூற்று, மீண்டும் தங்களது பதிவுகளின் மூலம் மெய்ப்பிக்கப்படுகிறது. பற்பல நன்றிகள்!

    தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே, பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் "தேனும் பாலும்".

    சவாலே சமாளி 100 நாட்களைக் கடந்த சூப்பர் டூப்பர் ஹிட் என்றால், தேனும் பாலும் 50 நாட்கள் ஓடிய சராசரி ஹிட்.

    1990களில்(1990-1999), சென்னைத் தியேட்டர்களில் நடைபெற்ற சிவாஜி வாரங்களில் (7 நாட்கள் - 7 படங்கள் - தினசரி 3 காட்சிகள்), ஒவ்வொரு வாரத்திலும் ஒரு நாள் படமாக வலம் வந்த பெருமை "தேனும் பாலும்" திரைப்படத்திற்கு உண்டு.

    நடிகர் திலகத்தின் அழகிய தோற்றம் (அவர் என்றுமே நமக்கு அழகு தான் என்பது வேறு விஷயம்) கொண்ட காலகட்டத்தை, தீபாவளி 1966-ல் வெளியான செல்வம் திரைப்படத்திலிருந்தே தொடங்கலாம். தீபாவளி 1977-ல் வெளியான அண்ணன் ஒரு கோயில் வரை சற்றேறக்குறைய அவருக்கு இந்த அழகிய தோற்றம் தான்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #107
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by saradhaa_sn
    Quote Originally Posted by tacinema
    Quote Originally Posted by pammalar
    சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது ...



    56. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு - 3.7.1981 - 49 நாட்கள்

    60. தியாகி - 3.9.1982 - 72 நாட்கள்

    66. சரித்திர நாயகன் - 26.5.1984 - 35 நாட்கள்

    67. சிம்ம சொப்பனம் - 30.6.1984 - 46 நாட்கள்

    68. எழுதாத சட்டங்கள் - 15.8.1984 - 30 நாட்கள்

    69. வம்ச விளக்கு - 23.10.1984 - 46 நாட்கள்
    Honestly, this time period is not great and he should have avoided these movies. Wondering how did LDriver Rajakannu managed to run more than that of Eluthatha Sattangal???

    Considering that most of these movies were starred by both NT and Prabhu, did NT try to indirectly help Prabhu to establish in tamil films? Nothing against Prabhu, but as a well wisher of NT and his movies, it is just an emotional feeling.

    Anyway, it is a fact that these films damaged some of NT's fame. His rival fans got a ground to bring in this period while discussing records.

    Regards.
    டியர் tac..,
    நீங்கள் கொடுத்துள்ள வெற்றி வாய்ப்பை இழந்த படங்களின் பட்டியலும் அது தொடர்பான செய்திகளும், குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் வந்த நடிகர்திலகத்தின் அனைத்துப்படங்களும் தோல்வியோ என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

    அவற்றில் லாரி டிரைவரும், சரித்திர நாயகனும் அவர் நடித்திருக்க வேண்டியில்லாத படங்கள் என்பதை மறுப்பதற்கில்லை, (இன்னொரு படம் 'நாம் இருவர்'). மற்றபடி சிம்ம சொப்பனம், வம்ச விளக்கு, எழுதாத சட்டங்கள் போன்றவை எல்லாம் ஓட்டத்தில் சறுக்கினவையே தவிர தரத்தில் மோசமானவை அல்ல. ('தியாகி' தோல்விப்படம் அல்ல, சுமாரைக்கடந்த வெற்றிப்படமே).

    அதே சமயம் இன்னொரு முக்கியமான விஷயம். குறிப்பிட்ட இதே கால கட்டத்தில்தான் நடிகர்திலகத்தின் வெள்ளிவிழாப்படங்களான

    தீர்ப்பு,
    சந்திப்பு,
    நீதிபதி,
    முதல் மரியாதை


    ஆகினவும், மற்றும் 100 நாட்களைக்கடந்த மாபெரும் வெற்றிப்படங்களான

    கீழ்வானம் சிவக்கும்,
    வா கண்ணா வா,
    மிருதங்க சக்ரவர்த்தி,
    வெள்ளை ரோஜா,
    திருப்பம்,
    தாவணிக்கனவுகள்,
    வாழ்க்கை,
    பந்தம்

    போன்ற படங்களும் வெளியாகின. இவ்வெற்றிப்படங்கள் பெரும்பாலானவற்றில் இளையதிலகம் பிரபுவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    (மற்றபடி 'சரித்திர நாயகன்' ஓட்டத்தில் 'சரிந்த நாயகனாகி'ப்போனது உண்மைதான். இப்படத்தின் கதையை நந்தமூரி டி.ராமாராவ் (என்.டி.ஆர்) எழுதினாராம். நல்லவேளை, இதோடு பேனாவை மூடிவைத்து விட்டு அரசியலுக்குப்போய்விட்டார்).
    டியர் சாரதா,

    Oh no - my intention was totally different. நமது நடிகர் திலகம் நிச்சயமாக இந்த கால கட்டத்தில் நல்ல படங்கள் கொடுத்தவர். அந்த படங்கள் மிக பெரிய BO கூட - நான் மறுக்கவில்லை. அதே சமயம் சில சுமாரான படங்களையம் இந்த நேரத்தில் கொடுத்தவர்; உதாரணம்: லாரி டிரைவர் ராஜகண்ணு & சரித்திர நாயகன். சிவாஜி ரசிகன் என்கிற வரையில் என் ஆதங்கம்: இந்த மாதிரியானபடங்களை NT தவிர்த்திருக்கலாம். மற்ற படி தங்கள் குறிப்பிட்ட தீர்ப்பு, நீதிபதி, சந்திப்பு, முதல் மரியாதை ஆகிய யாவும் 175+ நாட்கள் ஓடிய நல்ல படங்களே. அதுவும் மதுரையில் தீர்ப்பு - நீதிபதி இரு படங்களை ஒரே நேரத்தில் ஒரே காம்ப்ளெக்ஸ் (priya complex, madurai) அந்த காலகட்டத்திலேயே நாட்கள் ஒட்டிய பெருமை அவருக்கு உண்டு.

    மேலும் நான் முன்னால் குறிப்பிட படி அந்த கால கட்டத்தில் மற்ற நடிகர்கள் (including ரஜினி-கமல்) ரசிகர்களுடன் வாக்குவாதம் செய்யும்போது அவர்கள் எங்களை மடக்க உடனே கொண்டு வரும் NT படங்கள் தான் லாரி டிரைவர் ராஜகண்ணு & சரித்திர நாயகன் ஆகியவை.

    இந்த மாதிரியான படங்களை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம் - ஒரு ரசிகனின் ஆதங்கமே இவை!

    Regards

  9. #108
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Pammalar sir,

    Thanks a lot for 'collecting & presenting' the re-release details of NT films all over Tamil Nadu. Eagerly waiting to hear these good news from Chennai too.

  10. #109
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Valentine Special (VASANTHA MAALIGAI SPECIAL)



    Warm Wishes,
    Pammalar.
    pammalar

  11. #110
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik
    Pammalar sir,

    Thanks a lot for 'collecting & presenting' the re-release details of NT films all over Tamil Nadu. Eagerly waiting to hear these good news from Chennai too.
    நன்றி திரு.கார்த்திக்.

    சிங்காரச் சென்னையில் சிங்கத்தமிழனின் திரைக்காவியங்கள் மீண்டும் வெற்றி பவனி வரப் போகும் நாட்களை, தங்களைப் போலவே ஆவலுடன் எதிர்நோக்குகின்றோம்!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Page 11 of 150 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •